Saturday, August 6, 2011

Rise of the Planet of the Apes



                                                                 
தல(கவுண்டமணி): டேய் தகப்பா..நில்றா. ராத்திரி 12 மணி ஆச்சி. எங்கடா சைட் அடிச்சிட்டு வர்ற இடி அமீன் மண்டையா..   

செந்தில்:  பையர். நான் சைட் அடிக்க போகல. நம்ம ஊர் கொட்டாய்ல புதுசா வந்த 'ரைஸ் ஆப் தி பிளானெட் ஆப் தி ஏப்ஸ்' இங்க்லீஷ் படம் நைட் ஷோ பாத்துட்டு வர்றேன் பையர். 

தல: என்னது ரைஸ், ப்ளேட், ஏப்பமா? முக்குல இருக்குற முனியாண்டி விலாஸ்ல புல் கட்டு கட்டிட்டு வந்து அதை இங்கிலீஷ்ல சொன்னா எனக்கு தெரியாதாடா தேன்கூடு தலையா...

செந்தில்: நீங்க தப்பா புரிஞ்சிக்கிட்டீங்க மகர்.  அதுக்கு பேரு Rise of the Planet of the Apes ஆக்கும். 

தல: முதியோர் கல்வி டீச்சரோட நீ சுத்துறப்பவே நெனச்சேன். அப்படி என்னடா அந்த படத்துல இருக்கு. சொல்லுடா எங்கம்மா புருஷா..

செந்தில்: ஜுராசிக் பார்க், காட்டு ஜில்லா(Godzillaa) மாதிரி எல்லாருக்கும் புடிக்கற மாதிரி ரொம்ப நாள் கழிச்சி ஒரு படம் வந்துருக்கு. சிம்பன்சி கொரங்குங்களை வச்சி கதை சொல்லி இருக்காங்க. விஞ்ஞானி ஒருத்தர் 'சிம்பன்சி'ங்களுக்கு மனுஷன மாதிரி யோசிக்கற அளவுக்கு ஒரு மருந்து கண்டு புடிக்க முயற்சி செய்றாரு. அந்த லேப்ல அட்டகாசம் செய்ற ஒரு கொரங்கை சுட்டுடுறாங்க. அதோட புள்ளைதான்தான் படத்தோட ஹீரோ. அதை கொஞ்ச நாள் விஞ்ஞானி வீட்ல வளக்கறாரு. அங்க அது பண்ற லொள்ளால குரங்கு ஜெயில்ல அடைக்கறாங்க. அங்க மத்த கொரங்குங்களோட சேந்துகிட்டு புரட்சி செய்றாரு ஹீரோ. மத்ததை எல்லாம் தியேட்டர்ல போயி பாருங்க.

தல: அதை ஏண்டா தியேட்டர்ல போயி பாத்துக்கிட்டு. அதான் தினம் 24 மணிநேரமும் உன்ன பாக்கறனே. அது போதாதா. தூங்கும்போது மட்டும் கொஞ்சம் வித்யாசமா கரடி கக்கூஸ் போற மாதிரி சவுண்டு குடுக்கற..மத்தபடி உனக்கும் சிம்பான்சிக்கும் ஒரு வித்யாசமும் இல்லையேடா கேடி.  சாரி....... டாடி. 

                                                                 
செந்தில்: படத்துல செம சீன்லாம் இருக்கு. கேக்கறீங்களா மை சன்.

தல: இல்லன்னா மட்டும் விட்டுறவா போற. நம்ம பரம்பரைல மொத தரம் இங்கிலீஷ் படம் பாத்துருக்க. அடிச்சி விடு தண்டோராவை. 

செந்தில்: ஹீரோ கொரங்க பாத்து ஒரு நாய் கத்தும்போது அதுக்கு எதிர் சவுண்ட் விடுறது, வித விதமான முகபாவத்தை காட்டுறது, லீடர் மாதிரி கூட்டத்தை கூட்டுறது, க்ளைமாக்ஸ்ல அதகளம் பண்றதுன்னு வெளுத்து வாங்கி இருக்காரு குரங்கு வேஷம் போட்டு நடிச்ச ஆன்டி செர்கிஸ். 

                                                                     Andy Serkis     

தல: என்னாது உங்க ஆண்ட்டி சர்க்கஸ்ல இருந்தாங்களா?

செந்தில்: கிண்டல் பண்ணாதீங்க மை சன்! மிஸ்டர். டீச்சர் கூட படம் நல்லா இருந்ததுன்னு சொன்னாங்க.

தல: உலகம் பூரா  ஜூவுல வேலை செய்றவன் எல்லாம் 10, 15 கொரங்கோட நிம்மதியா இருக்கான். இந்த ஒத்த கொரங்க வச்சிக்கிட்டு நான் படுற பாடு இருக்கே.. அய்யய்யையோ! இப்ப முடிவா என்னதாண்டா சொல்ல வர்ற பிதாஜி.

செந்தில்: எல்லாரும் பாக்குற மாதிரி நல்ல ஒரு டைம்பாஸ் படத்தை தங்குருக்காங்க. கண்டிப்பா கொறஞ்சது 50 நாள் ஓடும்னு சொல்றேன்.

தல: ஆமா..ஏண்டா ராஸ்கோலு, படத்த நீ தமிழ்ல பாத்தியா இங்கிலீஷ்ல பாத்தியா?

செந்தில்: இங்க்லீஷ்லதான் பாத்தேன். அதே மொழில கீழ சப் டைட்டில் போட்டாங்க. தியேட்டர் புல்லா நல்ல கூட்டம். நீங்களும் போய் பாருங்க Son-in-Law.

தல: என்னது Son-in-Law வா?

செந்தில்: ஆமா. சட்டப்படி நீங்க என் சன் தான? அதான் Son-in-Law ன்னு சொன்னேன்.

தல: ஒத்த இங்கிலீஷ் படம் பாத்ததுக்கே இப்படி சொத்த மாதிரி பேசறானே. இவன் இன்னும் ஒரு படம் பாத்தா ஸ்பீல்பெர்க் எல்லாம் பீல் பண்ணி ஜெர்க் ஆய்டுவாங்க போல இருக்கே. 

                                                             Director: Rupert Wyatt

செந்தில்:  அத விடுங்க புதல்வர். படம் நல்லா இருக்கு. அதுக்கப்புறம் உங்க இஷ்டம்.
            
தல: அப்டீங்கற? எனக்கென்னவோ உன் பரம்பரை புகழை உலகமே தெரிஞ்சிக்க இந்தப்படத்த பாக்க சொல்றியோன்னு மைல்டா ஒரு டவுட்டு வருது. இருந்தாலும் நாளைக்கு காலைல ஒரு சேஞ்சுக்கு வெளிநாட்டு சிம்பன்சி மூஞ்சில முழிச்சி பாக்கறேன். ஆனா மகனே...சாரி அப்பனே.. படம் பாத்துட்டு வர்றதுக்குள்ள நீ டீச்சர் வீட்டுக்குள்ள நொலஞ்ச..உன்ன பொலி போட்டுருவேன் படுவா. பேசிக்கிட்டு இருக்கும்போது எங்க போயி தொலஞ்சான். டேய் ஆப்ரிக்கா கொரங்கே..தென்ன மரத்துல என்னடா பண்ற.

செந்தில்: பேரிக்கா பறிக்க போனங்க...

தல: தென்ன மரத்துல ஏதுடா பேரிக்கா? பக்கத்துக்கு வீட்டு பொண்ணு குளிக்கரத எட்டி பாக்க மரத்துல தவ்வி இருக்கியா கம்முனாட்டி பையா. மரியாதையா எறங்கிடு.

கவுண்டமணி கல்லை எடுத்து வீச, அடுத்த மரத்துக்கு பாய்கிறார் தகப்பர் செந்தில்!


Rise of the Planet of the Apes -  பாருங்கங்கோ. 




.....................................................................

Posted by:

! சிவகுமார் !

(nanbendaa.blogspot.com)
...................................................................

6 comments:

Unknown said...

பிளானெட் ஒப் தி ஏப்ஸ்(முதல் பாகம் ) மாறி இந்த படம் இருக்காதுன்னு நெனைக்கறேன் படத்தோட trailer சுமாராத்தான் இருக்கு

Sivakumar said...

ஆனா நம்ம ஆடியன்சுக்கு புடிக்கற மாதிரி பொழுதுபோக்கா இருக்கு ராக்கெட் ராஜா!!

Unknown said...

மாப்ள வித்தியாசமான விமர்சனம்யா....இருந்தாலும் முன்னோர்களை பக்குரதுன்னாலே தனி குஷிதான்யா ஹிஹி!

Sivakumar said...

@ விக்கி

ஆமா மாம்ஸ். நம்ம ஆளுங்க அட்டகாசம் பண்ணி இருக்காங்க.

சி.பி.செந்தில்குமார் said...

அடடா முந்திட்டீங்களே

Unknown said...

இது என்னோட விமர்சனம் Rise of the Apes