Thursday, December 6, 2012

பட்டிக்காட்டான் ஜெய் கதைகள் - 1

     
                                                               
                                         
நம்ம ப.காவுக்கு வாழ்க்கையே வெறுத்துப் போச்சு...!சாமியாரா போயிறலாம்ன்னு முடிவு செய்து நித்திகிட்ட போய் சுவாமி நான் சாமியார் ஆகப் போறேன் உங்க ஆலோசனை வேண்டும் அப்படிங்கிறார்...!

நித்தியும் ரஞ்சியையும் தன் சிஷ்யைகளையும் கண்ணால் ஜாடை காட்டி வேறு ஒரு அறைக்குப் போகுமாறு ஜாடை காட்டுகின்றார்....!

கவலைப்படாதிங்க சுவாமிஜி...! உங்க ஆளுகளை யாரையும் நான் தள்ளிட்டுப்
போகமாட்டேன்! தனியா நான் கடை போட்டுக்கிறேன்! அப்படிங்கிறார் நம்ம ப.கா.

நிம்மதி பெருமூச்சு விட்ட நித்தி! குழந்தாய்! யார் வந்தாலும் “உன்னிடம் அதிகம் இருப்பதை இல்லாதவர்களுக்கு கொடு” அப்படின்னு இதையேச் சொல்லு...!போதும் என்கின்றார்...!

நம்ம ப.காவும் தனியா கடை போட்டு உன்னிடம் அதிகம் இருப்பதை இல்லாதவர்களுக்கு கொடு என்று சொல்ல பெரிய லட்சாதிபதி ஒருவன் ப.காவை பார்க்க வர, அவனிடமும் பகா இதையே சொல்ல, அவன் தன்னிடம் இருந்த அதிக சொத்துகளை தானம் தர்மம் செய்ய “காக்காய் உக்கார கள்ளு சட்டி கையில விழுந்த மாதிரி” விரைவில் அவன் கோடீஸ்வரன் ஆகிவிட்டான். ப.காவின் புகழ் பயங்கரமாக பரவ ஆரம்பித்தது. கூட்டம் அதிகம் வர ப.கா மாற்றமே இல்லாமல் இதையே அனைவரிடமும் கூறிக்கொண்டிருந்தார்.

ஒரு முறை பயங்கர ரவுடி ஒருவன் ப.காவைப் பார்க்க வந்தான். சுவாமி பட்டிஸ் எனக்கு நாலு மனைவிகள் என்னால சமாளிக்க முடியலை என்ன செய்வது? என்று கேட்டான் பட்டிஸ் என்ன சொல்லியிருப்பார்ன்னு உங்களுக்கே தெரியுமே...! அதன் பிறகு ரவுடிகிட்ட எவ்வளவு வாங்கியிருப்பார்ன்னும் உங்களுக்குத் தெரியும்..!

நீதி : தவறான குருவை தேர்ந்தெடுப்பவன் தவறான தொழிலையே செய்வான்..!
*********************************************************************************

                                                           
பட்டிக்காட்டான் ஒரு நாள் ரோட்டுல ஜாலியா வந்திட்டு இருந்தாப்ல.....அப்ப ஒரு ஹோட்டல்காரர் வாங்க தம்பி அப்படின்னு கையப்பிடிச்சு ஹோட்டலுக்கு உள்ள இழுத்திட்டுப் போயி ஒரு தட்டுல சாம்பார் வடைய வெச்சு சாப்பிடுங்க தம்பின்னு அன்ப பொழிஞ்சார்...!

வேணாங்க எங்கிட்ட காசு இல்ல அப்படினாப்டி ப.கா

நான் உங்க கிட்ட காசு கேட்டனா....? நீங்க சாப்பிடுங்க தம்பி அப்படினாப்டி..ஹோட்டல்காரர்! ப.காவுக்கு இவம் யாராவது பதிவரா இருப்பானோ..?என்று நினைச்சுட்டு சாம்பார் வடை ஓசில கிடைச்ச சந்தோசத்துல சந்தோசமா சாப்பிடறாரு...!முடிச்சதும் டீ கொடுக்கறார் அதையும் குடிச்சிட்டு வெளிய வந்து ப.கா அவரிடம் சார் என் மேல அன்பை பொழியிறிங்களே நீங்க பதிவரா....?உறவினரா...?நண்பரா...?எனக்கு ஒன்னும் புரியலை அப்படிங்கிறார்...!


அதுக்கு ஹோட்டல் காரர் என்ன சொன்னார் தெரியுமா...?

ஒன்னுமில்ல தம்பி நேத்து வச்ச சாம்பார் கெட்டிருச்சுன்னு பசங்க சொன்னாங்க....!நான் நம்பலை....!உங்களுக்கு குடித்து டெஸ்ட் பண்ணிப் பார்த்தேன் நீங்க ஒன்னுமே சொல்லலை அப்ப சாம்பார் கெடலைன்னுதானே அர்த்தம்...!இனி நான் எல்லாருக்கும் கொடுக்கலாமில்ல அப்படினாரு...!ஹோட்டல்காரர்...!
நீதி : இலவசமா கிடைக்கின்ற எந்த பொருளுமே....!நம்மிடம் எதாவது எதிர்பார்த்தே வழங்கப்படுகின்றது!
________________________________________


Posted by: 

சின்ன (வீடு சுரேஷ்) குஜாலானந்தா சுவாமிகள்!
_____________________________________________

இந்த தொடரின் வெற்றியை பொறுத்து பட்டிக்காட்டான் கதைகள் புத்தகமாக வெளியிடப்படும் என்பதை அஸ்க்க லஸ்க்குடன் கூறிக்கொள்கிறோம்.
_____________________________________________________


21 comments:

நாய் நக்ஸ் said...

இன்னிக்கு ஜெய் யா.....

நடத்துங்க...நடத்துங்க....

goundamanifans said...

எல்லாம் வீடு சுரேஷ் மகிமை

Anonymous said...

கதைய விடுய்யா, ஆனா இதுல ரெண்டாவதா ஜெய்யி தியானம் பண்ற மாதிரி போட்டோ இருக்கே அதுக்கே கொடுத்த காசு சரியா போயிடுச்சி.

நாய் நக்ஸ் said...

ஜெய்யை கைய புடிச்சி இழுத்துடீங்கள்ள.....
இனி பாருங்க தமிழ்நாட்டுல என்ன நடக்குதுன்னு....

இருக்குற நாலு மணிநேர கரண்ட்ம் இல்லாம போக போவுது....
21/12/12 நிச்சயம் உலகம் தப்பிச்சிக்கும்....

ஆனா என்ன இனி சூரியன் இரவில் உதித்து பகலில் மறையும்....!!!!!!!

Anonymous said...

நக்கீரன் பக்கி பகல்ல சரக்கடிச்சா அப்படித்தான் தெரியும்

இப்படிக்கு
பட்டிக்காட்டான் ஜெய்

முத்தரசு said...

ைரட்டு

வெளங்காதவன்™ said...

ராஸ்கல்ஸ்... யாருய்யா சிட்டிக்காட்டான் ஜட்டிய உருவுனது?

kavignar said...

nalla irukku sir. keep it up

தமிழ்வாசி பிரகாஷ் said...

என்னமோ ஏதோ????

நடத்துங்க மக்கா....

தமிழ்வாசி பிரகாஷ் said...

ஏன்யா சுரேசு....

உம்ம நீதியை ஜொள்ள ப கா தான் கெடச்சாரா??

”தளிர் சுரேஷ்” said...

நீதிக்கதைகளை உல்டா பண்னியிருந்தாலும் சூப்பரப்பு!

Unknown said...

@s suresh said...
சார்...!இது எங்க ஸ்கிரிப்ட்ல இருந்து போட்டது.....! நீதி சும்மா ஜாலிக்குப் போட்டது...! இந்த கதைகள் அனைத்தும் எங்கள் சொந்தக் கற்பனையே...!

பட்டிகாட்டான் Jey said...

நித்திக்கி ஒரு ரஞ்சி மாதிரி, இந்த ப.கா. ஸ்வாமிகளுக்கு ஒரு காஜலையாவது சேவை பண்ணவிட்ருக்கபடாதா.

என்னமோ போங்கடா பக்கிகளா. :-)))))))))

Unknown said...

@ பட்டிகாட்டான் Jey
பங்காளி வியாழக்கிழமை தோறும் உங்கதைதான்....!அடுத்த எபிசோட்ல காலை விடுறேன் ச்சே...!காஜலை சேவை செய்ய விட்டுருவோம்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////நம்ம ப.காவுக்கு வாழ்க்கையே வெறுத்துப் போச்சு...!சாமியாரா போயிறலாம்ன்னு முடிவு செய்து/////

ஏன் லைக் போடுற ஆப்சனை நிறுத்திட்டாங்களா.......?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////நித்தியும் ரஞ்சியையும் தன் சிஷ்யைகளையும் கண்ணால் ஜாடை காட்டி வேறு ஒரு அறைக்குப் போகுமாறு ஜாடை காட்டுகின்றார்....!//////

இது ரொம்ப லேட்டு..... அண்ணன் அல்ரெடி எல்லாத்துக்கும் லைக் போட்டுட்டுதான் உள்ளேயே போறார்......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////கவலைப்படாதிங்க சுவாமிஜி...! உங்க ஆளுகளை யாரையும் நான் தள்ளிட்டுப்
போகமாட்டேன்! தனியா நான் கடை போட்டுக்கிறேன்! அப்படிங்கிறார் நம்ம ப.கா.//////

கடையெல்லாம் பத்தாது, சூப்பர் மார்க்கெட்டுதான் போடனும்......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////உங்களுக்கு குடித்து டெஸ்ட் பண்ணிப் பார்த்தேன் நீங்க ஒன்னுமே சொல்லலை /////

நாளைல இருந்து அந்த ஹோட்டல்ல அக்கவுண்ட் வெச்சி டெஸ்ட் பண்ணிப்பாப்பாரு நம்ம சிட்டிக்ஸ்.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////இந்த தொடரின் வெற்றியை பொறுத்து பட்டிக்காட்டான் கதைகள் புத்தகமாக வெளியிடப்படும் என்பதை அஸ்க்க லஸ்க்குடன் கூறிக்கொள்கிறோம்.////

புத்தகம் வாங்க முன்பதிவு செய்பவர்கள், தங்கள் பெயரை இங்கே கொடுத்தால், அனைவருக்கும் பட்டிக்ஸ் அவர்கள் லைக்குகள் வழங்குவார்....

இப்படிக்கு
பட்டிக்ஸ் லைக்ஸ் லைக்கர்ஸ் வட்டம்

பட்டிகாட்டான் Jey said...

//
இப்படிக்கு
பட்டிக்ஸ் லைக்ஸ் லைக்கர்ஸ் வட்டம் //

லைக்கர்ஸ் நொன்னைகளா, வாய்லேயே வடைசுட்டுகிட்டிருக்காம, வட்டத்துல இருக்கிர நாதாறிகள் ஆளுக்கு ரூ 1000/- வசூல் பண்ணி என் அக்கோண்ட்ல போடுங்கடா.... ஒரு வட்டம் இருக்கிரத க் கொண்டாட நான் *புக்கெட்* போகனும். என்ன பன்றது இப்படி கேக்கிரது கேவலமாத்தான் இருக்குது, அதப்பாத்தா புக்கெட் பாக்க முடியுமா நாதாறிகளா.

இப்படிக்கி,
நாந்தான்.

Unknown said...

பட்டிகாட்டான் Jey
லைக்கர்ஸ் நொன்னைகளா, வாய்லேயே வடைசுட்டுகிட்டிருக்காம, வட்டத்துல இருக்கிர நாதாறிகள் ஆளுக்கு ரூ 1000/- வசூல் பண்ணி என் அக்கோண்ட்ல போடுங்கடா.... ஒரு வட்டம் இருக்கிரத க் கொண்டாட நான் *புக்கெட்* போகனும். என்ன பன்றது இப்படி கேக்கிரது கேவலமாத்தான் இருக்குது, அதப்பாத்தா புக்கெட் பாக்க முடியுமா நாதாறிகளா.
//////////////////////
எது பக்கெட்ல தண்ணியெடுத்துட்டு கக்குஸ் போகனுமா...?கழுதை இரண்டு உவா கொடுத்தா கட்டணகழிப்பிடத்தில போலாமே பக்கி! முதல்ல உன் புகழை பரப்பறதுக்கு எனக்கு 5000 உவா அனுப்பு பக்கி!