Sunday, August 7, 2011

டிக்கிலோனா



                                                                   
தல(கவுண்டமணி): என்னடா இன்னிக்கி ஒரு பயலும் சலூன் பக்கம் வரல.  சன்டே கூட ஈ ஓட்டுற நெலம வந்துருச்சே..

செந்தில்: இப்பல்லாம் எவன் சித்தப்பு  முடி வெட்டறான். சேவல் கொண்டை தலை, ஸ்ப்ரிங் ரோல் தலைன்னு வச்சிக்கிட்டு அலையறானுங்க. வருசத்துக்கு ஒரு தரம் வெட்டுனாலே அதிசயம்..

தல: அதை ஆளவந்தான் மண்டைய வச்சிக்கிட்டு நீ சொல்லாதடா. சரி..சரி.. பேப்பரை எடுத்து நம்ம பலைஞர் கண்டனக்கூட்டம் நடத்துன மேட்டர படி. 

செந்தில்: பூண்டு கலைமாணனை கைது செய்ததை எதிர்த்து பலைஞர் தலை... மையில்..

தல: தலை..மையா..அவரு எப்படா டை அடிச்சாரு?

செந்தில்: தலைக்கும் மைக்கும் நடுவுல நாக்கு ரோலிங் ஆயிருச்சி சித்தப்பு.

தல: மவனே ரோடு போட்ற ரோலர் மாதிரி இருந்துகிட்டு லவுட்டா விட்ற? மேல படிடா.  

செந்தில்: அவரு என்ன சொன்னாருன்னு முழுசா படிக்கறேன். கேளுங்க.  "ஜெயா அரசு போட்டது பொய் வழக்கு". 

தல: மொதல்ல நீ பல்ல வெளக்கு. அந்த பக்கம் திரும்பிப்படி. அது என்ன "ஜெயா" அரசு? செல்லமா கூப்புடற அளவுக்கு டெவெலப் ஆயிட்டாங்களா? 

செந்தில்: "ஒரு கலைமாணனை கைது செய்தால் ஓராயிரம் கலைமாணர்கள் முளைப்பார்கள் என எச்சரிக்கிறேன்"

தல: பார்ரா 

செந்தில்: "தி.மு.க.வை யாராலும் அழிக்க முடியாது"

தல: மறுபடியும் பார்ரா.

செந்தில்: "இங்கே இருக்கும் பத்திரிக்கையாளர்கள் ஜெயா சொத்து குவிப்பு வழக்கை பற்றி எழுதுவதே இல்லை. எங்கள் கட்சி பற்றி மட்டும் பக்கம் பக்கமாக எழுதுகிறார்கள்"

தல: அதானே. ராஸ்கோல்ஸ். ஜெயா அரசை பத்தி பலைஞர் டி.வி. மட்டுமே எத்தனை தரம் தனித்தவில் வாசிக்கும். ஊதுங்கடா ஒத்து! அப்பதான் நீங்க ஒர்த்து.

செந்தில்: "கோர்ட்டில் அம்மையாருக்கு 130 முறை வாய்தா தந்துள்ளனர். இதற்கு காரணம் அவர் உயர்சாதியை சேர்ந்தவர் என்பதால்தான்".

தல: என்னடா மெயின் மேட்டருக்கு வரலியேன்னு பாத்தேன். அது என்னடா ஜாதில உயர்ஜாதி, உயராத ஜாதி. நானும் நாப்பது வருசமா இந்த இம்சைய கேட்டுக்கிட்டு இருக்கேன்.

செந்தில்: அது எனக்கு தெரியும். உயர்ஜாதில இருக்குற எல்லாரும் கொஞ்சம் ஒசரமா இருப்பாங்க சித்தப்பு. 

தல: மவனே சாமி சிலைன்னு கூட பாக்க மாட்டேன். எடுத்து மண்டைய ஒடச்சிருவேன். மீதிய படிடா. 

செந்தில்: "தமிழக மக்கள் நிம்மதியாக தூங்க முடியவில்லை. காலையில் எந்த போலீஸ் அதிகாரி நம்மை எழுப்புவாரோ என்று பயந்து போய் உள்ளனர்"

தல: அப்டியா? போன ஆட்சி நடந்தப்ப கரண்ட் கட்ல கொசு அடிச்சதுக்கும், கொறட்டை விட்டு கொன்ன உன்னை அப்புனதுக்கும் இப்ப எவ்ளவோ பரவால்ல.  

செந்தில்: "வீரபூண்டி ஏறுமுகம் ஒரு வழக்கில் ரிலீஸ் ஆனால் மறு வழக்கில் கைது செய்யப்படுகிறார்"

தல: உப்பு தின்னா தண்ணி குடி. தப்பு செஞ்ச தலைல அடி. சும்மாவா சொன்னாங்க நம்ம தாத்தன்ஸ்!!

செந்தில்: "இப்படி அநியாயம் நடக்கிறதே. இது என்ன நாடா? இல்லை கரும்புலி வாழும் காடா? இப்படி இருந்தால் நாட்டில் அமைதி இருக்குமா?"

தல: நாடா. காடா. வாடா. போடா. முடியல...என்ன இருந்தாலும் போன ஆட்சில தமிழ்நாடு அமைதிப்பூங்காவா இருந்துச்சி. ஆனா இந்த மேடம் அந்த பூங்காவை எங்கயோ ஒளிச்சி வச்சிட்டாங்க. பேட் மம்மி. 

செந்தில்: அண்ணே. பெட்டிச்செய்தி செம காமடியா இருக்கு. யாரோ ஒரு முன்னாள் மந்திரி போன தரம் ஏகப்பட்ட நிலத்தை லவட்டும்போது அவசரத்துல தெரியாம தன்னோட சொந்த நிலத்தையே ஆப் ரேட்டுக்கு மிரட்டி வாங்கிட்டாராம்.  

தல: ஹா...ஹா..சூப்பர் அப்பு. நல்ல வேளை நம்ம வாடகைக்கு கடை வச்சிருக்கோம். அது போகட்டும். ஏழாம் அறிவு சூட்டிங் முடிஞ்சுருச்சாம். சூர்யாவுக்கு போன் போட்டு வரச்சொல்லு. இப்ப அவருக்கு இருக்குற முடிய வெட்டுனாலே ஒரு மாசத்துக்கு வீட்டுக்கு மளிகை சாமான் வாங்கிடலாம்!!

.....................................................................

Posted by:

! சிவகுமார் !

.....................................................................



3 comments:

Unknown said...

மாப்ள முடியல...காமடின்னாலும் சும்மா ரவுண்டு கட்டி அடிசிருக்கய்யா சூப்பர்!

தனி காட்டு ராஜா said...

//ஐயா..குடை புடிச்சிட்டு போற பெரியவரே, கருத்து சொல்லிட்டு போங்க!//

:))

K.s.s.Rajh said...

// தலை..மையா..அவரு எப்படா டை அடிச்சாரு?//

ஹி,ஹி,ஹி,ஹி