"புதிய தலைமை செயலகம் ஆஸ்பத்திரியா மாறப்போகுதாமுல்ல. நெனச்சா சந்தோசமா இருக்கு புள்ள. மேடம் கிட்ட ஒண்ணு மட்டும் உறுதியா சொல்லிப்புட்டேன். அந்த ஆஸ்பத்திரிக்கு 'டாக்டர் சபரி மருத்துவமனை'ன்னு பேரு வைக்கணும்னு"
...............................................................................
"தங்கம் விலை ஏறப்போதுன்னு அப்பயே தலப்பாடா அடிச்சிகிட்டேன். இப்ப அனுபவிங்க. என்னோட மூக்குல, காதுல, நாக்குல இருக்குறது எல்லாம் சொக்கத்தங்கம்ல"
.............................................................................................
"அம்மா ஆட்சி தொடங்கி 100 நாள் ஆனதுக்கு நான் எந்த கருத்தும் சொல்ல விரும்பல மக்களே. என்னோட விருதகிரி வெற்றிகரமா 10 - வது நாள் ஒடுனப்ப மட்டும் அந்தம்மா வாழ்த்து சொன்னாங்களா? என்றா நியாயம் இது?"
.........................................................................................
"என்னோட பர்த்டே-வை வறுமை ஒழிப்பு தினமா கொண்டாடனும்னு சொன்னதை எவனோ ஒரு துரோகி வறுமையோட மொபைலுக்கு sms பண்ணி இருக்கான். வறுமையோட வீட்டுக்கு போயி எல்லா ரூம்லயும் தேடிட்டேன். தப்பிச்சிருச்சி. விட மாட்டேன். எங்க இருந்தாலும் தேடிப்பிடிச்சி அதை ஒழிச்சே தீருவேன்"
"கேப்டன். கேப்டன். உன்னோட படங்க மட்டும்தான் உலக சினிமா வரிசைல நிரந்தர டாப் டென். எதிரிகளை விரட்டி அடிச்சவன் இந்த நரசிம்மா. உள்ளாட்சி தேர்தல்ல கேட்ட சீட்டை தருமா இந்த அம்மா. லோக்பால் மேட்டரை வச்சி சூப்பர் ஹீரோ ஆயிட்டாரு அந்த அன்னா. கருப்பு எம்.ஜி.ஆர். பேரை மாத்திட்டு 'ஆசியாவின் அன்னா'ன்னு புதுப்பேரு வச்சிகிட்டா என்னா?"
................................................................................................................
"நல்லவேளை இந்த போட்டோ அந்தம்மா கண்ணுல சிக்கல"
.........................................................................................
"எத்தனை தடவ சொல்லியும் நம்ம பயலுக இந்தியாவை விட்டு தாண்ட மாட்டோம்னு அடம் புடிக்கறானுங்களே. சர்வதேச லெவல்ல கீழ இருக்கற மாதிரி போஸ்டர் ஒட்டுங்கன்னு நான் சொல்லித்தான் தெரியணுமா?"
"எந்த எடுவட்ட பயடா இந்த எடை மிஷினை கண்டுபுடிச்சது? நான் வெயிட் பார்ட்டின்னு தெரிஞ்சும் சீண்டுரானா? என்ன தெனாவட்டு இருந்தா என்னோட வெயிட்டு ஜீரோன்னு காட்டும். அந்த பரதேசியை கொன்னுட்டுதான் மறு வேலை"
........................................................................................
குளத்துல நீச்சல் பழகுனவனை ஆறு பயம் காட்டும். ஆத்துல நீச்சல் பழகுனவனை கடல் பயம் காட்டும். கடல்ல நீச்சல் பழகுனவை???
நீங்களே பாருங்க:
..........................................................................
Posted by:
! சிவகுமார் !
nanbendaa.blogspot.com
nanbendaa.blogspot.com
...............................
22 comments:
என்றா இது மாப்ள!
Happy birthday to captain
வறுமை ஒழிப்பு போஸ்டர்ல யாரு அது கேப்டன் வாயிகுள்ள வருமைய தேடுறது ?
வாசிக்கும் போது ரோபோ சங்கர் நினைவு தான் வந்தது...அவர் தான் காப்டனை முந்திவிடுவார்...ரசித்தேன்...
கப்டன் கப்டன் தான் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தலீவா
அடப்பாவமே... நம்ம வலைப்பூவுல நானே மைனஸ் ஓட்டு போட வேண்டியதா போச்சே...
இங்கயும் மைனஸ் ஓட்டு குத்திட்டாங்களா???? ;;;;;;;;;;;;;--)
முடியலை. வேணாம்
வறுமை ஒழிப்புன்னா, லஞ்சம் ஒழிப்பாண்ணே?
வறுமையை போக்க எருமை வளர்போம்! கால்நடை பராமரிப்புத் துறையின் ஸ்லாகன்! நான் எருமை என்று யாரையும் சொல்லவில்லை!!
//விக்கியுலகம் said...
என்றா இது மாப்ள!//
சட்டம் தன் கடமையை செய்யும் மாம்சு!
// "என் ராஜபாட்டை"- ராஜாsaid...
Happy birthday to captain//
கேப்டன் "Very machchu thenksu raasaa!!
//அஞ்சா சிங்கம் said...
வறுமை ஒழிப்பு போஸ்டர்ல யாரு அது கேப்டன் வாயிகுள்ள வருமைய தேடுறது ?//
வறுமையின் நிறம் செகப்பாம்ல. அதான் வெத்தலை போட்ட வாயை எட்டிப்பாக்குறோம்!!
//ரெவெரி said...
வாசிக்கும் போது ரோபோ சங்கர் நினைவு தான் வந்தது//
ரோபோ படம் எடுத்த ஷங்கரை பத்தி சூப்பரா சொன்னீங்க தல (எப்படி எங்க பொது அறிவு?)
// kobiraj said...
கப்டன் கப்டன் தான் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தலீவா//
டன் கணக்குல கப் ஜெயிச்சதால கப்டன்-னு சொன்ன தெய்வமே..வாழ்க!!
// kobiraj said...
கப்டன் கப்டன் தான் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தலீவா//
டன் கணக்குல கப் ஜெயிச்சதால கப்டன்-னு சொன்ன தெய்வமே..வாழ்க!!
//Philosophy Prabhakaran said...
அடப்பாவமே... நம்ம வலைப்பூவுல நானே மைனஸ் ஓட்டு போட வேண்டியதா போச்சே..//
உங்ககிட்ட எதிர்மறை சிந்தனை பெருக்கெடுத்து ஓடிக்கிட்டு இருக்கு. சின்னதா ஒரு அணைய போடுங்க.
//இரவு வானம் said...
இங்கயும் மைனஸ் ஓட்டு குத்திட்டாங்களா???? ;;;;;;;;;;;;;--)//
கேப்டனோட தீவிர பக்தர் இந்த சதியை செஞ்சிருக்காரு...மன்சூர் அலிகான் இல்லனா ஸ்ரீமன் ரெண்டு பேர்ல ஒருத்தர்தான் இதை செஞ்சிருக்கணும்.
//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
முடியலை. வேணாம்//
பல்வேறு பாகங்கள் பகுமானமாக தயார் ஆகிக்கொண்டு இருக்கின்றன. விரைவில் பரிமாறப்படும்.
This comment has been removed by the author.
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
வறுமை ஒழிப்புன்னா, லஞ்சம் ஒழிப்பாண்ணே?
கேப்டன் "இந்த மாதிரி எல்லாம் கோக்கு மாக்கா கேள்வி கேட்டா மட்டும் நீங்க ஆப்கானிஸ்தான் தீவிரவாதி இல்லைன்னு ஆயிடாது. ஜீரோ வாட்ஸ் பல்ப் வெளிச்சத்துல இருட்டு ரூம்ல விசாரிக்கணும். வாங்க போவோம்.
//Dr.S.இராஜேந்திரன்.B.V.Sc; said...B.V.Sc.
வறுமையை போக்க எருமை வளர்போம்! கால்நடை பராமரிப்புத் துறையின் ஸ்லாகன்! நான் எருமை என்று யாரையும் சொல்லவில்லை!//
டாக்டர் நீங்க இந்தியாவோட செல்லப்பிள்ளைய சிலுப்பி பாத்துட்டீங்க. அது உங்கள முட்டாம விடாது.
Post a Comment