Saturday, December 24, 2011

ஈரோடு பதிவர் சந்திப்பு - ஜாலி பட்டாசுகள் பார்ட் 2


உணவு, சந்திப்பு, உயரிய கொள்கை: 

ஞாயிறு காலை உணவருந்த, நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு விரைந்தோம். சீனா ஐயா, தருமி, ப.கந்தசாமி போன்ற சீனியர்கள் அங்கு ஆஜர். ஷர்புதீன், வீடு சுரேஷ், தமிழ் பேரன்ட்ஸ் சம்பத், தமிழ்வாசி பிரகாஷ், யுவகிருஷ்ணா மற்றும் பிற நண்பர்களை சந்தித்தேன். நாய் நக்ஸ் ஒரு இட்லியை கையில் எடுத்து முன்னும் பின்னும் சில நொடிகள் திருப்பி பார்த்தார். ஏனோ தெரியவில்லை. பிறகு அனைவரும் வெளியே வருகையில் ஆறடி உயரத்தில் ஜிம் பாடியுடன் ஒருவர் வந்தார். நெற்றியில் விபூதி குங்குமம். அட நம்ம சிபி!! மொத்தமாக நிகழ்ச்சி நடந்த ஹாலுக்கு நுழைந்தோம்.

                               ஈசன்(பிரபா), சங்கவி, மோகன் சார், ஆரூர் முனா, கேஆர்பி                   

போட்டோ குறிப்பு:
ஈசன் இடுப்பளவை சரிபார்க்கும் சங்கவி, ஈசன் நீள்முடி கண்டு பொருமும் கேஆர்பி.

கடைசி வரிசையில் பிரபல பதிவர்களுக்கு தனிஇடம் ஒதுக்கி இருந்தனர். சிபி அங்கே போய் அமர்ந்து கொண்டார். நக்கீரன், தமிழ்வாசி பிரகாஷ் ஆகியோர் 'ஹல்லோ இங்க வாங்க' என்று அதட்ட என் அருகே அமர்ந்தார் சிபி. 'நீங்க நம்ம ஆளு. இங்க உக்காருங்க. கலகலப்போம்' என்றோம். திடுதிப்பென கேமரா ஷூட்டை ஆரம்பித்தார் தமிழ்வாசி. 'என்ன போட்டோ எடுத்தா, அதை நாலு நாளைக்கு பாத்து விடாம சிரிப்பீங்க. வேண்டாம்' என்றாலும் மனிதர் அசரவில்லை. வேறுவழியில்லை என்றதும், சிபியிடம் இருந்த கூலரை இரவல் கேட்டு போஸ் குடுத்தேன். என்னைப்பார் யோகம் வரும்!! 

                                         ஈசன் (எ) பிரபாகரன், டாக் லிக்ஸ் நக்கீரன், நான்.  

பொதிகை டிவி செய்தி வாசிப்பாளரை கண்டதும் கேமராவுடன் பறந்தார் சிபி. அப்போது நக்கீரர் அடித்த கமன்ட்: 'உக்காந்திருந்த கில்மா எந்திரிச்சி போகுது'. அடிக்கடி சிபி போயும்,வந்தும் கொண்டிருந்தார். நாங்கள் வேறு டாபிக் பேசினாலும் 'என்னைத்தானே கிண்டல் பண்ணீங்க' என்று கேட்டார். முதல்ல டாக்டரை பாருங்க தல. நக்ஸை பார்த்து கேஆர்பி "இத வச்சி சீக்கிரம் பதிவு போட ஆரம்பிங்க". நக்ஸ் "பதிவு போட்டுட்டுதான் ஈரோடே வந்தேன்". கிறுகிறுத்தார் கேஆர்பி. நக்ஸ் அண்ணனிடம் கஸாலி போனில் பேசிக்கொண்டே பதிவு போட்டார். ''நக்கீரரே, நீங்க பேசுவதை லைவ்வாக போஸ்ட் போடுகிறார் கஸாலி'' என்றதும் கதிகலங்கி பார்த்தார் நக்ஸ். ரோகினி சிவா மற்றும் சிலரை பார்த்தோம்(சிலர் பெயர் மிஸ் ஆகி இருந்தால் மன்னிக்க).

                             மீல்ஸ் அடிக்கும் 'சென்னை செல்லம்' ஆரூர் முனா செந்தில்              

சிபியின் ஜிம் பாடி கண்டு சற்று ஜெர்க் ஆனேன். "சார். ஜிம்முக்கு போவீங்களா? உங்கள பத்தி யார்னா தப்பா எதுனா சொன்னா/எழுதுனா கோச்சிப்பீங்களா?". சிபி "டெய்லி ஒடம்ப முறுக்கேத்துவேன். என்ன திட்டுனாலும் டென்ஷன் ஆவ மாட்டேன்" என்றார் ட்ரேட்மார்க் சிரிப்புடன். வெட்டியாக நேரத்தை வீணாக்க விரும்பாமல் நான், தமிழ்வாசி, நக்கீரர் இணைந்து கொள்கைத்தீர்மானம் நிறைவேற்ற ஆரம்பித்தோம். மினி ஜடா முடியுடன் பிரபாகரன் திரிந்து கொண்டிருந்தார். என்ன கொள்கை? இந்த பதிவர் சந்திப்பு குறித்து எத்தனை பதிவு போடலாம்? வேறன்ன. "அடுத்த ஊரில் பதிவர் சந்திப்பு நடக்கும் வரை ஈரோடு சந்திப்பு பற்றிய பதிவுகளை போட்டுக்கொண்டே இருக்கலாம்", "ஈரோடு தொடர்பதிவு போடலாம்", "முதல் 24 பதிவுகளில் ஊரைவிட்டு ஈரோடு வந்தது குறித்து பதிவிடலாம். வெள்ளிவிழாப்பதிவில்தான்  நாம் சந்தித்ததை பதிவிட ஆரம்பிக்க வேண்டும்", "வேண்டாம். ஈரோடு பதிவர் சந்திப்பு எனும் பெயரில் தனியாக ஒரு வலைப்பூ ஆரம்பித்து அதில் 365 பதிவுகள் போடலாம்" என சமூக அக்கறை நிறைந்த, உன்னதை ஐடியாக்களை அள்ளி வீசினர்.  

நக்ஸ் அண்ணன் மொபைலில் மனோ 'சாட்'டடித்தார். நான் என்று சிபியையும், அவரென்று என்னையும் நக்கல் அடித்தார். எப்படிண்ணே  இப்படி?

                                                        சிறப்பு உறுப்பு தள்ளுபடி 


சீமான் ரசிகர் படை, ங்கொய்யா:  
  
சந்திப்பு ஒருவழியாக முடிந்து எல்லாருக்கும் டாட்டா காட்டிவிட்டு ஈரோடு ரயில் சந்திப்பை அடைந்தோம். வாசலில் மேலே இருந்த விளம்பரத்தை பார்த்ததும் அசந்தே போனோம். தள்ளுபடி விலையில் சிகிச்சை பெற தள்ளாதபடி ஓடுமாறு உங்களை கேட்டுக்கொள்கிறோம். இரவு உணவு சாப்பிட வெளியே வந்தபோது "தம்பி(கேஆர்பி) இந்த காரை தள்ளுங்க. ப்ளீஸ்" என  காரில் இருந்து வயதான அம்மா குரல் தந்தார். சீமானின் ரத்தவெறி ரசிகர் படை காரை தள்ள ஆரம்பித்தது. கார்  தள்ளாமல் இந்த சரித்திர காட்சியை  படம் பிடித்த பிலாசபி, உனக்கு இருக்குய்யா ஒரு நாளைக்கி!

                                   'ஆ..தள்ளு தள்ளு தள்ளு' - நான், ஆ.மு.செ, கேஆர்பி

'லேசா லேசா' என சிக்னல் காட்டி டாஸ்மாக் செல்ல பர்மிஷன்/நிபந்தனை  கேட்டனர்/போட்டனர் மூவர். அவர்களுடன் சோமபான கடைக்கு சென்றேன். . பத்தாவது இறுதித்தேர்வு எழுத இருக்கும் மாணவர்களைப்போல் படு சீரியசாக பெஞ்சுகளில் குத்த வைத்தவாறு ஆலோசனை செய்து கொண்டு இருந்தனர் ஈரோட்டு வாசிகள். பெரியார் இருந்திருந்தால் பிரம்பாலேயே பின் பக்கம் பழுக்க அவர்களை கிளப்பி பட்டையை கிளப்பி இருப்பார். வாழ்க சனநாயகம்.

நமக்கு வழக்கம்போல பெப்புசி. சரக்கு பாட்டில் கழுத்தை ஆரூர் முனா ஒரே திருப்பில் நெறித்து ஓப்பன் செய்ததை கண்டு மலைத்தோம். "சைட் டிஷ் என்ன இருக்கு?" என பிலாசபி வினவ "ங்கொய்யா" என்றார் டாஸ்மாக் அண்ணன். முடியை சிலுப்பியவாறு "கொய்யாவா?" என கத்தினார் பிரபா. இதற்கு முன் இருவருக்கும் ஏதோ சண்டை போல என எண்ணினோம். தாகசாந்தி செய்த மூவருடன் வெளியே நடக்க ஆரம்பித்தபோது டாஸ்மாக் கிச்சனை அந்நியன் முடியை ஒதுக்கிவிட்டு எட்டிப்பார்த்தார் பிலாசபி. அங்கே ஆரஞ்சு மற்றும் கொய்யா பழங்களை கண்டதும்தான் அவருக்கு விஷயமே புரிந்தது. இல்லாவிடில் அவருக்கு வந்த கோவத்திற்கு டாஸ்மாக் அண்ணனை செவுலில் அறைவது போல் கற்பனை செய்து கொண்டு சுவரேறி குடித்து ஓடி இருப்பார்!!

அளவுக்கு மீறி தண்ணி அடித்த நான்
                            
ஈரோடு போகையில்தான் அரக்க பறக்க ரயிலை பிடித்தோம் என்றால் திரும்பி செல்லும்போதும் அதே போல ஓட வேண்டிய நிலை. தமிழ் சினிமா க்ளைமாக்ஸ் தோத்தது போங்க. இம்முறையும் டிக்கட் பிரச்னையால் தனி கோச்சில் ஆரூர் முனா வர வேண்டிய கட்டாயம். தம்மாதூண்டு வயதில் கடைசியாக ஊருக்கு ரயிலேறிய பிறகு ஈரோடு பதிவர் சந்திப்புதான் என்னை மீண்டும் ரயிலேற்றியது. தூங்கும் முன் ஜன்னலருகே இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து மொடக்கென்று நீர் குடித்தேன். 'ரயிலில் இலவசமாக தண்ணீர் தருவது நல்ல விஷயம்' என்றதற்கு பிரபகாரன் 'யோவ். அது கீழ் பெர்த்ல இருக்குற ஆளோட தண்ணியா. மொத்தத்தையும் காலி பண்ணிட்டோம். விடிஞ்சா சிக்குனோம்' என்று அலாரம் அடித்தார்.

விடியும் வரை அந்த திகில் வேறு. சென்னை வந்ததும் எல்லாரும் இறங்க ஆரம்பிக்கையில் 'தண்ணீர் பாட்டில் ஓனர்' மட்டும் செவ்வாய் கிரகத்திற்கு சென்று கொண்டிருந்தார். சும்மா இல்லாமல் இந்த பிலாசபி அவரை எழுப்பி 'ஹல்லோ..சென்னை வந்துடிச்சி' என்றார். அதற்கு கேஆர்பி சொன்னது  ''சென்னை வரலை. நாம்தான் சென்னைக்கு வந்தோம்''.  எங்க அந்த நபர் தூக்கம் தெளிஞ்சி ''எவன்டா கடைசி சொட்டு வரை விடாம உள்நாக்கால என் தண்ணிய நக்குனது" என்று வெறி ஆவாரோ எனும் அச்சத்தில் பிளிறிய என் நிலையை புரிந்து கொள்ளாமல் இருவரும் டமாசு செய்ததை மறக்கவே முடியாது.

என்றும் மனதில் நிற்கும் இனிய தருணங்கள். பதிவர் சந்திப்பை தவற விட்ட மக்களே, அடுத்த முறை இணையுங்கள். சந்தோஷங்கள் பல காத்திருக்கும். விரைவில் சென்னை புத்தகக்கண்காட்சியில் சந்திப்போம். பக்கம் பக்கமாக  பல்லாயிரம் பதிவுகளை  தேத்துவோம்!! ஓம்!!!


வாழ்த்துகள்.
கவுண்டமணி - செந்தில் ரசிகர் மன்றம் 
....................................................................................
                   
Posted by:
! சிவகுமார் !
                                                                    
                                           

28 comments:

Unknown said...

6 அடி சுவருதான் கில்மாவை எழுதுமா கிளியே மெட்ராஸ் பவன் கிளியே ஹிஹி!

Anonymous said...

சிபி ஆர்ம்ஸ்ல தவக்களை தாளம் போடுது!! எப்படியோ 2011 ஆம் ஆண்டுக்கு மனோ. 2012 ஆம் ஆண்டுக்கு நக்ஸ் நக்கீரர். நமக்கு ஆஸ்தான பலி ஆடு எப்படியும் அகப்பட்டுறுது மாம்ஸ்.

வெளங்காதவன்™ said...

யோவ்.. மெட்ராஸ் பவனு...
நானும் வந்தேன்யா!! ஆனா, நீங்க யாரும் கண்டுபுடிக்கவே இல்ல....
#யோவ்... நானும் பதிவர்தான்யா!!!

Unknown said...

ஆ! தள்ளு... தள்ளு... தள்ளு..

Anonymous said...

//வெளங்காதவன் said...
யோவ்.. மெட்ராஸ் பவனு...
நானும் வந்தேன்யா!! ஆனா, நீங்க யாரும் கண்டுபுடிக்கவே இல்ல....
#யோவ்... நானும் பதிவர்தான்யா!!!//

உங்கள அடையாளம் கண்டுபிடிக்க முடியல. யாரும் சொல்லவும் இல்ல தலைவா. போட்டோவை மெயில் அனுப்புங்க. அடுத்த தரம் கேட்ச் பண்ணறோம் நாங்க.

இராஜராஜேஸ்வரி said...

பக்கம் பக்கமாக பல்லாயிரம் பதிவுகளை தேத்துவோம்!!

வாழ்த்துகள்..

Anonymous said...

@ வெளங்காதவன்

ப்ரோபைல் போட்டோல இருக்கறது நீங்கதான்னு சொல்லிடாதீங்க.

Anonymous said...

//கே.ஆர்.பி.செந்தில் said...
ஆ! தள்ளு... தள்ளு... தள்ளு..//

இப்படிக்கு....

அண்ணன் சீமானை சீண்டினால் சீறுவோர் சங்கம்!!

Anonymous said...

@ இராஜராஜேஸ்வரி

ஏதோ எங்களால் ஆத்தப்படும் களப்பணி!!

தமிழ்வாசி பிரகாஷ் said...

சிபியிடம் இருந்த கூலரை இரவல் கேட்டு போஸ் குடுத்தேன். என்னைப்பார் யோகம் வரும்!! ////

யோகம் வரலியே... ஹி..ஹி...

Sivakumar said...

யோகம் மதுரைல இருக்காக.

MANO நாஞ்சில் மனோ said...

லேசா லேசா' என சிக்னல் காட்டி டாஸ்மாக் செல்ல பர்மிஷன்/நிபந்தனை கேட்டனர்/போட்டனர் மூவர்.//

இருக்கிற சைட் டிஷ் எல்லாத்தையும் தின்னு தீத்துட்டு கிண்டலா...

MANO நாஞ்சில் மனோ said...

அருமையான இனிமையான சந்திப்பு வாழ்த்துக்கள் மக்கா...!!!

Anonymous said...

சிவா, நாய் நக்ஸ் பற்றி வார்த்தைகள் கம்மியா வந்து விழுது, ஆட்டை வெட்டியிருக்கலாமே சிவா, தவற விட்டீர்களோ?

goundamanifans said...

@ நாஞ்சில் மனோ

சைட் டிஷ்ஷை தொடலீங்கோ.

goundamanifans said...

//MANO நாஞ்சில் மனோ said...
அருமையான இனிமையான சந்திப்பு வாழ்த்துக்கள் மக்கா...!!!//

கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் தல.

goundamanifans said...

@ ஆரூர் முனா செந்திலு

நம்ம ஆடுதான. தெளிய வச்சி தெளிய வச்சி வெட்டலாம்.

சம்பத்குமார் said...

//இரவு உணவு சாப்பிட வெளியே வந்தபோது "தம்பி(கேஆர்பி) இந்த காரை தள்ளுங்க. ப்ளீஸ்" என காரில் இருந்து வயதான அம்மா குரல் தந்தார். சீமானின் ரத்தவெறி ரசிகர் படை காரை தள்ள ஆரம்பித்தது. //

பார்த்திங்களா சமூக சேவை செஞ்சத கடைசி வரைக்கும் சொல்லவே இல்ல...

//என்றும் மனதில் நிற்கும் இனிய தருணங்கள். பதிவர் சந்திப்பை தவற விட்ட மக்களே, அடுத்த முறை இணையுங்கள். சந்தோஷங்கள் பல காத்திருக்கும். விரைவில் சென்னை புத்தகக்கண்காட்சியில் சந்திப்போம்.//

ம் விரைவில் மீண்டும் சந்திப்போம்

நாய் நக்ஸ் said...

என்னாய்யா அதுக்குள்ளே முடிச்சிட்ட ...
நாம பேசின படி 365 நாள் பதிவு இல்லையா???
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அப்பாடா..........

rajamelaiyur said...

நல்ல என்ஜாய் பன்னிருகேங்க ...

rajamelaiyur said...

இன்றய ஸ்பெஷல்


நடிகர் விஜய்யின் நண்பன் சிறப்பு போட்டோ பதிவு

Anonymous said...

//சம்பத் குமார் said...

பார்த்திங்களா சமூக சேவை செஞ்சத கடைசி வரைக்கும் சொல்லவே இல்ல...//

போங்கண்ணே. எங்களுக்கு வெக்க வெக்கமா வருது.

Anonymous said...

@ டாக் லிக்ஸ்

ஏண்ணே அர்த்தராத்திரில கூவறீங்க. பதிவைப்போட்டுடறேன்.:-)

Anonymous said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
அப்பாடா..........//

'தொடரும்' போட மறந்துட்டேன்.

Anonymous said...

/"என் ராஜபாட்டை"- ராஜாsaid...
நல்ல என்ஜாய் பன்னிருகேங்க ...//

ஆமாங்க. ஆனா இன்னைக்கி உங்க பேர்ல வந்த படத்த பாத்து சட்டையை கிழிச்சிட்டு அலையறேன்.

CS. Mohan Kumar said...

கடைசி பகுதிகள் ஆகா இந்த கூத்துகளை மிஸ் பண்ணிட்டோமே என நினைக்க வைக்கிறது

பிரபா கார் தள்ளாததால் தானேயா அந்த போட்டோ கிடைத்தது

என்றும் இனியவன் said...

வாழ்த்துக்கள்.
எனது ப்ளாக்கில்:
பாட்டைக் கேளுங்க பரிசு வெல்லுங்க
புத்தாண்டு பரிசு ஒரு வாரம் கோவாவில் குடும்பத்தோடு தங்கும் வாய்ப்பு
A2ZTV ASIA விடம் இருந்து.