"ஹல்லோ..சென்னைல (பிரபல/சீனியர்) பதிவர் சந்திப்பு மட்டுமே நடக்குற மாதிரி ஒரு பீலிங் இருக்கே. எப்பதான் 'சென்னை யூத் ப்ளாக்கர்சுக்குன்னு ஸ்பெஷலா ஒரு மீட் ஏற்பாடு பண்ணப்போறீங்க?"
இப்படி ஏகப்பட்ட போன் கால், எஸ்.எம்.எஸ்.ன்னு பல்முனை தாக்குதல் நடத்தும் யூத் ப்ளாக்கர்ஸ் ஆசையை நிறைவேற்ற வரும் செப்டம்பர் 4 - ஆம் தேதி சண்டே சென்னையில் பிரம்மாண்ட(!) யூத் ப்ளாக்கர்ஸ் மீட் நடத்த ப்ளான் பண்ணி இருக்கோம். சென்னையின் ஆசியாவின் பதிவுலக யூத் பிரத(ம)ர் கேபிள் ஷங்கரும், சென்னை வலைப்பதிவர் குழுமத்தின் UN-OPPOSED தலைவர் கே. ஆர்.பி. செந்திலும் பட்டாக்கத்தி முனையில் எங்கள் இளைஞர் குழுவை மிரட்டி 'அசல் யூத் நாங்க இல்லாம எப்படி இந்த மீட்டிங்கை நடத்தறீங்கன்னு பாக்குறோம்'என்று இரட்டைக்குழல் துப்பாக்கியாக கர்ஜித்ததால் வேறுவழியின்றி அவர்களை சிறப்புரை ஆற்ற அழைத்திருக்கிறோம்.
ப்ரோக்ராம் ஹைலைட்ஸ்:
* புதிதாக ப்ளாக் எழுத நினைப்பவர்களுக்கு அதிரடி பயிற்சி அளிக்கப்படும்.
*குறுக்கே புகுந்து எசகுபிசகாக கேள்வி கேட்பவர்களை கண்காணித்து அவர்கள் பதிவிற்கு ஓட்டு போடாமல் இருப்பது, அப்படியே போட்டாலும் மைனஸ் ஓட்டு மட்டுமே போடுவது என தீர்மானம் நிறைவேற்றப்படும்.
* இது செம யூத் பதிவர் சந்திப்பு என்பதால் கோடுபோட்ட சட்டை, இன் பண்ணுதல், கருப்பு ஷூ போன்ற முன்னோர்களின் உடுப்புடன் வருபவர்கள் குண்டுக்கட்டாக/ஒல்லிக்கட்டாக தூக்கப்பட்டு வாசலில் நிறுத்தப்படுவர். டி ஷர்ட், (முக்கா) ஜீன்ஸ் என ரகளையாக வரும்படி கேட்டுக்கொள்கிறோம்.
* உணர்ச்சிவசப்பட்டு மைக்கை கடித்து துப்புதல், பிடிக்காத பதிவர்களை கண்டதும் ஓங்கி குரல் எழுப்புதல்/தூக்கிப்போட்டு மிதித்தல், 'நல்ல விஷயமே எழுத மாட்டீங்களா?' என்று நெற்றிக்கண்ணை திறத்தல் என எதை வேண்டுமானாலும் செய்யுங்கள். ஆனால் உடைந்த பொருட்கள், கிழிந்த சட்டைகள் என அனைத்திற்கும் அபராதம் செலுத்தாமல் எஸ்கேப் ஆகலாம் என்று மட்டும் மனப்பால் குடிக்காதீர்கள். இதை சமாளிப்பதற்கென்றே பயங்கர பல்க் ஆன ஜிம் பாய்களை ஆர்டர் செய்து உள்ளோம்.
* பெண் பதிவர்களுக்கு சிறப்பு சலுகைகள் அளிக்கப்படும்.
* "அன்பார்ந்த பதிவுலக நண்பர்களே" என்று பேசுவது, கையை கட்டியவாறு பவ்யமாக உட்காருவது போன்ற பார்மாலிட்டிகளை பின்பற்ற 144 தடை உத்தரவு போடப்படும்.
* ப்ளாக்கர்ஸ் மீட்டிங்கில் நடந்ததை பற்றி பல அத்தியாயங்கள் பதிவு எழுத நினைப்பவர்கள் (ஒருநிமிடம்.... நாஞ்சில் மனோ, சிபி திடீரென மனதில் ப்ளாஷ் ஆகி முறைக்கிறார்கள். அப்பாடா..போய்ட்டாங்க) குறிப்பெடுக்க தாள், மை இலவசமாக தரப்படாது என தாழ்மையுடன் தெரிவிக்கிறோம்.
* இலக்கியம், லோக்பால், வரலாற்று சம்பவங்கள் போன்ற திகில் கிளப்பும் விசயங்களை பேசினால் மைக் ஒயரை கட் செய்ய கேபிள் அண்ணன் கிஞ்சித்தும் தயங்கமாட்டார் என எச்சரிக்கை செய்யப்படுகிறது.
* பிரபல/சீனியர் பதிவரை முதல் முறையாக மாநாட்டில் பார்க்கும் யூத்/புதிய ப்ளாக்கர்கள் "நீங்க ப்ளாக் எழுதறீங்களா?" என்று எக்குத்தப்பாக கேள்வி கேட்டுவிட்டு செம அடி வாங்கினால் அவரை காப்பாற்ற ஒருவரும் வரமாட்டோம் என்பதை திட்டவட்டமாக அறிவிக்கிறோம்.
............................................................................
மாநாடு நடைபெறும் இடம்:
டிஸ்கவரி புக் பேலஸ்,
(முதல் மாடி)
6, முனுசாமி சாலை,
கே.கே.நகர்
சென்னை.
(பாண்டிச்சேரி கெஸ்ட் அவுஸ் அருகில்)
நாள்: செப்டம்பர் 4,2011.
நேரம்: மாலை 5 மணி
..........................................................
மாநாட்டிற்கு வலு சேர்க்க/ஆட்களை கோர்க்க தங்கள் கருத்துக்களை வரவேற்கிறோம்:
மேலும் விவரங்களுக்கு:
சிறப்பு பேச்சாளர்: 98403 32666
கௌரவ தலைவர்(புதிய பதிவர்): 80988 58248
வடசென்னை செமயூத் பதிவர்: 80158 99828
தென் சென்னை அல்டிமேட் பதிவர்: 98416 11301
சென்னை புறநகர் முன்னணி பதிவர்: 94432 75467
................................................................
ஆ...முக்கியமான விஷயம். மிஞ்சிப்போனா ஒரு கப் காபி அல்லது மோர் மட்டுமே வழங்கப்படும். ஒன்ஸ்மோர் கேட்டு கொந்தளித்து உண்ணாவிரதம் இருப்பவர்களுக்கு பேராதரவு அளிக்கப்படும்.
http://youtu.be/MT_mkzYdaCo
..............................................................
"செம காமடியான பதிவு. சிரிப்பு சிரிப்பா வந்திச்சி" என்று முதலில் போன் போட்டு சொன்ன நபருக்கு ஒரு செய்தி:
'தெய்வமே. இது காமடி பதிவல்ல. பயங்கர சீரியஸ் பதிவு. ட்ராபிக் ஜாம் செய்து சென்னையை குலுக்காமல் அமைதியாக மாநாட்டிற்கு வாங்க பிரதர்ஸ்/ சிஸ்டர்ஸ்'
..................................................................................
FLASH NEWS:
மாநாட்டிற்கு வரும் அனைவரின் போக்குவரத்து உள்ளிட்ட சகல செலவுகளுக்கான பணத்தை தானே தருகிறேன் என்று சென்னையின் பெரும் பணக்கார பதிவர் சிரிப்பு போலீஸ் ரமேஷ் உறுதி அளித்திருப்பதை ஒருமனதுடன் பாராட்ட கடமைப்பட்டு இருக்கிறோம்.
.................................................................................
..............
Posted by:

! சிவகுமார் !
.............
.............
100 comments:
நானும் வருவேன். நானும் யூத் தான்
யோவ் என்னைக்குன்னு சொன்னீங்களே. எப்போன்னு சொன்னீங்களா? காலைல இருந்தா அங்க குத்த வச்சு உக்கார முடியும்?
சும்மாவே ஆடுவாங்க..இதில கால்ல சலங்கை வேறயா..?!நடத்துங்க..நடத்துங்க.. :)
ஆடுங்கடா என்னைச்சுத்தி நான் அய்யனாரு வெட்டுக்கத்தி....
யூத் மட்டும்தான் கலந்துக்கனுமா..
இல்லை எங்கள மாதிரி சின்ன பசங்களும் கலந்துக்கலாமா...
வருபவர்களுக்கு பயணப்படி மற்றும் பள்குட்டி செலவு எவ்வளவு செய்ய போரீங்க...
அப்புறம் எனக்கு கட்டவுட்டெல்லாம் வேண்டாம்..
ஏன்னா எனக்கு பப்ளிகுட்டி பிடிக்காது..
பாதுகாப்புக்கு போலீஸ்கிட்டே பர்மிஷன் வாங்கியாச்சா... (சிரிப்பு போலீஸ்கிட்ட இல்லீங்க...)
ஏன்னா பாதுகாப்பு மிக முக்கியம் அமைச்சரே...
//
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
நானும் வருவேன். நானும் யூத் தான்//
வாங்க ரமேஷ். மேல பிளாஷ் நியூஸ் சேத்து இருக்கோம். படிச்சி பாருங்க.
//
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
நானும் வருவேன். நானும் யூத் தான்//
வாங்க ரமேஷ். மேல பிளாஷ் நியூஸ் சேத்து இருக்கோம். படிச்சி பாருங்க.
//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
யோவ் என்னைக்குன்னு சொன்னீங்களே. எப்போன்னு சொன்னீங்களா? காலைல இருந்தா அங்க குத்த வச்சு உக்கார முடியும்?//
தோராயமா அஞ்சி மணிக்கு தொடங்கும்.
// சேலம் தேவா said...
சும்மாவே ஆடுவாங்க..இதில கால்ல சலங்கை வேறயா..?!நடத்துங்க..நடத்துங்க.. //
முடிஞ்சா நீங்களும் வாங்க தல.
என்னுடைய கேள்விகளுக்கு பதில் சொல்லாததால் நான் வெளிநடப்பு செய்கிறேன்...
ஆ...முக்கியமான விஷயம். மிஞ்சிப்போனா ஒரு கப் காபி அல்லது மோர் மட்டுமே வழங்கப்படும். //
அப்ப வரமுடியாது
//
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
நானும் வருவேன். நானும் யூத் தான்
//
அது 30 வருடத்திற்கு முன்
//# கவிதை வீதி # சௌந்தர்
யூத் மட்டும்தான் கலந்துக்கனுமா..
இல்லை எங்கள மாதிரி சின்ன பசங்களும் கலந்துக்கலாமா..//
என்ன கொடும சரவணன்..
//கவிதை வீதி # சௌந்தர்said...
வருபவர்களுக்கு பயணப்படி மற்றும் பள்குட்டி செலவு எவ்வளவு செய்ய போரீங்க...//
பயணப்படி உள்ளிட்ட பணம் சார்ந்த சந்தேகங்களுக்கு சிரிப்பு போலீசை தொடர்பு கொள்ளவும்.
ஐயா ரமேசு நீ ரெம்ப நல்லவன்யா நானும் இப்ப யூத்தா மாறீட்டன்.. எனக்கும் பயனப்படிய தந்திடய்யா என்ன பிரான்ஸ்சில இருந்து வாறதெண்டா ஒரு 1000யூரோதான்யா முடியும்.. இதெல்லாம் உனக்கு பொக்கெற் மணிதானேய்யா...
//# கவிதை வீதி # சௌந்தர்said...
அப்புறம் எனக்கு கட்டவுட்டெல்லாம் வேண்டாம்..
ஏன்னா எனக்கு பப்ளிகுட்டி பிடிக்காது.//
என்னது Bubbly குட்டியா?
//
# கவிதை வீதி # சௌந்தர்said...
பாதுகாப்புக்கு போலீஸ்கிட்டே பர்மிஷன் வாங்கியாச்சா... (சிரிப்பு போலீஸ்கிட்ட இல்லீங்க...)
ஏன்னா பாதுகாப்பு மிக முக்கியம் அமைச்சரே.//
எதுக்கு போலீஸ் பாதுகாப்பு? சட்டை கிழிய சண்டை நடக்க வேண்டும் என்பதுதான் மாநாட்டின் முக்கிய நோக்கம். அதை கெடுத்துருவீங்க போல இருக்கே.
This comment has been removed by the author.
//
# கவிதை வீதி # சௌந்தர்said...
என்னுடைய கேள்விகளுக்கு பதில் சொல்லாததால் நான் வெளிநடப்பு செய்கிறேன்..//
நாங்கள் மன்மோகனின் சிறப்பு சிஷ்யர்கள். உடனே எங்களிடம் பதிலை எதிர்பார்த்தால் என்ன நியாயம்? வாயில் இருக்கும் கொழுக்கட்டையை முழுங்கிவிட்டுதான் பதில் அளிப்போம்.
@ ! சிவகுமார் !
யோவ் சிவா... பின்னூட்டத்துல ரெண்டு ரெண்டு முறை பதில் சொல்றியே... சரக்கு ஓவராயிடுச்சா...
@ ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)
வரவேற்கிறோம் ரமேஷ்... உங்கள் தலைமையில் உங்கள் நண்பர்களையும் அழைத்து வந்து அவர்களை நம்முடைய நண்பர்களாக்க வேண்டுகிறோம்...
@ சேலம் தேவா
// சும்மாவே ஆடுவாங்க..இதில கால்ல சலங்கை வேறயா..?!நடத்துங்க..நடத்துங்க.. :) //
அண்ணே... ஒரு சுமைலியை போட்டுட்டு ஊமைக்குத்து குத்துற மாதிரி இருக்கே... என்ன பிரச்சனை...?
சந்திரன்லையோ சூரியன்லையோ வச்சிருந்தா வந்திருப்போம் ...
அருமை...
@ # கவிதை வீதி # சௌந்தர்
// யூத் மட்டும்தான் கலந்துக்கனுமா..
இல்லை எங்கள மாதிரி சின்ன பசங்களும் கலந்துக்கலாமா... //
பெரியவரே... மேல அடிகிடி பட்டுற போகுது... அப்பிடி ஓரமா போய் உட்காருங்க...
ஆடுவோமே பல்லு தேடுவோமே...ஆனந்த அனுபவம் காணவே... ஹிஹி...மாப்ள ஒரு திருமணத்துக்கு அவசரமா சென்னைக்கு வரதா பிளானு..இன்னும் முடிவாகல...இதுல உம்ம போன் நம்பர குடும்யா...வந்துட்டு கால் பண்றேன்...!
//ரெவெரி said...
சந்திரன்லையோ சூரியன்லையோ வச்சிருந்தா வந்திருப்போம் ...
அருமை..//
அந்த அளவுக்கு செலவு செய்ய வசதி இருக்குற ஒரே ஆளு........ 'அஞ்சாசிங்கம்' செல்வின் மட்டும் தான் நண்பா!
//விக்கியுலகம் said...
ஆடுவோமே பல்லு தேடுவோமே...ஆனந்த அனுபவம் காணவே... ஹிஹி...மாப்ள ஒரு திருமணத்துக்கு அவசரமா சென்னைக்கு வரதா பிளானு..இன்னும் முடிவாகல...இதுல உம்ம போன் நம்பர குடும்யா...வந்துட்டு கால் பண்றேன்//
மாம்ஸ்..மேல இருக்கறதுல மூணாவது நம்பர்..நோட் பண்ணிக்கங்க!
//காட்டான் said...
ஐயா ரமேசு நீ ரெம்ப நல்லவன்யா நானும் இப்ப யூத்தா மாறீட்டன்.. எனக்கும் பயனப்படிய தந்திடய்யா என்ன பிரான்ஸ்சில இருந்து வாறதெண்டா ஒரு 1000யூரோதான்யா முடியும்.. இதெல்லாம் உனக்கு பொக்கெற் மணிதானேய்யா...//
BREAKING NEWS: காட்டான் அவர்களின் கோரிக்கைக்கு நிதி ஒதுக்கப்படும் என ரமேஷ் ரகசிய தகவல்!
//"என் ராஜபாட்டை"- ராஜா said...
ஆ...முக்கியமான விஷயம். மிஞ்சிப்போனா ஒரு கப் காபி அல்லது மோர் மட்டுமே வழங்கப்படும். //
அப்ப வரமுடியாது//
நீங்க இல்லாம எப்படி தல..உங்க கால் சுண்டு விரலை இழுத்து பிடிச்சி கேக்கறோம். தயவு செஞ்சி வாங்க!!
"என் ராஜபாட்டை"- ராஜாsaid...
//
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
நானும் வருவேன். நானும் யூத் தா
//
அது 30 வருடத்திற்கு முன்//
பதில் சொல்லாமல் போலீஸ் தப்பி ஓட்டம்?
ஹா ஹா அருமையான பின்னூட்டங்கள்
பதிவர்கள் மாநாட்டிற்க்கு வருகை தரும் அனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
i will come....
அப்படியா நண்பரே ! மிக்க நன்றி கண்டிப்பா வருகின்றேன் , யாரை கான்டாக்ட் பண்ணனும் சொல்லுங்க மொபைல் நம்பர் குடுங்க நிறைய மொபைல் நம்பர் இருக்கு யாருடையதுன்னு கூட குறிப்பிடல டைம் சொல்லுங்க
thamil manam 5
//M.R said...
ஹா ஹா அருமையான பின்னூட்டங்கள்
பதிவர்கள் மாநாட்டிற்க்கு வருகை தரும் அனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்.//
உங்கள் போட்டோவ பாத்தா மொத்த க்ரூப்லயே செம மினி யூத் பதிவர் நீங்கதான் போல!!
// குணசேகரன்... said...
i will come.//
சாப்ட்வேர் ஆலோசனைகளை அள்ளி வழங்குவதோடு மட்டுமின்றி இலவச லாப்டாப்களை தரவும் முடிவு செய்திருக்கும் குணா வாழ்க!!
bala said...
அப்படியா நண்பரே ! மிக்க நன்றி கண்டிப்பா வருகின்றேன் , யாரை கான்டாக்ட் பண்ணனும் சொல்லுங்க மொபைல் நம்பர் குடுங்க நிறைய மொபைல் நம்பர் இருக்கு யாருடையதுன்னு கூட குறிப்பிடல டைம் சொல்லுங்க //
யாருக்கு வேண்டுமானாலும் கால் செய்யுங்க நண்பா. எல்லாரும் நம்ம நண்பர்கள்தான். குறிப்பாக 98416 11301 எனும் எண்ணுக்கு போன் செய்தால் முக்கியமான வி. ஐ.பி. பேசுவார்!! அவர்கிட்ட பேசுங்க!!
//M.R said...
thamil manam 5//
Please put 2 more கள்ள வோட்டு!!
பதிவர்கள் மாநாட்டிற்க்கு வருகை தரும் அனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
மன்னிச்சிடுங்க பிரபா, என் பிளாகுக்கே வந்து அழைப்பு விடுத்தீங்க, நா வருவதற்கு வாய்ப்பே கிடையாது,அடுத்த முறை பார்க்கலாம். இந்த பதிவை எழுதிய நண்பருக்கு பாராட்டுகள் மற்றும் வாழ்த்துக்கள்...
யூத் என்பது வயது சம்பந்தப்பட்டதா, மனம் சம்பந்தப்பட்டதா?வயது என்றால் எனக்கு அனுமதியில்லை!
எப்படியானாலும் ஏற்கனவே திட்டமிட்ட சில வேலைகளினால்,வர இயலுமா எனச் சந்தேகம்!
சந்திப்பு சிறப்பாக நடக்க வாழ்த்துகள்!
ஐத்ருஸ்..பெண் பதிவர்கள் உங்களை ராக்கிங் செய்ய மாட்டார்கள். பதுங்கு குழியில் இருந்து தைரியமாக வெளியே வரலாம்!!
மனது சம்மந்தப்பட்டதுதான் சார். வருவது சந்தேகம் என்று சொல்லி இருப்பதால்...Benefit of Doubt (தலை)விதியின் படி உங்கள் வருகையை உறுதி செய்கிறோம்!! தப்ப முடியாது!!
/இராஜராஜேஸ்வரி said...
பதிவர்கள் மாநாட்டிற்க்கு வருகை தரும் அனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்.//
பதிவர்களுக்கு இலவச சைக்கிள் தர முன்வந்திருக்கும் இராஜராஜேஸ்வரிக்கு வரிக்கு வரி நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம்!!
பிரபல/சீனியர் பதிவரை முதல் முறையாக மாநாட்டில் பார்க்கும் யூத்/புதிய ப்ளாக்கர்கள் "நீங்க ப்ளாக் எழுதறீங்களா?" என்று எக்குத்தப்பாக கேள்வி கேட்டுவிட்டு செம அடி வாங்கினால் அவரை காப்பாற்ற ஒருவரும் வரமாட்டோம் என்பதை திட்டவட்டமாக அறிவிக்கிறோம்.//
வரலாம்னுதான் இருக்கேன்.இப்ப சொன்னது தான் பயமா இருக்கு!
சென்னை யூத் பதிவர் சந்திப்பு வெற்றி பெற நல்வாழ்த்துகள் - பாவம் பெர்சுங்க எல்லாம் - நட்புடன் சீனா
அட மொக்க போட இங்கயே ஆரம்பிச்சா... மொத்த மொக்கயும் அங்க போட்டுகளாம்... நானும் ரவுடி நானும் ரவுடி சாரி நானும் யூத் பதிவர் நானும் யூத் பதிவர்... வருவது நிச்சயம்... வரவேற்க அஞ்சு ரிச்சு கேர்ள்ச வாசல நிருத்துங்கோ.. because it youth function...
//கோகுல் said...
வரலாம்னுதான் இருக்கேன்.இப்ப சொன்னது தான் பயமா இருக்கு//
உங்க கண்ணுல தெரியிற அதே பீதி எங்களுக்கும் இருக்கும் கோகுல். Be Cool. உங்களை யாராவது லேசாக சுரண்டினால் கூட அவர்களின் மேல் சோடா பாட்டில் பறக்கும் என்று வடசென்னை தாதா - அஞ்சாசிங்கம் செல்வின் சத்தியம் செய்துள்ளார். தைரியமா வாங்க!!
@ ! சிவகுமார் !
சிவா... இன்றைய சந்திப்பு எப்படி போச்சு...
//cheena (சீனா) said...
சென்னை யூத் பதிவர் சந்திப்பு வெற்றி பெற நல்வாழ்த்துகள் - /
தங்கள் வாழ்த்துக்கு நன்றி சீனா ஐயா.
//பாவம் பெர்சுங்க எல்லாம் - நட்புடன் சீனா //
உங்கள் நிரந்தர எதிரியான 'அவரை' இப்படி சொல்லி இருக்க வேண்டாம். பாவம்.
@ சதீஷ் மாஸ்
வரவேற்கிறோம் தல... உங்களைப்போன்ற அதிகம் வெளியில் தலைக்காட்டாத பதிவர்களுடன் பழகிப் பார்க்கவே இந்த சந்திப்பை ஏற்பாடு செய்திருக்கிறோம்... அநேகமாக எங்கள் நோக்கம் வெற்றிகரமாக நிறைவேறிக் கொண்டிருக்கிறது என்று நினைக்கிறேன்...
//சதீஷ் மாஸ் said...
அட மொக்க போட இங்கயே ஆரம்பிச்சா... மொத்த மொக்கயும் அங்க போட்டுகளாம்//
மொக்கைக்கா பஞ்சம். நம்ம எழுதுறது பேசுறது எல்லாமே மெகா மொக்கைகள்தானே!!
@ cheena (சீனா)
//cheena (சீனா) said...
சென்னை யூத் பதிவர் சந்திப்பு வெற்றி பெற நல்வாழ்த்துகள் - /
தங்கள் வாழ்த்துக்கு நன்றி சீனா ஐயா.
//பாவம் பெர்சுங்க எல்லாம் - நட்புடன் சீனா //
உங்கள் நிரந்தர எதிரியான 'அவரை' இப்படி சொல்லி இருக்க வேண்டாம். பாவம். //
ஆமாம் சீனா அய்யா... சென்னையின் மூத்த பதிவரான அவரை மதுரை பதிவரான நீங்கள் அப்படி சொல்லியிருக்கக் கூடாது...
//சதீஷ் மாஸ் said...
நானும் ரவுடி நானும் ரவுடி சாரி நானும் யூத் பதிவர் நானும் யூத் பதிவர்... வருவது நிச்சயம்... வரவேற்க அஞ்சு ரிச்சு கேர்ள்ச வாசல நிருத்துங்கோ.. because it youth function//
ரிச்சு கேர்ல்சா வேஷம் போட்டு அஞ்சி ஆண் பதிவரை நிக்க வைக்கப்போறோம்!!
//Philosophy Prabhakaran said...
ஆமாம் சீனா அய்யா... சென்னையின் மூத்த பதிவரான அவரை மதுரை பதிவரான நீங்கள் அப்படி சொல்லியிருக்கக் கூடாது//
அவர் பேரை சொல்லிடாதீங்க பிரபா. நமக்கு எதுக்கு வம்பு. இது பெரியவங்க பிரச்னை.
//Philosophy Prabhakaran said...
@ ! சிவகுமார் !
சிவா... இன்றைய சந்திப்பு எப்படி போச்சு.//
அம்பேல்!
@ ! சிவகுமார் !
// அம்பேல்! //
ஏன் என்ன ஆச்சு...?
@ Philosophy Prabhakaran
முடிந்த வரை Share செய்து உள்ளேன். கலந்து கொள்ள கண்டிப்பாக முயற்சி செய்கிறேன்.
மாநாட்டிற்கு வரும் அனைவரின் போக்குவரத்து உள்ளிட்ட சகல செலவுகளுக்கான பணத்தை தானே தருகிறேன் என்று சென்னையின் பெரும் பணக்கார பதிவர் சிரிப்பு போலீஸ் ரமேஷ் உறுதி அளித்திருப்பதை ஒருமனதுடன் பாராட்ட கடமைப்பட்டு இருக்கிறோம்.
....////
அப்படின்னா நான் *பஹ்ரைன்ல* இருந்து வர்றேன் ரிட்டன் டிக்கட் மட்டும் அனுப்ப சொல்லுங்க போலீஸ் சாருகிட்ட ....
//Philosophy Prabhakaran said...
@ ! சிவகுமார் !
// அம்பேல்! //
ஏன் என்ன ஆச்சு...?//
சிறப்பு விருந்தினரான நான் போகாததால்...ஹே..ஹே
என்னை இந்த பதிவர் சந்திப்பிற்கு அழைத்ததற்கு மிகவும் நன்றி. இந்த பதிவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்.
//Prabu Krishna (பலே பிரபு) said...
@ Philosophy Prabhakaran
முடிந்த வரை Share செய்து உள்ளேன். கலந்து கொள்ள கண்டிப்பாக முயற்சி செய்கிறேன்.//
ஷேர் செய்ததற்கு நன்றி பிரபு. நீங்கள் வந்தால் மகிழ்ச்சி அடைவோம். பிரபாகரன் பெண் பார்க்க திருத்தணி வெளிநாட்டு சுற்றுலா சென்றுள்ளார். வந்ததும் சொல்கிறேன்!!
//தினேஷ்குமார் said...
மாநாட்டிற்கு வரும் அனைவரின் போக்குவரத்து உள்ளிட்ட சகல செலவுகளுக்கான பணத்தை தானே தருகிறேன் என்று சென்னையின் பெரும் பணக்கார பதிவர் சிரிப்பு போலீஸ் ரமேஷ் உறுதி அளித்திருப்பதை ஒருமனதுடன் பாராட்ட கடமைப்பட்டு இருக்கிறோம்.
....////
அப்படின்னா நான் *பஹ்ரைன்ல* இருந்து வர்றேன் ரிட்டன் டிக்கட் மட்டும் அனுப்ப சொல்லுங்க போலீஸ் சாருகிட்ட ..//
ஒரே ஒரு டீ சப்ளை செய்ய நன்கொடை கேட்டதற்கே ஊரை விட்டு ஓடிய ரமேஷ் இன்னும் வரவில்லை. அவரை நம்புகிறீர்களே தினேஷ்!!
//N.H.பிரசாத் said...
என்னை இந்த பதிவர் சந்திப்பிற்கு அழைத்ததற்கு மிகவும் நன்றி. இந்த பதிவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்//
உகாண்டாவில் இருந்தாலும் இந்நிகழ்ச்சிக்கு ரூ. 1,00,001 நன்கொடை அளிக்க உறுதி அளித்த பிரசாத்திற்கு மிக்க நன்றி!!
நேரில் சந்திப்போம். ஆவலாய் இருக்கிறேன்.
@ Prabu Krishna (பலே பிரபு)
// முடிந்த வரை Share செய்து உள்ளேன். கலந்து கொள்ள கண்டிப்பாக முயற்சி செய்கிறேன். //
நீங்க தீயா வேலை செஞ்சதை பார்த்தேன் தல... உண்மையிலேயே நீங்கள் "பலே" பிரபு தான் என்பதை நிரூபித்துவிட்டீர்கள்...
@ தினேஷ்குமார்
// அப்படின்னா நான் *பஹ்ரைன்ல* இருந்து வர்றேன் ரிட்டன் டிக்கட் மட்டும் அனுப்ப சொல்லுங்க போலீஸ் சாருகிட்ட .... //
ஒன்றும் விளங்கவில்லையே... யூத் பதிவர் சந்திப்பிற்கும் சாருவிற்கும் என்ன சம்பந்தம்...
@ N.H.பிரசாத்
// என்னை இந்த பதிவர் சந்திப்பிற்கு அழைத்ததற்கு மிகவும் நன்றி. இந்த பதிவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள். //
அப்படின்னா நீங்க பதிவர் சந்திப்பிற்கு வர மாட்டீங்க... அதான சொல்ல வர்றீங்க...
@ ! சிவகுமார் !
// பிரபாகரன் பெண் பார்க்க திருத்தணி வெளிநாட்டு சுற்றுலா சென்றுள்ளார். வந்ததும் சொல்கிறேன்!! //
பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்லணும் சிவா... எனக்கென்ன அம்பூட்டு வயசா ஆயிடுச்சு...
@ ! சிவகுமார் !
// உகாண்டாவில் இருந்தாலும் இந்நிகழ்ச்சிக்கு ரூ. 1,00,001 நன்கொடை அளிக்க உறுதி அளித்த பிரசாத்திற்கு மிக்க நன்றி!! //
ஒருத்தரையும் விடுறதா இல்ல போல... இதுல ஐடி விட்டு ஐடி பாய்ந்து வேற பின்னூட்டமா...
@ ந.ர.செ. ராஜ்குமார்
// நேரில் சந்திப்போம். ஆவலாய் இருக்கிறேன். //
வரவேற்கிறோம் ராஜ்குமார்... மிக்க மகிழ்ச்சி...
நல்ல வேளை... அன்னைக்கு (செப்.4) காலையில 10 மணிக்கு என் பதிப்பகத்தோட இரண்டாம் ஆண்டு விழா கன்னிமாரா நூலகத்துல வெச்சிருக்கேன்.
சாய்காலம் வச்சிருந்தா எல்லா கூட்டமும் மாநாட்டுக்குல வந்திருக்கும் !
கண்டிப்பா பெரும்படை திரட்டி போருக்கு... ச்சே.. மாநாட்டுக்கு வந்து சேருவோம்.
அனைவரையும் வரவேற்கிறோம்..
i will also try to come
சென்னை யூத் பதிவர் சந்திப்பு வெகு சிறப்பாக நடை பெற என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆமா, இந்தச் சந்திப்பிற்கும், சிபியும் மனோவும் வருவாங்களா?
அரை அங்கிள்'ஆன அண்ணன் போலீசே வரும் போது...யூத்து நாங்க வர மாட்டோமா என்ன :)
கண்டிப்பா தூக்கிடலாம்...
சந்திப்புக்கும்... சந்திப்பை ஏற்படுத்தியவர்க்கும் வாழ்த்துக்கள்....... சிறப்பாக நடத்திடுங்கள்.. என்னையும் ஒரு ப்ளாக்கரா ம(மி)திச்சு கூப்பிட்ட மர்ம ஆசாமிக்கு நன்றிகள்... முயற்சி செய்கிறேன்..
காலைல கன்னிமராக்கு போவணும்..!
சாயந்திரம்னா ஓக்கே!
மொதல்ல டைம் போடுங்கப்பா!
சின்னப்பசங்க தடுமாறிப்போறோமுல்ல!!
இன்னும் பிறக்காத செயலாளர்..!
யூத் சித்தப்பு கேபிள் வளர்ச்சிக் கழகம்
விருகம்பாக்கம் கிளை.
பதிவர் சந்திப்பு வெற்றி பெற வாழ்த்துக்கள்..
நானும் வர விரும்புகிறேன்...
@ குகன்
// நல்ல வேளை... அன்னைக்கு (செப்.4) காலையில 10 மணிக்கு என் பதிப்பகத்தோட இரண்டாம் ஆண்டு விழா கன்னிமாரா நூலகத்துல வெச்சிருக்கேன்.
சாய்காலம் வச்சிருந்தா எல்லா கூட்டமும் மாநாட்டுக்குல வந்திருக்கும் !
கண்டிப்பா பெரும்படை திரட்டி போருக்கு... ச்சே.. மாநாட்டுக்கு வந்து சேருவோம். //
இந்த நல்லவேளையை நாங்க சொல்லணும்... நல்லவேளை நீங்க உங்க விழாவை காலைல வச்சீங்க... இல்லைன்னா மாநாடு வெறிச்சோடி போயிருக்கும்...
@ பித்தனின் வாக்கு
// i will also try to come //
வரவேற்கிறோம் நண்பரே... (ப்ரோபைல் போட்டோவில் இருப்பது நீங்கள் இல்லையென்றால் கண்டிப்பாக வரலாம் :)))
@ நிரூபன்
// சென்னை யூத் பதிவர் சந்திப்பு வெகு சிறப்பாக நடை பெற என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். //
வாழ்த்துக்கு நன்றி...
// ஆமா, இந்தச் சந்திப்பிற்கும், சிபியும் மனோவும் வருவாங்களா? //
யூத் பதிவர் சந்திப்புன்னு போட்டதுக்கு அப்புறமும் இப்படி ஒரு கேள்வியை கேட்குறது அபத்தமா இருக்கு நிரூபன்... தவிர அவர்கள் இருவரும் ஏழு கடல்களுக்கு அப்பால் இருப்பதால் வருவது கஷ்டம்தான்... வந்தாள் மகிழ்ச்சி தான்...
@ ஜில்தண்ணி
// அரை அங்கிள்'ஆன அண்ணன் போலீசே வரும் போது...யூத்து நாங்க வர மாட்டோமா என்ன :) //
வாங்க தல... நீங்களும் உங்களுக்கு கீழே பின்னூட்டம் போட்டவ்ரும் தான் MOST WANTED...
// கண்டிப்பா தூக்கிடலாம்... //
வந்து எங்க யூத்து பதிவர் கேபிளை முடிஞ்சா தூக்குங்க...
@ தம்பி கூர்மதியன்
// சந்திப்புக்கும்... சந்திப்பை ஏற்படுத்தியவர்க்கும் வாழ்த்துக்கள்....... சிறப்பாக நடத்திடுங்கள்.. என்னையும் ஒரு ப்ளாக்கரா ம(மி)திச்சு கூப்பிட்ட மர்ம ஆசாமிக்கு நன்றிகள்... முயற்சி செய்கிறேன்.. //
யோவ்... என்னய்யா இவ்வளவு சொன்ன அப்புறமும் முயற்சி, பயிற்சின்னு டக்கால்ட்டி விடுற... நீ வரலைன்னா ஆட்டோ அனுப்புவோம்...
@ சுரேகா..
// காலைல கன்னிமராக்கு போவணும்..!
சாயந்திரம்னா ஓக்கே!
மொதல்ல டைம் போடுங்கப்பா! //
எங்கள் ஆஸ்தான நிகழ்ச்சி தொகுப்பாளரே... விழா மாலை 5 மணிக்குத்தான்...
@ சுரேகா..
// இன்னும் பிறக்காத செயலாளர்..! //
இன்னும் சிரிச்சிட்டு இருக்கேன்...
@ ஷீ-நிசி
// பதிவர் சந்திப்பு வெற்றி பெற வாழ்த்துக்கள்..
நானும் வர விரும்புகிறேன்... //
நன்றி... வரவேற்கிறோம் நண்பா...
//@ தம்பி கூர்மதியன்
// சந்திப்புக்கும்... சந்திப்பை ஏற்படுத்தியவர்க்கும் வாழ்த்துக்கள்....... சிறப்பாக நடத்திடுங்கள்.. என்னையும் ஒரு ப்ளாக்கரா ம(மி)திச்சு கூப்பிட்ட மர்ம ஆசாமிக்கு நன்றிகள்... முயற்சி செய்கிறேன்.. //
என்னாது மர்ம ஆசாமியா..தேவையா எனக்கு..
யோவ் பிரபாகரா..அஜீத் ரசிகனா இருக்கலாம். அதுக்காக வாங்க தல, வாங்க தலன்னு எல்லாரையும் கூப்புட்டு மங்காத்தாவுக்கு பப்ளிக்குட்டி தேடுற வேலையெல்லாம் வேண்டாம்!!
//தேவையா எனக்கு.. //
ஓ.. அப்ப அந்த புதருக்குள்ள இருந்து சத்தம் போட்டவரு நீங்க தானா..?
//மாநாட்டிற்கு வரும் அனைவரின் போக்குவரத்து உள்ளிட்ட சகல செலவுகளுக்கான பணத்தை தானே தருகிறேன் என்று சென்னையின் பெரும் பணக்கார பதிவர் சிரிப்பு போலீஸ் ரமேஷ் உறுதி அளித்திருப்பதை ஒருமனதுடன் பாராட்ட கடமைப்பட்டு இருக்கிறோம்.//
கடைசியில இதயும் டமாசு ண்னு சொல்லிராதிங்ஙோ!!!!!!
@ ! சிவகுமார் !
// யோவ் பிரபாகரா..அஜீத் ரசிகனா இருக்கலாம். அதுக்காக வாங்க தல, வாங்க தலன்னு எல்லாரையும் கூப்புட்டு மங்காத்தாவுக்கு பப்ளிக்குட்டி தேடுற வேலையெல்லாம் வேண்டாம்!! //
அந்த கொடுமையை ஏன் கேக்குறீங்க "தல"... ஆபீஸ்ல ஒருத்தன் எல்லாரையும் தல, தலன்னு கூப்பிடுவான்... அவனோட பழகி, பழகி அந்த வார்த்தை இப்ப எனக்கும் தொத்திக்கிடுச்சு... எப்போ விடுமோ தெரியல...
வரவேற்கிறோம் நண்பரே... (ப்ரோபைல் போட்டோவில் இருப்பது நீங்கள் இல்லையென்றால் கண்டிப்பாக வரலாம் :)))
aakkaa profile photo nan illai tholare, nan mudi naraitha youthunko
சென்னை யூத் பதிவர் சந்திப்பு வெகு சிறப்பாக நடை பெற என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பதிவர் சந்திப்பு வெற்றி பெற வாழ்த்துக்கள்..
Post a Comment