Tuesday, January 22, 2013

சென்னை புக் ஃபேர் - பட்டிக்ஸ் சிறப்பு மலர் +



ஆன்றோர் பெருமக்கள் அனைவருக்கும் வணக்கம். சமகால சரித்திர நாயகன் மேதகு பட்டிக்காட்டானின் சிறப்பு புகைப்பட கண்காட்சிக்கு வந்திருக்கும் தங்கள் யாவரையும் வந்துருங்க வந்துருங்க என வரவேற்கிறோம். சென்னை புத்தக கண்காட்சிக்கு பட்டிக்ஸ் அவர்கள் விஜயம் செய்தபோது எடுக்கப்பட்ட பொக்கிஷ புகைப்படங்களை உங்கள் முன் பகிர்வதில் உய்யலாலா உற்சாகம் அடைகிறோம். தங்கள் எண்ணங்களை பின்னூட்டங்கள் வாயிலாக போதும் போதும் என்று அண்ணன் சொல்லும் அளவிற்கு 'கொட்டி'விட்டு போகுமாறு பம்மியவாறு கேட்டுக்கொள்கிறோம்.

வாசலில் கால் வைத்ததும் 'லக்கா கிக்கா' ரோஜா அக்கா அருகே ஜகஜோதியாக நிற்கும் தலைவர்:   

                                                                     

புத்தகங்கள் லைப்ரரியை தேடலாம்.  ஒரு லைப்ரரியே புத்தகம் தேடும் அதிசயம் பாரீர். 'அத்தே தண்டி புத்தகத்தை ஓசியிலேயே 4 மணிநேரம் படித்த இம்மகான் யாரோ?' என பின்புறம் எட்டிப்பார்க்கிறார் ஒரு நபர்:       

                                                              

ஓசி புத்தகம் வாங்கிய களைப்பில் சற்றே இளைப்பாறும் இடிதாங்கி. விடலை பருவத்தில் கடலை போடுவோருக்கு போட்டியாக கடலை போடும் பட்டிக்ஸ்.

டீச்சர்: 'டேய் நேத்து நீ கட் அடிச்சிட்டு கடலை போட்டியா?'

பட்டிக்ஸ்: 'சத்தியமா இல்ல டீச்சர்'

டீச்சர்: 'நீ கடலை போட்டதை எல்லாரும் பாத்தாங்களாமே?'

பட்டிக்ஸ்: 'என் கப்பாகுட்டிக்கு ஆறு, நதி, ஏரி போட்டேன்னு சொன்னாலும் நியாயம். அவ்ளோ பெரிய கடலை எப்படி போட முடியும். சத்தியமா நான் நேத்து பீச்சுக்கு போகவே இல்ல டீச்சர்'.         

                                            

அனைவரும் போட்டோவிற்கு போஸ் தரும்போது கண்கொத்திப்பறவையாக கடலை போட ப்ளான் செய்யும் பட்டிக்ஸ். அதைக்கண்டு அதிரடியாக கர்ஜிக்கும் அஞ்சாசிங்கம். மிலிட்டரி தேர்வுக்கு போஸ் தருவது போல் நிற்கும் ஆரூர்:   
                
                                             

'பதிவுலகம் எங்கிலும் உன்னை மிஞ்சிட யாரு? 
உன் பின்னோட்டம் கண்டதும் சிதறு ஓடுது நாடு.
உலக நாயகனே. கண்டங்கள் கண்டு வியக்கும்.
இனி ஐ.நாவும் உன்னை அழைக்கும். பதிவுலக நாயகனே.

பட்டிக்ஸ்: கம்ஸ் டான்ஸ் வித் மீ before யூ கோ. 

நீ பெரும் வலைஞன். நிரந்தர நம்பர் 1.
உலகமெங்கிலும் உன் லைக்சை மிஞ்சிட யாரு.
உன்னை 24/7 காண்பதில் இன்பம் கொள்ளும் இந்நாடு.

பட்டிக்ஸ்: கம்ஸ் டான்ஸ் வித் மீ before யூ கோ'   

                                                விஸ்வரூபமும், வில்லங்க ரூபமும்                             
                                         

'வாங்க  கல்லுல உக்காருவோம்' என்று சொன்னால் அதற்கு முன்பு அந்தக்கல் 'எந்த நூற்றாண்டை சேர்ந்தது, அது சென்னை வந்து சேர்ந்ததன் மர்மம் என்ன?' என்று தீர விசாரித்த பிறகே அமரும் அஞ்சாசிங்கத்திடம் தெரியாமல் வரலாறு பேசி மாட்டி முழிக்கும் மதுமதி. குந்தவை நாச்சியார் அரண்மனை அருகே யூ டர்ன் போட்டு, கிரேக்க காலத்து குதிரை மீதேற்றி நெப்போலியன் போர்க்களத்தில் சைனா டீ குடிக்க வைத்த பின்பே மதுமதியை கீழே இறக்கினார் அஞ்சா. வாயடைத்து நின்றார் மதுமதி. சிங்கம்லே!!  வரலாற்று சப்ஜெக்டில் யானை முட்டை வாங்கியதால் எட்டி நிற்கும் பட்டிக்ஸ் நடுவே.     
                                                                
                                                     

ஷார்ட்ஸ், வேட்டி, கருப்பு சட்டை என்று நாளொரு மேனி பொழுதொரு காஸ்ட்யூமில் வலம் வந்த இளைய ஆதீனம். குறிப்பிட்ட ஸ்டாலில் ஒரு பெண் வருடா வருடம் தன்னை லுக் விடுவதாக தம்பி சொன்னதை முதலில் நம்பவில்லை. இம்முறை அந்த ஸ்டால் அருகே சென்றபோது 'கண்கள் இரண்டால்' அந்த யுவதி இவரை பார்த்து சிரிக்க ரெண்டு புறா ஜொய்யென்று பறந்து சென்றது:   

                                                                  

'லிச்சி ஜூஸ் வாங்கித்தரேன் வாங்கலேய்' என்று கேபிள் எம்மை அழைக்க நாங்கள் இன்னும் பலரை அழைக்க உஷாராக இன்னொருவர் தலையில் பில் கட்டிவிட்டு கமுக்கம் ஆன தானைத்தலைவர் வாழ்க:  

                                                 




5 comments:

JR Benedict II said...

சூப்பர் தலைவரே.. தானை தலைவனுக்கு தலை வணங்கும் மரியாதை.. அதிலும் பாட்டு போட்டு அவர அண்ட, ஆகாச நாயகன் ஆக்கிட்டிங்க.. கமலுக்கு போட்டியா வில்லங்க ரூபம் வெற்றி பெற வாழ்த்துக்கள்..

பாச தலைவனுக்கு பாராட்டு கவி....

ஓருயிர் கொண்டு உலகத்தில் இன்று
ஆயிரம் பிறவி கொண்டாய் உன் வாழ்வில்
ஆயிரம் PROFILE கண்டாய்

பிளஸ்சர்கள் உன்னை சூழ்ந்து நின்றாலும்
பிளஸ் பண்ணும் முயற்சி சோர்வுரவில்லை
ஐந்து மணி முதல் நீ லைக் பண்ணி வந்தாலும்
அப்டேட்ஸ் குறையவில்லை

சொன்னால் கேள் "பட்டிபுக்" (FATIBOOK) தூரமில்லை

Come Dance With Me Before You Go

உடல் குள்ளே மனிதன் ஓரவதாரம்
சமுக தளத்தின் கணக்கில் நூறவதாரம்
முகங்களை ஒளித்து கமெண்ட்களை படித்து
பெருங்கொண்ட அறிவு கொண்டாய்

விஞ்ஞானி பன்னிக்குட்டியையும் புரிந்து கொண்டாய்

விழிகளுக்குள்ளே பேஸ்புக்கும் தோன்றும்
உன் விரல்களும் கூட லைக் பண்ண துடிக்கும்
கூட்டமாய் கூடி கும்மி எடுத்தும்
பீனிக்ஸாய் மீண்டெளுந்தாய்
நீயெனும் நிலை கடந்தாய் , இப்போது சரித்திரம் ஆகி விட்டாய்..

Come Dance With Me Before You Go

Unknown said...

super kalakitinka

பட்டிகாட்டான் Jey said...

எலேய் மெட்ய்ராசூ இதுக்குதான் வளைச்சி வளைச்சி ப்டம் பிடிச்சியாலே.
முதப் ப்டம் எடுத்தது எனக்கு தெரியும். மித்த படம்ஸ் எப்படா எடுத்தே?

இனி சந்திக்கும் போது முதல்ல உன் மொபைலை பிடிங்கி வச்சிகிட்டு வரும் போது கைல குடுக்கனும்டியோவ்வ்வ் :-)

Cable சங்கர் said...

நீங்க நல்லா வருவீங்க..

சீனு said...

//விஞ்ஞானி பன்னிக்குட்டியையும் புரிந்து கொண்டாய்// எலேய் ஹாரி அவரையும் இழுத்து விட்டாச்சா