Thursday, September 5, 2013

அஞ்சா சிங்கம் மருதுபாண்டியின் காட்டு தர்பார்

செந்தில் :- அண்ணே .அண்ணே ........
கவுண்டர் :- என்னடா காலங்காத்தால நொந்னே  நொந்னேன்னுகிட்டு .
செந்தில் :- சீக்கிரம் வாங்கன்னே ஒரு அவசரமான பஞ்சாயத்து .
கவுண்டர் :-இருடா இன்னும் பல்லு கூட விளக்கல நான் முடிச்சிட்டு வந்திடுறேன் .
செந்தில் :- அதுக்கெல்லாம் இப்போ நேரம் இல்லை. நீங்க உடனே வாங்க வாயிலேயும் வயித்துலேயும் அடிச்சி கிட்டு ஒருத்தர் அழுதுகிட்டு இருக்காரு ..சீக்கிரம் வந்து தீர்ப்பு சொல்லுங்கண்ணே .

கவுண்டர் :- ஹூ இஸ் தி டிஸ்டபன்ஸ் .. இருடா ஒரு சோம்பு பால் குடிச்சிட்டு வரேன் .
செந்தில் :- அதெல்லாம் போற வழியில் பார்த்துக்கலாம் நீங்க வாங்கன்னே .
கவுண்டர் :- ஏண்டா நீ எதுவும் கமிஷன் கிமிஷன் வாங்கிட்டியா . இப்படி அவசர படுறே ...
செந்தில் :- அதெல்லாம் இல்லைனே ஆளை பார்த்தா பாவமா இருக்கு அதான் ..
கவுண்டர் :- சரி சரி வா பாப்போம் ...........

கவுண்டர் :- யாருப்பா நீ உன் பேறு என்ன ..?
செந்தில் :- கழுதை வீதி கவுந்தர்ணே ..
கவுண்டர் :-  ஏன் அத அவரு சொல்ல மாட்டாராக்கும். டேய் அது என்ன கழுதை வீதி கவுந்தர் .
 செந்தில் :- அது வேற ஒன்னும் இல்லைனே . ஊருக்குள்ள பச்சை பசேல்ன்னு எவ்வளவு நல்ல இடம் இருந்தாலும் கழுதை குட்டிசுவத்து கிட்டே தான் போயி நிக்கும். அதே மாதிரி இவரு நல்லா சென்ட் அடிச்சி நடு ஹாலில் உக்கார வைத்தாலும் . கக்கூசை தேடி போயி மோந்து பார்த்து இது ரொம்ப நாருதுன்னு சொல்லுவாரு ..
 கவுண்டர் :- ஒ .அப்படி பட்ட அப்பாடேக்கரா நீ ..? சரி உனக்கு என்ன பிரச்னை .?

கழுதை வீதி கவுந்தர:- (கிட்ட வந்து தலைவரை முகர்ந்து பார்த்து விட்டு ) தலைவரே நீங்க இன்னைக்கு குளிக்கலை .
  கவுண்டர் :- எட்டி இடுப்பு மேல மிதிச்சி புடுவேன் ஓடி போயிடு . நான் உன் குறை என்னன்னு கேட்டா நீ என் கிட்ட குறை கண்டு பிடிகிறியா.
 கழுதை வீதி கவுந்தர:- பதிவர் சந்திப்பில் என்னை யாரும் கவனிக்கல .
கவுண்டர் :- யாருமே கவனிக்காத அளவுக்கு நீ எங்க இருந்த .?
கழுதை வீதி கவுந்தர:- மேடைக்கு கீழ அசந்து தூங்கிகிட்டு இருந்தேன் .

கவுண்டர் :- டேய் கிட்ட வா எங்க ஊது .....( அப்படி ஒன்னும் தண்ணி அடிச்சா மாதிரி தெரியலையே ) சரி வேற என்ன .
கழுதை வீதி கவுந்தர:- நாட்டுகொழின்னு நினைச்சேன் போண்டா கோழியை போட்டுடாங்க.
கவுண்டர் :- நீயா நினைச்சிகிட்டா அதுக்கு அவங்க எப்படி பொறுப்பாக முடியும்.
கழுதை வீதி கவுந்தர:- என் ஆலோசனையை கேட்டிருந்தா இந்த வெள்ளையனை வெள்ளை மாளிகையில் வச்சி விழா எடுத்திருப்பாங்க .
கவுண்டர் :- சரி நீ என்ன ஆலோசனை சொன்னே .
கழுதை வீதி கவுந்தர:- நான்தான் எந்த கூட்டத்துக்கும் போகலையே . அதான் ஒன்னும் சொல்லலை .
கவுண்டர் :-   விளக்கமாத்துல அடிக்கமா உட்டாங்க பாரு . (செந்திலுக்கு சப்பு சப்பு என்று அரை விழுகிறது ) என்னடா இது பஞ்சாயத்து . காலங்காத்தால என்ன பல்லு விளக்க விட்டியா இல்ல கக்கூஸ் போகத்தான் விட்டியா.
டேய் உனக்கு என்ன பிரச்சனைன்னு நல்லா விவரமா சொல்லு. என் பொறுமையை சோதிக்காதே .
கழுதை வீதி கவுந்தர:- இந்த பதிவர் சந்திப்பிலேயும் ஞானபழத்துக்கு கொட்டை  இருக்கா இல்லையா என்று யாரும் சொல்லல.
 கவுண்டர் :- (ஒரு முடிவோடதான் வந்திருக்கான் போல இருக்கு) சரி பஞ்சாயத்து முடிஞ்சுது நான் கிளம்புறேன் .

கழுதை வீதி கவுந்தர:- எனக்கு ஒரு தீர்ப்பு சொல்லிட்டு போங்க .
கவுண்டர் :- தீர்ப்பு தானே(செந்திலை காட்டி ) இந்தா இவன் சொல்லுவான்.இருந்து நிதானமா இவனுக்கு தீர்ப்பு சொல்லிட்டு வா. நான் கிளம்புறேன் . அப்புறன் தம்பி... பையன் ஒரு மாதிரி என்கிட்டே பேசுன மாதிரி ஏடாகூடமா அவன்கிட்ட பேசிடாதே. குப்புற விழுந்து கடிச்சி வச்சிடுவான்.
அநேகமா  நீ காலம் முழுக்கா ஒரு காது இல்லாமல்தான் அலைவேன்னு நினைகிறேன்.    






8 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ஆலோசனை அல்லால்லோ ஆலோசனை...!!!

திண்டுக்கல் தனபாலன் said...

/// ஞானபழத்துக்கு கொட்டை இருக்கா இல்லையா... ///

பழத்திற்கு தானே...?

Manimaran said...


ஹா..ஹா... செம டைமிங்.... சூப்பர் .

தமிழ்சேட்டுபையன் said...

அவர் கூறிய குறைகளை எப்படி நிவர்த்தி செய்வது என்று சிந்திக்க வேண்டும் இல்லை அவருக்கு சரியான பதிலைத் தரவேண்டும். இது காமடி செய்யக் கூடிய விசயமா என்ன.
:(

அஞ்சா சிங்கம் said...

அவர் கூறியது குறையாக இருந்தால் நிச்சியம் பரிசிலிக்கலாம் .. வெறும் அவதூறுக்கு இப்படிதான் பதில் சொல்ல முடியும்....

Unknown said...

நல்ல காமெடியாக இருந்தது :-)

அஞ்சா சிங்கம் said...

திண்டுக்கல் தனபாலன் said...

/// ஞானபழத்துக்கு கொட்டை இருக்கா இல்லையா... ///

பழத்திற்கு தானே...?
///////////////

குசும்பை பாருங்கையா ....

Unknown said...

மாமு சிப்பு..சிப்பா வருது!