Thursday, August 11, 2011

கால் கிலோ அல்வா: நாஞ்சில் மனோ பேட்டி



கவுண்டமணி: எலா. யாருலா இந்த ஆபீசர். இதுக்கு முன்னாடி இவரை நான் பாத்ததே இல்லியே?

செந்தில்: அண்ணே இவர்தான் நாஞ்சில் மனோ. 

கவுண்டமணி: 'நான் ஜில்' மனோவா? எந்நேரமும் Fridge  உள்ள இருப்பாரா?

செந்தில்: அவர பத்தி உங்களுக்கு தெரியாது. இப்போதைக்கு மும்பைய அலற வக்கிற முக்கிய புள்ளியே அவருதான். 

கவுண்டமணி:  ஏன்..பாட்ஷா - 2 படத்துல நடிக்கறாரா?

செந்தில்: ஆமா. முதல் பாதி மும்பைல.  2 - வது பாதி பஹ்ரைன்ல ஷூட்டிங். 

கவுண்டமணி: ஏயப்பா. பெரிய ஆளுதான். வா.. மனோ ஆபீசர் பேட்டில என்ன சொல்றாருன்னு பாப்போம்.

                                                          பஹ்ரைன் 'பாட்ஷா' 


1. உங்க ப்ளாக் ப்ரோபைல்ல கலைஞரின் புத்தகங்கள் புடிக்கும்னு சொல்லி இருக்கீங்களே? அது என்ன புக்குன்னே?  


தென்பாண்டி சிங்கம்,  ரோமாபுரியில் பாண்டியன் ம்ம்ம்ம் அப்புறம் நெஞ்சிக்கு நீதி மக்கா, கடைசி பாகம் படிக்கலைன்னு நினைக்கேன், ஏன்னா அதுக்குள்ளே ஆசுபத்திரி பக்கத்துல வந்துருச்சிடே ஹி ஹி....

2. நீங்க சி.எம். ஆனா முதல்ல போடப்போற மூணு ஆணைகள் என்ன?

1 : கூவம் உண்மையிலேயே கரையேறனும்லேய் மக்கா.....
2: தமிழ்நாட்டுக்குள்ளே இருக்குற கருப்பு பணம் எல்லாத்தையும் புடுச்சி ஏதாவது மக்களுக்கு நன்மை செய்யனும்லேய் மக்கா...
3 : தமிழ்நாட்டை முன்னுதாரணமா மத்த மாநிலங்கள் மாத்திரம் இல்லைடே, உலகமே பார்க்கணும்....!

3. சிபி,  விக்கி ரெண்டு பேருக்கும் நடுவுல உக்காந்துகிட்டு 20 மணி நேரம் பஸ்சுல போற நிலைமை வந்தா எப்படி தப்பிப்பீங்க? கண்டிஷன்: இடத்தை விட்டு நகரக்கூடாது,  ஹெட்செட்ல பாட்டு கேக்கக்கூடாது, தூங்கக்கூடாது.

ஐயோ அப்பிடி ஒரு பாக்கியம் [[பெண் அல்ல]] கிடைச்சா அந்த நாள் இனிய [[நாசமாபோச்சு போ]] நாளாக இருக்கும், காரணம், அண்ணன் சிபி'கிட்டே பிட்டு பட ஸ்டோரி சொல்ல சொல்லி கேட்பேன், விக்கி அண்ணன்கிட்டே ஃபிகர் கதை பற்றி கேட்பேன், கதை சொல்லியே நொந்து [[இருவது மணி நேரம் ]]ரெண்டு ராஸ்கலும் டயர்ட் ஆகி நொந்துருவாணுக ஹி ஹி, அப்புறம் அது கில்மா பயணம் அப்பிடின்னு நான் ஒரு பதிவை தேத்திருவேம்லேய் மக்கா....

4. இந்த படத்துக்கு ஜாலி கமன்ட் போடுங்க(அட்டாச் செய்யப்பட்டுள்ளது)

                                                                     
எந்த படத்துக்குலேய் ஜாலி கமெண்ட் போட சொல்லுதே ஒரு படத்தையுமே காணோம்....?? எனக்குதேன் கண்ணு எளவு தெரியல்லியா...!!!


(மனோ அண்ணாத்த ..இப்ப தெரியுதா படம். கமண்ட்டை போடுங்க)


5. உங்க வீட்ல நடந்த மறக்க முடியாத காமடி சம்பவம் எதுனா ஒண்ணு சொல்லுங்க.

சிறு வயதில் ஒரு பஸ் பிரயாணத்தில் செம கூட்டம், அப்போது என் அப்பா அம்மா டிக்கெட் எடுத்துருபாவ'ன்னு நினச்சி சும்மா இருந்தாவ, எங்க அம்மா அப்பா டிக்கெட் எடுத்துருப்பாவ'ன்னு நினச்சிருக்காவ.......ஆக மொத்தம் ரெண்டு பேருமே டிக்கெட் எடுக்காம இறங்கிருக்காவ இதை இப்பவும் சொல்லி சிரிப்போம்.......!!!

6. நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம்னு பஞ்ச் டயலாக் சொல்றீங்க. அந்த 'நன்று' என்னன்னு மக்களுக்கு சொல்லுங்க? 

பிளாக் எழுதனும்னு நினச்சா அதை அன்னைக்கே உடன எழுதி மக்களை கலவர படுத்தணும் ஹி ஹி...[[போதுமா]] 

7. நீங்க வாங்குனதுல மிகப்பெரிய 'பல்ப்' எது? 

ஐந்தரை மணிக்கு ரயில் ஈரோடு போகும் சிபி'யை அங்கே பார்க்கலாம்னு சொன்னாரு ஆபீசர், ஆனால் ரயில் மூன்றரை மணிக்கு ஈரோடு போனது, சிபி கிட்டே திட்டு வாங்குனது ஹி ஹி.....

8. நைட்ல பப்பரப்பேன்னு கொட்டாவி விடும்போது வாய்க்குள்ள பெருச்சாளி மாட்டிக்கிட்டா என்ன பண்ணுவீங்க? (கண்டிசன்: ஒரு மணி நேரம் போராடணும்)

இது ஒரு நல்ல கேள்வி மட்டுமில்ல நாட்டு மக்களுக்கு தேவையானதும் கூட [[அருவாளை எங்கே வச்சேன் பிச்சிபுடுவேன் பிச்சி....??]] உடனே சிபிக்கு போனை போட்ருவேன் டேய் அண்ணே சீக்கிரமா ஓடி வாலேய் உனக்கு சினிமா எடுக்க ஒரு பெருச்சாளி வசமா தம்பி கையில ஸாரி வாயில சிக்கிருச்சிலேய், ஒரு மணி நேரம்தேன் டைமு வந்தியன்னா அமலா பாலை வச்சி ஒரு சூப்பர் படம் பூலான்தேவி கதை மாதிரி சினிமா எடுத்து தமிழ் மக்களை அடுத்த மாநிலத்துக்கு ஓட வச்சிரலாம் ஓடிவா ஹே ஹே ஹே ஹே....


9. உங்களுக்கும் கலைஞர் கருணாநிதிக்கும் உள்ள ஆறு ஒற்றுமைகள் என்ன? (ஆறையும் சொல்லியே தீரனும்)

1 : பிளாக் "எழுதி" மக்களை கலவரபடுத்துறது.....
2 :  பிளாக் "எழுதி" மக்களை கலவரபடுத்துறது..... 
3 :  பிளாக் "எழுதி" மக்களை கலவரபடுத்துறது.....
4 :  பிளாக் "எழுதி" மக்களை கலவரபடுத்துறது.....
5 :  பிளாக் "எழுதி" மக்களை கலவரபடுத்துறது.....
6 :  பிளாக் "எழுதி" மக்களை கலவரபடுத்துறது.....
[[அப்பாடா தப்பிச்சாச்சு ஹி ஹி]]


10. கவுண்டமணி - செந்தில் காமெடில உங்களுக்கு பிடிச்சது எது? 

செந்தில் பெட்ருமாஸ் லைட் மேன்டலை புடுங்கி ஓடின பிறகு வரும் பெண்ணிடம் கவுண்டர் கேட்கும் கேள்வி, பெட்ருமாஸ் லைட்டேதான் வேணுமா..........? [[படம் வைதேகி காத்திருந்தாள்]





பேட்டி:
! சிவகுமார் !
madrasbhavan.blogspot.com  
........................................................................................................................

விரைவில் இன்னொரு பிரபல பதிவருடன் அடுத்த பேட்டி
........................................................................................................................







24 comments:

saro said...

உங்கள் பதிவு நன்றாக இருந்தது.

hot tamil actresses

Unknown said...

எலேய் மாப்ள அந்த பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணுமா ஹிஹி!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மனோ பதிவரா?

நான்கூட அருவா,சுத்தி,கடப்பாரை, பஜ்ஜி,லட்டு விக்கிறவரோன்னு நினைச்சேன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

யோவ் வாயில பெருச்சாளி போனா எப்படியா பேச முடியும்?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

கலைஞர் கருணாநிதி ப்ளாக் எழுதுறாரா? சொல்லவே இல்லை? Link Please

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பஹ்ரைன் 'பாட்ஷா' //

பஹ்ரைன்ல பாச்சா உருண்டை விக்கிறாரா?

காட்டான் said...

முத குழ அதுவும் மனோன்னா சொலவும் வேண்டுமா... அவர் ரசித்த நகைச்சுவை காட்டானும் ரசித்திருக்கான்யா...

காட்டான் குழ போட்டான்...

Shiva sky said...

சிரிப்பூட்டும் பதிவு...

இராஜராஜேஸ்வரி said...

7. நீங்க வாங்குனதுல மிகப்பெரிய 'பல்ப்' எது?

ஐந்தரை மணிக்கு ரயில் ஈரோடு போகும் சிபி'யை அங்கே பார்க்கலாம்னு சொன்னாரு ஆபீசர், ஆனால் ரயில் மூன்றரை மணிக்கு ஈரோடு போனது, சிபி கிட்டே திட்டு வாங்குனது ஹி ஹி.....//

super

goundamanifans said...

@ சரோ

நெசமாவா சொல்றீங்க..மனோவுக்கு வந்த வாழ்வு..

goundamanifans said...

@ விக்கி

அதுவும் பஹ்ரைன் பெட்ரோமாக்ஸ்தான் வேணுமாம்.

goundamanifans said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
மனோ பதிவரா?

நான்கூட அருவா,சுத்தி,கடப்பாரை, பஜ்ஜி,லட்டு விக்கிறவரோன்னு நினைச்சேன்//

மனோ அண்ணே..இந்த கேள்விக்கும் பதில் சொல்ல விடாம மும்பைல ஒரு வாரம் உங்களை வச்சி அழகு பாக்குறாங்களா..

goundamanifans said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பஹ்ரைன் 'பாட்ஷா'

பஹ்ரைன்ல பாச்சா உருண்டை விக்கிறாரா?//

செஞ்சாலும் செய்வார். இப்ப மும்பைல ஆட்டோ ஓட்டிகிட்டு இருக்கார்...

அம்பாளடியாள் said...

அருமையான நகைச்சுவை கலந்த பேட்டி .இறுதியில் தேர்வுசெய்த காநோளியும் சூப்பருங்கோ..........ஏனையா பனிக் குட்டி.நம்ம கடைக்கு வாறதுக்கு என்ன?...இண்டைக்கு உங்களப்பத்தித்தான் செமக்கட்டு கட்டி
இருகிறேனுங்கோ வந்து சிரியுங்க .வரட்டுங்களா....நன்றி பகிர்வுக்கு.

MANO நாஞ்சில் மனோ said...

(மனோ அண்ணாத்த ..இப்ப தெரியுதா படம். கமண்ட்டை போடுங்க)//

ஊரோரம் புளியமரம்'ன்னு கும்மி அடிக்கிராயிங்களோ ஹி ஹி....

MANO நாஞ்சில் மனோ said...

விக்கியுலகம் said...
எலேய் மாப்ள அந்த பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணுமா ஹிஹி!//

நான் ஃபிகரை பற்றி கேட்டேனா....ஹி ஹி...

MANO நாஞ்சில் மனோ said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
மனோ பதிவரா?

நான்கூட அருவா,சுத்தி,கடப்பாரை, பஜ்ஜி,லட்டு விக்கிறவரோன்னு நினைச்சேன்//

எலேய் வேண்டாம்லேய் வீனா அருவாளுக்கு வேலை வச்சிராதே....

MANO நாஞ்சில் மனோ said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
யோவ் வாயில பெருச்சாளி போனா எப்படியா பேச முடியும்?//

அதான் ஒருமணி நேரம் போராடுரோம்ல...

MANO நாஞ்சில் மனோ said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
கலைஞர் கருணாநிதி ப்ளாக் எழுதுறாரா? சொல்லவே இல்லை? Link Please//

பிச்சிபுடுவேன் பிச்சி......

MANO நாஞ்சில் மனோ said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
பஹ்ரைன் 'பாட்ஷா' //

பஹ்ரைன்ல பாச்சா உருண்டை விக்கிறாரா?//

அப்பிடி போடு அருவாளை ஹா ஹா ஹா ஹா....

MANO நாஞ்சில் மனோ said...

goundamanifans said...
@ சரோ

நெசமாவா சொல்றீங்க..மனோவுக்கு வந்த வாழ்வு..//

ஹி ஹி.....

MANO நாஞ்சில் மனோ said...

goundamanifans said...
@ விக்கி

அதுவும் பஹ்ரைன் பெட்ரோமாக்ஸ்தான் வேணுமாம்.//

ஐயோ அது அந்த லைட் இல்லைய்யா.....வேற......

MANO நாஞ்சில் மனோ said...

goundamanifans said...
//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பஹ்ரைன் 'பாட்ஷா'

பஹ்ரைன்ல பாச்சா உருண்டை விக்கிறாரா?//

செஞ்சாலும் செய்வார். இப்ப மும்பைல ஆட்டோ ஓட்டிகிட்டு இருக்கார்...//

கண்டிப்பா மும்பை வந்தப்போ எவனோ கால்ல ஆட்டோ ஏத்திட்டான்னு நினைக்கேன் ஹே ஹே ஹே ஹே...

தினேஷ்குமார் said...

ஒரு முக்கிய அறிவிப்பு பஹ்ரைனில் இருந்து தப்பிய நாஞ்சில் மனோ என்னும் எஸ்கேப் ஏகாம்பரம் அவர்களை விரைவில் கண்டுபிடித்து பஹ்ரைன் மிலிட்டரியிடம் ஒப்படைக்க வேண்டும் என இந்தியன் வங்கிக்கு ஆனை பிறப்பிக்கப்பட்டுள்ளது ... அவரைக் கொண்டு செல்ல ஏர்ப்போர்ட் வளாகத்தில் முகமுடியல்லாத சிலர் சுற்றிக்கொண்டிருப்பதாக பஹ்ரைன் உளவுத்துறை செய்தி அனுப்பியுள்ளது...