* இன்று சூரியன் மேற்கில் அஸ்தமிக்கும். சில மேகங்கள் வெள்ளையாகவும், பல மேகங்கள் சாம்பல் நிறத்திலும் காட்சி அளிக்கும்.
* நாளை வரப்போவது கண்டிப்பாக வியாழக்கிழமையாக இருக்கும்.
*பெட்ரோல் உயர்விற்கு காரணம் ரஜினியின் கருப்பு நிறமா/கமலின் சிகப்பு நிறமா? தமிழ்நாட்டில் பரபரப்பு.
* இன்று நடக்கும் 20/20 போட்டியின் முடிவு வெற்றி/தோல்வி/டை அல்லது ஆட்டம் ரத்து என்றிருக்கும்.
* உள்ளாட்சி தேர்தலில் அமெரிக்க ஜனாதிபதி போட்டி இடுவாரா? பீதியில் பிளிரும் திருச்சி மக்கள். ஒரு நேரடி ரிப்போர்ட்.
* மெட்ரோ ரயில் திட்டத்தால் சென்னையில் இருக்கும் பூங்காக்களுக்கு பேராபத்து. இதுவரை மொத்தம் 1,54,025 புற்கள் சிதைக்கப்பட்டுள்ளன.
* போர்டெல் சூப்பர் சிங்கரில் பாய் பரணுக்கு உங்கள் ஓட்டை பல் விளக்கும் முன் போட்டு விட்டீர்களா? இல்லையென்றால் கந்துவட்டிக்கு கடன் வாங்கி ரீசார்ஜ் செய்து உடனே போடுங்கள்.
*எங்கள் பத்திரிகை கட்டுரைகளை முன் அனுமதி பெற்றி உங்கள் பதிவில் போட உடனே அணுகுங்கள். 99% கட்டண சலுகை. இன்னும் இரண்டு நாட்களே உள்ளன. 5,000 ரூபாய் கட்டுங்கள். 1,00,000 ஹிட்சை வாங்கி வெற்றிக்கொடி கட்டுங்கள்.
நன்றி:
பழைய தலைமுறை
நித்யானந்த விகடன்
எவள் விகடன்
டார்க் மஞ்சள் குங்குமம்
மாதமலர்
வாரத்தந்தி
(சூப்பர்) ஸ்டார் விஜய்
கன் டி.வி.
'கும்மு'தம்
டைம்ஸ் ஆப் விதி
டெக்கன் திண்டுக்கல்
மத்யான முரசு
32 comments:
Ha....ha.....super.....
Nethiadi !!!
கலக்கல்...என்னய்யா மாப்ள ட்ரெண்டுக்கு ஏத்தாப்போல பதிவா...நடத்துய்யா ஹிஹி!
அடடடா........... இன்னும் கொஞ்சம் போட்டு குமுறி இருக்கலாமே?
நாளைக்கு வியாழக்கிழமைன்னு சொல்லி இருக்கீங்க, ஆனா இன்னிக்கு புதன்கிழமைன்னு எங்கேயும் சொல்லல..... இது தவறான தகவல்...
பதிவு மிக அருமை..... நல்ல கருத்துக்கள் அனைவருக்கும் பயன்படும்!
தமிழ்மணம் 3
இட்லி..ச்சீ இண்ட்லி 3
ஹிட்ஸ் 5 ( யோவ் அஞ்சுவாட்டி F5 அமுக்கி இருக்கேன்... நல்லா ஞாபகம் வெச்சுக்குங்க, அப்புறம் கரெக்டா என் ப்ளாக் வரும்போது மறந்துட போவுது......)
உடான்ஸ் 0 (ஏன்னா அதைக் காணோமே?)
டமில் 10- 0 (இதுவும் இல்ல)
கலக்கல் பாஸ்
இன்று என் வலையில்
அது எதற்கு பயன்படும்?
பதிவும் போட்டுவிட்டு அதை பற்றி சம்மந்தமே இல்லாத மாதிரி கமன்ட் போட்டு கலக்கலாக நடிக்கும் அண்ணன் பன்னிக்குட்டி ராமசாமிக்கு இவ்வாண்டிற்கான தேசிய விருது கன்பர்ம்!
பதிவிற்கு ஆலோசனை பிரபாகரன் என்ற உண்மையை போட்டு இருக்கலாம் அண்ணே!
F5 கீயை இதுவரை "நீங்க சொன்ன மாதிரி" 50,0௦௦ வாட்டி அமுக்கிட்டேன் ப. ராமசாமி. நீங்க கொஞ்ச நேரம் அமுக்குங்க. இந்த வருஷம் நம்மதான் நம்பர் 1.
//
விக்கியுலகம் said...
கலக்கல்...என்னய்யா மாப்ள ட்ரெண்டுக்கு ஏத்தாப்போல பதிவா...நடத்துய்யா ஹிஹி!//
எல்லா புகழும் பன்னிக்குட்டி அய்யாவிற்கு ஐடியா தந்த பிரபாகரனுக்கே!
* நாளை வரப்போவது கண்டிப்பாக வியாழக்கிழமையாக இருக்கும். ///
இந்த பதிவை நான் நாளைக்கு படிச்சா?
இந்தப்பதிவு யார் மனதையும் புண்படுத்துவற்கு அல்ல என்று சொன்னால் நம்பவா போகிறீர்கள். காப்பி பேஸ்ட் பதிவர்களை கௌரவிக்கும் பொருட்டே இப்பதிவு எழுதப்பட்டுள்ளது என்பதை தயவு செய்து உணருங்கள். இதைப்படித்து காப்பி பேஸ்ட் பதிவர்கள் கோபித்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். டென்சன் ஆகாதவர்கள் கமென்ட் போட்டு தங்கள் கருத்துக்களை சொல்லுங்கள். //
எம்புட்டு கொழுப்பு
பன்னிக்குட்டி ராம்சாமி said...
நாளைக்கு வியாழக்கிழமைன்னு சொல்லி இருக்கீங்க, ஆனா இன்னிக்கு புதன்கிழமைன்னு எங்கேயும் சொல்லல..... இது தவறான தகவல்...//
யோவ் அமெரிக்காவுல செவ்வாய்கிழமைதான?
பன்னிக்குட்டி ராம்சாமி said...
கலக்கல் பாஸ்
இன்று என் வலையில்
அது எதற்கு பயன்படும்?//
அது எதற்கு பயன்படும்? சோப்பு போட்டு விளக்கவும் :)
24/7 க்கு பதிலா 3.428571429 ன்னு சொல்லிருக்கலாமே
//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
24/7 க்கு பதிலா 3.428571429 ன்னு சொல்லிருக்கலாமே//
எப்படில்லாம் யோசிக்கிராருப்பா இந்தாளு சிரிப்ப அடக்க முடியல....
//! சிவகுமார் ! said...
F5 கீயை இதுவரை "நீங்க சொன்ன மாதிரி" 50,0௦௦ வாட்டி அமுக்கிட்டேன் ப. ராமசாமி. நீங்க கொஞ்ச நேரம் அமுக்குங்க. இந்த வருஷம் நம்மதான் நம்பர் 1.//
அட இதுதான் சீக்ரட்டா இது தெரியாம போச்சே. வீட்ல என் பொண்ணு சும்மா தான் இருக்கா ஒரு நாளு பூரா F5 அழுத்திகிட்டே இருன்னு சொன்னா போதுமே... அப்ப அடுத்த வாரம் நாம தான் நம்பர் ஒன். ஐடியா குடுத்த சிவாவுக்கு நன்றிப்பா...
///////! சிவகுமார் ! said...
பதிவும் போட்டுவிட்டு அதை பற்றி சம்மந்தமே இல்லாத மாதிரி கமன்ட் போட்டு கலக்கலாக நடிக்கும் அண்ணன் பன்னிக்குட்டி ராமசாமிக்கு இவ்வாண்டிற்கான தேசிய விருது கன்பர்ம்!///////
அடப்பாவிகளா........ ஆனா இப்படி ஒண்ணு போடனும்னு நெனச்சேன்.... சரி பரவால்ல போட்டுட வேண்டியதுதான்....
//////காப்பி பேஸ்ட் பதிவர்களை கௌரவிக்கும் பொருட்டே இப்பதிவு எழுதப்பட்டுள்ளது என்பதை தயவு செய்து உணருங்கள். இதைப்படித்து காப்பி பேஸ்ட் பதிவர்கள் கோபித்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். டென்சன் ஆகாதவர்கள் கமென்ட் போட்டு தங்கள் கருத்துக்களை சொல்லுங்கள். ////////
இது என்ன அநியாயம், கோவிச்சிக்கிறவங்க கமெண்ட் போடக்கூடாதா?
/////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
நாளைக்கு வியாழக்கிழமைன்னு சொல்லி இருக்கீங்க, ஆனா இன்னிக்கு புதன்கிழமைன்னு எங்கேயும் சொல்லல..... இது தவறான தகவல்...//
யோவ் அமெரிக்காவுல செவ்வாய்கிழமைதான?///////
ஆமா கண்டுபுடிச்சிட்டாருய்யா பெரிய கலக்டரு... இன்னிக்கு அமேரிக்காவுல செவ்வாக்கெழம, ஆப்புரிக்காவுல புதன்கெழம......
////// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
கலக்கல் பாஸ்
இன்று என் வலையில்
அது எதற்கு பயன்படும்?//
அது எதற்கு பயன்படும்? சோப்பு போட்டு விளக்கவும் :)////////
எதுவா இருந்தாலும் என் ப்ளாக்கிற்கு போய் 10 வாட்டி F5 ஐ அமுக்கிவிட்டு வந்தால் சோப்பு மட்டுமல்ல, ஆசிட் வைத்தும் விளக்கப்படும்
அடேங்கப்பா...அடங்கப்பன்கப்பா
கலக்குங்க பாஸ்
சோர்வா இருக்கும் போது காப்பி பேஸ்ட் பண்ணலாம்னா விடமாட்டீங்க போல...
விஜிலன்ட் ஸ்கொட் ஆயிட்டீங்க..
@ ! சிவகுமார் !
// பதிவிற்கு ஆலோசனை பிரபாகரன் என்ற உண்மையை போட்டு இருக்கலாம் அண்ணே! //
இந்த பதிவெழுத நான் ஆலோசனை கொடுத்தேன்னு சொன்னா அது எனக்கு பெருமை தான்கறேன்...
ஐ சிப்பு போலீஸ்........
யாருப்பா அது மைனஸ் ஓட்டு போட்டது? சொல்லி இருந்த நாங்களே போட்டு இருப்போம். இதுக்கெல்லாம் டென்சன் ஆக வேற க்ரூப் இருக்கு. நம்பலையா..மேல பாருங்க.ரெண்டாவது மைனஸ் ஓட்டை நாங்களே போட்டுக்கிட்டோம்.
Post a Comment