Tuesday, February 22, 2011

காட்டு தர்பார் -சித்தியானந்தாவின் சிறுவிளையாடல்
கவுண்டமணி :- டேய் சிலிண்டர் தலையா என்னடா இன்னக்கி காலங்காத்தால பஞ்சயத்த கூட்டிருக்காங்க இன்னக்கி எவன்டா இந்த ஊர்காரங்க கிட்ட சிக்குனா?

செந்தில் :- தெரியலனே எவனோ வெளியூரு காரணாம் என்ன கேட்டாலும் சிரிச்சிகிட்டே இருக்கானாம் ஜனங்க அடிச்சும் பாத்துட்டாங்க அப்பாவும் சிரிச்சிக்கிட்டே இருக்கான் .

கவுண்டமணி :- அது யாருடா அப்பிடி ஒரு கிறுக்கன் பார்த்துடா கடிச்சிவச்சிர போறான்.

செந்தில் :- அதெல்லாம் சங்கிலி போட்டு கட்டி வச்சிருக்காங்க நாம போயி விசாரிச்சி தீர்ப்பு சொல்லணும் அவ்ளோதான் .

(அனைவரும் எழுந்து நிற்கிறார்கள் அங்கே முகம் எல்லாம் முடியோடு சங்கிலி போட்டு கட்டபட்ட ஒரு உருவம் அது அஞ்சாசிங்கம் மருது பாண்டியை பார்த்து ஆசீர்வாதம் செய்வது போல் கைகளை தூக்குகிறது .)

கவுண்டமணி :- இவளவு வாங்கியும் திருந்தல பாரு . டேய் பறங்கிக்கா தலையா அவன் மூஞ்ச மூடி இருக்கும் அந்த டோர ஓபன் பண்ணு  அவன் யாருன்னு நான் பாக்கணும் .

செந்தில் :- (முகத்தில் முடியை விலக்கியவுடன் )அய்யய்யோ அண்ணே  என்று கதறிய படி கீழே விழுகிறார் .


கவுண்டமணி :- யாருடா அது பச்ச புள்ளைய பயம் காட்டுனது ? டேய் நீயா............. உன்ன நான் இதுக்க முன்னால எங்கயோ பாத்துருக்கிறேனே. பரங்கிமலை ஜோதிலையா ?....................ஆங் ...இப்போ ஞாபகம் வந்திருச்சி நீ சண் டி.வீ.ல வந்த சாமியாருதானே .
உன் பேரு கூட சித்தியானந்தா தானே இங்க வந்து என்ன கேப்மாரித்தனம் பண்ணுனே .

சித்தியானந்தா :- நான் எந்த தவறும் பண்ணல ஒரு ஆராய்ச்சி செய்தேன் என்னை தவறாக நினைத்து பிடித்து கொண்டு  வந்து  விட்டார்கள் .

கவுண்டமணி :-அப்படி என்ன ஆராய்ச்சி (கீழே கிடக்கும் செந்திலை எட்டி உதைத்தபடி ) உட்டா அப்படியே தூங்கிடுவியே எந்திரிடா .

செந்தில் :- அண்ணே ஆத்துல குளிச்சிக்கிட்டு இருந்த நம்ம ஆறுமுகம் பொண்டாட்டிய பின்னால இருந்து கட்டி பிடிசுட்டாருனே .

கவுண்டமணி :-அது என்ன அப்படி ஒரு ஆராய்ச்சி பண்ணிருக்கே பொம்பள குளிக்கும் போது கட்டி பிடிகுற ஆராய்ச்சி. உன்ன உதச்சதோட விட்டாங்களேன்னு சந்தோசபடு மகனே நான் மட்டும் ஸ்பாட்ல இருந்திருந்தா நடக்குறதே வேற .

சித்தியானந்தா :- கட்டி பிடித்தது நான் இல்லை அது கிராபிக்ஸ் . இது ஒரு ஆன்மீக ஆராய்ச்சி உங்களுக்கு புரியாது .

கவுண்டமணி :- கையும் களவுமா பிடிச்சிருக்காங்க நான் இல்லேன்னா எப்படி ?

சித்தியானந்தா :- உங்களுக்கு விளக்கமா சொல்லனும்னா நான் இங்க இருக்கும் போதே பாண்டிச்சேரியிலும் இருப்பேன் .
அது மாதிரி இப்போ நான் பாண்டிச்சேரியில் இருக்கிறேன் . இங்க இருக்கிறவன பிடிச்சிட்டு அது நான்தான்னு சொன்னா எப்படி ?

 கவுண்டமணி :- டேய் இவன் ரொம்ப குழப்புராண்டா ...................

செந்தில் :- அண்ணே இந்த சாமியாரு வாய்ல இருந்து லிங்கம் எடுப்பாரான்னே ......

கவுண்டமணி :- வாய்ல இருந்து வாந்தி தான் எடுக்க முடியும் .என் வாய்ல இருந்து ஏதாவது வர்றதுக்கு முன்னால  எட்ட ஓடி போய்டு நாயே .....டேய் என்னடா உன் காலு அழுக்கு ஆகி  புன்னு பிடிச்சி போயி இருக்கு நீ காலே கழுவுறது இல்லையா ?

சித்தியானந்தா :- முன்னெல்லாம் என் கால கழுவுறதுக்கு 25,000  ஆயிரம் கட்டணம் வாங்குவேன் இப்போ யாரும் என் கால கழுவ வர மாட்றாங்க .

கவுண்டமணி :- யாரு வராட்டி என்ன நீ கழுவிக்க வேண்டியது தானே நாயே ..........

சித்தியானந்தா :- அது எப்படி நானே என் கால கழுவிக்கிட்டா எனக்கு 25,000  ஆயிரம் நஷ்டம் இல்லையா அதான் அப்படியே விட்டுட்டேன் .

கவுண்டமணி :-அட நாத்தம் பிடிச்சவனே உன்ன இப்படியே உட்டா நீ ஊரு ஊரா போய் ஆராய்ச்சி பண்ணிக்கிட்டு இருப்பே உன் ஆராய்ச்சிக்கு இங்கயே முடிவு கட்டுறேன் . டேய் இவன நம்ம ஊரு சுடுகாட்டுக்கு எடுத்துட்டு போங்க .

சித்தியானந்தா :- நாட்டாம தீர்ப்ப மாத்தி சொல்லு இங்க இருக்கிறது நான் இல்ல நான் பாண்டிச்சேரியில் இருக்கேன் .

 கவுண்டமணி :- அதாண்டி மகனே நீ பாண்டிசேரியில இரு நாங்க இங்க சுத்திக்கிட்டு இருக்குற இந்த கேப்மாறியதான் புதைக்க
 போறோம்

(அய்யோ என்று பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓடுகிறார் சித்தியானந்தா பின்னால் ஊர் மக்கள் துரத்திக்கொண்டு ஓடுகிறார்கள்  )


 

25 comments:

நா.மணிவண்ணன் said...

அந்த கேப்மாரி கூட சல்சா பன்னவுங்க இந்த பஞ்சாயத்துக்கு வராமா டிமிக்கி குடுத்துட்டாங்க பார்த்தீங்களா

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
அஞ்சா சிங்கம் said...

நா.மணிவண்ணன் said...

அந்த கேப்மாரி கூட சல்சா பன்னவுங்க இந்த பஞ்சாயத்துக்கு வராமா டிமிக்கி குடுத்துட்டாங்க பார்த்தீங்களா.........//////////
இப்போதைக்கு இவர்தான் சிக்கிருக்காறு .................

ஒழுக்கமா இருக்க வேண்டிய பொறுப்பு இவருக்கு தான் அதிகம் .அதனால்தான் தவறின் பெரும் பகுதி இவரையே சாரும்.
நடிகைகளிடம் எதிர்பார்ப்பது தவறு ..................

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////செந்தில் :- அண்ணே ஆத்துல குளிச்சிக்கிட்டு இருந்த நம்ம ஆறுமுகம் பொண்டாட்டிய பின்னால இருந்து கட்டி பிடிசுட்டாருனே .///////


அடடடடா.......... நாட்ல நெறைய பேரு கல்யாணமும் பண்ணிக்க மாட்டேங்கிறானுங்க, பண்ணவனையும் நிம்மதியா இருக்கவிட மாட்டேங்கிறானுங்கப்பா...........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////கவுண்டமணி :- கையும் களவுமா பிடிச்சிருக்காங்க நான் இல்லேன்னா எப்படி ?//////

வீடியோ ப்ளீஸ்.........

அஞ்சா சிங்கம் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////செந்தில் :- அண்ணே ஆத்துல குளிச்சிக்கிட்டு இருந்த நம்ம ஆறுமுகம் பொண்டாட்டிய பின்னால இருந்து கட்டி பிடிசுட்டாருனே .///////


அடடடடா.......... நாட்ல நெறைய பேரு கல்யாணமும் பண்ணிக்க மாட்டேங்கிறானுங்க, பண்ணவனையும் நிம்மதியா இருக்கவிட மாட்டேங்கிறானுங்கப்பா...........///////

உங்களுக்கு பொண்ணு பார்த்தாச்சி இப்பதான் என்கிட்டே விலாசம் கேட்டீங்க எதுக்கும் ஜாதகத்த அனுப்புங்க பேசி முடிச்சிரலாம் ..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////சித்தியானந்தா :- நாட்டாம தீர்ப்ப மாத்தி சொல்லு இங்க இருக்கிறது நான் இல்ல நான் பாண்டிச்சேரியில் இருக்கேன் .///////

நல்ல எடத்துலதான் ப்ராஞ்ச் போட்டிருக்காரு....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////////அஞ்சா சிங்கம் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////செந்தில் :- அண்ணே ஆத்துல குளிச்சிக்கிட்டு இருந்த நம்ம ஆறுமுகம் பொண்டாட்டிய பின்னால இருந்து கட்டி பிடிசுட்டாருனே .///////


அடடடடா.......... நாட்ல நெறைய பேரு கல்யாணமும் பண்ணிக்க மாட்டேங்கிறானுங்க, பண்ணவனையும் நிம்மதியா இருக்கவிட மாட்டேங்கிறானுங்கப்பா...........///////

உங்களுக்கு பொண்ணு பார்த்தாச்சி இப்பதான் என்கிட்டே விலாசம் கேட்டீங்க எதுக்கும் ஜாதகத்த அனுப்புங்க பேசி முடிச்சிரலாம் ../////////

என்ன வண்டி ராங் ரூட்ல போகுதே.. நான் வெலாசம் மட்டும் தானே கேட்டேன்...?

அஞ்சா சிங்கம் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////சித்தியானந்தா :- நாட்டாம தீர்ப்ப மாத்தி சொல்லு இங்க இருக்கிறது நான் இல்ல நான் பாண்டிச்சேரியில் இருக்கேன் .///////

நல்ல எடத்துலதான் ப்ராஞ்ச் போட்டிருக்காரு....////////////
அது ஒரு தனி காமடி தல ஜூவி ல சாரு எழுதினத படிசிருந்தீங்கனா அது புரியும் ............

ஆனந்தி.. said...

////////கவுண்டமணி :- கையும் களவுமா பிடிச்சிருக்காங்க நான் இல்லேன்னா எப்படி ?//////

வீடியோ ப்ளீஸ்......... //

"பன்" டிவி க்கு விக்கவா? :))))

அஞ்சா சிங்கம் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
என்ன வண்டி ராங் ரூட்ல போகுதே.. நான் வெலாசம் மட்டும் தானே கேட்டேன்...?.........//////////

நமக்கு கமிசன் முக்கியம் ஆமாம் .........

ஆனந்தி.. said...

//சித்தியானந்தா :- நான் எந்த தவறும் பண்ணல ஒரு ஆராய்ச்சி செய்தேன் என்னை தவறாக நினைத்து பிடித்து கொண்டு வந்து விட்டார்கள் .//

அதானே...நல்லா கேட்டாரு கேள்விய...:)))

அஞ்சா சிங்கம் said...

ஆனந்தி.. said...

//சித்தியானந்தா :- நான் எந்த தவறும் பண்ணல ஒரு ஆராய்ச்சி செய்தேன் என்னை தவறாக நினைத்து பிடித்து கொண்டு வந்து விட்டார்கள் .//

அதானே...நல்லா கேட்டாரு கேள்விய...:)))

இந்த நாடு எப்படிப்பட்ட விஞ்சாணியை வேஸ்ட் பண்ணுது சே ...................இந்த பய என்னாமா ஆராய்ச்சி பண்ணிருக்கான் ......

! சிவகுமார் ! said...

அடுத்த வாரம்.. கால் கிலோ அல்வா சிறப்பு பேட்டி.. பன்னிக்குட்டி ராம்சாமி அவர்களின் கேள்விகளுக்கு சித்யானந்தாவின் சிலு சிலுக்கும் பேட்டி. இந்த பேட்டிக்காக பல ஆயிரங்களை செலவு செய்து, மன்ற அலவன்சை கூட வாங்க மறுத்து, சித்யானந்தாவை நேருக்கு நேர் சந்தித்து பேட்டி கண்ட ராம்சாமி அண்ணனை பாராட்ட வார்த்தைகளே இல்லை என்று சொல்லிக்கொள்ளும் இந்த வேளையிலே...!!!

அஞ்சா சிங்கம் said...

சிவகுமார் ! said...

அடுத்த வாரம்.. கால் கிலோ அல்வா சிறப்பு பேட்டி.. பன்னிக்குட்டி ராம்சாமி அவர்களின் கேள்விகளுக்கு சித்யானந்தாவின் சிலு சிலுக்கும் பேட்டி. இந்த பேட்டிக்காக பல ஆயிரங்களை செலவு செய்து, மன்ற அலவன்சை கூட வாங்க மறுத்து, சித்யானந்தாவை நேருக்கு நேர் சந்தித்து பேட்டி கண்ட ராம்சாமி அண்ணனை பாராட்ட வார்த்தைகளே இல்லை என்று சொல்லிக்கொள்ளும் இந்த வேளையிலே...!!!........./////////

யோவ் நீ காலங்காத்தால போயிட்டு வந்துடீயா .........இல்ல காத்து கருப்பு அடிச்சிருச்சா ?

Chitra said...

நடத்துங்க.... நடத்துங்க....!!!! ஹா,ஹா,ஹா,ஹா...

வைகை said...

கவுண்டமணி :- கையும் களவுமா பிடிச்சிருக்காங்க நான் இல்லேன்னா எப்படி ?//


கவுண்டருக்கு அதான் வருத்தமா?

வைகை said...

அப்படி என்ன ஆராய்ச்சி ?///


பாவம் எறும்பு ஊருதான்னு பாத்துருப்பாறு
:))

சி.பி.செந்தில்குமார் said...

>>செந்தில் :- அண்ணே ஆத்துல குளிச்சிக்கிட்டு இருந்த நம்ம ஆறுமுகம் பொண்டாட்டிய பின்னால இருந்து கட்டி பிடிசுட்டாருனே .

இந்த ஐடியா எல்லாம் உங்கலை விட்டா வேற யாருக்கு வரும்?

அஞ்சா சிங்கம் said...

வைகை said...

அப்படி என்ன ஆராய்ச்சி ?///


பாவம் எறும்பு ஊருதான்னு பாத்துருப்பாறு
:))............/////////

அப்போ ஏறும்ப தான் பஞ்சாயத்துக்கு கூட்டீட்டு வரணும் பாவம் இவர புடிச்சுட்டு வந்துட்டாங்க .........

அஞ்சா சிங்கம் said...

சி.பி.செந்தில்குமார் said...

>>செந்தில் :- அண்ணே ஆத்துல குளிச்சிக்கிட்டு இருந்த நம்ம ஆறுமுகம் பொண்டாட்டிய பின்னால இருந்து கட்டி பிடிசுட்டாருனே .

இந்த ஐடியா எல்லாம் உங்கலை விட்டா வேற யாருக்கு வரும்?.............../////////////

ஹி ஹி ......எல்லாம் விஞ்சானி மூளை ஆஸ்க்கார் வாங்காம விடுறதில்ல ..............

திங்கள் சத்யா said...

அச்சு அசல் கவுண்டமணி செந்தில் மாதிரியே எழுதியிருக்கீங்க பாஸ். தொடரட்டும் உங்கள் பணி. வாழ்த்துகள்!

இரவு வானம் said...

ha ha ha sema

tamilan said...

அன்புடையீர்,
தங்கள் பதிவிற்கு தொடர்பில்லாத மறுமொழி என்று தயவு செய்து இதை நீக்கிவிடாதீர்கள்.

யாவரும் அவசியம் பார்க்க வேண்டிய விடியோக்கள் அடங்கியது. சுட்டியை சொடுக்கி படிக்கவும்.

===>இந்துக்களே! விழிமின்! எழுமின்! 7. காம சூத்திரம். தேவதாசி. நிர்வாண சாமியார்கள். பிணந்திண்ணி சாமியார்கள். புனித கங்கையில் காலைக்கூட நனைக்க மனம் வரவில்லை. <===

..

Arun said...

Kalakkureenga Boss.... Hats off. :D