Monday, September 19, 2011

பதிவர் சந்திப்பு – பாகம் இரண்டு


அன்புள்ள வலைப்பூவிற்கு,

எது முதல் பாகம் என்று தெரியாதவர்களும், முதல் பாகத்தை படிக்காதவர்களும் இங்கே போய் படித்துவிட்டு வரவும்.

கண்ணா லட்டு தின்ன ஆசையா...?
பதிவர்களுக்கு ஓர் நற்செய்தி. பதிவர்களின் படைப்புகளை தேர்ந்தெடுத்து வெள்ளிநிலா என்ற மாத இதழில் அச்சிட்டு வெளியிடுகிறார் நம்ம ஷர்புதீன். இந்த மாத இதழ் முற்றிலும் இலவசமாக உங்கள் வீடு தேடிவர, உங்கள் வீட்டு முகவரி, தொலைபேசி எண் (விருப்பமிருந்தால் மட்டும்), பிறந்த தேதி (வாழ்த்து தெரிவிப்பதற்காக) ஆகிய விவரங்களை vellinila@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பினால் போதும்.

கண்ணா ரெண்டாவது லட்டு தின்ன ஆசையா...?
இதே பாணியில் பதிவர் குடந்தை மணியும் பதிவர்களின் படைப்புகளை அச்சிட்டு மாத இதழாக வெளியிட்டிருக்கிறார். (ஹி... ஹி... அட்டைப்படத்தில் நம்மாளு காஜொள்ளு...). தனி இதழின் விலை ரூ.5 மட்டுமே. சந்தா கட்ட விரும்புபவர்களும் கட்டலாம். இதைப் பற்றிய மேலும் விவரங்கள் தெரிந்துக்கொள்ளவும், சந்தாதாரராகவும், உங்கள் படைப்புகளை பரிந்துரைக்கவும் thambaramanbu@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.

பதிவர்களை ஊக்கப்படுத்தும் ஷர்புதீனுக்கும், குடந்தை மணிக்கும் எங்கள் நன்றியும் வாழ்த்துக்களும். இனி பதிவர் சந்திப்பு பாகம் இரண்டு...

வருகை பதிவேட்டில் தன்னுடைய முறை வரும்போது நாலஞ்சு வலைப்பூ இருக்கே எதை எழுதுறதுன்னு கேட்டார் தம்பி கூர்மதியன். யெ”ள”வெனப் புலர்வுகள் எழுதுங்கன்னு சொன்னேன். யோவ் அது “யெள”வெனப் புலர்வுகள் என்று அப்பாவியாய் முகத்தை வைத்துக்கொண்டு அவர் சொன்னதைப் பார்க்க பாவமாகத்தான் இருந்தது. சரி விடுங்க தம்பி, நாங்கல்லாம் “ஒள”வையாரையே ஒ”ள”வையார்ன்னு படிச்சவங்கன்னு அசடு வழிந்தபடி சொல்லி சமாளித்தேன்.

சர்க்கஸ் சிங்கம் தனது வழக்கமான பாணியில் அதிரடியாக பேச ஆரம்பித்தார். தமிழ் சினிமாவிலேயே முதல்முறையாக உண்டியல் குலுக்கி சினிமா எடுக்குறது நாங்களாதான் இருக்கும் என்று ஃபீல் பண்ணார். (அவர் சொன்னது அந்த உண்டியல் குலுக்கல் அல்ல). திருநங்கைகள் தொடர்பாக உருக்கமான சினிமா ஒன்றை இதுவரை தமிழ் சினிமாவில் யாரும் எடுக்காத முறையில் எடுத்துக்கொண்டிருப்பதாக சொன்னார். பட வினியோகத்தை பற்றி இத்தனை நாள் கவலைப்பட்டுக் கொண்டிருந்தேன். இப்பதான் இருக்கவே இருக்காரே கேபிள் சங்கர் அப்படின்னு பத்த வச்சிட்டு படக்குன்னு சீட்ல போய் உட்காந்துட்டார்.

லக்கிலுக் யுவகிருஷ்ணா புதிய பதிவர்களுக்கு சில டிப்ஸ் தந்தார். தலைப்புக்கள் ரத்தினச்சுருக்கமாக, முடிந்தவரைக்கும் ஒரே வார்த்தையில் இருக்க வேண்டுமென்று குறிப்பிட்டார். மேலும், சில பதிவர்கள் நாராசமாக தலைப்பு வைப்பதாக சொன்ன அவர், ஒரு நம்பர் ஒன் பதிவரின் தலைப்பை சொல்லி கலாய்க்கவும் செய்தார். (இந்த பிட்டு போதுமா...?) இடுகையின் அளவு இருநூற்று ஐம்பது வார்த்தைகளிலிருந்து ஐநூறு வார்த்தைக்களுக்குள் இருந்தால் மட்டுமே நிறைய பேர் படிப்பார்கள். இல்லையென்றால் ஸ்க்ரோல் பட்டன்தான் என்று உண்மையை போட்டு உடைத்தார்.

இதேபோல, பதிவுலகத்தின் தீவிர வாசகர் என்று அறியப்படும் வரதராஜன் சாரும் பதிவர்களுக்கு சில டிப்ஸ் கொடுத்தார். கலவை பதிவுகள் எழுதும் போது சீரியஸான விஷயங்களையும், நகைச்சுவையான விஷயங்களையும் ஒரே இடுகையில் எழுதுவது ஒத்துப்போகவில்லை என்று சொன்னார். மேலும் கேபிள் மாதிரி எளுத்தாளர் ஆகணும்ன்னு லட்சியம் இருக்குறவங்க எந்த வலைப்பூவை படித்தாலும் அதிலுள்ள அருமையான சொல்லாடல்களை நோட்ஸ் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார்.

சதீஷ் – மாஸ் சூர்யவம்சம் சரத்குமார் மாதிரி வார்த்தைக்கு வார்த்தை ஜாக்கியை புகழ்ந்து பேசியதைப் பற்றி கடந்த இடுகையிலேயே குறிப்பிட்டிருந்தேன். அதுபோக, பேச்சு வாக்கில் அநேகமாக இங்கே வந்திருப்பவர்களில் நான்தான் ரொம்ப சின்ன பையன். எனக்கு இருபது வயசுதான்னு ஒரு அறிக்கை விட்டார். (இந்தமாதிரி எல்லாம் ஸ்டேட்மென்ட் விட்டா பதிவுலக நாட்டாமைங்க கும்மிடுவாங்க தம்பி. பாதிக்கப்பட்டவன் சொல்றேன் கேட்டுக்கோ). உடனே கூட்டத்தில் இருந்து எனக்கு பதினெட்டு வயசுதான்னு ஒரு குரல் வர சதீஷ் பல்ப் வாங்கினார்.

ஸோ, வந்திருந்தவர்களில் செம யூத் பதிவர் யார்...?
நாஸ்தென்கா (???) என்ற பெயரில் வலைப்பூ நடத்தி வரும் ரதியழகன் (ஒரிஜினல் பெயர் பார்த்திபன்) தான் அந்த பதினெட்டு வயது குரல். கணினி, இணையம் இல்லாத காரணத்தினால் அதிகம் எழுத முடியாமல் எப்பொழுதாவது பிரவுசிங் சென்டருக்கு போய் பதிவெழுதும் ரதியழகனை பாராட்டியே ஆகவேண்டும். மிகப்பெரிய எழுத்தாளராக வரவேண்டும் என்ற அவரது எண்ணம் ஈடேற வாழ்த்துவோம்.

யார் இந்த மங்குனி அமைச்சர்...?
உள்ளே நுழைந்த ஒவ்வொருவரையும் நான் எனது சுய அறிமுகத்தோடு வரவேற்றுக் கொண்டிருந்தேன். ஒருவர் மட்டும் கொஞ்சம் முறைப்பாகவும், விறைப்பாகவும் வந்தார். சரி ஒருவேளை எலக்கியவாதியா இருக்கும்ன்னு நினைச்சு ஒதுங்கிட்டேன். அறிமுகப்படலத்தின் போதும் அமைதியாகவே அமர்ந்திருந்த அவரை கேபிள் வாங்க வாங்கன்னு வலியுறுத்தி அழைத்ததும் சாமி... எலக்கியவாதியேதான்னு முடிவு பண்ணிக்கிட்டேன். முன்னே போய் நின்னவர் பொசுக்குன்னு நான் மங்குனி அமைச்சர்ன்னு ப்ளாக் வச்சிருக்கேன்னு சொல்லிட்டார். கூட்டத்தில் ஒரு பரபரப்பு, ஒரு சலசலப்பு. மறுபடியும் வந்து அமர்ந்தவரிடம் பேசலாம் என்று நினைத்தேன். ஆனால் அவர் டீ கொண்டு வந்த பையனை மடக்கி நீ ஒரு பிரபல பதிவரா என்று கலாய்த்துக்கொண்டிருந்தார். ஆள விடுங்கடா சாமின்னு ஓடி வந்துட்டேன்.

பதிவர் சந்திப்பு முடிந்ததும் ஒயின்ஷாப்புக்கு போன மூன்று பிராப்ள பதிவர்கள் யார்...?

அங்கே நடந்தது என்ன...?

யார் டவுசரை யாரு கிழிச்சது...?

அன்னை சோனியா...? அஜீத் – விஜய்...?

இதுபோன்ற கேள்விகளுக்கு விடை தாங்கிய இடுகை எனது வலைப்பூவில் இன்னும் சில தினங்களில்...

ஆக, பதிவர் சந்திப்பில் வெறும் கூத்தும் கும்மாளமும் தான் நடந்ததா என்று கேட்பவர்களுக்கு, பதிவர் சந்திப்பில் நடந்த சீரியஸ் விஷயங்களைப் பற்றி “சீரிய” பதிவர் சிவகுமார் எழுதுவார்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

53 comments:

இராஜராஜேஸ்வரி said...

பதிவர் சந்திப்புக்கு வாழ்த்துக்கள்.

சி.பி.செந்தில்குமார் said...

>>தலைப்புக்கள் ரத்தினச்சுருக்கமாக, முடிந்தவரைக்கும் ஒரே வார்த்தையில் இருக்க வேண்டுமென்று குறிப்பிட்டார். மேலும், சில பதிவர்கள் நாராசமாக தலைப்பு வைப்பதாக சொன்ன அவர், ஒரு நம்பர் ஒன் பதிவரின் தலைப்பை சொல்லி கலாய்க்கவும் செய்தார். (இந்த பிட்டு போதுமா...?)


hi hi ஹி ஹி நன்றி.. அவர் அளவிற்கு எனக்கு அனுபவமும், வயதும், படிப்பும் இல்லை.. இனி கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக்கொள்கிறேன்

! சிவகுமார் ! said...

வந்ததிலேயே இளம் பதிவரான பார்த்திபனை சந்தித்தது மறக்க முடியாத நிகழ்வு. பேச்சில் தெளிவும், விஷய ஞானமும் கொண்ட அந்த புதுச்சேரி நண்பனின் பங்கேற்பு குறிப்பிடத்தக்கது.

! சிவகுமார் ! said...

சி.பி. சார் உங்களை கலாய்க்க ஐடியா குடுத்ததே பிரபாகரன்தான்.

வெளங்காதவன் said...

:)

#சிபி அண்ணாச்சியோட டவுசர ஏன்பா அவுக்குறீக?

Prabu Krishna said...

எல்லாருக்கும் கும்மாங்குத்து தானா ?

வைரை சதிஷ் said...

வாழ்த்துக்கள்

கே.ஆர்.பி.செந்தில் said...

இன்னும் எத்தனை பாகம் எழுதுறதா உத்தேசம்..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

பதிவர் சந்திப்புன்னா இப்படித்தான் இருக்குமா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அப்போ மங்குனி அமைச்சர் எலக்கியவாதி இல்லையா? என்கிட்ட வேற மாதிரி சொன்னாரே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////பதிவர் சந்திப்பு முடிந்ததும் ஒயின்ஷாப்புக்கு போன மூன்று பிராப்ள பதிவர்கள் யார்...?//////

மூணு பேருதானா?

suryajeeva said...

அருமை..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

மீட்டிங்குக்கு போனாலும் அடி, போகலேன்னாலும் அடி..... பாவம்யா அந்த நம்பர் ஒண்ணு......

அஞ்சா சிங்கம் said...

பிரபலம் என்றாலே ப்ராபலம்தான் ............
பாவம் அவரு எல்லாரும் மீட்டிங் போட்டு கலாய்கிறாங்க..................

N.H.பிரசாத் said...

பதிவர் சந்திப்பின் இரண்டாம் பாகம் செம சூப்பரா இருக்கு. மூன்றாம் பாகத்தை கூடிய விரைவில் எதிர்பார்க்கிறேன்.

MANO நாஞ்சில் மனோ said...

எலேய் ஒயின் ஷாப் போயி வேட்டி கிளிஞ்சிவிங்க யாரெல்லாம்...???

MANO நாஞ்சில் மனோ said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
மீட்டிங்குக்கு போனாலும் அடி, போகலேன்னாலும் அடி..... பாவம்யா அந்த நம்பர் ஒண்ணு......//


போற இடமெல்லாம் அடிவான்குறான்ய்யா ரொம்ப நல்லவன் ஹி ஹி...

MANO நாஞ்சில் மனோ said...

இன்னும் அந்த வடை ஸ்டோரி சொல்லவே இல்லையே...??

மாலதி said...

வாழ்த்துக்கள்

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

பதிவர் சந்திப்பு முடிந்ததும் ஒயின்ஷாப்புக்கு போன மூன்று பிராப்ள பதிவர்கள் யார்...?///

அடப்பாவிகளா எனக்கு சொல்லவே இல்லையே...

குடந்தை அன்புமணி said...

பதிவர் சந்திப்பு முடிந்த பின்னும் சிலர் தயங்கி தயங்கி நின்னது (ஒயின்ஷாப்) இதுக்குத்தானா?

குடந்தை அன்புமணி said...

பதிவர் தென்றலை கடைக்கோடி பதிவர்களுக்கும் கொண்டு சேர்ப்பித்தமைக்கு நன்றி.

யானைகுட்டி @ ஞானேந்திரன் said...

பதிவர் சந்திப்புக்கு
வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள்.

Anonymous said...

வாழ்த்துக்கள்???

Philosophy Prabhakaran said...

@ இராஜராஜேஸ்வரி
// பதிவர் சந்திப்புக்கு வாழ்த்துக்கள். //

ரொம்ப லேட்டா சொல்றீங்களே மேடம்...

Philosophy Prabhakaran said...

@ சி.பி.செந்தில்குமார்
// hi hi ஹி ஹி நன்றி.. அவர் அளவிற்கு எனக்கு அனுபவமும், வயதும், படிப்பும் இல்லை.. இனி கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக்கொள்கிறேன் //

தாத்தாவுக்கு தன்னடக்கத்த பாரு... அனுபவம், படிப்பெல்லாம் ஓகே... வயது...??? உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியல...

Philosophy Prabhakaran said...

@ ! சிவகுமார் !
// வந்ததிலேயே இளம் பதிவரான பார்த்திபனை சந்தித்தது மறக்க முடியாத நிகழ்வு. //

ஆமாம் தல எனக்கும் கொஞ்சம் பொறாமையா தான் இருந்தது...

Philosophy Prabhakaran said...

@ ! சிவகுமார் !
// சி.பி. சார் உங்களை கலாய்க்க ஐடியா குடுத்ததே பிரபாகரன்தான். //

நான் ஐடியா கொடுத்திருந்தா இதைவிட அட்டகாசமா அட்ராசக்கன்னு சொல்ற அளவுக்கு கொடுத்திருப்பேன்...

Philosophy Prabhakaran said...

@ வெளங்காதவன்
// #சிபி அண்ணாச்சியோட டவுசர ஏன்பா அவுக்குறீக? //

நான் இல்லைங்க... எல்லாம் அதிர்ஷ்ட பார்வை கொண்ட அந்த பதிவர்தான்...

Philosophy Prabhakaran said...

@ Prabu Krishna
// எல்லாருக்கும் கும்மாங்குத்து தானா ? //

வந்திருந்தா உனக்கும்தான்...

Philosophy Prabhakaran said...

@ வைரை சதிஷ்
// வாழ்த்துக்கள் //

நன்றி

Philosophy Prabhakaran said...

@ கே.ஆர்.பி.செந்தில்
// இன்னும் எத்தனை பாகம் எழுதுறதா உத்தேசம்.. //

முடிக்கனும்ன்னு ஆசைதான்... எல்லா மேட்டரையும் கவர் பண்ண வேணாமா...?

Philosophy Prabhakaran said...

@ பன்னிக்குட்டி ராம்சாமி
// பதிவர் சந்திப்புன்னா இப்படித்தான் இருக்குமா? //

மெரண்டுடாதீங்க தல... உங்களுக்கு கண்டிப்பா ஸ்பெஷலான, அன்பான வரவேற்பு தருவோம்...

Philosophy Prabhakaran said...

@ பன்னிக்குட்டி ராம்சாமி
// அப்போ மங்குனி அமைச்சர் எலக்கியவாதி இல்லையா? என்கிட்ட வேற மாதிரி சொன்னாரே? //

உங்கக்கிட்ட என்னா சொன்னாரு...???

Philosophy Prabhakaran said...

@ பன்னிக்குட்டி ராம்சாமி
// மூணு பேருதானா? //

நல்ல கேள்வி... முக்கால்வாசி பேர் அங்கேதான் போயிருப்பாங்க... ஆனா தனித்தனி குழுவா... என்ன செய்யுறது... சிலர் தி.நகர்ல இருக்குற வடபழனி பிராஞ்சுக்கு போய்தான் சரக்கடிப்பேன்னு அடம் பிடிக்கிறாங்க... மூத்த பதிவர் ஒருத்தர் வரலை... வந்திருந்தா நமக்கு முன்னாடி போய் துண்டு போட்டிருப்பார்...

Philosophy Prabhakaran said...

@ suryajeeva
// அருமை.. //

நன்றி...

Philosophy Prabhakaran said...

@ பன்னிக்குட்டி ராம்சாமி
// மீட்டிங்குக்கு போனாலும் அடி, போகலேன்னாலும் அடி..... பாவம்யா அந்த நம்பர் ஒண்ணு...... //

நம்பர் 1 பதிவர் நம்பர் 1 போகும்வரை ஓயமாட்டோம்...

Philosophy Prabhakaran said...

@ அஞ்சா சிங்கம்
// பிரபலம் என்றாலே ப்ராபலம்தான் ............
பாவம் அவரு எல்லாரும் மீட்டிங் போட்டு கலாய்கிறாங்க.................. //

கீழே படிச்சீங்களா தல... அன்னை சோனியா...?

Philosophy Prabhakaran said...

@ N.H.பிரசாத்
// பதிவர் சந்திப்பின் இரண்டாம் பாகம் செம சூப்பரா இருக்கு. மூன்றாம் பாகத்தை கூடிய விரைவில் எதிர்பார்க்கிறேன். //

அது கொஞ்சம் வில்லங்கமான பாகமாச்சே... பரவாயில்லையா...

Philosophy Prabhakaran said...

@ MANO நாஞ்சில் மனோ
// எலேய் ஒயின் ஷாப் போயி வேட்டி கிளிஞ்சிவிங்க யாரெல்லாம்...??? //

சாரே... யாரும் வேட்டி கட்டிட்டு வரலை... எல்லோரும் டவுசர் தான்...

Philosophy Prabhakaran said...

@ MANO நாஞ்சில் மனோ
// போற இடமெல்லாம் அடிவான்குறான்ய்யா ரொம்ப நல்லவன் ஹி ஹி... //

நேர்ல வந்தா இன்னும் நிறைய தருவோம்...

Philosophy Prabhakaran said...

@ MANO நாஞ்சில் மனோ
// இன்னும் அந்த வடை ஸ்டோரி சொல்லவே இல்லையே...?? //

எந்த வடை தலைவரே... ஒன்னும் புரியலையே...

Philosophy Prabhakaran said...

@ மாலதி
// வாழ்த்துக்கள் //

டூ லேட் மேடம்...

Philosophy Prabhakaran said...

@ !* வேடந்தாங்கல் - கருன் *!
// அடப்பாவிகளா எனக்கு சொல்லவே இல்லையே... //

உங்களுக்கு தெரியாமலா... நீங்கதான் கடை வாசல் வரைக்கும் வண்டியில கொண்டுபோய் விடட்டுமான்னு கேட்டு கண்ணடிச்சீங்களே...

Philosophy Prabhakaran said...

@ குடந்தை அன்புமணி
// பதிவர் சந்திப்பு முடிந்த பின்னும் சிலர் தயங்கி தயங்கி நின்னது (ஒயின்ஷாப்) இதுக்குத்தானா? //

நான்தான் அப்பவே சொன்னேனே... கடையை சாத்திடுவாங்க சீக்கிரம் முடிங்கன்னு...

Philosophy Prabhakaran said...

@ குடந்தை அன்புமணி
// பதிவர் தென்றலை கடைக்கோடி பதிவர்களுக்கும் கொண்டு சேர்ப்பித்தமைக்கு நன்றி. //

கொஞ்சமாவது ரெஸ்பான்ஸ் கிடைச்சதா சார்...

Philosophy Prabhakaran said...

@ யானைகுட்டி @ ஞானேந்திரன்
// பதிவர் சந்திப்புக்கு
வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள். //

தாமதமா சொன்னாலும்
நன்றி.
நன்றி.
நன்றி.

Philosophy Prabhakaran said...

@ ரெவெரி
// வாழ்த்துக்கள்??? //

பகிர்வுக்கு நன்றின்னு போடணும்ன்னு கூட தெரிய மாட்டேங்குது... என்ன தல பண்றது...

Philosophy Prabhakaran said...

@ கே.ஆர்.பி.செந்தில், பன்னிக்குட்டி ராம்சாமி, அஞ்சா சிங்கம்

அய்யா பெரிய மனுஷங்களா... இந்தக்கடைக்கு நீங்களும் ஒனருன்னுற நெனப்பு கொஞ்சமாவது இருக்குதா... ஏதாவது பதிவு போட்டாதான் என்னவாம்...

Philosophy Prabhakaran said...

@ ! சிவகுமார் !
// ஆக, பதிவர் சந்திப்பில் வெறும் கூத்தும் கும்மாளமும் தான் நடந்ததா என்று கேட்பவர்களுக்கு, பதிவர் சந்திப்பில் நடந்த சீரியஸ் விஷயங்களைப் பற்றி “சீரிய” பதிவர் சிவகுமார் எழுதுவார். ///

தல... இந்த கடைசி மூணு வரிகளை படிக்கலையா அல்லது படிக்காதது மாதிரி எஸ்கேப்பா... பொறுப்பை உங்ககிட்ட கொடுத்திட்டேன்... அவ்வளவுதான்...

அஞ்சா சிங்கம் said...

அன்னை சோனியா மேட்டர் கொஞ்சம் வில்லங்கமானது.
பார்த்து பக்குவமா எழுதுங்க ....................
இல்லைன்னா நம்மளுக்கு ஆட்டோ இல்லை ஏரோப்லனே வரும் ........
என்னால உண்ணாவிரதம் கூட இருக்க முடியாது .................

Philosophy Prabhakaran said...

@ அஞ்சா சிங்கம்
// அன்னை சோனியா மேட்டர் கொஞ்சம் வில்லங்கமானது.
பார்த்து பக்குவமா எழுதுங்க ....................
இல்லைன்னா நம்மளுக்கு ஆட்டோ இல்லை ஏரோப்லனே வரும் ........
என்னால உண்ணாவிரதம் கூட இருக்க முடியாது ................. //

வில்லங்கமானதுன்னு தெரியும்... நாசூக்கா உங்கள கோர்த்து விட்டுட்டு நான் எஸ்கேப் ஆயிடுவேன்...

mohan said...

நன்றி சகோ