Wednesday, March 28, 2012

பயணங்கள் முடிய வாய்ப்பே இல்லை


என்னாலே மக்கா எல்லாரும் சௌக்யம்தானே. இன்னைல இருந்து ஒரு வித்யாசமான பயணப்பதிவு எழுதப்போறேன் லேய். கொலம்பஸ் பயணத்தை எல்லாம் தூக்கி சாப்புடுற தொடர்பதிவுக்கு ரெடியாகுங்க எல்லாரும். தினத்தந்தில வர்ற கன்னித்தீவு கதையை விட நாலு பாகம் அதிகம் போட்டுட்டுதான் இந்த தொடருக்கு ஓய்வு. சரி அப்படி என்ன பயணம் போனேன்? என்னெல்லாம் பாத்தேன்?.....சொல்றேன். சொல்றேன். 

அதாவது மக்கா இது ரெண்டு பயணங்களோட தொகுப்பு. மொதல்ல சொல்லப்போறது மும்பைல எங்க தெரு முனைல இருக்குற பானை பூரி கடைக்கு போன கதை. கேட்டுக்க. என்னாது பானி பூரின்னா என்னவா சரியான லகுட பாண்டியா இருக்கீங்களே. அதாம்லே.. நம்ம பூரி இருக்குல்ல பூரி. அதோட கொள்ளுப்பேத்தி சைசுல இருக்கற ஐட்டம் பேருதான் பானி பூரி. மும்பலை 'தண்ணி' அடிக்கறவங்க இதத்தான் சைட் டிஷ்ஷா வச்சி திம்பாங்க. அதான் இதுக்கு பானி பூரின்னு பேரு வந்துச்சி. அம்ரீஷ் பூரி, ஓம் பூரி இப்படி ஏகப்பட்ட பூரி இருக்குலே மும்பைல. பானி பூரிய கண்டாலே எனக்கு பூரிப்பு பீறிக்கிட்டு வரும்லேய்.

அதை சாப்புட எங்க தெருமுனைக்கு போகலாம்னு நேத்து மதியம் 12:30:59 மணிக்கு முடிவு செஞ்சேன். கருப்பு கலர் தார் ரோட்டுல (!) நடக்க ஆரம்பிச்சேன். முதல்ல வலது கால், அப்பறம் எடது காலை மாத்தி வச்சி நடந்தேன். அப்ப லேசா தென்றல் காத்து அடிச்சது. என்னா சொகம்டா.  அப்படியே என் கழுத்தை தூக்கி வானத்தை பார்த்தேன். அங்க வானம், மேகம், சூரியன்,நாலஞ்சி பறவைங்க, ஏரோப்ளேன், பானா காத்தாடி எல்லாம் பாத்தேன். போற வழில சின்ன/ஸ்மால்/ஷார்ட் பெட்டிக்கடை ஒண்ணு இருந்துச்சி. அங்க பத்து மினி அப்பளங்களை வாங்கி ஒவ்வொண்ணையும் எல்லா கை வெரல்லயும் மாட்டிக்கிட்டு சாப்டுகிட்டே போனேன். சொர்க்கம்னா அதுதாம்லே! 

  
[[ பானி பூரி கடை படக்குறிப்புகள்: கோயில், குளம், மரங்கள், பச்சை நிற இலைகள், பஞ்சு மிட்டாய் விற்கும் சிறுவன், குளத்தை வேடிக்கை பார்க்கும் சிறுவர்கள் இரண்டு பேர், இரு நடுத்தர வயது ஆட்கள், எடது ஓரத்தில் முக்கால் அளவு நிரம்பிய தண்ணீர் பக்கெட்(வெள்ளை, பச்சை கலரில்), அதே கலர் பக்கெட் கடையின் கீழேயும் உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆரஞ்சு, வெள்ளை நிறம் கலந்த காலி குடம், ஒரு மினி லைட், மெரூன், பச்சை நிறம் கலந்த மாலை ஒன்று, பானி பூரிகள், சுண்டல், கடாய், TN64 A 2053 பைக்கில் அமர்ந்து இருக்கும் இளைஞன், கருப்பு டயர் (உட்புறம் ஆரஞ்சு கலர்), குளத்தின் எதிர்புறம் நான்கு பேர், ஒரு எவர்சில்வர் பாத்திரம், தரையில் இரண்டு கற்கள் ]].

எல்லாரும் என்னையே திரும்பி பாத்தாங்க. நாம அப்பளம் திங்கற அழகை பாத்து கண்ணு வக்கிராங்களோன்னு நெனச்சேன். ஆனா எல்லா பயலும் என் காலையே பாத்து ஏதோ பேசிட்டு இருந்தானுவ. அது வேற ஒண்ணுமில்ல மாப்ள. பக்கத்து வீட்டு பையன் போட்டுருந்த ஷூ மேல எனக்கு ரொம்ப நாளா கண்ணு. அடிக்கடி என்னை கூப்புட்டு "மனோ மாமா பாத்தியா என் ஷூவை. கலர் கலரா லைட் அடிக்கும். நடக்கும் போது "பீங் பீங்"னு சத்தம் வரும். இது உன்கிட்ட இல்லையே" அப்படின்னு சொல்லி ஒழுங்கா காட்டுனான். இன்னைக்கி வச்சேன் அவனுக்கு ஆப்பு.அப்படியே அந்த ஷூவை அமுக்கிட்டேன். இப்ப அதை போட்டுக்கிட்டு கடைக்கு போறதை பாத்து வவுறு ஏறியது இந்த ஊரு சனம். ஒரே குஷியா இருக்கேன் மக்கா இந்த ஷூவால!!

                                                                   
பயணங்கள் முடிய வாய்ப்பே இல்லை...இது வெறும் விளம்பரம்தான். ட்ரெயிலர், லைட் எரியும் 'ஷூ' வில் இருந்து வரும் இசை வெளியீடு, மெயின் பிக்சர் எல்லாம் இனிமேதான். நீ கொடுத்த வச்சவன்டா மாப்ளை. அனுபவி !!

நடந்து போகையில் நான் ரசித்த இயற்கை காட்சிகளும், விலங்குகளும்:

                                         என் பதிவின் முதல் வரியை படித்த ஜீவனின் நிலை...     
                                               
                                        எங்கள் தெருமுனையில் இருக்கும் கட்டிடம்..

                                            பானி பூரி கடைக்கு செல்லும் பாதை
   


                                                            சூரிய அஸ்தமன காட்சி.....

                                              சூரிய உதயம்..கண்கொள்ளா காட்சி.....

இப்ப உங்க எல்லாருக்கும் ஒரு புதிர் போட்டி. கீழ இருக்கற ஆறு படத்துல மொத்தம் 8 வித்யாசம் இருக்கு. அது என்னன்னு சொல்லுங்க பாப்போம்.

                                                 
                                       
                                        

                                         
                     
                                           

                                            

                                             


என்னது ரொம்ப கஷ்டமான போட்டியா? அப்ப வேற படம் போடறேன். இதுல கொறஞ்சது 10 வித்யாசம் இருக்கு. அதை சொல்லுங்க பாக்கலாம்.

                                                                     


 
_________________________________________________________
   

47 comments:

Kovai Neram said...

நம்ம மனோ மாதிரி தெரியுதே....அப்புறம் எந்த போட்டோவிலும் அருவாளை காணோம்

மனசாட்சி™ said...

என்ன ஒரே கலர்புல் படமா இருக்கு

படிச்சிட்டு வாரேன்

விக்கியுலகம் said...

எலேய் ஏற்கனவே அவ(ர்!)ன் கொலயா கொல்லுரான்..ஏன்யா நீ வேற கெளம்பிட்டியா!

மோகன் குமார் said...

என்னய்யா நடக்குது இங்கே !

MANO நாஞ்சில் மனோ said...

கொலை கொலையா முந்திரிக்கா நரிய நரிய சுத்தி வா....

MANO நாஞ்சில் மனோ said...

பானி பூரி திங்க போற ரோடு நல்லா விசாலமா இருக்கே ஆடிட்டே போக வசதியாகவும் இருக்கு.

MANO நாஞ்சில் மனோ said...

போச்சு போ போறபோக்குல குலைஞரையும் வாரியாச்சு, பேரனையும் வாரியாச்சு...

MANO நாஞ்சில் மனோ said...

அதென்ன எட்டு வித்தியாசம், பத்து வித்தியாசம்..? எலேய் சண்முகபாண்டி அருவாளை சாணை பிடிலேய், உடனே சென்னை கிளம்புறோம்.

MANO நாஞ்சில் மனோ said...

இந்த போட்டோ எல்லாம் பார்த்துட்டு ஒரு லகுடபாண்டி மலையில [[சிதம்பரம்]] இருந்து கீழே குதிச்சிட்டாராம் தெரியுமா..?

MANO நாஞ்சில் மனோ said...

ஓ இந்த பதிவை படிச்சுட்டுதான் 'வீடு'சுரேஷ் அந்த அருவில இருந்து கீழே குதிச்சாராமாம்?

விக்கியுலகம் said...

இந்த தள நிர்வாகி(கர்ர்!) எங்கய்யா பூட்டாரு!

goundamanifans said...

//Kovai Neram said...
நம்ம மனோ மாதிரி தெரியுதே....அப்புறம் எந்த போட்டோவிலும் அருவாளை காணோம்//

தன்னோட மொரட்டு கிருதாவை செதுக்க அருவாளை சாணை புடிச்சிட்டு இருக்காரு அண்ணாத்தை..அதான்..

goundamanifans said...

//மனசாட்சி™ said...
என்ன ஒரே கலர்புல் படமா இருக்கு

படிச்சிட்டு வாரேன்//

எங்க ஊரு பஞ்சு முட்டாய்க்காரன் படத்துல நம்ம ஆளு நடிக்கறாரு..

goundamanifans said...

//விக்கியுலகம் said...
எலேய் ஏற்கனவே அவ(ர்!)ன் கொலயா கொல்லுரான்..ஏன்யா நீ வேற கெளம்பிட்டியா!//

ரம்பத்தை ரம்பத்தாலதான் அறுக்கணும் மாம்சு!! (நக்கீரன்தான் இப்படி பதிவு போட சொன்னாரு)

goundamanifans said...

/மோகன் குமார் said...
என்னய்யா நடக்குது இங்கே !//

மனோவுக்கு பாராட்டு விழா நடத்தறோம்..நேர்ல வந்தா இன்னும் வசமா தர காத்துருக்கோம்

goundamanifans said...

//MANO நாஞ்சில் மனோ said...
கொலை கொலையா முந்திரிக்கா நரிய நரிய சுத்தி வா....//

உங்களை சுத்தி வரணுமா? ஒரு தடவ ஊ ஊ ன்னு கத்துங்க பாப்போம்...

goundamanifans said...

//MANO நாஞ்சில் மனோ said...
பானி பூரி திங்க போற ரோடு நல்லா விசாலமா இருக்கே ஆடிட்டே போக வசதியாகவும் இருக்கு.//

அது சரி. லுங்கிய டைட்டா கட்டிக்கங்க...பத்திரம்..

goundamanifans said...

//MANO நாஞ்சில் மனோ said...
அதென்ன எட்டு வித்தியாசம், பத்து வித்தியாசம்..? எலேய் சண்முகபாண்டி அருவாளை சாணை பிடிலேய், உடனே சென்னை கிளம்புறோம்//

சாணை புடிக்க கூட ஆளு வச்சிருக்காரே...ஏக் மார் தோ துக்கடா!!

goundamanifans said...

//MANO நாஞ்சில் மனோ said...
இந்த போட்டோ எல்லாம் பார்த்துட்டு ஒரு லகுடபாண்டி மலையில [[சிதம்பரம்]] இருந்து கீழே குதிச்சிட்டாராம் தெரியுமா..?//

அவரு மட்டுமா...உங்க போட்டோக்களை பாத்தா பல பேரு தர்ம ஆஸ்பத்திரில கெடக்காங்க..

goundamanifans said...

//விக்கியுலகம் said...
இந்த தள நிர்வாகி(கர்ர்!) எங்கய்யா பூட்டாரு!//

டென்சன் ஆவாதீங்கண்ணே. லெஸ் டென்சன் மோர் வொர்க். மோர் வொர்க் லெஸ் டென்ஷன்.

goundamanifans said...

//MANO நாஞ்சில் மனோ said...
ஓ இந்த பதிவை படிச்சுட்டுதான் 'வீடு'சுரேஷ் அந்த அருவில இருந்து கீழே குதிச்சாராமாம்?//

அதுல என்ன ஆச்சர்யம்...

வீடு K.S.சுரேஸ்குமார் said...

///[[ பானி பூரி கடை படக்குறிப்புகள்: கோயில், குளம், மரங்கள், பச்சை நிற இலைகள், பஞ்சு மிட்டாய் விற்கும் சிறுவன், குளத்தை வேடிக்கை பார்க்கும் சிறுவர்கள் இரண்டு பேர், இரு நடுத்தர வயது ஆட்கள், எடது ஓரத்தில் முக்கால் அளவு நிரம்பிய தண்ணீர் பக்கெட்(வெள்ளை, பச்சை கலரில்), அதே கலர் பக்கெட் கடையின் கீழேயும் உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆரஞ்சு, வெள்ளை நிறம் கலந்த காலி குடம், ஒரு மினி லைட், மெரூன், பச்சை நிறம் கலந்த மாலை ஒன்று, பானி பூரிகள், சுண்டல், கடாய், TN64 A 2053 பைக்கில் அமர்ந்து இருக்கும் இளைஞன், கருப்பு டயர் (உட்புறம் ஆரஞ்சு கலர்), குளத்தின் எதிர்புறம் நான்கு பேர், ஒரு எவர்சில்வர் பாத்திரம், தரையில் இரண்டு கற்கள் ]].//////

ஏனுங்கோ! ரெண்டு கரப்பான் பூரியில கெடக்கு அத விட்டுட்டிங்க! அது தன்னோட முன் கால்(கை) தூக்கி வேற காட்டுது...அப்பவும் விட்டுட்டிங்களே....

வீடு K.S.சுரேஸ்குமார் said...

ஷு போட்டுட்டு மக்கா போற அழக பார்த்து.....

அடடடடடா....கர்மம்! கருமாந்தரம் புடிச்சவனுக....மும்பையில ஒரு மலை உச்சியில்லை இருந்தா கல்வெட்டுல பொறிச்சி வெச்சிருக்கலாம்.....வெச்சிட்டு அங்கிருந்து குதிச்சிருக்கலாம்!

வீடு K.S.சுரேஸ்குமார் said...

தாங்கள் எடுத்த முதல் படத்தில் எழில் கொஞ்சும் அழகன் மனோவை மேலும் அழகாக்கிய கிராபிக்ஸ் கலைஞருக்கு பாராட்டுகள்....

வீடு K.S.சுரேஸ்குமார் said...

தெருமுனையில் இருக்கும்.....பூங்கா ஆஹா! பியூட்டிபுல்! அது என்ன கட்டிடம் தலைவா!

வீடு K.S.சுரேஸ்குமார் said...

பானிபூரி கடைக்கு போகும் பாதையில் போக எனக்கு திரானி பத்தாது!

வீடு K.S.சுரேஸ்குமார் said...

சூரிய அஸ்தமனமா? அப்பிடின்னா இன்னாப்பா பிஸ்கோத்தா?

வீடு K.S.சுரேஸ்குமார் said...

///சூரிய உதயம்..கண்கொள்ளா காட்சி.....///

தியேட்டர்ல பிட்டு படத்த கண்ணாடிய போட்டு படம் பார்த்துட்டு இது மணிரத்தனம் படமான்னு கேட்ட பயன்தானே இது? ரைட்டு!

வீடு K.S.சுரேஸ்குமார் said...

ஆறு படத்திலும் 8 கோடு போட்ட டவுசர் இல்லப்பா...!

(தொம்பி நான் மெயில்ல அனுப்பிய படத்தை ஏன் போடலை.....)

வீடு K.S.சுரேஸ்குமார் said...

ஓனர்ன்னா ஏன் பொளந்துட்டு போற...! ஒன் டயலாக்க கிண்டல் பண்றார்யா சிவா!

இது வன்முறை வெறியாட்டம்! இது ஜனநாயகநாடா? ஒரு பதிவரை இப்படியா அவமதிப்பது? போராட்டம்! போராட்டம்!

நாஞ்சில்மனோ said...

எலேய் வீடு கொண்டே போடுவேன் ராஸ்கல்!

NAI-NAKKS said...

வெரிகுட்....இப்படித்தான்யா....நான் சொல்லிக்கொடுத்த மாதிரியே பதிவ போட்டிட்டியே..!!!!!!

NAAI-NAKKS said...

அட பாவிகளா...எனக்கு கும்முற வேலையே இல்லாம பண்ணிட்டீங்களே...!!!!!!!!!!!!!!!

NAAI-NAKKS said...

இதுல என் பேர்ல கமெண்ட் வேற...

NAAI-NAKKS said...

மனோன்னு ஒரு மானஸ்தன் இருந்தாரே ....எங்க அவர்..????

NAAI-NAKKS said...

இத்தோட விடுவோமா???மனோ...
இன்னும் இருக்குடி...

NAAI-NAKKS said...
This comment has been removed by the author.
NAAI-NAKKS said...

அந்த ஷு தான்யா சூப்பர்று...
மனோ எனக்கும் ஒண்ணு ஆட்டைய போட்டு கொடுயா....
ப்ளீஸ்...

NAAI-NAKKS said...

மனோ..உங்க போட்டவ பார்த்து...NG CHENNEL-LA உங்களை போட்டோ எடுக்க ...
கூப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பிட்டிருக்காங்க ....

அடுத்த...தனுஷ் நீங்கதானாமே....

NAAI-NAKKS said...

இனிமே போட்டோ பதிவு போடுவியா...போடுவியா...போடுவியா...??????

NAAI-NAKKS said...

பதிவு போடா ஒண்ணும் இல்லேன்னா....
அப்படியே பொத்துனாப்புல இருக்கணும்..

புரியுதா....?????

தமிழ்வாசி பிரகாஷ் said...

மனோ போட்டோவுல பதினஞ்சு வித்தியாசம் இருக்குதுங்கோ.....

FOOD NELLAI said...

// கீழ இருக்கற ஆறு படத்துல மொத்தம் 8 வித்யாசம் இருக்கு. அது என்னன்னு சொல்லுங்க பாப்போம்.//
சொல்லிட்டா மட்டும் அவர் நிறுத்திரவா போறாரு! இல்ல சிவாவும், நக்ஸூம் அவரை நக்கல் பண்ண வேறு விஷயம் கிடைக்காமலா போகும்.

FOOD NELLAI said...

// வீடு K.S.சுரேஸ்குமார் said...
(தொம்பி நான் மெயில்ல அனுப்பிய படத்தை ஏன் போடலை.....)//
இது கூட்டு சதி.

FOOD NELLAI said...

// என் பதிவின் முதல் வரியை படித்த ஜீவனின் நிலை... //
முழுசும் படிச்ச எங்க நிலைமை!!!

கவுண்டமணி said...

FOOD NELLAI
// என் பதிவின் முதல் வரியை படித்த ஜீவனின் நிலை... //
முழுசும் படிச்ச எங்க நிலைமை!!!/////

கடைசி படம் மாதிரி ஆயிரும் ஆபிசர்!அக்ஙாங்

Elton said...

ஓனர்ன்னா ஏன் பொளந்துட்டு போற...! ஒன் டயலாக்க கிண்டல் பண்றார்யா சிவா! இது வன்முறை வெறியாட்டம்! இது ஜனநாயகநாடா? ஒரு பதிவரை இப்படியா அவமதிப்பது? போராட்டம்! போராட்டம்!