Wednesday, August 31, 2011

யூத் பதிவர் சிந்திப்பு: செய்தித்துளிகள்


             
* போன பதிவுல போட்டபடி வர்ற சண்டே சாயங்காலம் அஞ்சி மணிக்கு மாநாடு தொடங்குது சாமியோ.

*  ரூல்ஸை மீறி யூத்தா காட்டிக்கிட்டு உள்ள வர்றதுக்கு சில பேரு முயற்சி செய்றாங்கன்னு செய்தி வருது. அதனால தலைல டை அடிச்சிட்டு வர்றவங்க, தொப்பை தெரியக்கூடாதுன்னு தம் கட்டிட்டு நடந்து வர்றவங்க எல்லாரையும் கண்காணிக்க ஆளுங்களை போட்டுருக்கோம். 

* சரியான நேரத்துக்கு வந்து சீட்டை புடிச்சிக்கங்க. துண்டு, கர்சீப், காலாவதியான செருப்பு மாதிரி ஓல்ட் டைப்ல சீட் ரிசர்வ் செஞ்சி யூத் இமேஜை ஸ்பாயில் பண்ணாதீங்க. லேட்டஸ்ட் ட்ரெண்டா பர்ஸ், கேமரா மொபைல், ரீபோக் ஷூன்னு போட்டு ரிசர்வ் பண்ணுங்க. 

* தனித்திறமையை காட்டியே தீருவேன்னு அடம்பிடிக்கறவங்க தாராளமா முன்வரலாம். கவிதை வாசிக்கறதா இருந்த நச்னு புதுக்கவிதை சொல்லுங்க. அதைவிட்டுட்டு 'என் இதயத்தில் இருந்து பீறிட்ட ரத்தம் கொண்டு நம் காதல் யுத்தம் முடிப்பேன். உன் அண்ணன் போடும் சத்தம் மொத்தம் அழிப்பேன்' ரேஞ்சுல இருந்தா ரகளை ஆகிடும்.



* முக்கியமான மேட்டர்: உங்ககிட்ட ஏதாச்சும் நல்ல புத்தகங்கள் இருந்தா (இருக்கா?) அதை கொண்டுவாங்க. சந்திப்புக்கு வர்ற யூத்ஸ்க்கு கிப்டா தரலாம்.    பழுப்பேறிய, கிழிஞ்ச புத்தகங்களை கொண்டு வர வேண்டாம்.

* குறிப்பா அரியர்ஸ் எழுத வச்சிருக்குற புக்கு, காதலிக்கு/காதலனுக்கு உருகி உருகி எழுதுன உன்னத டைரி, காலேஜ் சேந்தப்ப வாங்கி இன்னும் பிட் அடிக்க கூட கிழிக்காத புக்கெல்லாம் கொண்டு வந்து காண்டு ஏத்தாதீங்க. யூத்துன்னா உருப்படியா ஏதாவது கொஞ்சம் கிழிப்பாங்கன்னு ப்ரூவ் பண்ண இது ஒரு சந்தர்ப்பம். டோன்ட் மிஸ்!! 
                                           
                                                             
* கீழ இருக்குற அஞ்சி நம்பர்ல யாருக்கு வேணும்னாலும் கால் பண்ணி மாநாடு சம்மந்தமா உங்க டவுட்டை கிளியர் பண்ணிக்கலாம்.

கேபிள் சங்கர்: 98403 32666

கே.ஆர்.பி. செந்தில்: 80988 58248

வேடந்தாங்கல் கருன்: 94432 75467

பிரபாகரன்: 80158 99828

சிவகுமார்
98416 11301

..........................................................................

* மாநாட்டில் சந்திப்போம். உங்களுக்காக கவுண்டமணியின் கலக்கல் காமடி:



.................................................................................
Posted by:
..................................................................................
    
                                                  

15 comments:

Unknown said...

மாப்ள தகவல்களுக்கு நன்றி...அடிக்கடி நீங்க யூத்து சந்திப்புன்னு போடுறதால...என்னைய போல் நடுத்தரங்கள்(!)
யோசிக்க வாய்ப்பு இருக்கு மற்றபடி எல்லாம் ஒகே நன்றி!

goundamanifans said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
Present sir//

யூத் மாதிரியே அட்டெண்டன்ஸ் குடுத்து இப்படித்தான் இமேஜை மெயிண்டயின் பண்ணனும்!!

goundamanifans said...

//விக்கியுலகம் said...
மாப்ள தகவல்களுக்கு நன்றி...அடிக்கடி நீங்க யூத்து சந்திப்புன்னு போடுறதால...என்னைய போல் நடுத்தரங்கள்(!) யோசிக்க வாய்ப்பு இருக்கு மற்றபடி எல்லாம் ஒகே நன்றி//

மாம்ஸ்..டென்ஷன் ஆவாதீங்க. ஏஜ் கட் ஆப் 38. ஜாலியா வாங்க!!

கோவை நேரம் said...

ரொம்ப சந்தோசம் ...வந்துடுவோம்ல ....

Unknown said...

அப்புறம் என்னப்பா தென் சென்னை அல்டிமேட் பதிவரே சொல்லிட்டாரு, யூத்துகெல்லாம் கிளம்புங்க சென்னைக்கு, சென்னைக்கு போக ஸ்பான்சர் வேணும்னா மதுரையின் மண்ணின் அஞ்சாத சிங்கம் மணிய அனுகவும்....

இப்படிக்கு

! சிவக்குமார் !

கிராமத்து காக்கை said...

உண்மையாக மாநாடு நடக்கிறதா
நண்பரோ இல்ல இது காமெடி தொடரா?

Anonymous said...

இனிய பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துக்கள்...

சதீஷ் மாஸ் said...

சும்மா தலய சொறிய வைக்காதிங்க.... புத்தகம்லாம் வேண்டாம், விநாயகர் சதுர்த்திக்கு செஞ்ச நல்ல பலகாரம் இருந்தா கொண்டுவாங்க... கெட்டுபோன பலகாரம் நாட் அலவுட்... முறுக்கு எடுத்துவாங்க எனக்கு அதான் பிடிக்கும்....

Philosophy Prabhakaran said...

ஸ்டாலினே யூத்து தான் தெரியுமோ...???

Anonymous said...

//கோவை நேரம் said...
ரொம்ப சந்தோசம் ...வந்துடுவோம்ல //

வாங்க..வைகோ நேரம்..சாரி கோவை நேரம். நண்பர்களுக்கு தர புத்தகம் இருந்தா கொண்டு வாங்க!!

Anonymous said...

@ இரவு வானம்

மதுரை மைந்தன்..மணியை வரவேற்கிறோம்!!

Anonymous said...

//கிராமத்து காக்கை said...
உண்மையாக மாநாடு நடக்கிறதா
நண்பரோ இல்ல இது காமெடி தொடரா?//

சத்தியமாக மாநாடு நடக்கிறது. நம்புங்கள். அப்படி நடக்காவிடில் மேலே இருக்கும் போன் நம்பரில் முதல் நான்கு பேரை கிழி கிழி என்று கிழிக்கலாம்!

Anonymous said...

//ரெவெரி said...
இனிய பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துக்கள்.//

தங்களுக்கும் இனிய நல்வாழ்த்துகள் நண்பா!

Anonymous said...

/சதீஷ் மாஸ் said...
சும்மா தலய சொறிய வைக்காதிங்க.... புத்தகம்லாம் வேண்டாம், விநாயகர் சதுர்த்திக்கு செஞ்ச நல்ல பலகாரம் இருந்தா கொண்டுவாங்க... கெட்டுபோன பலகாரம் நாட் அலவுட்... முறுக்கு எடுத்துவாங்க எனக்கு அதான் பிடிக்கும்...//

காலேஜ் படிக்கிற புள்ள புக்கு வேண்டாம்னு சொல்லுது. மக்களே கேட்டுக்கங்க. சதீஷ் கேட்ட மாதிரி நறுக்குனு நாலு முறுக்கு கொண்டு வாங்க.

Unknown said...

goundamanifans said...
//விக்கியுலகம் said...
மாப்ள தகவல்களுக்கு நன்றி...அடிக்கடி நீங்க யூத்து சந்திப்புன்னு போடுறதால...என்னைய போல் நடுத்தரங்கள்(!) யோசிக்க வாய்ப்பு இருக்கு மற்றபடி எல்லாம் ஒகே நன்றி//

மாம்ஸ்..டென்ஷன் ஆவாதீங்க. ஏஜ் கட் ஆப் 38. ஜாலியா வாங்க!!
>>>>>>>>>

ஹிஹி சும்மாத்தான்யா சொன்னேன்! நோ டென்சன்!