Friday, February 25, 2011

டிக்கிலோனா


                                                       
                                                              


அபாய எச்சரிக்கை:

மன்ற  மாமணிகளே,   

கீழே உள்ளே நடுநிசி நாய்கள் திரைப்படம் தங்கள் பார்வைக்கு மட்டுமே. தயவு செய்து வேறு எவருக்கும் தெரிவிக்க வேண்டாம். உயிரை பணயம் வைத்து HD தரத்தில் இப்படத்தை வெளியிட்டு உள்ளோம். இது குறித்த தங்கள் பொன்னான விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன. இதை நகல் எடுத்து பணம் பார்க்க நினைப்பவர்கள் குண்டர், ஒல்லியர், மீடியர் என பல பிரிவுகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவீர்கள் என்பதை உறுதியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். http://www.youtube.com/watch?v=2tl8u7MiEhM


படம் பார்த்ததுக்கு கட்டணம் 150 ரூவா. கூட்டத்துல ஒரு மஞ்ச சட்டக்காரனும் எஸ்கேப் ஆகக்கூடாது. அப்பிடி போற எல்லாரையும் நடுநிசில நெசமாவே நாய்கள் கடிக்கும். தூம் தாதா!

அனுப்பவேண்டிய முகவரி:
கவுண்டமணி - செந்தில் ரசிகர் மன்றம்,
சேந்தம்பட்டி,
மத்திய கிழக்கு மேற்கு அண்டார்டிகா.
..............................

இது எப்படி இருக்கு?

                                        

"யூகத்தின் அடிப்படையில் பேசப்படுவதால்  மட்டுமே ஒருவர் குற்றவாளி இல்லை"                          

"நடுநிலை ஊடகங்கள் சொல்வதால் மட்டுமே ஒருவர் குற்றவாளி இல்லை"

"குற்றம் சாட்டப்படுவதால் மட்டுமே ஒருவர் குற்றவாளி இல்லை"

"சி.பி.ஐ. ரெய்டு வருவதால் மட்டுமே ஒருவர் குற்றவாளி இல்லை"

"கைது செய்யப்படுவதால் மட்டுமே ஒருவர் குற்றவாளி இல்லை"

" தக்க ஆதாரம், சாட்சி இருப்பதால் மட்டுமே ஒருவர் குற்றவாளி இல்லை"

" நீதிபதி தீர்ப்பு சொல்வதால் மட்டுமே ஒருவர் குற்றவாளி இல்லை"

"தன் குற்றத்தை தானே ஒப்புக்கொள்வதால் மட்டுமே ஒருவர் குற்றவாளி இல்லை..இல்லை...இல்லீங்கோ"
.....................................................

செல்லக்குட்டியின் ஆட்டம்:

ஆசிரியர், தாய், தந்தை என பலர் சொல்லித்தந்தும் உங்கள் குழந்தை படிக்க மறுக்கிறதா? அது அந்த குழந்தையின் தவறில்லை. சரியான வழிகாட்டி இல்லாமல் போனதே காரணம். இதோ 'நிலா நிலா ஓடி வா' பாடலை ஒரு பச்சிளம் குழந்தை பாடி ஆடி உள்ளது. தங்கள் குழந்தையை உற்சாக கடலில் மூழ்கடிக்க ஒரு அருமையான வாய்ப்பு:http://www.youtube.com/watch?v=AcebV9s2jnA
.................................................

டமாசு:

ஒரு மிகப்பெரிய தனியார் நிறுவனத்தின் முதலாளி வேலை நேரத்தில் ஒரு இளைஞன் வண்டி நிறுத்தும் இடத்தின் அருகே சுவற்றில் சாய்ந்தபடி வானத்தை வெறித்து பார்த்து கொண்டிருப்பதை கண்டார். அவன் அருகில் சென்று "ஏன் இங்கே நின்று கொண்டு இருக்கிறாய். ஏதேனும் பிரச்சனையா?"  அவன் "ஆம். எனக்கு சம்பளம் போதவில்லை" என்கிறான். அவர் "உனக்கு தற்போது எவ்வளவு சம்பளம்"  அவன் "ஐந்தாயிரம் ரூபாய்".  முதலாளி "இந்தா பிடி. இதில் 15,000 ரூபாய் உள்ளது. இனி இந்த இடத்தில வந்து நேரத்தை வீண் அடிக்காதே. எனக்கு பிடிக்காது. வேலையை பார்" என்று சொல்லிவிட்டு நகர்கிறார். 

தன் அலுவலகத்தில் பணிபுரியும் இன்னொரு ஊழியரை அழைத்து "கீழே ஒருவனிடம் பேசிக்கொண்டு இருந்தேன்.."  ஊழியர் "நானும் அதை பார்த்தேன்". முதலாளி "யார் அவன்? எந்த பிரிவில் வேலை செய்கிறான்?"  ஊழியர் "அவன் நம் நிறுவனத்தில் வேலை செய்பவன் அல்ல. பீசா விற்க வந்தவன்" 

முதலாளி "@#$%$$%"

நீதி:  தீர விசாரிப்பதே மெய். 
.....................................................


Posted by:
! சிவகுமார் !


          

20 comments:

ஓட்ட வட நாராயணன் said...

இதை நகல் எடுத்து பணம் பார்க்க நினைப்பவர்கள் குண்டர், ஒல்லியர், மீடியர் என பல பிரிவுகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவீர்கள் என்பதை உறுதியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

இந்த வீடியோவைப் பார்த்ததை விடவா ஒரு தண்டனை கிடைக்கப் போவுது?

ஓட்ட வட நாராயணன் said...

யோவ் தமிழ்மணத்துல சப்மிட் பண்ணுங்கப்பா!

ஓட்ட வட நாராயணன் said...

"தன் குற்றத்தை தானே ஒப்புக்கொள்வதால் மட்டுமே ஒருவர் குற்றவாளி இல்லை..இல்லை...இல்லீங்கோ"


ஒருத்தர் ஐஞ்சு கமெண்டு போடுறதால மட்டும் ஒரு பதிவு நல்ல பதிவு ஆகிட முடியாது!

ஓட்ட வட நாராயணன் said...

மலை மேல ஏறிவா னு ஏதோ பாடுறாங்களே! அதுக்கு என்னய்யா அர்த்தம்?

ஓட்ட வட நாராயணன் said...

நீதி: தீர விசாரிப்பதே மெய்.


இது ஒன்ன கத்து வச்சுக்கிட்டு எஸ்கேப் ஆயிடுறான் பா!

உளவாளி said...

இந்த கொசுத்தொல்லை தாங்க முடியல, எங்க போனாலும் பின் தொடர்து வருது........

ஆனந்தி.. said...

ha ha..ரித்தீஷ் ஆட்டம் போதும்...இன்னைக்கு பொழுது நல்லா போகும் நினைக்கிறேன்....(எங்கப்பா ஹாஸ்பிடல்...அட்மிட் ஆகணும் .....):)))

Chitra said...

தங்கள் குழந்தையை உற்சாக கடலில் மூழ்கடிக்க ஒரு அருமையான வாய்ப்பு:....... முதன் முறை, இந்த பாடலை இப்பொழுதுதான் பார்க்கிறேன். ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.... "நிலா நிலா ...ஓடி வா.." பாடலுக்கு இப்படியும் உடல் இளைக்க exercise செய்ய முடியுமா? ஹா,ஹா,ஹா,ஹா....

goundamanifans said...

//ஓட்ட வட நாராயணன் said...
மலை மேல ஏறிவா னு ஏதோ பாடுறாங்களே! அதுக்கு என்னய்யா அர்த்தம்...

மலை மேல ஏறி வான்னா 'மலை மேல ஏறி வான்னுதான் அர்த்தம்'...

Speed Master said...

இன்னிக்கு பார்த்து மஞ்சசட்ட போட்டுட்டேன்
நான் எஸ்கேப்பு

இராஜராஜேஸ்வரி said...

தங்கள் குழந்தையை உற்சாக கடலில் மூழ்கடிக்க ஒரு அருமையான வாய்ப்பு://

பாத்தியா அந்தக் காலத்துலயே எப்பிடி மல்டி ப்ராசஸிங் செஞ்சிருக்காருன்னு?”

அஞ்சா சிங்கம் said...

நானும் வந்துட்டேன் அந்த நாய்களின் பெயர்களையும் சொல்லிருந்தால் நல்லாஇருக்கும் ..............

அஞ்சா சிங்கம் said...

அவங்களுக்குள்ள என்ன பிரச்சனைன்னு கேட்டு சொன்னீங்கனா நாம பஞ்சாயத்து பண்ணலாம் ......................

VELU.G said...

ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹா

அந்த கடைசி ஹ ஹஹ ஹ ஹ ஹா

தோழி பிரஷா said...

ஹஹஹஹஹ
நிலா நிலா ஓடிவா பாடல் சூப்பர..

அன்னு said...

//ha ha..ரித்தீஷ் ஆட்டம் போதும்...இன்னைக்கு பொழுது நல்லா போகும் நினைக்கிறேன்....(எங்கப்பா ஹாஸ்பிடல்...அட்மிட் ஆகணும் .....):))) //

ரெண்டு ஃபார்ம் ஃபில் பண்ண சொல்லிடுங்க... ஸ்ஸ்ஸ்ஸ் அப்பா..........

Jayadev Das said...

குற்றம் செய்து தகுந்த ஆதாரத்துடன் நிரூபிக்கப் பட்டு தண்டனை பெற்று ஜெயிலில் கலி தின்றதால் மட்டுமே ஒருத்தர் குற்றவாளி இல்லீங்கோ...!! ஐயா மஞ்சள் துண்டு உம்ம அகராதியில குற்றவாளிக்கு அருத்தம்தான் என்னைய்யா???

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நானும் பிஸ்சா விக்க வந்திருக்கேங்க...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

எங்கள் தொகுதி எம்பி, வீரத்தளபதி ஜேகேரித்தீஷ் அவர்களை கிண்டல் செய்திருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம்...!
வீரத்தளபதி பேரவை

டக்கால்டி said...

அருமை...பிசா தமாசு சூப்பர்