Friday, October 11, 2013

யார் அடுத்த கேபிள் சங்கர் ?


கேபிளார் பதிவர் என்ற நாற்காலியை விட்டகன்று இயக்குநர் நாற்காலியில் துண்டைப் போட்டுவிட்டார். அன்னார் விட்டுச் சென்ற நாற்காலி சும்மாத்தானே இருக்கிறது. அங்கே அடுத்ததாக உட்கார தகுதியுள்ள வலைப்பதிவர் யாரென்று ஒரு அலசல். அடப்பாவிகளா ரெண்டு வாரம் கொத்து பொரோட்டா போடல’ன்னா ஃபீல்ட் அவுட்டா என்றெல்லாம் அலறக்கூடாது. இது சும்மா ஜாலிக்காக...!

முதலில் கேபிளாரைப் பற்றி நல்ல வார்த்தைகளாக நான்கைச் சொல்வோம். அதுதானேய்யா ஒலகவழக்கம். பதிவுலகம் நிறைய திறமைசாலிகளை கண்டிருக்கிறது. அவர்கள் ஒட்டுமொத்தத்திலும் கேபிளார் தான் ஆகச்சிறந்த படைப்பாளர் என்று சொன்னால் சாமி கண்ண குத்திடும். கேபிளை விட பல திறமையான வலைப்பதிவர்கள் நம்மிடையே இருந்திருக்கிறார்கள். இருக்கிறார்கள். ஆனாலும் கேபிள் தான் தி மோஸ்ட் பாப்புலர். கேபிளின் இந்த புகழிற்கு இரண்டு முக்கியமான காரணங்களைச் சொல்லலாம். ஒன்று கன்சிஸ்டென்சி. நான்கைந்து வருடங்களாக தொடர்ந்து எழுதிக்கொண்டே இருப்பதெல்லாம் வாயில் சொல்வதற்கு மட்டும் வேண்டுமானால் சுலபமாக இருக்கலாம். அதனை சாதித்துக் காட்டியவர் கேபிள். இரண்டாவது, காண்டாக்ட்ஸ். நேற்று வலைப்பூ தொடங்கிய குரங்கு குப்பனிடம் கூட ஈகோ காட்டாமல் பழகுவார், சார் ஒஸ்தாரா பாட்டுக்கு காஜலை விட சிறப்பாக ஆ(ட்)டிக் காட்டுவார். அதனாலேயே கேபிளுக்கு வாசகர்கள் அதிகம்.

இவ்விரண்டு விஷயங்களைத் தாண்டி இன்னொரு விஷயம் இருக்கிறது. பொதுவாக பதிவுலகில் கேபிளை தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாரோடு ஒப்பிடலாம். இப்போது வேண்டுமானால் நீங்கள் முந்தய பத்தியை சூப்பர் ஸ்டாரை மனதில் வைத்து ஒருமுறை படித்துக்கொள்ளலாம். தமிழ் சினிமாவில் எந்த நடிகர் – நடிகையாக இருந்தாலும் ரஜினியை எனக்கு பிடிக்காது என்று சுலபமாக சொல்லிவிட முடியாது. அதுபோல தான் கேபிளும். இருவரும் வயதானாலும் இன்னமும் ‘யூத்து’ என்று சொல்லிக்கொள்பவர்கள். கேபிளின் சூப்பர்ஸ்டார் பிம்பத்தைப் பற்றி தனிப்பதிவாக கூட எழுதலாம் ஆனால் இதற்கு மேல் எழுதினால் கேபிளின் அடிபொடிகள் நம் வாயில் கத்தியை விட்டு சுற்றுவார்கள் என்பதால் நிறுத்திவிட்டு நேரடியாக பதிவுக்கு செல்கிறேன்.

மணிகண்டனை இந்த பட்டியலில் சேர்த்திருக்கிறோம் என்கிற விஷயம் அவருக்குத் தெரிந்தால் உதைக்க வந்தாலும் வருவார். ஏனெனில் அவர் ஏற்கனவே உயிர்மையில் புத்தகம் வெளியிட்டு, சுஜாதா விருதெல்லாம் வாங்கி, மனுஷ், சாரு போன்ற கெடா மீசைகளுடன் மல்லு கட்டுபவர். ஆனால் ஏனோ தற்போது பதிவுலகில் தீவிரமாக இயங்கி வருவதால் அவரை ஆட்டத்தில் சேர்த்துக் கொள்கிறோம். மணிகண்டன் தன்னுடைய வாசகர்களால் ‘ஜூனியர் மண்ட’ என்று அன்போடு அழைக்கப்படுபவர்.

ப்ளஸ்: சுஜாதா பாணி எழுத்து நடை, ஒரு வரி செய்தியைக் கூட சுவாரஸ்யமான கட்டுரையாக்கி விடும் லக்கிலுக்குத்தனம், ஒன்றரை வருடங்களாக தொடர்ச்சியாக எழுதி வருவது, மேல்மட்ட குழுவுடன் நட்பில் இருப்பது.

மைனஸ்: கீழ்நிலை வாசகர்களிடமிருந்து விலகியிருப்பது, ஒரே மாதிரியாக எழுதிக்கொண்டே இருப்பது, எவன் என்ன சொன்னால் எனக்கென்ன என்கிற ரீதியில் கெத்து காட்டிவிட்டு ரோட்டில் ஆட்டோக்கார் சாவுகிராக்கி என்று திட்டினால் கூட ஒரு புலம்பல் இடுகை போடுவது.

கேபிளைப் போலவே சமகாலத்தில் கொஞ்சம் பிஸியாக இருப்பவர். எனினும் அதற்காகவெல்லாம் அவரை அவ்வளவு எளிதாக புறக்கணித்துவிட முடியாது. பதிவுலகில் கொஞ்சம் சீனியர் என்றாலும் கடந்த இரண்டரை வருடங்களாக தொடர்ந்து எழுதி வருபவர். தமிழ்மணத்தை கிட்டத்தட்ட ஓராண்டு காலம் ஒன் மேன் ஆர்மியாக ஆட்சி செய்தவர். பதிவுலகில் இயங்கிவரும் பல குழுக்களுடன் நண்பராக பழகி வருவதாக சொல்லிக்கொல்பவர்.

ப்ளஸ்: வெரைட்டியாக எழுதுவது, ஒரு விஷயத்தைப் பற்றி எழுதும்போது தன்னுடைய கருத்தை மட்டும் சொல்லாமல் கழுகு பார்வை பார்த்து வாசகர்களை மனதில் கொண்டு எழுதுவது, பதிவு எழுத செலவிடும் உழைப்பு, நிறைய பேரிடம் நட்பு பாராட்டுதல்.

மைனஸ்: தொடர்ச்சியாக எழுதுவதால் குறைந்து வரும் எழுத்துத்தரம், சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் டென்ஷன் ஆவது, நீங்க என்ன பாராட்டுறீங்களா ஓட்டுறீங்களா என்று சோபிக்கண்ணு மாதிரி கேட்பது.

யெஸ், தி ஒன் அண்ட் ஒன்லி மெட்ராஸ் பவனார். சிவகுமாருக்கும் கேபிளுக்கும் நிறைய விஷயங்களில் ஒத்துப்போகும். இருவருமே சினிமா ஸ்பெஷலிஸ்ட்ஸ். கேபிளைப் போலவே காண்டாக்ட்ஸை நிறைத்து வைத்திருக்கும் வித்தகர். கடந்த மூன்று வருடங்களாக நிதானமாகவும் நிலையாகவும் பதிவுலகில் வளர்ந்து வருபவர். பதிவுலகில் கிட்டத்தட்ட எல்லோருமே நல்ல மனுஷன்யா என்று சொல்லுமளவிற்கு பெயர் பெற்றவர். எல்லாவற்றையும் விட முக்கியமானது, இருபெரும் ‘கே’ பதிவர்களின் ஆசி பெற்றவர்.

ப்ளஸ்: சினிமா சார்ந்த பதிவுகள், எந்த டாப்பிக் கொடுத்தாலும் அதைப்பற்றி குறைந்தபட்சம் ஒண்ணேமுக்கால் மணிநேரமாவது தம் கட்டி பேசுவது, இயல்பாக வெளிப்படும் நகைச்சுவையுணர்வு, எல்லோரிடமும் எளிமையாக பழகி நட்பு பாராட்டுவது.

மைனஸ்: திறமையிருந்தும் சினிமா தவிர்த்து பிறதுறை சார்ந்த பதிவெழுத முயற்சி செய்யாதது, ‘பாரம்பரிய’ பதிவர்களிடமிருந்து விலகியிருப்பது, எல்லோரிடமும் நல்ல பெயர் வாங்க நினைப்பதால் சில சமயங்களில் எந்த பக்கம் ஸ்டாண்ட் எடுப்பது என்று புரியாமல் குழம்பி நிற்பது.

ரைட்டு. வாசகர்கள் இம்மூவருள் தங்கள் மனதைக் கவர்ந்தவர் அல்லது அடுத்த கேபிள் என்னும் சொல்லிற்கு யார் தகுதியானவர் என்ற தங்களுடைய கருத்தை பின்னூட்டத்தில் பதிவு செய்யலாம்.

வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்படும் பட்சத்தில் தொடரும்

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

37 comments:

ராஜ் said...

பிரபா, நீங்க எழுதின காரணத்தால உங்க பேரை போடல போல்.
"வா.மணிகண்டன் பதிவு படிக்கிறது ரொம்ப ரொம்ப மொக்கையா இருக்கும், ஜெமோ ப்ளாக் விட மொக்கை. அவருக்கு பதிலா உங்க பேரையே நான் ரெகமென்ட் பண்ணுறேன்.

ஆரூர் மூனா என்னோட செகண்ட் சாய்ஸ்..

N.Mani vannan said...

அடுத்த கேபிளாருக்கு மிக தகுதியானவர் சிவகுமார் .என்ன எழுத்தில் கொஞ்சம் அசைவம் சேர்த்துக்கொள்ளுமாறு வேண்டுகுறேன்.


கோவை ஆவி said...

சிவசிவா..

ஆரூர் அண்ணன் பேரெங்கே?

N.Mani vannan said...

my suggestion

philosophy prabhakar
sathish sangavi

MANO நாஞ்சில் மனோ said...

அடடா ஆரம்பிச்சாச்சா ?

-தோழன் மபா, தமிழன் வீதி said...

நல்ல அலசல். இன்னும் கொஞ்சம் பேர அலசி காயப் போட்டு இருக்கலாம்.... ?!

BABU SIVA said...

ஆரூர் மூனா

திண்டுக்கல் தனபாலன் said...

கச்சேரி களை கட்டட்டும்...!

venkat kumar said...

எமது பார்வையில் அடுத்த கேபிளார் என்பதே சரியல்ல...ஒவ்வொருவருக்கு தனித்தனி ட்ராக் உண்டு...அதில் அவரவர் பாணியில் செல்கின்றனர்...எவருக்கும் மசியாது தனது தனித்துவத்தில் நிற்பதே எவர்க்கும் சிறப்பாகும்...அடிச்சோட்டு...அடிச்சோட்டு!

ஆரூர் மூனா said...

நன்றி ராஜ்.

நன்றி ஆவி

நன்றி பாபு சிவா

இந்த 3வரில் எனது சாய்ஸ் சிவா தான். பதிவுலகின் அடுத்த கேபிள் மட்டுமல்ல, திரையுலகின் அடுத்த கேபிள் கூட. திரைப்படம் எடுக்கவும் வாய்ப்புள்ளது

என்னை பாராட்டுறீங்களா ஓட்டுறீங்களான்னு தெரியலையே, (இது என் மைண்ட் வாய்ஸ் இல்லை)

shortfilmindia.com said...

ஓகே..ரைட்டு.. விட்றா..:)

கே.ஆர்.பி. செந்தில் said...

யோவ்... கேபிள் லீவ்தான் விட்ருக்காரு, ஆனாலும் கெடச்ச கேப்லயும் எழுதிட்டுதானே இருக்காரு!!

அதென்ன அவருக்கு பதில் இன்னோரு ஆள்!!!

அவருதான் பதிவுலகின்

நிரந்தர சூப்பர் ஸ்டார்...

நிரந்தர சூப்பர் ஸ்டார்...

நிரந்தர சூப்பர் ஸ்டார்...

இப்படிக்கு,
அண்ணனின் அடிபொடிகள்
கிரேட்டர் சென்னை தலைமையகம்.

! சிவகுமார் ! said...

தம்பி பிரபாகரா...'பாரம்பரிய' பதிவர்கள் கூட சேர ஆசைதான். ஆனா அடிக்கடி நீ(ங்க) பண்ற ரவுசு தாங்கலியே. பரவச நிலைக்கு வந்தப்ப பிறகு உன்னை வச்சிட்டு சிங்கம் பட்ட கதையெல்லாம் கேட்டுருக்கேன். மொட்டை மாடில தேட விட்டுட்டா. உஷாரய்யா உஷாரு. ஓரஞ்சாரம் உஷாரு.

! சிவகுமார் ! said...

மொதல்ல கியா கே.ஆர்.பிய கியா தனியா கூட்டிட்டு கியா. கவனிக்கணும் கியா.

டுடே கியா அத்த கியா பர்த் டே கியா. சோ நோ சண்ட கியா. ஆ..ஊ..

- கராத்தே கவுண்டர் ரசிகர்கள்.

மோகன் குமார் said...

நன்றி தம்பி.. நீங்கள் சொன்ன குறைகளை குறைத்து கொள்ள முயல்கிறேன்

முன்பு போல் தொடர்ந்து எழுதுவது இனி மிக கடினம்.

மனதில் இருப்பது தான் எழுத்தில் வரும். இப்போது மனது முழுக்க வேலை சார்ந்த விஷயங்களே...சனி, ஞாயிறு உட்பட ! வேறு எதற்கும் நேரமும் சிந்தனையும் ஒதுக்க முடியாத நிலை

ப்ளாகின் மிக பெரும் வசதி வேண்டிய போது மட்டும் எழுதி கொள்ளலாம் என்பதே. அப்படி எப்போதேனும் ஒரு முறை மட்டும் எழுதும் எண்ணம்

கேபிள் மற்றும் சிவா பற்றி எழுதியதை முழுக்க ஆமோதிக்கிறேன்

! சிவகுமார் ! said...

வா. மணிகண்டன்...படிக்கணும். தேங்க் யூ.

ஆரூர் மூனா said...

என்ன கேஆர்பி அத்தைக்கு பிறந்தநாளா

Raju N said...

ஏக்கி சூரஜ் ஹே தின் கேலியே..
ஏக்கி சந்தர் ஹே ராத் கேலியே...
ஏக்கி பாட்ஷா ஹே சுரேஷ்கிருஷ்ணா கேலியே...
ஏக்கி கேபிள் ஹே பதிவுலகம் கேலியே....


இவன்
கேபிள்சங்கர் தலைமல் கொலைவெறிப்படை

Philosophy Prabhakaran said...

// my suggestion

philosophy prabhakar
sathish sangavi //

யோவ் மணி, சங்கவி அண்ணன் மேல உனகென்னய்யா காண்டு ?

Philosophy Prabhakaran said...

விக்கி, நீங்கள் சொல்வது சரிதான்... அச்சு அசலாக கேபிளை பிரதி எடுத்தாற்போல யாரும் எழுதுவதில்லை... அடுத்த கேபிள் சங்கர் என்பது அந்த அளவிற்கு புகழ் பெறப் போகிறவர் என்று எடுத்துக் கொள்ளலாம்...

Philosophy Prabhakaran said...

யோவ் சிவா நான் மொட்டை மாடியில மட்டை ஆகுறதுக்கும் நீர் பாரம்பரிய பதிவருங்க கூட ராசி ஆகுறதுக்கும் என்னய்யா சம்பந்தம் ?

Philosophy Prabhakaran said...

மோகன்ஜீ, சும்மா அப்பப்ப விளையாட்டா உங்களை சீண்டிப் பார்த்தாலும் நீங்க இல்லாம பதிவுலகம் டல்லடிக்குது...

வாராவாரம் வானவில்லை மட்டுமாவது எழுதவும்...

! சிவகுமார் ! said...

அட அப்ப அந்த பாரம்பரிய பதிவர் லிஸ்ட்டாவது குடேம்பா.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

பிரபல கில்மா பதிவரை சேர்க்க தவறியதை வன்மையாக கண்டிக்கிறோம்.
இப்படிக்கு
கில்மா பேரவை
வடமேற்கு ஆசிய கிளை

Jeevan Subbu said...

கேபிள் ஜி யோட விமர்சனத்தைகாட்டிலும் பத்தி பதிவுகள் ரெம்ப பிடிக்கும் . குட்டி குட்டியா சொல்ல வந்த விசயத்த நறுக் சுருக்குன்னு சுவராஸ்யத்தோட சொல்றது தான் அவரடோ ப்ளஸ் னு நினைக்குறேன் .


வீடு திரும்பல் : பெரும்பாலும் தொலைக்காட்சி நிகழ்வுகளின் தொகுப்பாக இருப்பதாக தோன்றுவது ஒருவேளை அந்த பதிவுகளை மட்டுமே நான் விரும்பி படிப்பதால் இருக்கலாம் .

சிவா-ஜி., மென் முறுவலோடு படிக்கக் கூடிய எழுத்து . But திரை விமர்சனம் , நாடக விமர்சனம் அத்தோட நிறுத்திக்கொள்வது ஏனோ ...?பரவலான மற்ற விசயங்களையும் எழுதலாம் .


வா.ம - சுஜாதா எழுத்து நடை ? எனக்கு அப்டி தெரியலை ....!சுவாரஸ்யமா எழுதுபவர் மறுப்பதற்கில்லை ...பெரும்பாலும் கட்டுரை போன்ற பதிவுகள் .

நான் வாசிச்ச வரையில பி.பி & சமுத்ரா (வார்த்தைகளில் இருந்து மவுனத்திற்கு )... ரெண்டு பேரோட எழுத்துகளிலும் சுஜாதா டச் இருப்பது போல உணர்வு . சமுத்ரா வோட எழுத்துகள் ஆரம்ப கால சுஜாதவைபோல ரெம்ப இன்டெலேக்ச்சுவலா இருக்கும். பட் ரெம்பவே நீஈஈஈஈண்ட பதிவுகளா இருக்கும் .


விஷயம் எதுவானாலும் பி.பி. எழுத்துல ஒரு ஈர்ப்பும் ,கிளு கிளுப்பும் , இருக்கும் ... பி.பி. யின் சில பத்தி பதிவுகள் ரெம்ப சுவராஸ்யமா இருந்துச்சு .. பட் ஏனோ தொடரவில்லை ...

ஆக்சுவலி , கேபிள்ஜியோட பதிவுகளில் பெரும்பாலும் எழுத்தாளத்தனம் துருத்திக்கொண்டு இருக்காது . ஒரு சாமான்யனின் பார்வையில் ரெம்பவே ஜனரஞ்சகமான எழுதுவது தான் அவோரோட சிறப்பு ன்னு நினைக்குறேன் ...!

Jeevan Subbu said...

//பதிவுலகில் இயங்கிவரும் பல குழுக்களுடன் நண்பராக பழகி வருவதாக "சொல்லிக்கொல்பவர்".//

உள்குத்து ஏதுமில்லையே ...?

வீடு சுரேஸ்குமார் said...

அடுத்த கேபிள் கோவை நேரம் ஜீவாதான்...பல ஹோட்டல்களை வாழவச்சுக்கிட்டு இருககாரு....! இது கள்ளாட்டம் அழிச்சுட்டு மறுபடியும் போடு...முதல்ல இருந்து..!

கேரளாக்காரன் said...

முன்னவர் ஜாக்கி சேகர் வகையறா புலம்பல் கேசு

பின்னவர் நட்டனடுநிலமைக்காக போராடும் சமத்துவ போராளி


நடுவால இருப்பவரும் மிதவாதி

கேரளாக்காரன் said...

//அடுத்த கேபிள் கோவை நேரம் ஜீவாதான்...பல ஹோட்டல்களை வாழவச்சுக்கிட்டு இருககாரு.//


Agreed but only on Saappattukkadai Post

சதீஷ் செல்லதுரை said...

காமெடி கும்மியின் ஒரே சாய்ஸாக நாங்கள் கண்ட முத்துவாக அடுத்த பதிவுலகின் பவர் ஸ்டாராக சூப்பர் ஸ்டாராக திரு கவியாழி கண்ணதாசன் மட்டுமே இருக்க முடியும் என்று அறிவித்து கொல்கிறோம் .....

இது பற்றிய சர்ச்சைகளையும் பதிவுகளையும் இத்தோடு முடித்துக்கொள்ளும்படி பிலாசபி பிராபகரனுக்கும் ஏனைய பதிவர்களுக்கும் சங்கத்தின் சார்பாக எச்சரிக்கை விடப்படுகிறது...ஆமென்.

RAJATRICKS - RAJA said...

சிதம்பரத்தின் சிங்கம்
கடலூர் மாவட்டத்தின் கலங்கரை விளக்கு
தமிழகத்தின் தன்னிகரற்ற தலைவன் எங்கள்
"நக்ஸை" இந்த போட்டியில் சேர்க்காததுக்கு கண்டனங்கள்.

RAJATRICKS - RAJA said...

என் ஓட்டு சிவாவுக்கே. . . .

கவிப்ரியன் ஆர்க்காடு said...

என் ஓட்டு வா. மணிகண்டனுக்கே!

கவிப்ரியன் ஆர்க்காடு said...

என் ஓட்டு வா. மணிகண்டனுக்கே!

Anonymous said...

கவிப்ரியன் ஆர்க்காடு இரண்டு தடவை ஓட்டு போட்டு கள்ளவோட்டு இணைய அரசியலுக்கு அத்திவாரம் போடுகின்றார்.

அது சரி மதவெறி வாஞ்சூர் இந்த லிஸ்ட் இல் இல்லையா ??

இரவு வானம் said...

மூன்று பேரில் சிவா என் சாய்ஸ்

Guna Sekaran said...

பன்னிகுட்டி ராம்சாமி ...பாவம்யா!!!