Friday, December 7, 2012

பட்டிக்காட்டான் ஜோக்ஸ் - 2

பட்டிக்காட்டான் ஜெய்யின் தத்துவம் நம்பர் 1
கண்ணா நீ
கல்யாணத்திற்கு முன்னாடி சூப்பர்மேன் ,
கல்யாணத்திற்கு பின்னாடி ஜென்டில்மேன் ,
பத்து வருஷத்திற்கு பிறகு வாட்ச்மேன் ,
நாற்பது வருஷத்திற்கு பிறகு டாபர்மேன் …

--------------------------------------------------------

டாக்டர் : நீங்க உடனடியா மீன் , ஆடு , கோழி சாப்பிடுவதை நிறுத்த வேண்டும் .
பட்டிக்காட்டான் : அதுக சாப்பிடுவதை நான் எப்படி நிறுத்த முடியும் டாக்டர் .

--------------------------------------------------------

பட்டிக்காட்டான் சிறுவயதில் அவரது பள்ளித் தலைமையாசிரியடம் இப்படிக் கேட்டு தான் பின்னாடி பழுக்க அடி வாங்கினாராம்

சார் , டீ மாஸ்டர்டீ போடறாரு , பரோட்டா மாஸ்டர்பரோட்டா போடறாரு , மேக்ஸ் மாஸ்டர்மேக்ஸ் போடறாரு , நீங்க ஹெட்மாஸ்டர் தானே ஏன் மண்டய போட மாட்டேங்கிறீங்க ?..

--------------------------------------------------------


பட்டிக்காட்டான் : ஒரு காப்பி எவ்வளவு சார் ?

மெட்ராஸ்பவன் ஓனர் : 6 ரூபாய் .

பட்டிக்காட்டான் : எதிர்த்த கடையில ஒரு ரூபாய்ன்னு எழுதியிருக்கே ?

மெட்ராஸ்பவன் ஓனர் : டேய். சாவுகிராக்கி அது XEROX காப்பிடா !

--------------------------------------------------------

வீடு சுரேஷ் : ஏன் மச்சி உஜாலா பாட்டில கீழ போட்டு தாண்டிகிட்டு இருக்குற?

பட்டிக்காட்டான் : எங்க ஆபீஸ்ல நாளைக்கு நீளம் தாண்டுற போட்டி இருக்கு. அதுக்கு தான் பிராக்டீஸ் பண்ணி கிட்டு இருக்கேன்.

--------------------------------------------------------
ஒரு நாள் நம்ம பட்டிக்காட்டான், சின்னதா ஒரு டிவி வாங்கனும்ன்னு ஆசை பட்டு, எலக்ட்ரானிக்ஸ் கடைக்கு போயிருக்கார். கடைகாரனைப் கூப்பிட்டு ஒரு சின்ன டிவியை காண்பிச்சு கேட்டார்.

"இந்த டிவி என்ன விலை?"

கடைகாரன் பட்டிக்காட்டானை ஏற இறங்க பார்த்துட்டு சொன்னான்

"இந்த கடையில பட்டிக்காட்டானுக்கெல்லாம் டிவி விக்கறதில்லை..."

எப்படியும் இந்த டிவியை வாங்கிடனும்னு, விட்டுக்கு போய் தன்னோட கெட்அப்பை மாதிக்கிட்டு வந்து ‌கடைகாரனைப் பார்த்து கேட்டார்,

"இந்த டிவி என்ன விலை?"

"இந்த கடையில பட்டிக்காட்டானுக்கெல்லாம் டிவி விக்கறதில்லை..." ம‌றுப‌டியும் அதையே க‌டைகார‌ன் சொல்ல‌, டென்ஷனான பட்டிக்காட்டானுக்கு என்ன செய்றதுன்னு தெரியலை. ந‌ம்ம திருட்டு முழி தான் இவனுக்கு காட்டிகுடுக்குதுன்னு நினைச்சு, அடுத்த முறை போகும் போது, கூலிங்கிளாஸ் போட்டுக்கிட்டு, ஒட்டு மொத்த கெட்அப்பும் மாத்திக்கிட்டு கடைக்கு போய் கேட்டார்,

"இந்த டிவி என்ன விலை?"

"ஒரு தடவை சொன்னா புரியாது? இந்த கடையில பட்டிக்காட்டானுக்கெல்லாம் டிவி விக்கறதில்லை..."

பட்டிக்காட்டானால‌் பொறுக்க‌ முடிய‌லை, கடைகாரன்கிட்ட பரிதாபமா கேட்டார்,

"டிவி குடுக்க‌லைன்னா ப‌ர‌வாயில்லை, அட்லீஸ்ட், நான் பட்டிக்காட்டான் தான்னு எப்ப‌டி க‌ண்டுபிடிச்சே சொல்லு?"

கடைகாரன் சிரிச்சிக்கிட்டே சொன்னான், "இது டிவி இல்லை, மைக்ரோஓவ‌ன் அதான்"

--------------------------------------------------------

பட்டிக்காட்டான் அவருடைய ஆட்டோவின் சக்கரங்களை மிக மும்முரமாக கழட்டுவதில் ஈடுபட்டிருந்தார். அவரைப்பார்த்து ஒருவர்,"எதுக்கு ஆட்டோ சக்ககரத்தை கழட்டிக்கிட்டு இருக்கீங்க?"
பட்டிக்காட்டான் : போர்ட்ல என்ன போட்டிருக்கங்கனு பாருங்க.'Parking for Two Wheelers only!'.அதுக்குதான் 

--------------------------------------------------------

பட்டிக்காட்டான் வேலை தேடிக் கொண்டு இருந்த போது ஒரு சாப்ட்வேர் கம்பனி நேர்முக தேர்வில்

தேர்வாளர்: "உங்களுக்கு MS Office தெரியுமா?"
பட்டிக்காட்டான் : "நீங்க அட்ரெஸ் குடுதீங்கனா கண்டிப்பா கண்டுபிடிச்சிடுவேன்" 

--------------------------------------------------------

ஒரு வகுப்பில் ஆசிரியர் மாணவர்களை "CRICKET MATCH" பற்றி ஒரு கட்டுரை எழுதச்சொன்னார். மாணவர்களும் உடனே எழுத ஆரம்பித்துவிட்டார்கள். அவ்வகுப்பில் இருந்த பட்டிக்காட்டான் நீண்ட நேர யோசனைக்குப்பிறகு இப்படி எழுதினார் "DUE TO RAIN, NO MATCH!"

--------------------------------------------------------

பட்டிக்காட்டான் கண்ணை மூடிக்கொண்டு கண்ணாடி முன்பு நின்றுகொண்டிருந்தார்.
அவரைப்பார்த்து அவரின் நண்பர்  " கண்ணாடி முன்னே கண்ண மூடிட்டு என்ன செய்றீங்க" என்று கேட்க, பட்டிக்காட்டான் " நான் தூங்கறப்ப எப்படி இருப்பேன்னு பாத்துகிட்டிருக்கேன்" என்று பதிலளித்தார்!!!



ஆரூர் மூனா செந்தில்

17 comments:

Yaathoramani.blogspot.com said...

மிக மிக அருமையான நகைச்சுவைத் துணுக்குகள்
மீண்டும் மீண்டும் படித்து ரசித்தேன்
தொடர வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

tha.ma 26

பட்டிகாட்டான் Jey said...

ஜோக்ஸ் எல்லாம் சூப்பர். :-))
------------------------------
இனி என் பங்கு ஜோக்ஸ் வாசகர்களுக்காக :


மெட்ராஸ் பவன் : அந்த பொண்ணுக்கு காது கேக்காதுனு நினைக்கிறேன்

பட்டிகாட்டான் : உனக்கு எப்படி தெரியும்?
மெட்ராஸ் பவன் : நான் அவகிட்ட ஐ லவ் யூ னு சொன்னேன், ஆனா சம்பந்தமில்லாம, நான் போட்டிருக்கிற செப்பல்ஸ் புதுசுனு சொல்லிட்டுபோறா.
பட்டிகாட்டான் : சரி சரி பிய்ஞ்ச செருப்பு போட்டிருக்கிர பொண்ணா பார்த்து சொல்லு தேரினாலும் தேரும். (அப்பதான் செருப்பு பிய்ஞ்சாலும் பரவா இல்லைனு அடிப்பாய்ங்க, பரதேசி சாவட்டும்)

-----------------------------------------------------------
அஞ்சா சிங்கம் : என்னோட மொபைல் பில் எவ்வளவு?.
கஸ்டமர் கேர் லேடி : 123 டயல் பன்னினா கரண்ட்(current) பில் எவ்வளவுனு தெரியும் சார்.

அஞ்சா சிங்கம் : ஸ்டுபிட், நான் கேட்டது மொபைல் பில், கரண்ட்(Electricity) பில் இல்லை.
----------------------------------------------------
இண்டெர்வியூவில்

சின்ன வீடு சுரேஷ் : 3 வது மாடியில நீ இருக்கும் போது தீப்பிடிச்சிருச்சினு கற்பணை பன்னிக்கோ, எப்படி அங்கிருந்து தப்பிப்பே?

பட்டிகாட்டான் : ங்கொய்யாலே கற்பனை பன்றத நிறுத்திருவேன் ( நமக்கு இருக்கிற அறிவுக்கும் தெறமைக்கும் இவன் கேள்விக்கெல்லாம் பதில் சொல்லவேண்டியிருக்குதே?.)
------------------------------------------------------------------
ஆசிரியர் : காந்தி ஜெயந்தியை பற்றி சிறு குறிப்பு எழுதுங்க.

மெட்ராஸூ எழுதுறான் : காந்தி இந்தியா சுதந்திரம் வாங்க பாடுபட்டவர்,ஆனா இந்த ஜெயந்தியை பற்றி எனக்கெதுவும் தெரியாது ( மனசுக்குள், இந்த ஃபிகரு யாருன்னு தெரிஞ்சா தேத்திருக்கலாமே?. வட போச்சே)

------------------------------------------------------------------------
மெட்ராஸூ : அண்ணே உங்ககிட்டெ ஒன்னு கேக்கனும்ணே..

பட்டிகாட்டான் : சொல்லு ராசா... (ஏதும் ஏடாகூடமா கேப்பானோ )

மெட்ராச்ஸூ : அத ஏன்ணே கேக்குறீங்க...

பட்டிகாட்டான் : நீதானே பரதேசி ஏதோ சொல்லனுமின்னு சொன்னே...( சும்மா இருக்கிறவனை சொறிஞ்சி விடுறானே!!!)

மெட்ராஸூ : இல்லைணே, பிரேமானந்தா போய் சேர்ந்துட்டாரு, அவருக்குப் பின்னாடி அதே ஸ்டைலுல தலைக்கி முன்னாடி முடியை கொத்தாஅ நீட்டி வச்சிருக்கிர ஒரே ஆளு நாந்தான், அதான் ஆசிரமம் ஆரம்பிக்கலாம்னு....

பட்டிகாட்டான் : அதுவே ரொம்ப லேட் மெட்ராஸூ சீக்கிரமா ஆரம்பிப்ப, அம்மனி பக்தைகளை அள்ளிடலாம்.......( பயபுள்ளை செட்டிலாயிடுவாம்)
-------------------------------------------------------------------
ஆரார் மூனா செந்தில் : உங்க ஊர்ல பெரிய மனுசங்க யாராவது பிறந்திருக்காங்களா? ( நம்ம ஊர் பிரபலங்களை பற்றி தெரிந்துகொள்ளும் ஆசையில்)

பிலாஸபி பிரபாகரன் : இல்லை சார், குழந்தைங்க மட்டும்தான் பிறக்குறாங்க.
--------------------------------------------------------
வீடு சுரேஷ் : விலங்குகளிலேயே எது பழமையான விலங்கு?

மெட்ராஸூ : வரிக்குதிரை தான்.

வீடு சுரேஷ் : எப்படி?

மெட்ராஸூ : அதுதா ப்ளாக் & ஒய்ட்ல இருக்கு

பட்டிகாட்டான் : ஓவரா மொக்கய போடுராய்ங்கலே இவங்க ரெண்டு பேரையும் தூக்கிப்போட்டு மிதிச்சி , மேன்பாடி வண்டில ஏத்திவிட்டா என்ன?!!!


மெட்ராஸ் பவன் : நான் அவகிட்ட ஐ லவ் யூ னு சொன்னேன், ஆனா சம்பந்தமில்லாம, நான் போட்டிருக்கிற செப்பல்ஸ் புதுசுனு சொல்லிட்டுபோறா
.
பட்டிகாட்டான் : சரி சரி பிய்ஞ்ச செருப்பு போட்டிருக்கிற பொண்ணா பார்த்து சொல்லு தேரினாலும் தேரும். (அப்பதான் செருப்பு பிய்ஞ்சாலும் பரவா இல்லைனு அடிப்பாய்ங்க, பரதேசி சாவட்டும்)

பட்டிகாட்டான் Jey said...

நான் பதிவெழுத ஆரம்பிச்சி 2-வது பதிவே(026-06-2010), சக பதிஉலக நண்பர்களை வச்சி ஜோக்ஸ் போட்ட பதிவிலிருந்து சின்னதா மாற்றம் செய்ஞ்சி போட்டது :))))))

--------------------
பதிவுலக சாப்ளின்களின் அதிரடி காமெடிகள்

http://pattikattaan.blogspot.in/2010/06/blog-post_26.html
-----------------------------

நம்ம நண்பர்கள் வட்டம் அனைவரையும் உள்ளடக்கி ஒரு காமெடி உரையாடல் பதிவு ஒன்னு போடுங்க. நல்ல நகைச்சுவையா, சுவாரஸ்யமா இருக்கிரா மாதிரி..... :-))))

கவியாழி said...

பட்டிக்காட்டனுக்கும்,மெட்ராஸ்சுக்கும் நல்ல பொருத்தம் நல்ல இருங்க

பட்டிகாட்டான் Jey said...

:-)))

Unknown said...

மைக்ரோஓவன் ஜோக் சான்ஸே இல்ல.....!

யோவ் பங்காளி உனக்கு கொண்டை வாயில இருக்குய்யா...?ஹிஹி!

நாய் நக்ஸ் said...

நடத்துங்கையா...நடத்துங்க.....
ஆனா ஒண்ணு இந்த கமெண்ட் போட்டவன் பேர் மட்டும் உங்களுக்கு மறந்துடனும்...ஆமா...

Anonymous said...

/// Ramani said...

மிக மிக அருமையான நகைச்சுவைத் துணுக்குகள்
மீண்டும் மீண்டும் படித்து ரசித்தேன்
தொடர வாழ்த்துக்கள் ///

நன்றி ரமணி அய்யா.

Anonymous said...

/// பிரியமுடன் பிரபு said...

:) ///

நன்றி பிரபு

Anonymous said...

/// பட்டிகாட்டான் Jey said... ///

என்னது இது சின்னப்புள்ளதனமாட்டம்.

Anonymous said...

/// கவியாழி கண்ணதாசன் said...

பட்டிக்காட்டனுக்கும்,மெட்ராஸ்சுக்கும் நல்ல பொருத்தம் நல்ல இருங்க ///

நன்றி கண்ணதாசன் அண்ணே.

Anonymous said...

/// வீடு சுரேஸ்குமார் said...

மைக்ரோஓவன் ஜோக் சான்ஸே இல்ல.....! ///

பின்ன இந்த மூஞ்சிக்கு அறிவாளி மாதிரியா ஜோக்கு போட முடியும்.

Anonymous said...

/// நாய் நக்ஸ் said...

நடத்துங்கையா...நடத்துங்க.....
ஆனா ஒண்ணு இந்த கமெண்ட் போட்டவன் பேர் மட்டும் உங்களுக்கு மறந்துடனும்...ஆமா... ///

ஆமா நானும் சொல்லிப்புட்டேன், அது நக்கீரன் என்பதை மடடும் எல்லாரும் மறந்துடனும்.

”தளிர் சுரேஷ்” said...

கலக்கல் ஜோக்ஸ்!

முஹம்மத் ஷஃபி BIN அப்துல் அஜீஸ் said...

ஜோக்ஸ் அருமை

அஞ்சா சிங்கம் said...

என் சங்கத்து ஆளை அடிச்சது எவன் ............?

இனி பொறுக்க முடியாது குருநாதா .........(நக்கீரன் )......வாங்க குருநாதா