Tuesday, December 20, 2011

ஈரோடு பதிவர் சந்திப்பு - ஜாலி பட்டாசுகள்!


சிக்கு புக்கு: 

சென்னை சென்ட்ரலில் இருந்து ஈரோடு செல்லவிருந்த ட்ரெயினை கடைசி நொடியில் ஓடிப்போய் பிடிக்க வேண்டி இருந்தது. கேஆர்பி, 'வீடு திரும்பல்' மோகன்குமார் சார்(முதல் சந்திப்பு), ஆரூர் முனா செந்தில், ரமேஷ்(இவரும் ப்ளாக்கராம், கேஆர்பி தம்பி. செம ரவுசு பார்ட்டி) மற்றும் 'ஈசன்' ஜெராக்ஸ் பிலாசபி பிரபாகரன் என அனைவரும் ஏக் ட்ரெயினுக்குள் ஏறினோம். ப்ரோபைல் போட்டோவில் டெர்ரராக இருந்த ஆ.மு.செ நேரில் மீசை, தாடி எடுத்துவிட்டு 'அந்தக் கொழந்தையே நாந்தான்' ரேஞ்சில் இருந்தார். அதனால் அவரை மட்டும் மழலைகள் சிறப்பு கோச்சில் தனியாக அமர வைக்க வேண்டிய கட்டாயம்.   

                                      படு  பவ்யமாக மோகன்குமார் சார்(டி ஷர்ட்)  

சைக்கிளில் போனால் கூட ஜன்னல் ஓர சீட்டில்தான் அமருவேன் என்று வம்பு செய்யும் எனக்கு இம்முறை அந்த வாய்ப்பு இல்லை. அதை ஏற்கனவே புக் செய்தவர், இடையில் ஏறி (அதாவது 'கொஞ்ச தூரம் தாண்டியதும்'. உங்க புத்தி எங்க போகும்னு தெரியும்) 'அதெல்லாம் முடியாது. ஜன்னல் ஓரத்லதான் 'சிட்'டுவேன்' என்று எனக்கு முதல் ஆப்பு வைத்தார். பக்கத்தில் இருந்த யூத், பெரியவர் மற்றும் சில நடுத்தர வயது பெண்களிடம் மூன்றும் கலந்த கேஆர்பி நாத்திக வசியம் செய்துகொண்டிருந்தார். அவர் எது சொன்னாலும் அதற்கு மினி நாத்திகர் பிராபகரன் 'ஆமா. கரக்ட்' என்று கோரஸ் பாடினார். அவர்களுக்கு பின் சீட்டில் மூன்று இளம் பெண்கள். எந்திரித்து நின்றவாறு இறைநம்பிக்கை சரிதான் என அவருக்கு எதிர்வாதம் செய்ய ஆரம்பித்தேன். நான் ஏதோ சைட் அடிக்கத்தான் நின்று கொண்டு பேசுகிறேன் என அந்த மூன்று பெண்களும் முதலில் தவறாக பார்த்தனர். பேட் கேர்ல்ஸ். ஹவ் டேர்!!

மோகன்குமார் சாரிடம் பதிவுலக மேட்டர்கள் குறித்து பேசுகையில் 'போதும் பொத்து. இந்த பிஸ்கெட்டை வாய்ல அமுக்கு' என குட் டே பிஸ்கெட்டை வாங்கித்தந்தார். ட்ரெயின் ஈரோட்டை நெருங்க ஆ.மு.செந்திலுக்கு சி.பி.செந்தில்(எத்தன செந்தில்டா...செந்திலாண்டவா!!)  கால் கடுக்க நின்று கொண்டு காலுக்கு மேல் காலடித்தார். 'வந்துட்டோம். வந்துட்டோம்' என்று ஆ.மு.செ அல்வா தந்து கொண்டே இருந்தார். வெறியான சிபி யாரையும் பார்க்காமல் சென்னிமலைக்கு மலையேறி விட்டார்(நாலு எக்ஸ்ட்ரா பதிவு அவுட்டு). 

ரூமும், ரூம்பாயும்: 
                                                                       
                                          பரிசு பெறும் எங்கள் சிங்கம் கேஆர்பி   

இரவு ரூமில் நால்வர் தங்க 'உற்சாக' ட்வின்ஸ் பிலாசபி மற்றும் ஆ.மு.செ. இருவருக்கும் தனி ரூம் தந்துவிட்டோம். காலை எழுகையில் பிலாசபி மீது   ஆ.மு.செ. உருண்டு நசுக்கி இருப்பாரோ என்ற திகில் வேறு எனக்கு. இரவு கவிதை வீதி சவுந்தர் போன் அடித்தார். 'உங்களுக்கு ராத்திரி ஒரு மணிக்கு போன் பண்ணி தூங்கவிடாம செய்வேன்' என்றார். 'அது நடக்க வாய்ப்பில்லை. நான் தூங்குறதே காலை 3 மணிக்குதான்' என்றேன். தலைவர் காலை 3 மணிக்கும் போன் செய்தார். அப்படி என்னதான் சார் பண்ணீங்க தூங்காம? காலை எழுந்ததும் தம்மாதூண்டு டம்ளரில் நாலு சொட்டு காப்பியை இட்டுவிட்டு நாங்கள் குடித்த பின் 'இது பில்டர் காப்பி சார். ஈச் கப் ஜஸ்ட் 15 ஓவாய் மட்டுமே' என்று கேஆர்பியின் பி.பி.யை எகிற வைத்தார் ரூம் பாய்(பாய்க்கு வயசு 50 இருக்கும்).

'வம்ப வெலைக்கு வாங்குவோம்ல' மணிவண்ணன்(மதுரை) ஊரிலிருந்து வந்து சேர்ந்தார் எங்கள் ரூமுக்கு. என்னைப்பார்த்ததும் பதற்றத்துடன் அவர் சொன்ன முதல் வசனம் "தெரியாம பிலாசபி, ஆ.மு.செ.  ரூமுக்கு போய்ட்டேங்க. கதவை தெறந்ததும் அப்படி ஒரு நறுமணம். அங்கனயே மயங்கி விழுந்துட்டேன். ரூம் பாய்(!) வந்து மூஞ்சில ப்ளீச் ப்ளீச்னு சோடா அடிச்சி என்னை எழுப்புனாரு. இங்கன ஒடியாந்துட்டேன்' என்றார். பிறகு ரிஷப்சனில் அனைவரும் அமர்கையில் பிரபல பதிவர்கள்/ஓட்டுனர்கள்(பஸ்ஸர்ஸ்) வந்த வண்ணம் இருந்தனர். ப்ரோபைல் போட்டோவில் இருப்பவர்கள் நேரில் வேற லுக்கில் இருந்தனர். ராமமூர்த்தி கோபி சாரை எனக்கு அறிமுகம் செய்தார் மோகன்குமார் சார். யாரென்று அடையாளம் தெரியாமல் முதலில் குழம்பி பிறகு தெளிந்து வணக்கம் போட்டேன். உண்மையான உண்மைத்தமிழன், தனசேகர், வெள்ளுடை வேந்தர் விந்தைமனிதன் உள்ளிட்ட பலரை ரிஷப்ஷனில் சந்தித்தேன்.   

வாசலில் நின்ற எல்லாரையும் தெருவில் நின்று கொண்டு போட்டோ எடுத்தார் தனசேகர் சார். போட்டோ செஷன் முடிந்து அனைவரும் பதிவர் சந்திப்பு நடக்கும் இடத்திற்கு கிளம்ப போகையில் கோபத்தில் கத்தினார் தனசேகர் "*&@#$ என்னை போட்டோ எடுங்கடா'' என்றார். அந்த வார்த்தையை கேட்டபிறகுதான் 'அட இது நம்ம ஜாக்கி' என 100% கன்பர்ம் ஆனது எனக்கு. 
.....................................................................................

ஜிம்பாய் சிபி, ஜாலி தமிழ்வாசி, லொள்ளு நக்கீரன்(நாய் நக்ஸ்), வழக்கம்போல் பல்ப் வாங்கிய நாஞ்சில் மனோ  மற்றும் இனிய நண்பர்கள்...விழா அரங்கில் நடந்த சரவெடி சம்பவங்கள்.

பார்ட் - 2 தொடர்ந்தே தீரும்(தீருமா?!).    
.....................................................................................

..................................
Posted by:
.................................


44 comments:

Unknown said...

அடடே என்னா ஒரு அட்டென்டென்ஸ்!

நாய் நக்ஸ் said...
This comment has been removed by the author.
நாய் நக்ஸ் said...

யோவ் ..பார்த்துயா ....நீயும் பொட்டு தாக்காதையா ????

Anonymous said...

@ விக்கி

90% வந்தனர் மாம்ஸ். ரெக்கார்ட் ப்ரேக். வாழ்க ஈரோடு.

Anonymous said...

@ வெளங்காதவன்

:-)

Anonymous said...

// NAAI-NAKKS said...
யோவ் ..பார்த்துயா ....நீயும் பொட்டு தாக்காதையா ????//

பொட்டு தாக்காதையாவா? குங்கும பொட்டா, சந்தன பொட்டா doglicks அண்ணே?

நாய் நக்ஸ் said...

! சிவகுமார் ! said...
// NAAI-NAKKS said...
யோவ் ..பார்த்துயா ....நீயும் பொட்டு தாக்காதையா ????//

பொட்டு தாக்காதையாவா? குங்கும பொட்டா, சந்தன பொட்டா doglicks அண்ணே?//////

LOL....

தமிழ்வாசி பிரகாஷ் said...

ஹோட்டல் ஓனர் சார் உங்கள ஹோட்டல்ல தேடினா இங்க கும்மி அடிக்கறிங்களே.....

ம்ஹும்... ஆடுகள் சிக்கிருச்சுனு ஒரேடியா கசாப்பு கடைக்கு வித்துராதய்யா... ஹி..ஹி...

Anonymous said...

@ தமிழ்வாசி பிரகாஷ்

உங்ககிட்ட சிக்குன என் போட்டோவை திருப்பி தாங்க. 1000 பொற்காசுகள் தர்றேன்!!

தமிழ்வாசி பிரகாஷ் said...

! சிவகுமார் ! said...
@ தமிழ்வாசி பிரகாஷ்

உங்ககிட்ட சிக்குன என் போட்டோவை திருப்பி தாங்க. 1000 பொற்காசுகள் தர்றேன்!!///

பதிவு ரெடி ஆகுது..... அங்க போடுவேன்... எடுத்துக்கங்க.. ஹி..ஹி..

Anonymous said...

சிவா நீங்க சொல்றத பார்த்தா நாங்க என்னவோ மறுநாள் காலை மதியம் எல்லா நேரமும் தண்ணியடிச்சா மாதிரி மக்கள் நினைச்சுக்கிட்டா என்ன பண்றது, அதனால பொது அறிவிப்பு. அகில உலக மகா ஜனங்களே, நான் முதல் நாள் மதியம் சென்னை சென்ட்ரலில் தண்ணியடிச்சேன், மாலை மண்டபத்தில் தண்ணியடிச்சேன், இரவு ஹோட்டலில் தண்ணியடிச்சேன், மறுநாள் இரவு ஈரோடு ஸ்டேஷனில் தண்ணியடிச்சேன், அவ்வளவு தான் இதனால் நான் மொடாக்குடிகாரன் இல்லையென்பதையும், ஒரு நாளைக்கு இருமுறை மட்டுமே தண்ணியடிச்ச நல்லபுள்ள என்பதயையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

CS. Mohan Kumar said...

//மோகன்குமார் சாரிடம் பதிவுலக மேட்டர்கள் குறித்து பேசுகையில் 'போதும் பொத்து. இந்த பிஸ்கெட்டை வாய்ல அமுக்கு' என குட் டே பிஸ்கெட்டை வாங்கித்தந்தார்//

அலோ.. "பிஸ்கட் வேணும்; பிஸ்கட் வேணும்" னு அழுதுட்டு சிவா இங்கே வந்து எழுதுறதை பாரு :))

//தலைவர் காலை 3 மணிக்கும் போன் செய்தார்.//

ஆக மொத்தம் பக்கத்தில இருந்த என்னை தூங்க விடலை. (ஒரு ரகசியம் சிவா. நீங்க நல்லா குறட்டை விடுறீங்க :)) காலையில் தான் பார்த்தேன்

//காலை எழுகையில் பிலாசபி மீது ஆ.மு.செ. உருண்டு நசுக்கி இருப்பாரோ என்ற திகில் வேறு எனக்கு//

LOL !! என்னாயிருக்கும் !! நினைக்கவே பயமா இருக்கு !
**
Interesting narration. Pl. continue !

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

please release part 2 soon

Sivakumar said...

@ ஆரூர் முனா செந்திலு

இதை டைப் அடிக்கும்போது தண்ணி அடிச்சீங்களா இல்லையா?

Unknown said...

இதான், இந்த சின்னப்பசங்களோட சேரக்கூடாதுன்னு சொல்றது ::)))

லொள்ளப் பாரு! எகத்தாளத்தப் பாரு !!

Unknown said...

ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு மெட்ராஸ்பவன் எலேய்..மெதசீட்டுல துண்டை போட்டுவையில....

Sivakumar said...

@ மோகன் குமார்

குறட்டை பற்றிய முன்னெச்சரிக்கையை தூங்கும் முன் சொல்லலாம் என்று நினைத்தேன். மறந்துவிட்டேன். சாரி சார்.

Sivakumar said...

// ரமேஷ்
please release part 2 soon//

depanetly. depanetly.

Sivakumar said...

//கே.ஆர்.பி.செந்தில் said...
இதான், இந்த சின்னப்பசங்களோட சேரக்கூடாதுன்னு சொல்றது ::)))//

அண்ணே..விரைவில் உங்க கவர்ச்சிப்படங்கள் ரிலீஸ் செய்யப்படும்.

Sivakumar said...

//

veedu said...
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு மெட்ராஸ்பவன் எலேய்..மெதசீட்டுல துண்டை போட்டுவையில....//

துண்டா? பெரிய போர்வையா போடுங்க. மொத்தமா உருளுவோம்.

Sivakumar said...

//கே.ஆர்.பி.செந்தில் said...

லொள்ளப் பாரு! எகத்தாளத்தப் பாரு !!//

உங்களபாத்தா அதைப்பாத்த மாதிரிதான். என்னா நக்கலு. உங்க தம்பி மலேசியா ரமேஷு உங்களைவிட ரவுசு பார்ட்டி.

sathishsangkavi.blogspot.com said...

ஆளைப்பார்த்தால் அமைதி.... வெடிச்சா சரவெடி....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

எங்கள் அண்ணன் கே.ஆர்.பி அவர்களை அவமானப்படுத்தினால் அவருக்கு எப்படி கல்யாணம் ஆகும். அண்ணா சார்பில் சிவகுமாரை கண்டிக்கிறோம்

#கே.ஆர்.பி அண்ணனின் அடி விழுதுகள்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///அவருக்கு எதிர்வாதம் செய்ய ஆரம்பித்தேன். நான் ஏதோ சைட் அடிக்கத்தான் நின்று கொண்டு பேசுகிறேன் என அந்த மூன்று பெண்களும் முதலில் தவறாக பார்த்தனர். பேட் கேர்ல்ஸ்/////

அப்போ வேற மாதிரி ப்ளான் பண்ணி முடிச்சிட்டீங்களாண்ணே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////வம்ப வெலைக்கு வாங்குவோம்ல' மணிவண்ணன்(மதுரை) ஊரிலிருந்து வந்து சேர்ந்தார் எங்கள் ரூமுக்கு. என்னைப்பார்த்ததும் பதற்றத்துடன் அவர் சொன்ன முதல் வசனம் "தெரியாம பிலாசபி, ஆ.மு.செ. ரூமுக்கு போய்ட்டேங்க. கதவை தெறந்ததும் அப்படி ஒரு நறுமணம். அங்கனயே மயங்கி விழுந்துட்டேன்./////

பாவம் பச்ச புள்ளைய எப்படி பயமுறுத்துனாங்களோ.....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///பார்ட் - 2 தொடர்ந்தே தீரும்(தீருமா?!). ////

இன்னும் எத்தன பார்ட்டோ....?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///பார்ட் - 2 தொடர்ந்தே தீரும்(தீருமா?!). ////

இன்னும் எத்தன பார்ட்டோ....?
//

oru 1000

சம்பத்குமார் said...

ம் ஆமா..

நம்ம கொள்கை லட்சியமெல்லாம் அடுத்த பதிவர் சந்திப்பு வரைக்கும ஈரோடு பதிவர் சந்திப்பு 2011 அனௌபவங்களாத்தான் இருக்கணும்..

@ நாய் - நக்ஸ்

//யோவ் ..பார்த்துயா ....நீயும் பொட்டு தாக்காதையா ????//

வணக்கம் தல..

நீக்கதான கத்துக்கொடுத்தீங்க பிரபாள பதிவர் ச்சி.சீ பிரபல பதிவர் ஆகுறது எப்படின்னு..

நீங்க மேடையேரும் போதே நினைச்சேன் அண்ணன் இன்னிக்கு செமயா வாக்கப்போராறுன்னு..

சிவா மறக்காம லின்க் குடுத்துட்டாரு

ஹி..ஹி..ஹி..

MANO நாஞ்சில் மனோ said...

யோவ் நான் எங்கேய்யா பல்பு வாங்கினேன், பல்பு வாங்குனது நக்கீரன் அண்ணன்தான் என்பதை கனம கோர்ட்டார் அவர்களுக்கு தெரிவிக்கிறேன்.

MANO நாஞ்சில் மனோ said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
///அவருக்கு எதிர்வாதம் செய்ய ஆரம்பித்தேன். நான் ஏதோ சைட் அடிக்கத்தான் நின்று கொண்டு பேசுகிறேன் என அந்த மூன்று பெண்களும் முதலில் தவறாக பார்த்தனர். பேட் கேர்ல்ஸ்/////

அப்போ வேற மாதிரி ப்ளான் பண்ணி முடிச்சிட்டீங்களாண்ணே?//

எனக்கும் அதே டவுட்டுதான் பன்னிகுட்டி...

MANO நாஞ்சில் மனோ said...

NAAI-NAKKS said...
யோவ் ..பார்த்துயா ....நீயும் பொட்டு தாக்காதையா ????//

முழுவதும் மூழ்கியாச்சு இனி முக்காடு நனைஞ்சா என்ன அண்ணே ஹி ஹி...!!!

அஞ்சா சிங்கம் said...

//காலை எழுகையில் பிலாசபி மீது ஆ.மு.செ. உருண்டு நசுக்கி இருப்பாரோ என்ற திகில் வேறு எனக்கு//

யோவ் நீ விவரம் புரியாத ஆளு. என்னைக்கும் பிரபா கூட படுக்கிறவங்களுக்குதான் ஆபத்து அதிகம் ...
ஆரூர் மூனா தான் பாவம் ..
மப்புல இருந்ததால தப்பிசிருக்காரு.......

அரவிந்தன் said...

// மறுநாள் இரவு ஈரோடு ஸ்டேஷனில் தண்ணியடிச்சேன்//

அடபாவிங்களா..என்ன இந்த பக்கம் வண்டி ஏத்திவிட்டு நீங்க எல்லாம் ஸ்டேஷனில் தண்ணியா நல்லா இருங்கப்பா...

இராஜராஜேஸ்வரி said...

nice..

Rathnavel Natarajan said...

அருமையான பதிவு.
மனப்பூர்வ வாழ்த்துகள்.

நாய் நக்ஸ் said...

நான் தான் அடுத்த சந்திப்பு வரை எழுதணும்-னு சொன்னேனே ....
365 DAYS -க்கு தொடரவும்.....

யோவ் ...சீக்கிரம் என்னை விடுங்க ,,,
அடுத்த ஆள் அடிக்க வெயிடிங்....

Anonymous said...

@ சங்கவி

அருமையா ஏற்பாடு செஞ்ச சங்கவி வாழ்க.

Anonymous said...

@ பன்னிக்குட்டி ராமசாமி

மணி பச்ச புள்ளையா? கோக்கு மாக்கான ஆளுங்க. வரலாறு பார்ட் பார்ட்டா தொடர்ந்து கொண்டே இருக்கும்.

Anonymous said...

@ சம்பத்

அதேதான் சம்பத். லட்சியம் எல்லாருக்கும் இதேதான்.

Anonymous said...

@ நாஞ்சில் மனோ

நீங்கதான் பல்ப் வாங்கியதா நாய் நக்கி சொன்னார்.

Anonymous said...

@ அரவிந்தன்

நீங்க எல்லாருமா? அதுல நான் இல்லீங்கோ.

Anonymous said...

@ இராஜராஜேஸ்வரி,ரத்னவேல்

தங்கள் வருகைக்கு நன்றி.

Anonymous said...

@அஞ்சா சிங்கம்

இது வேறயா. தேங்க்ஸ் பார் தி இன்பர்மேஷன் நண்பா.

Anonymous said...

@ நாய் நக்ஸ்

ரைட்டு நக்கீரரே.