Saturday, December 13, 2014

லிங்கா - நம்பலாமா ? நம்பப்படாதா ?

BEWARE OF NUDITY CONTENT...!

“யப்பா... லிங்கா படம் நல்லா இருக்கா இல்லையா ? பாக்கலாமா ? வேணாமா ? நம்பலாமா ? நம்பப்படாதா ? இது எனக்கு தெரிஞ்சாகணும்...”

“இதுக்கு ஏன்பா இத்தனை தடவை திரும்புற. இதுக்கு ரஜினி ஃபேன்சே தேவலை போலிருக்கே...”

“முருகேஷா... லிங்கா மொக்கை’ங்குறத சில அறிகுறிகள வச்சி கண்டுபிடிச்சிடலாம்...”

“எப்படி...?”

“தூ....ரத்துல இருக்குற நாட்டுலருந்து FDFS பார்த்து விமர்சனம் போடுறவங்க, வழவழ கொழகொழ’ன்னு எழுதி கடைசியா ரஜினிக்காக பார்க்கலாம்’ன்னு முடிச்சிருப்பாங்க.”

“யப்பா... நெஜமாலுமே இதே மாதிரி அங்க எழுதியிருக்காங்கப்பா...”

மணிமாறன் – ரஜினிக்காகவும் அந்த பிளாஷ்பேக்குக்காகவும் ஒரு தடவை பார்க்கலாம். (வேறென்ன... அப்படித்தான் முடிக்கணும்).

Filmibeat ஷங்கர் – ரஜினி படத்தைப் பொறுத்தவரை, அவரது ரசிகனுக்கு எதுவுமே குறையில்லை. அவர் ‘வந்தா மட்டும் போதும்தான்’. ஆனால் மற்றவர்களுக்கு...?

“நான் கேட்டேனா...?”

“இல்ல”

“அப்புறம், விமர்சனம் எழுதச் சொன்னா ரஜினி ரஜினி ரஜினி ரஜினி... ரஜினி ரஜினி ரஜினி ரஜினி’ன்னு இம்போசிஷன் எழுதியிருப்பாங்க...”

“யப்பா... இந்த மாதிரியும் அங்க எழுதியிருக்காங்கப்பா...”

ஆரூர் மூனா – லிங்காவைப் பற்றி வேறென்ன சொல்ல. ரஜினி ரஜினி ரஜினி மட்டும்தான் படமே.

செங்கோவி – பாஸிடிவ் பாயிண்ட்ஸ்: சூப்பர் ஸ்டார், சூப்பர் ஸ்டார், சூப்பர் ஸ்டார்

“நான் கேட்டேனா...?”

“இல்ல”

“கதே மட்டும் கேக்கணும்... நோ க்ராஸ் கொஸ்டின்ஸ்... கேட்டா ? என்னதிது...?”

“லிங்கம்”

“பிச்சு எறிஞ்சிடுவேன்...”

“அவ்வ்வ்வ்வ்...”

“அப்புறம், ப்ர்ர்ர்ர்ர்...”

“என்னாது...?”

“ப்ர்ர்ர்ர்...”

“என்னா...து...?”

“வயித்தால போற சத்தம்...”

“கே.எஸ்.ரவிகுமாருக்கு வயித்தால போயிடுச்சு. அதனால தான் படம் சரியா எடுக்கல. ஏ.ஆர்.ரகுமான் பேக்குல கட்டி வந்ததால நின்னுக்கிட்டே மொக்கையா மியூசிக் போட்டிருக்காரு’ன்னெல்லாம் எழுதுவாங்க...”

“அய்யோ... வயித்தால போற சத்தமும் கேக்குதுப்பா...”

ArulSelvan - K.S. Ravikumar should be banned from taking tamil movies. After Barasuram, Linga is the worst BGM (even some songs) scored by Rehman.

AaVee Kovai - Lingaaaaaawww! யாருப்பா படத்தோட எடிட்டர் ?

“நான் கேட்டேனா...?”

“இல்ல”

“அப்படியே கொஞ்சம் கொஞ்சமா ஒன்னு ரெண்டு நாள்ல, நெகடிவ் ரிவ்யூஸா கெளம்பும்...”

“யப்பா... கெளம்பிருச்சுப்பா கெளம்பிருச்சுப்பா...”

“எங்க...?”

“அங்க”

AndichamyGA – பரமா... சாவு பயத்தை காமிச்சுட்டாய்ங்கடா... மூணு மணிநேரம் மூச்சுத் திணற திணற அடிச்சாய்ங்கடா...!!

SathishTamilselvan - Comparatively Baaba was better.. If this had been made without Rajini, may be by Vijay, it'd have been laughed at..

“நீ ஏன் விமர்சனத்தல்லாம் படிச்சிட்டு சிரிக்கிற...?”

“நான் சிரிக்கலைய்யா... ஊரே கைகொட்டி சிரிச்சிட்டிருக்குய்யா...”

5 comments:

ஆரூர் மூனா said...

பிச்சி பிச்சி.

காரிகன் said...

அதிரடி. சரவெடி.

கே.முருகபூபதி இலக்கியவட்டம் said...

எளிமையான விமர்சனம் அருமை

'பரிவை' சே.குமார் said...

ஹா... ஹா... சூப்பர் விமர்சனம்...
கலக்கிட்டீங்க...

வருண் said...

இந்தப்படம் சிவாஜி போலவோ எந்திரன் போலவோ இல்லை. அந்த ரஜினி எல்லாம் ஷன்கரால் உருவாக்கப்பட்ட கொஞ்சம் "போலி ரஜினி". இதில் பார்க்கும் ரஜினி வேற! இந்த ரஜினியத்தான் ரஜினி ரசிகர்கள் ரொம்ப நாளா மிஸ் பண்ணினாங்க என்பதே உண்மை.

ஆனால் இதெல்லாம் கவுண்டமணி ஃபேண்ஸ், செந்தில் ஃபேண்ஸ்க் கெல்லாம் புரியாது. நீங்க ஒரு ஒரிஜினல் ரஜினி விசிறியாக இருக்கணும். நம்ம தோத்தவண்டா ஆரூர் மூனா போல! You just have to be a "Pure Rajini fan" to understand what they mean by "it is all Rajini or super star"!

Don't try to understand what they mean, you can not because you DO NOT have that particular gene in your chromosome. Only rajini fans have that. :)