Wednesday, January 4, 2012

அண்மைத்தமிழன் க்ரூப் - துவக்க விழா + பேட்டி!அண்மைத்தமிழன் அண்ணாச்சியை பேட்டி எடுக்க பல நாள் முயற்சித்தும் பலன் கிடைக்கவில்லை. எப்போது கேட்டாலும் "இரு முருகா. நேற்று எழுத ஆரம்பித்த பதிவை சீனப்பெருஞ்சுவரை விட நாலு அடி நீளமாவது அதிகம் எழுதிவிட்டுதான் உன்னை சந்திக்க நேரம் ஒதுக்குவேன்.அதுவரை பொறு முருகா" எனும் பதிலே எமக்கு கிடைத்தது. நேற்றுகூட அவர் எழுத ஆரம்பித்த பதிவின் நீளம் உலக மேப்பின் உச்சியில் இருக்கும் க்வீன் எலிசபெத் தீவிற்கும், கீழே கிடக்கும் வெட்டல் கடலுக்கும் இருக்கும் தூரத்தை விட இரண்டு இன்ச் நீளமாக இருந்ததை கண்டு (ஆறு) மலைத்தோம். முருகா!! 

இறுதியில் ஒருவழியாக முருகன் இட்லி ஷாப்பில் பேட்டி அளிக்க சம்மதம் தெரிவித்தார். இதோ அந்த சுவாரஸ்யமான நிமிடங்கள்..உங்களுக்காக:


நாம்: வணக்கம் அண்ணாச்சி 

அ.த: வா முருகா. ஆத்தா ஆட்சி எப்படி இருக்கு?

நாம்: ஆத்தா பத்தி அ.த. தான் சொல்லணும் 

அ.த: அத சொல்லு. அதாவது ஆத்தா ஆட்சி அப்படி ஒண்ணும் அபாரம் இல்ல.

நாம்: 'அ' லயே வார்த்தைகளை கோக்கறீங்க? வெ. ஆ. மூர்த்தி ரசிகரா?

அ.த: அதெல்லாம் அநியாயம் ஆண்டவா..நான் ஆத்தா ரசிகன். அவங்க பண்ற அரசியலை ஆத்து ஆத்துன்னு ஆத்துவேன். அவ்ளோதான் அய்யா.

நாம்: அதெப்படி அய்யா அரை வரில அடங்கற மேட்டரை அஞ்சாயிரம் வரியா எழுதி அசத்தறீங்க? அந்த ரகசியத்த உங்க அபிமான ரசிகர்களுக்கு சொல்லியே தீரனும்.

அ.த: நீ ஏய்யா இத்தன 'அ' போடற? அதாவது அன்பரே, ஒருவரிக்கதைய திரைக்கதையா எழுதறதுக்கும், (கணினி) திரை கிழிய கிழிய கதையா எழுதறதுக்கும் ஏகப்பட்ட வித்யாசம் இருக்கு. உ.தா.ரணம் சொல்லட்டா?

நாம்: அதுக்குத்தான வந்ததே. சொல்லுங்கோ. சொல்லுங்கோ. 

அ.த: 'ஹோட்டலுக்கு போயி ரெண்டு இட்லி சாப்பிட்டேன்'. இதை என் ஸ்டைல்ல சொல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்றேன் கேளு. 

நாம்: ஸ்டார்ட்டுங்கண்ணா...... 

                                      "கால் ஸ்பூன் மாவுல 25 இட்லி சுடும் சூட்சுமமுங்க"         

அ.த: நேற்று மாலை 5 மணி 47 நொடி சுமாருக்கு முருகன் இட்லி கடை வாசலின் இடது பக்கத்தில் பைக்கை நிறுத்தினேன். ஹெல்மட்டை கையில் எடுத்து கொள்ளவில்லை. வணக்கம் போட்ட காவலாளியை கண்டு நான் லேசாக சிரித்து வைத்தேன். ஹோட்டலை நோக்கி வலது காலை எடுத்து தரையில் வைத்து நடக்க துவங்கினேன்.  அப்போது வழக்கம்போல இடது கை முன்னே வந்தது. அடுத்து இடது காலை வைத்தால்தான் நடக்க முடியும் என்பதால் அதை எடுத்து அடுத்த அடி வைத்தேன். இப்போது வலது கை முன்னே வந்தது. நல்வரவு எனும் தரைவிரிப்பில் கால் வைக்க மனம் ஏனோ மறுத்தது. அதனால் இடது ஓரம் இரண்டு சென்டி மீட்டர் தள்ளி காலை வைத்தேன். 

எல்லா ஹோட்டல்களிலும் இருப்பதுபோல இங்கும் அதன் முதலாளி நமக்கு இடது பக்கமாகவே கல்லாவில் வீற்றிருந்தார். பில் குத்தும் கம்பி, அதில் நிறைய பில்கள். உள்ளே எட்டிப்பார்த்தேன். கூட்டம் நிரம்பி வழிந்தது. எங்க உட்காரலாம் என்று யோசிக்க ஆரம்பித்தேன். அடுப்பிருக்கும் இடத்தருகே ஒரு நாற்காலி காலியானது. ஆனால் உச்சியில் மின்விசிறி இல்லை. சற்று காத்திருப்போம் என மனது சொன்னது. நானும், மனதும் பொறுமை காத்தோம். 
குடும்பத்துடன் பலர், ஜோடியாக சிலர் என ஆங்காங்கே ஆகாரத்தை அமுக்க, ஒருவர் "ஆ..காரம்" என அலறினார். பச்சையாக இருக்கும் பச்சை மிளகாயை கடித்து விட்டார் போல. 

என்னருகே வந்த சர்வர் "ஒரு ரெண்டு நிமிஷம் வைட் பண்ணுங்க சார்" என்றார். 'அது என்ன ஒரு,ரெண்டு நிமிஷம்?'என மனதுக்குள் சிரித்துக்கொண்டேன். "ஒண்ணும் பிரச்னை இல்லை முருகா" என்று நான் சொன்னதைக்கேட்டதும் கண்  கலங்கிவிட்டார்.."என் பேர் முருகன்னு உங்களுக்கு எப்படி சார் தெரியும்?" என்றார். "உங்க சட்டை பாக்கெட்ல பேரு போட்டிருக்கே முருகா" என்றேன். ஏகத்துக்கும் சிரித்தவர் "இது எங்க கடையோட பேரு 'முருகன் இட்லி ஷாப்' முருகா" என்று செல்லமாக கொமட்டையில் குத்திவிட்டு சென்றார். அவன் பெயர் முருகன் என்பது உண்மைதான். ஆனால் அதை நான் துப்பறிந்தது தப்பாய் போனதில் வருத்தமே. 

ஒருவழியாக ஒரு நாற்காலி காலியானது. ஓடிப்போய் உட்கார்ந்தேன். முருகன் வந்தார் "என்ன வேணும் சார்?". நான் "உங்க ஹோட்டல்ல இட்லிதான பேமஸ். சிக்கன் டிக்கா, ஸ்ப்ரிங் ரோல், கபாப் இதா கிடைக்கும்? ரெண்டு இட்லி மட்டும் கொண்டுவாங்க" என்றேன். பிறகு ஹோட்டலை நோட்டம் விட்டேன். மின்விளக்குகள் எரிந்து கொண்டு இருந்தன. சிலர் உள்ளே வர சிலர் வெளியே போய்க்கொண்டு இருந்தனர். சர்வர் உணவு பரிமாற கஸ்டமர்கள் சாப்பிட்டு கொண்டு இருந்தனர். மாஸ்டர் சமையல் செய்து கொண்டு இருந்தார். 

எனக்கான இட்லிகளை கொண்டுவந்து வைத்தார் சர்வர். தேங்காய், தக்காளி, கருவேப்பிலை சட்னி வகையாறாக்கள், சாம்பார், தண்ணீர் நிறைந்த டம்ளர், எவர்சில்வர் ஸ்பூன்கள் இரண்டு என அனைத்தும் ஆஜர். சரியான பசியில் நான் இருந்ததால் இட்லிகளை வெட்ட எத்தனித்தேன். இறைவனே பெர்மனென்ட் ஸ்பூனாக விரல்களை தந்திருக்கையில் வேறு ஸ்பூன் எதற்கு? எனவே வலது கையால் (சுண்டு விரலை மட்டும் விட்டு விட்டு) வெள்ளையாக இருந்த லேசான இட்லியை லேசாக பிய்த்தேன். மீதி இட்லி தட்டிலேயே இருந்தது. எடுத்த இட்லி துண்டை தொண்டையில் நுழைத்தேன். இலகுவாக பயணித்தது இட்லி. இலகென்றாலும் இலகு அப்படி ஒரு இலகு. முருகா..இட்லி..ஷாப்பாய சரணம்.

மீண்டும் அதே இட்லியை பிய்த்தேன். முதல் இட்லித்துண்டை விட இந்த துண்டு சற்று மொற மொறவென இருந்தது. ஒருவேளை இதை டைப் அடிக்கும் போது பேன் காற்றில் காய்ந்திருக்கலாம். அத்துண்டை சாம்பாரில் முக்க எண்ணுகையில் நண்பன் சாம், பாரில் இருந்து போன் செய்தான். கட் செய்து விட்டேன்.  போனை எடுக்கும் அவசரத்தில் அத்துண்டை கீழே போட, தன் துண்டால் அத்துண்டை சுத்தம் செய்தார் ஊழியர். அடுத்த இட்லியின் முதல் பாதியை பிய்த்தேன். மூன்று ரக சட்னியிலும் அதன் தலையை நனைத்தேன். என்ன ஒரு சுவை. டிவைனப்பா டிவன். சங்கரா..நாராயணா!!

கடைசி இட்லியை கையகப்படுத்தினேன். சாம்பாரில் ஒரே முக்கு. மஞ்சள் குளித்த அழகி போல சிணுங்கியது இட்லி(குஷ்பு இட்லி அல்ல). வலது கையால் முன்னோக்கி வாயருகே கொண்டு வந்தேன். பாதி தூரம் வரும்போது சாம்பாரில் இருந்த சாம்பார் வெங்காயம் இட்லியில் இருந்து கீழே விழுந்து விட்டது. கூடவே இரண்டு சொட்டு சாம்பாரும். கருவேப்பிலை மற்றும் குச்சி போல் இருக்கும் தக்காளி மட்டும் இட்லியின் வல, இடப்பக்கங்களில் புட் போர்ட் அடித்து கொண்டிருந்தன. இன்னும் ஓரிரு மைக்ரோ செகண்டுகள் மட்டுமே. அந்த இட்லியை நான் சாப்பிட போகிறேன். அந்நேரம் சட்டென கரண்ட் கட் ஆகிவிட்டது. அடுத்த நொடி மீண்டும் கரண்ட் வந்தது. கையில் இருந்த இட்லியைக்காணவில்லை. எவனோ இருட்டில்  என் கையை பிடித்து இழுத்ததை பிரமை என்று எண்ணினேன். ஆனால் அது நிஜமென பிறகுதான் உணர்ந்தேன். கோபம் வந்தே விட்டது.

வலது பக்கம் திரும்பி இடது பக்கம் வழியாக கல்லாவில் இருந்த முதலாளியிடம் புகார் செய்தேன். அவர் சிரித்தவாறு நான்கு பார்சல் பைகளை நீட்டிவிட்டு "சார்..'ரெண்டு இட்லி சாப்பிடுவது எப்படி'ன்னு நீங்க யோசிக்க ஆரம்பிச்சி ரெண்டு மணி நேரம் ஓடிப்போச்சி. இட்லித்துண்ட நீங்க வாய்ல போடுறீங்களோ இல்லையோ. இதே நிலை நீடிச்சா நான் தலைல துண்டு போடுறது நிஜம் சார். கூட்டம் ஜாஸ்தியா இருக்கு. புரிஞ்சிக்கங்க சார்" என்று வீறிட்டார். அவருக்கு பேராறுதல் சொல்லிவிட்டு வலது பக்கம் திரும்பி பைக்கை கிளப்பினேன். 'விர்'ரிட்டவாறு வீட்டை நோக்கி பறந்தது எனது பைக். எப்படி தம்பி திரைக்கதை?"

நாம்: அருமை சார். இதை மூன்று பாகமா படமெடுக்க முடிவு செஞ்சிட்டோம். மகிழ்ச்சி. நெகிழ்ச்சி. இந்தாங்க இதப்பிடிங்க.

அ.த: என்ன இது?

நாம்: அண்மைத்தமிழன் க்ரூப் - துவக்க விழா அழைப்பிதழ்.

அ.த: ஆத்தா..எனக்கு எதுக்கு க்ரூப்பு. வேண்டாம் போயிடு ராசா.

நாம் பதில் சொல்லாமல் எஸ்கேப்.
.............................................................................................

.........................
Posted by:
!சிவகுமார்! 
..........................
        
                                                                        

71 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இன்னிக்கு எத்தனை தலை உருள போகுதோ :))

! சிவகுமார் ! said...

ஆமா ரமேஷ். பெரிய கலவரம் நடக்கும் போல. நமக்கெதுக்கு வம்பு. யாருய்யா அது posted by சிவகுமார்னு போட்டது? நான் பாட்டுக்கு சிவனேன்னு கெடக்கேன்..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஹூ இஸ் திஸ் அப்பாட்டேக்கர்.......?

மோகன் குமார் said...

அ. த . இட்லி சாப்பிட்ட கதையா ? நல்லா சொல்றீங்கையா டீட்டைலு ..

கேபிள் பற்றிய பதிவின் லிங்க் கூட முருகன் இட்லி கடைக்கு தான் கூட்டிட்டு போகுது ..

கடைசியில் பேர் போடாட்டியும் இந்த பதிவை சிவா தான் எழுதினார் என உறுதியாக சொல்வோம்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

யோவ் பெரிய இடத்துலேயே கைய வெச்சிருக்கீங்க.... இத நாங்க சும்மா விடமாட்டோம்.... 1000 பக்கத்துக்கு எதிர்பதிவு போடுவோம்......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/// உ.தா.ரணம் சொல்லட்டா?////

ரணகளம்.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ஹோட்டலை நோக்கி வலது காலை எடுத்து தரையில் வைத்து நடக்க துவங்கினேன். /////

என்னமோ அங்கேயே பர்மனெண்ட்டா செட்டில் ஆகப் போற மாதிரி வலது காலை எடுத்து வெச்சிருக்காரு?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ஒருவர் "ஆ..காரம்" என அலறினார். பச்சையாக இருக்கும் பச்சை மிளகாயை கடித்து விட்டார் போல. ////

பச்சையாக இருக்கும் பச்சை மிளகாய்னா.... சமைக்காம அப்படியே இருந்துச்சா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////"இது எங்க கடையோட பேரு 'முருகன் இட்லி ஷாப்' முருகா" என்று செல்லமாக கொமட்டையில் குத்திவிட்டு சென்றார்./////

அடிய வேற வாங்கிட்டு அதுல என்ன செல்லம் வேண்டி இருக்கு செல்லம்?

மனசாட்சி said...

என்னமோ? ஏதோ? ............??

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// சர்வர் உணவு பரிமாற கஸ்டமர்கள் சாப்பிட்டு கொண்டு இருந்தனர். மாஸ்டர் சமையல் செய்து கொண்டு இருந்தார். /////

அப்புறம்... ஹோட்டல்ல என்ன கல்லா உடைச்சிக்கிட்டு இருப்பாங்க?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// ஒருவேளை இதை டைப் அடிக்கும் போது பேன் காற்றில் காய்ந்திருக்கலாம்./////

வெளங்கிரும்....... இட்டிலிய மானிட்டர் மேல வெச்சி சாப்புடவேண்டியதுதானே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////அத்துண்டை சாம்பாரில் முக்க எண்ணுகையில் நண்பன் சாம், பாரில் இருந்து போன் செய்தான். /////

சாம் மார்த்தாண்டனா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////அத்துண்டை சாம்பாரில் முக்க எண்ணுகையில் நண்பன் சாம், பாரில் இருந்து போன் செய்தான். கட் செய்து விட்டேன். /////

போன் ரெண்டா போயிருக்குமே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////சாம்பாரில் ஒரே முக்கு. மஞ்சள் குளித்த அழகி போல சிணுங்கியது இட்லி(குஷ்பு இட்லி அல்ல).//////

அப்போ பத்மினி இட்லியா இருக்கும்......!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///"சார்..'ரெண்டு இட்லி சாப்பிடுவது எப்படி'ன்னு நீங்க யோசிக்க ஆரம்பிச்சி ரெண்டு மணி நேரம் ஓடிப்போச்சி. இட்லித்துண்ட நீங்க வாய்ல போடுறீங்களோ இல்லையோ. இதே நிலை நீடிச்சா நான் தலைல துண்டு போடுறது நிஜம் சார். கூட்டம் ஜாஸ்தியா இருக்கு. புரிஞ்சிக்கங்க சார்"/////

உக்காந்து யோசிச்சதாவது ஹோட்டலா இல்ல வேற எதுவுமா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////நாம்: அருமை சார். இதை மூன்று பாகமா படமெடுக்க முடிவு செஞ்சிட்டோம். மகிழ்ச்சி. நெகிழ்ச்சி. இந்தாங்க இதப்பிடிங்க.////

அட என்னண்ணே இத வெச்சி நாலு மெகா சீரியலே எடுக்கலாம்... நீங்க வேற.....!

goundamanifans said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
ஹூ இஸ் திஸ் அப்பாட்டேக்கர்.......?//

Yeah. Who?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////நாம்: அண்மைத்தமிழன் க்ரூப் - துவக்க விழா அழைப்பிதழ்.

அ.த: ஆத்தா..எனக்கு எதுக்கு க்ரூப்பு. வேண்டாம் போயிடு ராசா./////

பவர்ஸ்டாரைலாம் அவரை கேட்டுக்கிட்டா குரூப்பு ஆரம்பிக்கிறோம், சட்டுபுட்டுன்னு ஆரம்பிங்கய்யா.... ஐயாம் வெயிட்டிங்........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////goundamanifans said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
ஹூ இஸ் திஸ் அப்பாட்டேக்கர்.......?//

Yeah. Who?/////

ப்ளாக் ஓனராம், கேள்வி கேட்குறாரு....

goundamanifans said...

@ மோகன்குமார்

அனேகமா இது அவரோட வேலையாத்தான் இருக்கும். ரெண்டு இட்லி, கொஞ்சம் கெட்டி சட்னிக்கு இம்புட்டு கலவரமா..

goundamanifans said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
யோவ் பெரிய இடத்துலேயே கைய வெச்சிருக்கீங்க.... இத நாங்க சும்மா விடமாட்டோம்.... 1000 பக்கத்துக்கு எதிர்பதிவு போடுவோம்....//

ஆமாம். கண்டனங்களை பதிவு (பதிவாக) செய்கிறோம்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஆனா தானா குரூப் வாழ்க...... அண்ணனை வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்....!

! சிவகுமார் ! said...

என்னய்யா இங்க பிரச்சனை? ஒன்னும் புரியல..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////! சிவகுமார் ! said...
என்னய்யா இங்க பிரச்சனை? ஒன்னும் புரியல..//////

என்னது பிரச்சனையா எங்க எங்க......?

MANO நாஞ்சில் மனோ said...

யோவ் என்னால முடியல அதனால பாட்டி வடை சுட்டதை தொ........ட.....ர்.....கதையா பத்து பதிவாவது போட்டு, எதிர் பதிவுன்னு சொல்லப்போறேன் வழியை விடு....

MANO நாஞ்சில் மனோ said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
////அத்துண்டை சாம்பாரில் முக்க எண்ணுகையில் நண்பன் சாம், பாரில் இருந்து போன் செய்தான். /////

சாம் மார்த்தாண்டனா?//

இட்லிக்கும் பார்'க்கும் லிங்கே சரி இல்லையே ஹி ஹி....

goundamanifans said...

திரு. ப.ரா. அவர்களே... அ.த. பதிவை விட உங்கள் பின்னூட்டம் எம்புட்டு நீட்டம்...அவ்வ்வ்!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////goundamanifans said...
திரு. ப.ரா. அவர்களே... அ.த. பதிவை விட உங்கள் பின்னூட்டம் எம்புட்டு நீட்டம்...அவ்வ்வ்!!/////

இதுக்கே இப்படியா, இப்பத்தான் பாதி முடிச்சிருக்கேன்.....

goundamanifans said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
///// ஒருவேளை இதை டைப் அடிக்கும் போது பேன் காற்றில் காய்ந்திருக்கலாம்./////

வெளங்கிரும்....... இட்டிலிய மானிட்டர் மேல வெச்சி சாப்புடவேண்டியதுதானே?//

அதற்கு கம்ப்யூட்டரில் பில் போடுபவர் மறுப்பு தெரிவித்து விட்டார்!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// goundamanifans said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
///// ஒருவேளை இதை டைப் அடிக்கும் போது பேன் காற்றில் காய்ந்திருக்கலாம்./////

வெளங்கிரும்....... இட்டிலிய மானிட்டர் மேல வெச்சி சாப்புடவேண்டியதுதானே?//

அதற்கு கம்ப்யூட்டரில் பில் போடுபவர் மறுப்பு தெரிவித்து விட்டார்!!/////

நாஞ்சொன்ன மானிட்டரே வேற......!

goundamanifans said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////நாம்: அண்மைத்தமிழன் க்ரூப் - துவக்க விழா அழைப்பிதழ்.

அ.த: ஆத்தா..எனக்கு எதுக்கு க்ரூப்பு. வேண்டாம் போயிடு ராசா./////

பவர்ஸ்டாரைலாம் அவரை கேட்டுக்கிட்டா குரூப்பு ஆரம்பிக்கிறோம், சட்டுபுட்டுன்னு ஆரம்பிங்கய்யா.... ஐயாம் வெயிட்டிங்........//

பொங்கல் முதல் பன்னிக்குட்டி பன்னாட்டு பதிவர் பாசறை ஆரம்பம் என்பதை..........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////goundamanifans said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////நாம்: அண்மைத்தமிழன் க்ரூப் - துவக்க விழா அழைப்பிதழ்.

அ.த: ஆத்தா..எனக்கு எதுக்கு க்ரூப்பு. வேண்டாம் போயிடு ராசா./////

பவர்ஸ்டாரைலாம் அவரை கேட்டுக்கிட்டா குரூப்பு ஆரம்பிக்கிறோம், சட்டுபுட்டுன்னு ஆரம்பிங்கய்யா.... ஐயாம் வெயிட்டிங்........//

பொங்கல் முதல் பன்னிக்குட்டி பன்னாட்டு பதிவர் பாசறை ஆரம்பம் என்பதை..........//////

பக்கத்து எலைக்கு பாயாசம்.....

goundamanifans said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
ஆனா தானா குரூப் வாழ்க...... அண்ணனை வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்.//

வாழ்த்த வயதில்லையா? இந்த டயலாக்கை எவன் கண்டுபுடிச்சான்? ரொம்ப நாளா தேடிட்டு இருக்கோம்.

goundamanifans said...

//மனசாட்சி said...
என்னமோ? ஏதோ? ............??.//

அண்ணே...நீங்க டென்ஷன் ஆவாதீங்க. இது ஏதோ உள்ளுக்கு உள் நாட்டு சதி!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////goundamanifans said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
ஆனா தானா குரூப் வாழ்க...... அண்ணனை வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்.//

வாழ்த்த வயதில்லையா? இந்த டயலாக்கை எவன் கண்டுபுடிச்சான்? ரொம்ப நாளா தேடிட்டு இருக்கோம்./////

இதெல்லாம் அல்லக்கைகளோட அஃபிசியல் லாங்வேஜ்........

! சிவகுமார் ! said...

என்னய்யா பிரச்சனை இங்க? யாராச்சும் பதில் சொல்றாங்களா பாரு? எப்படியோ போங்க...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////! சிவகுமார் ! said...
என்னய்யா பிரச்சனை இங்க? யாராச்சும் பதில் சொல்றாங்களா பாரு? எப்படியோ போங்க...////

சரி சரி, போய் ஆனா தானாவ கூட்டிட்டு வாங்க......!

! சிவகுமார் ! said...

//MANO நாஞ்சில் மனோ said...
யோவ் என்னால முடியல அதனால பாட்டி வடை சுட்டதை தொ........ட.....ர்.....கதையா பத்து பதிவாவது போட்டு, எதிர் பதிவுன்னு சொல்லப்போறேன் வழியை விடு....//

பஹ்ரைனில் பக்கடா கடை போட பத்து வழிகள் புத்தகத்தை முதல்ல எழுதி முடிங்க சீக்கிரம்.

! சிவகுமார் ! said...

// MANO நாஞ்சில் மனோ said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
////அத்துண்டை சாம்பாரில் முக்க எண்ணுகையில் நண்பன் சாம், பாரில் இருந்து போன் செய்தான். /////

சாம் மார்த்தாண்டனா?//

இட்லிக்கும் பார்'க்கும் லிங்கே சரி இல்லையே ஹி ஹி....//

இது 'சாமி' விக்ரம் ரசிகர்கள் கூட்டம். இட்லிக்கும், பாருக்கும் மேட்ச் ஆகியே தீரும்ணே!!

விக்கியுலகம் said...

ஏன் முருகா why முருகா...no முருகா..அட வா முருகா..யோவ் நாங்கல்லாம் அப்பவே அப்பிடி கும்பிடுவோம்ல...அப்ப இப்ப ஹிஹி!

! சிவகுமார் ! said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////! சிவகுமார் ! said...
என்னய்யா பிரச்சனை இங்க? யாராச்சும் பதில் சொல்றாங்களா பாரு? எப்படியோ போங்க...////

சரி சரி, போய் ஆனா தானாவ கூட்டிட்டு வாங்க......!//

நேரம் கிடைத்தால் வருவதாக போனில் உறுதி அளித்துள்ளார்.

! சிவகுமார் ! said...

@ விக்கி

என்னமோ சொல்றீங்க மாம்ஸ்! ஆண்டவன் அருள் புரியட்டும்.

கே.ஆர்.பி.செந்தில் said...

அசுரரை வென்ற இடம் - அது தேவரைக் காத்த இடம்
ஆவணி மாசியிலும் - வரும் ஐப்பசித் திங்களிலும்
அன்பர் திருநாள் காணுமிடம் அன்பர் திருநாள் காணுமிடம்
அசுரரை வென்ற இடம் - அது தேவரைக் காத்த இடம்
ஆவணி மாசியிலும் - வரும் ஐப்பசித் திங்களிலும்
அன்பர் திருநாள் காணுமிடம் அன்பர் திருநாள் காணுமிடம்

கே.ஆர்.பி.செந்தில் said...

எனக்கும் இடம் உண்டு
எனக்கும் இடம் உண்டு
அருள் மணக்கும் முருகன் மலரடி நிழலில்
எனக்கும் இடம் உண்டு
அருள் மணக்கும் முருகன் மலரடி நிழலில்
எனக்கும் இடம் உண்டு

கே.ஆர்.பி.செந்தில் said...

நேற்றைய வாழ்வு அலங்கோலம்
அருள் நெஞ்சினில் கொடுத்தது நிகழ்காலம்
நேற்றைய வாழ்வு அலங்கோலம்
அருள் நெஞ்சினில் கொடுத்தது நிகழ்காலம்
வரும் காற்றில் அணையாச் சுடர்போலும்
அருள் கந்தன் தருவான் எதிர்காலம்
கந்தன் தருவான் எதிர்காலம்
கந்தன் தருவான் எதிர்காலம்

அஞ்சா சிங்கம் said...

உண்மையான அன்மைதமிழன் சொல்றார் ...
யாரோ என் பெயரை பயன்படுத்தி ரெண்டு இட்லியை லவட்டிட்டு போயிட்டாங்க ..
அதனால் அன்று இட்லி சாப்பிட்டது நான் அல்ல என்பதை தெரிவித்து கொள்கிறேன் .
நானாக இருந்தால் இந்நேரம் ஒரு இட்லி தான் சாப்பிட்டிருப்பேன் ..
இது பதிவுலகில் அனைவருக்கும் தெரியும் .அதனால் போலிகளை நம்பாதிர்கள் என்று
உண்மையான அன்மைதமிழன் கேட்டு கொள்கிறேன் ................

கோவை நேரம் said...

ஆரம்பமே அதகளமா இருக்கே ..வாழ்த்துக்கள்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என் இனிய வலைத்தமிழ் மக்களே...!

உண்மையில் உண்மையான அண்மைத்தமிழன் நான் சொல்கிறேன், இப்போதுதான் நான் இட்லி என்று எழுதவே ஆரம்பித்திருக்கிறேன். முதலி இ என்று எழுதுவது பற்றி பல நாளாய் யோசித்தேன், பின் அடுத்த சிலநாள்களில் எழுதி முடித்தேன், அதற்கப்புறம் ”ட்” டை யோசித்து எழுதினேன், அப்புறம் “லி” யை யோசித்து எழுதி இட்லி என்று ஒருமாதத்தில் 500 பக்கமாக எழுதி முடித்திருக்கிறேன். இன்னும் சட்னி, சாம்பார், வடை என்று எழுத ஏராளமாக இருக்கிறது, அதற்குபின்னர்தான் சாப்பிடுவதை பற்றி யோசிக்கவே வேண்டும் என்று தெரிவித்துக் கொள்கிறேன். உண்மையான போலிகளை நம்பி ஏமாற வேண்டாம் என்று என் குரூப்பை கேட்டுக் கொள்கிறேன்!

! சிவகுமார் ! said...

@ கே.ஆர்.பி.

ஒரு சூறாவளி கிளம்பியதே..ருத்ர தாண்டவம் துவங்கியதே...என்னண்ணே இப்படி கெளம்பிட்டீங்க?

! சிவகுமார் ! said...

@ அஞ்சா சிங்கம், பன்னிக்குட்டி

'இட்லி சாப்பிட்ட விதம் உருவானது எப்படி' - ப்ரிவ்யூ ஷோவா போடறீங்க? ரைட்டு!!

! சிவகுமார் ! said...

@ கோவை நேரம்

வாங்க. இட்லி சாப்டறீங்களா?

அஞ்சா சிங்கம் said...

பழைய உண்மையில் உண்மையான அண்மைத்தமிழன் சொல்கிறேன்
என் பெயரை தவறாக பயன்படுத்தி என் அக்கவுன்ட்ல் யாரோ இட்லி சாப்பிடுவதை நான் எப்படி பொருத்துகொல்வது
நான் இப்போது தான் சட்டியில் மாவை ஊற்றுவதை எழுதிக்கொண்டிருக்கிறேன் ..
அதற்குள் நான் இட்லி சாப்பிட்டு முடித்து விட்டது போல் பதிவு வெளி வந்தது என்னை காய படுத்தும் நோக்கில் இருக்கிறது . இதனால் என் எதிரிகள் என்ன அடைந்து விடுவார்கள் என்று எனக்கு தெரியவில்லை ..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

உண்மையிலேயே உண்மையான போலிகளை வன்மையாக கண்டிக்கிறோம்.

இப்படிக்கு
அண்மைத்தமிழன் குரூபீஸ்....

அஞ்சா சிங்கம் said...

பழைய இரும்புச்சாமான் ஈயம் பித்தளைக்கு பேர்ச்சம்பழம்........................

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////அஞ்சா சிங்கம் said...
பழைய இரும்புச்சாமான் ஈயம் பித்தளைக்கு பேர்ச்சம்பழம்......................../////

அது ஏன்யா இந்த வண்டிய பாத்து சொல்ற?

அஞ்சா சிங்கம் said...

எடைக்கு எடை பதிவுகளுக்கு பேரிச்சம்பழம் தரப்படும் ...........

அஞ்சா சிங்கம் said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...

உண்மையிலேயே உண்மையான போலிகளை வன்மையாக கண்டிக்கிறோம்.

இப்படிக்கு
அண்மைத்தமிழன் குரூபீஸ்....

/////////////////////

இந்தியாவிலேயே .ஏன் உலகத்திலேயே ..குரூபீஸ்.... வச்சிருக்குற கரகாட்ட கோஷ்டி அது நம்ம கோஷ்டிதான் ......

"என் ராஜபாட்டை"- ராஜா said...

//அஞ்சா சிங்கம் said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...

உண்மையிலேயே உண்மையான போலிகளை வன்மையாக கண்டிக்கிறோம்.

இப்படிக்கு
அண்மைத்தமிழன் குரூபீஸ்....

/////////////////////

இந்தியாவிலேயே .ஏன் உலகத்திலேயே ..குரூபீஸ்.... வச்சிருக்குற கரகாட்ட கோஷ்டி அது நம்ம கோஷ்டிதான் ......

//

கோவை சரளா குருப்பா ?

"என் ராஜபாட்டை"- ராஜா said...

நண்பர்களே உங்கள் பார்வைக்கு இன்று ..


விஜய்யின் நண்பன் படப்பிடிப்பு காட்சிகள் .

NAAI-NAKKS said...

Enna than solla vareenga....
Enakku vilangala.....
Innum vilakkamaga....
Periya pathiva podavum.....

Iyaa sammy.....konjam
karunai kattunga.....pl.....

Illavittaal sunday paper-i
copy panni podavum.....
Ungalukku punniyama....
Pogum.....

உண்மைத்தமிழன் said...

இந்தப் பதிவை எழுதிய அண்ணன் சிவக்குமாருக்கும், இதனைச் சாக்காக வைத்து கும்மியடித்துத் தீர்த்திருக்கும் டெர்ரர் கும்மி குழுமத்தைச் சேர்ந்த அண்ணன்களுக்கும் எனது நன்றிகள் உரித்தாகட்டும்..!

தம்பி சிவாவுக்கு கற்பனை ஊற்று நிறையவே இருக்கிறது.. நல்ல காமெடிசென்ஸோடுதான் எழுதியிருக்கிறார்..! அவருக்கு எனது வாழ்த்துகள்..!

நானும்தான் போன வாரம் ஏதோ காமெடின்னு நினைச்சு ஒண்ணை எழுதி, வாங்கிக் கட்டிக்கிட்டேன்.. அதை நினைச்சா..?????????????

! சிவகுமார் ! said...

@ உண்மைத்தமிழன் said...

வாங்க சார். கொஞ்சம் லேட்டா வந்துட்டீங்க. பழசை நினைக்காதீங்க. போனது போகட்டும். யாருக்குமே கமன்ட் போடாத நீங்க இங்க வந்ததே எங்களுக்கு சந்தோஷம்!!

! சிவகுமார் ! said...

@ ராஜபாட்டை ராஜா

கோவை சரளா க்ரூப் இல்லைங்க. தனி ஆளுதான். :-)

! சிவகுமார் ! said...

@ நாய் நக்ஸ்

நீங்க என்ன சொல்ல வர்றீங்க? தமிழ்ல கமன்ட் போட்டாதான் பதில் சொல்வோம்.. ஹி..ஹி...

veedu said...

//அடுத்த நொடி மீண்டும் கரண்ட் வந்தது. கையில் இருந்த இட்லியைக்காணவில்லை.//

சிவா நீ தான்யா எதித்தமாதிரி இருந்திங்க...!டவுட்....!பாவம் அவரு ஒரு இட்லிகூட திங்க விடுங்கய்யா....

சி.பி.செந்தில்குமார் said...

கதை கேளு கதைகேளு......இட்லிதின்ன கதைகேளு.....

cheena (சீனா) said...

அன்பின் சிவகுமார் - அ.த - முருகன் கடை இட்லியின் மகத்துவம் காவியமாக வந்துள்ளது. படித்து மகிழலாம். மறுமொழிகளோ அதற்கும் மேல்.இரசித்தேன். வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா

goundamanifans said...

@ வீடு சுரேஷ்

நான் அவன் இல்லைங்கோ.

goundamanifans said...

//சி.பி.செந்தில்குமார் said...
கதை கேளு கதைகேளு......இட்லிதின்ன கதைகேளு.....//

முழுக்கதை சொல்ல முன்னூறு நாளாகுமே தலைவா.

goundamanifans said...

@ சீனா

வருகைக்கு நன்றி ஐயா. மதுரை இட்லிக்கடைக்கு விரைவில் உ.த. வரவிருக்கிறார். உஷாரு!!