Thursday, September 29, 2011

எங்கள் ஒரிஜினல் காப்பி பேஸ்ட் பதிவு


முன்னாடி எல்லாம் பிரபல பதிவர்கள்தான் பெரிய பெரிய பத்திரிக்கைல இருந்து காப்பி பேஸ்ட் பண்ணுவாங்க. இப்போத்தான் எல்லாம் மாறிப்போச்சே. நேற்று வந்த பதிவரில் இருந்து பழம் தின்று கொட்டை போட்ட பதிவர்கள் வரை காப்பி பேஸ்ட் போடுகிறார்கள். பெரிய பத்திரிக்கைல இருந்து காப்பி பண்ணதெல்லாம் போயி எங்கே என்ன கிடைக்குதோ சத்தமில்லாம அள்ளிட்டு வந்து போட்டுடுறாங்க. அதுக்கு வர்ர கமெண்ட்டுகள பார்க்கனுமே, அதுக்கே தனிக்கட்டுரை எழுதனும். ஆஹா அருமையான பகிர்வு, நல்ல பகிர்வு, உபயோகமான பகிர்வு நண்பா, சூப்பர் பகிர்வு பாஸ்... கேட்கவே அருமையா இருக்கில்ல? (அடிக்க வராதீங்கண்ணே, நாங்க கூட அந்த மாதிரி அப்பாவியா கமெண்ட் போட்டிருக்கோம்....)

சரி அபடியே இந்த ட்ரெண்டை பிக்கப் பண்ணி நாமலும் எதையாவது காப்பி பேஸ்ட் பண்ணலாம்னா எதுவுமே சிக்க மாட்டேங்கிது. ஏது ஏது இப்படியே போனா அப்புறம் காப்பி பேஸ்ட் பண்ணலைன்னு திரட்டிகள்ல இருந்து கூட ஒதுக்கி வெச்சிடுவாங்களோன்னு எல்லாரும் பயமுறுத்துறாங்க. அதுனால விடிய விடிய நின்னுக்கிட்டே யோசிச்சு யோசிச்சு ஒருவழியா முடிவு பண்ணிட்டோம். மனசை திடப்படுத்திக்குங்க. இனி நாங்களும்  காப்பி பேஸ்ட் பதிவு போடப்போறோம். எப்படியும் ஒரு காப்பி பேஸ்ட் பதிவு போட்டே ஆகறதுன்னு களத்துல இறங்கி உங்களுக்காக ஒரு அருமையான காப்பி பேஸ்ட்டை இங்கே போட்டிருக்கோம். 

பாருங்க, புடிக்கலேன்னா சொல்லுங்க, நாளைக்கு வேற காப்பி பேஸ்ட் போடுறோம்.....

.
.
.

.
.
..



காப்பி






பேஸ்ட்


என்ன சார் இந்த காப்பிபேஸ்ட் ஓகேதானேஇத வெச்சிக்கிட்டு எப்படியாவது எங்களுக்கும் ஒரு ரேங் வாங்கிக் கொடுத்துடுங்க சார். அத வெச்சி அண்ணா நகர்ல இல்லேன்னாலும் அமிஞ்சிக்கரைலயாவது ஒரு ஃப்ளாட் வாங்கிடனும்.

நன்றி:  காப்பி பேஸ்ட் பதிவர்கள்கூகிள் இமேஜஸ்...


எங்கள் பதிவை அனுமதி இன்றி காப்பி பேஸ்ட் செய்து பெரும் பொருள் ஈட்டியவர்கள்:  


....................................................................................................................
            

15 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Sh yapppaaaaaaaaaaaa

பன்னிக்குட்டி ராம்சாமி said...

கண்கலங்க வைக்கும் கடமை உணர்ச்சி........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///எங்கள் பதிவை அனுமதி இன்றி காப்பி பேஸ்ட் செய்து பெரும் பொருள் ஈட்டியவர்கள்: ///////

அண்ணே இந்த வாட்டி மன்னிச்சி விட்ருங்கண்ணே...... நாளைக்கு கீழ நன்றின்னு உங்க பேரை போட்டு உங்களுக்கு நாலு கிரவுண்டு ப்ளாட் வாங்கி கொடுத்துடுறேன்.......

Anonymous said...

நண்பர்களே..எதற்கு இப்படி காப்பி பேஸ்ட் செய்து நேரத்தை வீண் அடிக்கிறீர்கள். உங்களுக்கு சமுதாய பொறுப்பே இல்லையா?

நிரூபன் said...

ஹா....ஹா...
சிட்டுவேசன் தலைப்பில் ஒரு மரண மொக்கைப் பதிவு..
ரசித்தேன் பாஸ்.

கோகுல் said...

நான்லாம் காலைல பேஸ்ட்'க்கப்பரம் தான் காப்பி .நீங்க என்ன காப்பிக்கப்பறம் பேஸ்ட் பண்றீங்க?பேட் பாய்.

Anonymous said...

Control C ...Control V... க்கு 20 times backspace அடிங்க ...-:)

IlayaDhasan said...

இப்படி தான் ஏதாவது லொள்ளு இருக்கும்னு மணி அடிச்சது,என்னை நீங்க ஏமாத்தலை.

நான் சிரிச்சா தீபாவளி - அனுஷ்காவின் அடுத்த அட்டாக்

ம.தி.சுதா said...

////என்ன சார் இந்த காப்பி, பேஸ்ட் ஓகேதானே?////

இல்ல பேஸ்ட்டுக்குப் பிறகு தான் காப்பி..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
Fashion Show ல் கவிண்டு விழுந்த அழகிகள் படங்கள்

Avainayagan said...

"உங்களுக்காக ஒரு அருமையான காப்பி பேஸ்ட்டை இங்கே போட்டிருக்கோம்".
கடைசியா "எங்களுக்காக"னு சொல்லிட்டீங்களே!

கால்நடை மருத்துவர் பக்கம் said...

எப்படியோ நெஸ்காஃபி மற்றும் கோல்கேட் க்கு நல்ல விளம்பரம் தந்துவிட்டீர்கள்! ஏதாவது கிடைத்ததா?

காட்டான் said...

ஆகா சிவகுமாரின் கடைமை உணர்ச்சி கண்கலங்க வைச்சிட்டையா..!!?

Anonymous said...

Data Entry Jobs இப்பொழுது இலவசமாகவும் கிடைக்கிறது !

http://bestaffiliatejobs.blogspot.com

THAVEETHU GCE said...

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா.........

Unknown said...

hahaha :)