Wednesday, February 16, 2011

கால் கிலோ அல்வா - கே.ஆர்.பி. செந்தில்


கால் கிலோ அல்வா சிறப்பு பேட்டி:

ரசிகர் மன்ற கேள்விகளுக்கு கே.ஆர்.பி. செந்தில் பதில்கள்.                                                                                 

1. தங்கள் வலைப்பூவில் வரும் படங்கள் மற்றும் செய்திகள் பெரும்பாலும்
இயக்குனர் 'பாலா' பட ரேஞ்சுக்கு உள்ளதே? தங்களுக்கு 'பதிவுலக பிதாமகன்'
என்று பாராட்டு விழா நடத்தினால் பங்கேற்பீர்களா
?

கே.ஆர்.பி.செந்தில்: என்னை திருட்டு கேசுல உள்ள வைக்க திட்டமா என்ன? அத்தனை போட்டாவும் நான் எடுத்தது இல்ல தம்பி .. அது கூகுல்காரன்கிட்ட சுட்டது.

2. அது என்ன பின்நவீனத்துவம், இறையாண்மை, கண்டனம், JPC???  பத்து
வரிகளுக்கு குறையாமல் பதில் அளிக்கவும்.

கே.ஆர்.பி.செந்தில்: பின் நவீனத்துவன்றது எழுதரவனுக்கே புரியாம எழுதுறது. அத படிக்கிறவனெல்லாம் புரிஞ்ச மாறிக்கே கடுதாசி போடுறது. ஒரு பயலும் கடுதாசி போடலேன்னா தனக்கு தானே போட்டுக்குறது.

இறையாண்மைன்னா.. ஒரு நாட்டில் ஆட்சியாளர்கள் ஆண்மையுடன் இருக்கவேண்டும். அதாவது கர்நாடக அரசு ஓகேனக்கல்ல தமிழ் நாட்டு அரசாங்கம் கூட்டு குடிநீர் திட்டம் கொண்டு வந்தா எதுக்குது. நாம ஜகா வாங்கிட்டோம்.

சைனாக்காரன் காஸ்மீரிகளுக்கு தனி விசா கொடுக்குறான். அருணாச்சல பிரதேசத்த தன்னோடதுன்னு சொல்றான். நாம அவனோட நமக்கு இருக்கிற ராஜதந்திர உறவுகல முறிச்சுக்காம திபெத் அவனுதுதன்னு ஜகா வாங்கறோம். இப்படி கவருமென்டையே கொல்லையடிக்கிறவன் கிட்ட கொடுத்தா இறையாண்மை பத்தி சந்தேகம்தான் வரும்..
அப்புறம், கண்டனம் JPC லாம் டகால்டி வேலை.
.
3. குடி குடியை கெடுக்கும்.  குடியரசால் குடிமகன்களுக்கு நிம்மதி இல்லை என்பதுதான் இதன் உள்/வெளி, வெட்டவெளி அர்த்தமா??

கே.ஆர்.பி.செந்தில்: பின்னே வேறென்ன காரணம் இருக்குன்னு நெனக்கிரே .. ஆனா ஓட்டு மொத்த தமிழனையும் போலி சரக்க குடிக்க சொல்லிட்டு ஆளும் ராசா மாறுங்க வெளிநாட்டு சரக்கு அடிக்குதுங்க.. 

4. ஆண்கள் ஷார்ட்ஸ், பெண்கள் நைட்டி போட்டுக்கொண்டு நகர்வலம் வருவதை கண்டு பொங்கி எழலாமா? குமுறி அழலாமா? சிரித்து விழலாமா??

கே.ஆர்.பி.செந்தில்: ஒண்ணுமே போடாம் போறது கூட அவனுங்க\ அவளுங்க சொந்த விருப்பம். ஏன் இப்ப எல்லாரும் வேட்டியும், சேலையும்தான் கட்டனுமா. சின்னப்பய எல்லாம் புத்தி சொல்ல வந்துட்டானுக..  


5.
இந்த படம் குறித்து 'தெளிவான' கமன்ட் போடவும்

                                  
கே.ஆர்.பி.செந்தில்: இதுல என்ன தப்பு இருக்கு. அத்தனை பேரும் சரக்கு வாங்கரத விட்டுட்டு அந்த பொண்ணையே மொறச்சு பாக்குறானுக பாரு. பொண்ணுங்க சரக்கடிப்பது அவர்களின் தனிப்பட்ட உரிமை. இத போட்டா எடுத்தவன ஒதைக்கணும்.

6. ஊழலுக்கு அரசாங்கம் அடிக்கடி கமிட்டி என்று ஒன்று வைத்து
விவாதிக்கிறதே, எதிலும் கமிட் ஆகாமல் டீ குடித்துவிட்டு செல்வதால்தான் அந்த பெயரா
??

கே.ஆர்.பி.செந்தில்: இவனுங்க கொள்ளையடிச்சத பங்கு சரியாக் கிடைக்காத அவனுங்க ஆளே போட்டுக்கொடுப்பான். அதபத்தி போனதடவே கொறச்சலா அடிச்ச எதிர்க்கட்சிக்காரன் வயிதெரிச்சல் வந்து கூச்சல் போட அப்புறம் இவனே கமிட்டி போடுவான். மக்களே இது தாங்காமத்தான் காசு வாங்கிட்டு ஓட்டு போட தயாரயிட்டானுங்க.. 

7.
நெரிசலான ரங்கநாதன் தெருவில் நீங்கள் நடந்து செல்கையில் திடீரென ஒரு கட்சியின் மாவட்ட செயலாளர், சாக்பீஸில் ஒரு சிறு வட்டம் போட்டு "வாங்க வட்டத்துக்குள்ள நின்னுக்கிடுவோம். ஒண்டிக்கு ஒண்டி" என்று சண்டைக்கு இழுத்தால் என்ன செய்வீர்கள்? (என்ன செய்தாலும் வட்டத்தை விட்டு வெளியே செல்லக்கூடாது என்பது ஆட்ட விதி).

கே.ஆர்.பி.செந்தில்: வட்டமோ சதுரமோ எந்த அரசியல்வாதி வந்தாலும் ஒரு கை பாத்துர வேண்டியதுதான்.


8.
நீங்கள் தமிழகத்தின் முதல் அல்லது இரண்டாவது அமைச்சர் ஆனால் நிறைவேற்றத்(துடி)துடிக்கும் முக்கியமான மூன்று அம்சங்கள்?

கே.ஆர்.பி.செந்தில்: நானா? முதல், ரெண்டாவது இல்லே! கடேசில நின்னு வாழ்க கோசம் போடுறான் பாரு அவனாக்கூட ஆகமாட்டேன். இருந்தாலும் ரொம்ப ஆசெப்பட்டு கேக்குறே.
1. இதுவரைக்கும் கொள்ளையடிச்ச அத்தனை பேரையும் உள்ளே போடுவேன்.
2 . ஒரு குடும்பத்துல இருந்து ஒரு தடவதான் பதவி வகிக்க முடியும். அதுவும் மூணு வருசத்துக்குதான். அதே போல ஒரு தடவதான் அமைச்சர் பதவி வகிக்க முடியும். அப்படின்னு சட்டம் போடுவேன்.
3. எல்லோருக்கும் எல்லாமும் அப்படின்னு ஒரு திட்டம் வச்சிருக்கேன். அத துவங்கி நிறைவேத்துவேன் .  சரியாத்தான் பேசிருக்கேனா # டவுட்டு 

9. 'எவனா இருந்தா எனக்கென்ன' ,  'போங்கடா நீங்களும் உங்க அரசியலும்', 'எங்கடா உங்க எம்.எல்.ஏ?' எந்த படத்தின் டைட்டில் தங்களுக்கு மிகவும் பிடித்தது. ஐந்து வரிகளுக்கு குறையாமல் பதில் அளிக்கவும்.

கே.ஆர்.பி.செந்தில்: படத்துக்காவது இப்படி பேரு வக்க முடியுதுன்னு சந்தோசப்படு ராசா. நேர்ல எந்த எம். எல். ஏ கிட்டயாவது இப்புடி கேக்க முடியுமா? கேட்டா உன்னை சும்மா விட்ருவாங்களா


10.
இறுதியாக/உறுதியாக, மக்களுக்கு என்ன(தான்) சொல்ல நினைக்கிறீர்கள்?

கே.ஆர்.பி.செந்தில்: ஆமா! நான்சொல்றத கேட்டாதான் எல்லாருக்கும் சோறு எறங்கும் பாரு! கருத்து சொல்லத்தான் ஆயிரம் பேர் இருக்கானுகளே! நானும் வேறயா?

................................


கேள்விகள் : ! சிவகுமார் !


  
  26 comments:

மாணவன் said...

super :)

S.Sudharshan said...

haha ,நல்ல கேள்வி பதில்கள் :)

Philosophy Prabhakaran said...

// ஆனா ஓட்டு மொத்த தமிழனையும் போலி சரக்க குடிக்க சொல்லிட்டு ஆளும் ராசா மாறுங்க வெளிநாட்டு சரக்கு அடிக்குதுங்க.. //

உங்க ஆதங்கம் புரியுது அண்ணே...

Philosophy Prabhakaran said...

// இத போட்டா எடுத்தவன ஒதைக்கணும். //


சிவா... நிக்காம ஓடுங்க...

Chitra said...

கேள்வியில் அல்வா வச்சு கொடுத்தால், பதிலில் காரம் மணம் - தூள் பறக்குதே!

ஆனந்தி.. said...

//கே.ஆர்.பி.செந்தில்: இதுல என்ன தப்பு இருக்கு. அத்தனை பேரும் சரக்கு வாங்கரத விட்டுட்டு அந்த பொண்ணையே மொறச்சு பாக்குறானுக பாரு. பொண்ணுங்க சரக்கடிப்பது அவர்களின் தனிப்பட்ட உரிமை. இத போட்டா எடுத்தவன ஒதைக்கணும்//

அதானே:)) பெண்ணுரிமை காவலர் சகோ செந்தில் வாழ்க...:)))

ஆனந்தி.. said...

கே.ஆர்.பி.செந்தில்: வட்டமோ சதுரமோ எந்த அரசியல்வாதி வந்தாலும் ஒரு கை பாத்துர வேண்டியதுதான்.//

அட "கை "..அப்போ நீங்க காங்கிரஸ் ஆ ??? :))

விந்தைமனிதன் said...

ஃபோட்டோ நல்லாருந்திச்சிப்பா... இந்த மாதிரி நெறய ஃபோட்டோல்லாம் போட்டு மக்கள் சேவை,ஜிலேபி,பணியாரம் எல்லாம் ஆத்தோ ஆத்துன்னு ஆத்தணும்னு ரசிகர்மன்ற வேதாரணியம் கிளை சார்பா வேண்டி விரும்பிக் கேட்டுக்கொள்(ல்)கிறேன்.

அஞ்சா சிங்கம் said...

'பதிவுலக பிதாமகன்'........//////////

பாராட்டு விழா எங்க கண்ணம்மாபேட்டையா ...................

Speed Master said...

அருமை

! சிவகுமார் ! said...

Philosophy Prabhakaran said...
// இத போட்டா எடுத்தவன ஒதைக்கணும். //

சிவா... நிக்காம ஓடுங்க.

>>> காலைல எடுத்த ஓட்டம்...இன்னும் நிக்கல..

சர்வாதிகாரி! said...

LET'S SEE!

ஆகாயமனிதன்.. said...

//10. இறுதியாக/உறுதியாக, மக்களுக்கு என்ன(தான்) சொல்ல நினைக்கிறீர்கள்?
கே.ஆர்.பி.செந்தில்: ஆமா! நான்சொல்றத கேட்டாதான் எல்லாருக்கும் சோறு எறங்கும் பாரு! கருத்து சொல்லத்தான் ஆயிரம் பேர் இருக்கானுகளே! நானும் வேறயா?//
//இருக்கானுகளே!//
இருக்காங்களே (கொஞ்சம் மரியாதையா இருக்கும் !)

AKM said...

வாழ்கையை உற்றுப்பார்த்தால் சிரிப்பு வரத்தான் செய்யும் - இது ஒரு ஜென் தத்துவம்.. செந்தில் சார் சமீப காலமாய் நகைச்சுவையை இப்படித்தான் நினைக்கத்தோன்றுகிறது # தத்துவம் ..
எல்லாம் ஒகே.. அந்த டாஸ்மாக் முன் நிற்கும் பெண்தான் உறுத்துகிறது..
1. குறும்படம் நெடும்படம் புகைப்படம்(மாடல்) இப்படி ஏதேனும் ஒன்றாய் இருக்கலாம்
2.அண்ணன் தம்பி கணவன் அப்பா இப்படி ஏதாவது குடி மண்ணர்களுக்கு வாங்க வந்தவராய் இருக்காலாம்.. எனக்கு தெரிந்து ஒரு தாய் தன் மகனுக்கு இப்படி வாங்கித்தந்திருக்கிறார்(வீட்டிலேயே குடித்து தொலையட்டும் வெளியே போனால் பல சண்டைகள் வருகிறதென்று..) அதேபோல்
ஒரு பிரபல நடிகையின் பேட்டிக்கு பின் நிருபருக்கு போட்டோவை சிடியில் காப்பி செய்து தர சென்ற நடிகையின் தந்தை புல் மட்டையாகி விட.. நிருபர் நடிகைக்கு போன் செய்து அந்த நடிகையே பர்தாவில் கண்ணீருடன் ஆட்டோவில் வந்து அழைத்துச்சென்றதை பத்திரிகையாளர் அந்தணன் சார் தன் ப்ளாக்கில் பதிவு செய்திருக்கிறார்..
3. அவருக்காக சரக்கு என்றால் .. வருத்தப்படுகிறேன்..
என்ன ரொம்ப ஓவரா யோசிக்கிறேனோ..??

கோமாளி செல்வா said...

செந்தில் அண்ணனின் பதில்ல எனக்கு ரொம்ப பிடிச்சது அந்த பார் மேட்டர் , அப்புறம் டிரஸ் கோடு. அப்புறம் எல்லாமே ஓகே தான் .. ஹி ஹி

கூகுள் ஓனர் said...

யோவ்! கேயார்ப்பி ஒன்னோட அலும்பு தாங்க முடியலய்யா..

கூகுள் ஓனர் said...

//இருக்கானுகளே!//
//இருக்காங்களே (கொஞ்சம் மரியாதையா இருக்கும் !)//

அடடா மருவாதி இன்னாத்துக்கு தம்பி.. எல்லாம் அக்கபோருங்க..

இரவு வானம் said...

சூப்பருருருரு

கே.ஆர்.பி.செந்தில் said...

அனைவருக்கும் என் நன்றிகள்...

பாரத்... பாரதி... said...

விகடன் மேடையில் பாலா பதில்கள் படித்தது போல இருக்கிறது..

baln said...

ஆமா இவரு பெரிய கப்பல் வியாபாரி ..போடா ..என் தகப்பனையே வாடா போடா நு சொல்லுவேன் ..

பாரத்... பாரதி... said...

விகடன் மேடையில் பாலா பதில்கள் படித்தது போல இருக்கிறது..

விக்கி உலகம் said...

நல்லாத்தான் பதில் சொல்லி இருக்கீங்க.........

பல எடத்துல பதில்கள் கேள்வி போல இருக்கு ஹி ஹி!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஹி...ஹி.....

சாமக்கோடங்கி said...

நல்ல கேள்விகள், நல்ல பதில்கள்.. நானும் ரசிகனாக இனைந்து விட்டேன்..

அருண் said...

//ஆமா! நான்சொல்றத கேட்டாதான் எல்லாருக்கும் சோறு எறங்கும் பாரு! கருத்து சொல்லத்தான் ஆயிரம் பேர் இருக்கானுகளே! நானும் வேறயா?//
அதானே நீங்க என்ன கருத்து கந்தசாமியா!!?