Wednesday, January 25, 2012

எது மொக்கைப்படம்..இல்ல தெரியாமத்தான் கேக்கறோம்..

           
பல நாட்களாக உலக மகா சந்தேகம் ஒன்றுக்கு இன்றுவரை தீர்வு கிடைக்காமலே உள்ளது. அது என்னன்னா 'எது மொக்கைப்படம்?'.

விஜய்,அஜித் எல்லாம் தொடர்ந்து பல ப்ளாப் தந்தாலும் அதை பத்தி பல மணிநேரம் விவாதிப்பாங்களாம். ஆனா டி.ஆர்., பசுநேசன், பவரு ஸ்டார், செவன் ஸ்டார் நடிக்ற படம் வந்தா மட்டும் மொக்கைப்படமாம். என்னய்யா இது நியாயம், என்னய்யா இது நீதி?  ஆழ்வார், ராஜபாட்டை, சுறாவை விட எந்த விதத்துல எங்க செல்லக்குட்டிங்க படங்கள் எல்லாம் கொறஞ்சி போச்சி. உங்க பெரிய ஸ்டாருங்க நடிக்குற சில ரோல்கள் எல்லாம் சமூகம் வெளங்குறதுக்கா?  போக்கிரி,ஜனா, பாபா....இதுல ஹீரோ பண்றதை இளவட்ட பசங்க பாலோ பண்ணா எப்படியா சமூகம் சீர்படும்? 

                               ஒரிஜினல் உலக சினிமா ரசிகர்கள் அஞ்சாசிங்கம், பிலாசபி     

அதே எங்க ஆளுங்க நடிச்ச படங்களை எடுத்துக்கங்க. மேதைல நல்லாசிரியரா வந்து குழந்தை தொழிலாளிகளை வில்லன் கிட்ட இருந்து மீட்குராறு எங்க ராமராஜன். அடுத்து தேனி மாவட்டத்துல செவன் ஸ்டாரு விவசாய நிலங்களை எல்லாம் மீட்டு தரப்போறாரு. இவங்களை பாத்தா உங்களுக்கு கிண்டலா போச்சி. எல்லை மீறி போறீங்க. ஜாக்ரதை. சட்டை பட்டன் போடாம விஜய் சுத்தலாம், பெல்ட்டை கழுத்துல மாட்டிட்டு அஜீத் திரியலாம், கலர் துண்டை தலைல கட்டிட்டு ரஜினி விரல் வித்தை செய்யலாம். ஏன் சிம்பு கூட இன்ஸ்பெக்டரா ட்ரெஸ் போடலாம். கெரகம்..கெரகம்). அதையெல்லாம் கண் கொட்டாம பாப்பாங்க. ஆனா மேதைல எங்க ஆளு ஒயிட் அண்ட் ஒயிட்ல வந்தாக்கூட எட்டிப்பாக்க மாட்டாங்க. எங்கே போகுது உலக சினிமா ரசன? இல்ல தெரியாமத்தான் கேக்கறோம். 

இதுக்கு மட்டும் முண்டி அடிச்சி படம் பாத்து வெமர்சனம் போடுவாங்களாம். ஆனா மேதை மட்டும் போட்டா இமேஜ் ஸ்பாயில் ஆகிடுமாம்? (நான் பயங்கர கோவத்தோட சீரியஸா எழுதிட்டு இருக்கேன். யாருய்யா அங்க சிரிக்கறது). அதாவது பெரிய ஸ்டார், பேனர், இயக்குனர், தொழில்நுட்ப கலைஞர்கள் சேந்து எவ்ளோ மொக்கைப்படம் ரிலீஸ் பண்ணாலும் வெமர்சனம் போடுவாங்க. அப்பறம் விவாதிப்பாங்க(தெய்வத்திருமகள், மன்மதன் அம்பு). ஆனா எங்க அமுல் பேபிங்க நடிச்சா மட்டும் கண்டுக்கவே மாட்டாங்களாம். கேக்குறதுக்கு ஆள் இல்லைன்னு நெனப்பு போல.

                      மேதை இயக்குனருடன் ஒரு கலந்துரையாடல்..அஞ்சாசிங்கம், பிலாசபி

என்னமோ நாங்க பாகிஸ்தான் பார்டருக்கு கூப்புட்ட மாதிரி கஸாலி செதறி ஓடறாரு. 'கேபிள் கிட்ட மேதை படம் பாத்து விமர்சனம் போடணும். ஏன் இந்த பாரபட்சம்'னு கேட்டா 'யோவ்..என்ன விட்டுரு. கோடி ரூவா தந்தா கூட என்னால முடியாதுன்'னு கதறி அழுவராறு. ஒரு கண்ல நெய் ஒரு கண்ல சுண்ணாம்பு. இதுதான் பன்முக கலைஞரின் சமத்துவமா? வேர் இஸ் வேடியப்பன்? மேதை விமர்சனம் போடற வரைக்கும் அவரை பன்முக கலைஞர்னு(நீங்க தந்த பட்டம்தான்) ஒத்துக்க மாட்டோம். மேதை, ஆனந்த தொல்லை, தேனிமாவட்டம் ஆடியோ சி.டி.களை டிஸ்கவரி புக் பேலஸில் விற்காத வேடியப்பனுக்கு மனசாட்சி இருக்கா? 

                                     மேதை இயக்குனருடன்..நானும், அஞ்சாசிங்கமும்

ஷங்கர், மணிரத்னம் மாதிரி பெரிய தலைகள் கிட்ட கூட இருக்காத அன்பும், பண்பும் மேதை இயக்குனர் சரவணன் கிட்ட இருக்குய்யா. கிருஷ்ணவேணி தியேட்டர்ல எங்கள பாத்து அன்பா பேசுனாரு. இடைவேளை நேரத்துல படத்தின் முதல் பாதி பத்தி கலந்து ஆலோசிச்சோம். அவர் ஏற்கனவே ஹரி கிட்ட அசிஸ்ட்டண்டா வேலை செஞ்சாராம். "செகண்ட் ஆப் பாருங்க சார். படம் சும்மா பறக்கும்" அப்டின்னு சொன்னார். அதை கேட்டதும் என்ன சொல்றதுன்னே எங்களுக்கு தெரியல. மேல இருக்குற ஸ்டில்லை பாருங்க. ரசிகர்களும், படைப்பாளியும் எப்படி 'நிறைகுடம் நீர் தளும்பாம' இருக்கணும்னு சொல்ற வார்த்தைக்கு உதாரணமா இல்ல?. "அவர் கிட்ட நீங்க சிக்குனீங்களா? இல்ல உங்ககிட்ட அவரு சிக்கி இருக்காரா?" என்று போட்டோவை பார்த்து ரவுசு கட்டும் அன்பர்களே. போதும் நிறுத்துங்க. 

இம்மாதிரி படங்கள் உங்களை பொருத்தமட்டில் மொக்கையாகவே இருந்தால் அது உங்கள் துர் அதிர்ஷ்டம். ஆனால் அதை முழுதாக பார்ப்பது என்பது ஆழ்நிலை தியானம். அந்த அபூர்வ பொறுமை எம்மிடம் உள்ளது. நீங்கள் நடக்கும் பாதையில் ரோஜாக்கள் மட்டுமே வேண்டும் என எதிர்பார்த்து சில சமயம் அது கை  கால் கூடலாம்(நண்பன், எங்கேயும் எப்போதும்..மற்றும் சில). பல சமயம் ரோஜா என்று நினைத்து விஷ முள்ளில் கால் வைத்து புண்ணாக்கி கொள்ளலாம்(ராஜபாட்டை, ஆஞ்சநேயா, ஒஸ்தி, குருவி, பாபா, மன்மதன் அம்பு). ஆனால் முற்கள் நிரம்பி இருக்கும் பாதை என்று தெரிந்தும் அதில் கால் வைத்து இரண்டரை மணி நேரம் பயணிக்கும் எமக்கும் இறுதியில் கிடப்பது ரோஜாத்தோட்டமே(லத்திகா, மேதை, தேனி மாவட்டம்)!!!

******************************************


...............................
Posted by:
!சிவகுமார்!
..............................

.................................................

மேதை சிறப்பு மலர்கள்:

பாகம் ஒன்று

பாகம் இரண்டு 

பாகம் மூன்று

பாகம் நான்கு 
..................................................



21 comments:

Marc said...

கலக்குறீங்க போங்க

CS. Mohan Kumar said...

செம ! பல இடங்களில் ரசித்து சிரிக்க முடிந்தது.

கேபிள் சங்கர் என்கிற இளம் பதிவர் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்

CS. Mohan Kumar said...

மேதைன்னு ஒரு உலக படம் பார்த்துட்டு எம்புட்டு பதிவு ஆளாளுக்கு போடுறீங்க. ம்ம் நடக்கட்டும்

Anonymous said...

//dhanasekaran .S said...
கலக்குறீங்க போங்க//

வாங்க தனா. ஆனந்த தொல்லை உங்களோட பாக்க முடிவு செஞ்சிட்டோம்.

Anonymous said...

@ மோகன் குமார்

கேபிள் பாரபட்சமா விமர்சனம் போடறார். எமது செல்லக்குட்டிகளை ஒதுக்கும் அவருக்கு ஹெவியான கண்டனங்கள்.

Unknown said...

கலக்கல் பாஸ்!
ஆழ்நிலைத் தியானம் பற்றித் தெரிந்துகொண்டேன்!

செகண்ட் half பறந்துச்சா? அப்பிடீன்னா first half ஊர்ந்துகிட்டா போச்சு?
ஆமா படத்துல இயக்குனர் கூட பேஸ்தடிச்ச மாதிரி இருக்கீங்க...ஓ! பரவச நிலை??

Anonymous said...

//மோகன் குமார் said...
மேதைன்னு ஒரு உலக படம் பார்த்துட்டு எம்புட்டு பதிவு ஆளாளுக்கு போடுறீங்க. ம்ம் நடக்கட்டும்//

இப்பதான் சார் ஆரம்பிச்சி இருக்கோம். மேதை 25,50,75,100,125,150,175.....365 நாள் விழா எல்லாம் இருக்கே. அதுக்கப்பறம் 'மேதை படம் பார்க்கும் எண்ணம் உருவான விதம்' பதிவும் வரும்..:))))

Anonymous said...

@ ஜீ

இன்னும் பல சுவாரஸ்யங்க சம்பவங்கள் நடந்தது. ராமராஜன் ரசிகர் எங்ககிட்ட தியேட்டரில் பேசுன பேச்சு இருக்கே..மறக்க முடியாது.

அந்த போட்டோ..அது பரவச நிலையின் உச்சம் ஜீ!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மேதை பார்த்துவிட்டு கீழ்பாக்கத்தில் இருந்தாலும் கடமை தவறாமல் பதிவு போடும் சிவாவை வாழ்த்த வயதில்லை. வணங்குகிறேன் :)

goundamanifans said...

@ ரமேஷ்

எல்லாப்புகழும் இயக்குனருக்கே!!

நாய் நக்ஸ் said...

Iraiva...engalai
kapathu......

:)
:)
:)

Anonymous said...

மக்கள் நாயகனை உதாசீனப்படுத்தும் தமிழ்சினிமா ரசிகர்களே, உங்களையெல்லாம் அந்த மாரியம்மா ஆத்தா சும்மா விட மாட்டா. தமிழ்நாட்டுக்கே தீமிதிச்சி மாரியம்மாவுக்கு புகழ் மாலை சூட்டிய எங்கள் சிங்கம், மாதர் குல மாணிக்கம், மாட்டுக்கார வேலன், முன்னாள் எம்பி, தமிழ் சினிமாவின் எதிர்காலம் அண்ணன் ராமராஜன் வாழ்க, வாழ்க.

உயிர் மக்கள் நாயகனுக்கு உடல் நமீதாவுக்..சே பழக்க தோஷம், ரெண்டுமே ராமராஜனுக்குத்தான் போட்டுக்கங்க சிவா.

நாய் நக்ஸ் said...

Ariyatha vayasil
puriyamal....
Pesum ivargalai
forgive ....god....

MANO நாஞ்சில் மனோ said...

அருவாவை சொறியுராயிங்களே......!!!

MANO நாஞ்சில் மனோ said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
மேதை பார்த்துவிட்டு கீழ்பாக்கத்தில் இருந்தாலும் கடமை தவறாமல் பதிவு போடும் சிவாவை வாழ்த்த வயதில்லை. வணங்குகிறேன் :)//

ரமேசு ரமேசு எலேய் தம்பி அண்ணனுக்கு கண்ணுல தண்ணியா தண்ணியா கொட்டுதுலேய்....

MANO நாஞ்சில் மனோ said...

! சிவகுமார் ! said...
@ மோகன் குமார்

கேபிள் பாரபட்சமா விமர்சனம் போடறார். எமது செல்லக்குட்டிகளை ஒதுக்கும் அவருக்கு ஹெவியான கண்டனங்கள்.//

என்னய்யா நடக்குது இங்கே கேபிள் அண்ணன் நல்லா இருக்குறது பிடிக்களையாக்கும் உங்களுக்கு...?

விஸ்வநாத் said...

அதானே, யாருயா அங்கே
கை தட்டுனது ?

gaja said...

http://cablesankar.blogspot.com/2012/01/blog-post_27.html

we need your review!!!!!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

படிக்க படிக்க பரவசம், இப்படி ஆளுகள்தான்யா தேவை..... !மாமேதையின் ரசிக திலகங்களே.... உங்களுக்கு மேதை என்ன கைமாறு செய்யப்போகிறாரோ....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அடுத்து வர இருக்கும் பார்புகழும் பவர்ஸ்டாரின் ஆனந்த தொல்லை படத்தின் முன்னோட்ட ஏற்பாடுகள் எப்படி போய்ட்டு இருக்கு?

மொக்கை முனியாண்டி said...

விடுங்க பாஸ். அடுத்த வருஷம் நம்மாளு ஆஸ்கர் அவார்ட் வாங்கும்போது ஓடிவருவாய்ங்கள்ள? அப்ப பாத்துக்கலாம்.