Tuesday, September 13, 2011

பதிவர் சந்திப்பு – வருகை பதிவேடு


அன்புள்ள வலைப்பூவிற்கு,

எங்கே...? எங்கே...? என்று எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த பதிவர் சந்திப்பு குறித்த இடுகை இதோ உங்களுக்காக...

நம்ம ஊர் மாநகர பேருந்துகளின் மீதுகொண்ட அவநம்பிக்கையால் கொஞ்சம் முன்கூட்டியே வீட்டில் இருந்து கிளம்பி முதல் ஆளாக டிஸ்கவரி புக் பேலஸுக்கு சென்றிருந்தேன். அங்கே எனக்கு முன்னால் யாரும் வந்திருக்கவில்லை. ஆக, மீ த ஃபர்ஸ்ட், வடை, போண்டா, பஜ்ஜி எல்லாம் எனக்குத்தான்.

வேறு வழியில்லாமல் சீக்கிரமாக வந்திருந்த அஞ்சாசிங்கம், இன்னும் யாரும் வரவில்லை என்று சொன்னதும் உடன் வந்திருந்த நண்பருடன் ஒயின்ஷாப்புக்கு ஜூட்.

சிவகுமாருக்கு போன் செய்து எங்கே இருக்கீங்கன்னு கேட்க அவர் கே.கே.நகர் பஸ் ஸ்டாப்பில் இருக்கேன் என்று சொன்னார். யோவ்... நானும் கே.கே.நகர் பஸ் ஸ்டாப்பில் தான் இருக்கிறேன் என்று சொல்லிக்கொண்டே திரும்பிப்பார்த்தால் சிவா “தலைவர்” கவுண்டமணி படம் போட்ட பேனருடன் பவர் ஸ்டாராக நின்றுக்கொண்டிருந்தார்.

அஞ்சாசிங்கமும் அவரது நண்பரும் ஒரு மார்க்கமாக திரும்பி வர டீக்கடையில் ஒரு மினி பதிவர் சந்திப்பு ஆரம்பமானது. அப்போது நீங்க எல்லாம் பிளாக்கர்ஸா என்றபடி என்ட்ரி கொடுத்தார் பாண்டிச்சேரியில் இருந்து வெறும் கையுடன் வந்து ஏமாற்றமளித்த கோகுல்.

சிறிது நேரத்தில் “டிஸ்கவரி புக் பேலஸ்” வேடியப்பன் வர, நாங்கள் அவரை பின்தொடர்ந்தோம். இதற்கு முந்தய தலைமுறை பதிவர்கள் எனக்கு அமோக ஆதரவு தந்தார்கள். இப்போது அடுத்த தலைமுறை பதிவர்கள் வந்திருக்கிறீர்கள் உங்களுடைய ஆதரவும் எனக்கு தேவை என்று அநியாயத்திற்கு எஸ்.ஏ.ராஜ்குமார் மியூசிக் போட்டார்.

பதிவர் சந்திப்பு வழக்கமாக நடக்கும் முதல் மாடியில் அல்லாமல் இரண்டாவது மாடியில் அமைந்திருந்தது ஏமாற்றமாக இருந்தது அந்த அறையை பார்க்கும் வரை. அந்த அளவிற்கு நமக்காகவே வடிவமைத்தது போலிருந்த அந்த அறையை நமக்கு தந்து உதவிய “டிஸ்கவரி புக் பேலஸ்” வேடியப்பன் அவர்களுக்கும், “நடிப்பு பட்டறை” உரிமையாளருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

உள்ளே சென்று விழா “அரங்கத்தினை” ஏற்பாடு செய்துக்கொண்டிருக்க ஒவ்வொரு பதிவர்களாக வரத்தொடங்கினர். வந்திருந்தவர்கள் ஆர்டர் முன்னே பின்னே இருக்கும் மன்னிச்சூ...

ஏதோ எனக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்பதுபோல் வந்து அமைதியாக அமர்ந்திருந்தார் பழம்பெரும் பதிவர் அண்ணாமலை சுவாமி. அரங்கிற்குள் முறைப்படி முதல் வருகை தந்தவர் அவரே.

பதிவர்களின் படைப்புகளை இதழாகவும் மலராகவும் வெளியிட்டு பதிவர்களை ஊக்கப்படுத்தி வரும் ஷர்புதீனும், குடந்தை அன்புமணியும் அவரவர் இதழ்களை வந்திருந்தவர்களிடம் விநியோகித்தபடி இருந்தனர். (இது பற்றிய விவரம் அடுத்த பாகத்தில்...)

தம்பி கூர்மதியன் உள்ளே நுழையும்போதே பெண் பதிவர் ஒருவருடன் போன் பேசியபடியே வந்தார். போனை வைங்க பாஸ்ன்னு எவ்ளோ சொல்லியும் கேட்கலை. (பொறாமை... லைட்டா...?)

தமிழ்மணத்தை கலக்கிக்கொண்டிருக்கும் பதிவுலக இரட்டைக்குழல் துப்பாக்கி கவிதை வீதி செளந்தரும், வேடந்தாங்கல் கருனும் ஜோடியாக உள்ளே வர, அதிஷா – லக்கிக்கு அப்புறம் சக்சஸ்ஃபுல் பதிவுலக ஜோடி நீங்கதான்னு ஷர்புதீன் கொளுத்திப்போட்டார்.

பதிவர் சந்திப்பிற்காக மதுரையிலிருந்து வந்திருந்த அஞ்சாநெஞ்சன் மணி கையில் “பதிவர் தென்றல்” புத்தகத்தை கொடுத்ததும் அட்டைப்படத்தில் இருக்கும் காஜலை பார்த்து லிட்டர் கணக்கில் ஜொள்ளு விட்டபடி வேறொரு உலகத்திற்கு சென்றுக்கொண்டிருந்தார்.

மனதளவில் நானும் யூத்துதான் என்று தலைமுடிக்கு டை அடிக்காமல் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கோடு “மங்காத்தா” அஜீத் மாதிரி அதிரடியாக வருகை தந்தார் சென்னை பித்தன்.

சிறிது நேரத்தில் ஜாக்கியின் சிஷ்யகேடி... ச்சே... சிஷ்யகோடி சதீஷ் மாஸ் (மாஸ் என்ற வார்த்தை எங்கேயும் மிஸ் ஆகக்கூடாதென்று பலமுறை கேட்டுக்கொண்டார்) உள்ளே வந்து ஓரமாக அமர்ந்துக்கொண்டார். உங்க தலைவரு ஜாக்கி வாராரு... பக்கத்துல ஒரு சீட் போட்டு வைங்கப்புன்னு சொன்னதும் அந்த முகத்தில் ஃபேர் அன்ட் லவ்லி போடாமலே ஒரு பொலிவு பிறந்தது.

முதல் ஆளாக வரவேண்டிய கே.ஆர்.பி செந்திலும், கேபிளும் சாவகாசமாக வந்து சேர்ந்தனர். (இவ்வளவு வயசாகியும் பொறுப்பு இல்ல). வந்ததிலிருந்தே “நானும் ரவுடிதான்” வடிவேலு மாதிரி “நானும் யூத்துதான்... நானும் யூத்துதான்...” என்று கேபிள் நடுஅரங்கில் நடனமாடிக்கொண்டிருந்தார்.

தெருவுக்கு தெரு “யூத்” பதிவர் சந்திப்பு என்று விளம்பரப்படுத்தியதில் (வயதில்) மூத்த பதிவர்கள் நான் வரலைப்பா என்று பின்வாங்க ஆரம்பித்தார்கள். எனவே ஃபேஸ்புக்கில் “புதிய தலைமுறை” பதிவர்கள் சந்திப்பு என்று விளம்பரப்படுத்தினேன். அதைப் பார்த்து புதிய தலைமுறை பத்திரிகை / தொலைக்காட்சி சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி என்று நினைத்து வந்திருந்தார் மலர் விழி மேடம். அசடு வழிந்தபடி அவரையும் வரவேற்று அமர்த்தினோம்.

பதிவுலக சுஜாதா லக்கிலுக் யுவகிருஷ்ணா அதிஷா இல்லாமல் தனியாக வந்திருந்தது ஏழு அதிசயங்களில் ஒன்றாகத்தான் இருந்திருக்கும். (அவருடைய வலைப்பூவில் சுட்ட வரிகள்). பதிவர் கும்மி சார்பாக சில சீரியஸான விஷயங்கள் பற்றி பேசவும் விளக்கவும் உருப்புடாதது நரேன் வந்திருந்தார். அவர் பேசிய சீரியஸ் விஷயங்கள் – அடுத்த பாகத்தில்...

முதல் மாடியில் துணை இயக்குனர்கள் கருத்தரங்கமும், இரண்டாவது மாடியில் பதிவர் சந்திப்பும் நடைப்பெற்றதால் சர்க்கஸ் சிங்கம் இங்குமங்கும் தாவிக்கொண்டிருந்தார்.

அறிமுகப்படலம் விறுவிறுப்பாக நடந்துக்கொண்டிருக்க, திடீரென மொத்தக்கூட்டமும் ஒரு திசையை நோக்கி திரும்ப, அங்கே பாட்ஷா ரஜினிகாந்த் மாதிரி பின்னாடி நான்கு பேரோடு ஜாக்கி சேகர் வந்துக்கொண்டிருந்தார். அவர் பத்தாம் வகுப்பில் 277/500 மார்க் மட்டுமே வாங்கியதால் அவருக்கு கடைசி வரிசை ஒதுக்கப்பட்டது.

“வலைமனை” சுகுமார், ரோமியோ, பலே பிரபு, ஜில்தண்ணி யோகேஷ், அதிஷா, டான் அஷோக், சிரிப்பு போலீஸ் ரமேஷ் உட்பட பலர் நிகழ்ச்சிக்கு கட்டாயம் வருவதாக சொல்லிவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டனர்.

இதில் “வலைமனை” சுகுமார் தந்த ஏமாற்றம் பெரியது. வழக்கமாக பதிவர் சந்திப்பு என்றால் சுகுமார் கேமராவுடன் வந்து “கோ” பட ஹீரோ ஜீவா மாதிரி போட்டோவா எடுத்துத்தள்ளுவார். அதனால்தான் சிவா ஒவ்வொரு முறை போட்டோ எடுப்பது பற்றி கேட்டபோதும் சுகுமார் வருவார் கவலைப்படாதீங்க என்று நெஞ்சை நிமிர்த்திச் சொன்னேன். ப்ச் போங்க சுகுமார்...!

ஆனால், இதோ நான் கொண்டுவந்திருக்கிறேன் என்று தனது டிஜிட்டல் கேமராவால் போட்டோக்களை சுட்டுக்கொண்டிருந்தார் “ரெட்ஹில்ஸ்” பாலா. சுகுமார் அளவுக்கு டெடிகேஷன் இல்லையென்றாலும் அவர் கேமரா கொண்டுவராமல் இருந்திருந்தால் இந்த பதிவர் சந்திப்பு வரலாற்றில் பதியப்படாமல் போயிருக்கலாம்.

அதே போல மங்குனி அமைச்சர், ஒளிப்பதிவாளர் விஜய் ஆர்ம்ஸ்ட்ராங் உட்பட சிலர் எதிர்பாராத விதம் வருகை தந்து நமக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்கள்.

கிட்டத்தட்ட நிகழ்ச்சி முடியும் தருவாயில் சுரேகா சுந்தர் கூலிங் கிளாஸ் சகிதம் உள்ளே நுழைந்தார். அவர் தாமதமாக வந்த காரணத்தினால் அவரது ஆஸ்தான அறிவிப்பாளர் பணியை கே.ஆர்.பியும் கேபிளும் பகிர்ந்துக்கொண்டார்கள்.

வாசகர் வட்டம் சார்பாக வரதராஜன், செல்வினின் நண்பர் சதீஷ், சிவகுமாரின் நண்பர் ராம் குமார், வேடியப்பனின் விருந்தினர் டாக்டர் மணியன், சாம்ராஜ்ய ப்ரியன், பாண்டி ஆகியோர் வந்திருந்தனர்.

இவர்கள் தவிர பதிவர்கள் எல்.கே., மயில் ராவணன், ந.ர.செ.ராஜ்குமார், ரதியழகன், வில்லன், ஸ்டாலின் ஃபெலிக்ஸ், பிரதீப் குமார், வே.ராமசாமி, யுவபாரதி, பரமேஸ்வரி, லக்ஷ்மி நாராயணன், அப்புறம் பதிவர் சங்க சட்ட ஆலோசகர் சாமித்துரை, த.மு.எ.க.ச சார்பாக மா.பசுபதி உட்பட மொத்தம் 43 பேர் வருகை தந்திருந்தனர்.

யார் இந்த மங்குனி அமைச்சர்...?

வந்திருந்தவர்களில் செம யூத் பதிவர் யார்...?

உருப்புடாத நரேன் பேசிய உருப்படியான விஷயம் என்ன...?

இதுபோன்ற கேள்விகளுக்கான விடை அடுத்த பாகத்தில்... காத்திருங்கள்...

போட்டோஸ்...??? எடுத்ததே பத்து, பதினைந்து போட்டோஸ் தான். இதுல வேற ஆளாளுக்கு என் போட்டோவை போட்டுடாதீங்க, அய்யய்யோ என்னுது மட்டும் வேணாம்ன்னு அளப்பறையை கொடுத்தா என்ன பண்றது...?

டிஸ்கி: இதை பல பாகங்களாக எழுதி உங்களை சாகடிப்பதோ, நோகடிப்பதோ எங்கள் நோக்கமல்ல. ஒரே பாகமாக வெளியிட்டால் உண்மைத்தமிழன் பதிவு சைஸை தாண்டிவிடும். (இப்பவே கிட்டத்தட்ட அப்படித்தான்...)

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

101 comments:

சி.பி.செந்தில்குமார் said...

முதல் மழை

சி.பி.செந்தில்குமார் said...

>>
தம்பி கூர்மதியன் உள்ளே நுழையும்போதே பெண் பதிவர் ஒருவருடன் போன் பேசியபடியே வந்தார். போனை வைங்க பாஸ்ன்னு எவ்ளோ சொல்லியும் கேட்கலை. (பொறாமை... லைட்டா...?)

சும்மா சீன் போட்டிருப்பாரு.. நம்பீட்டீங்களா?

சி.பி.செந்தில்குமார் said...

>>அறிமுகப்படலம் விறுவிறுப்பாக நடந்துக்கொண்டிருக்க, திடீரென மொத்தக்கூட்டமும் ஒரு திசையை நோக்கி திரும்ப, அங்கே பாட்ஷா ரஜினிகாந்த் மாதிரி பின்னாடி நான்கு பேரோடு ஜாக்கி சேகர் வந்துக்கொண்டிருந்தார். அவர் பத்தாம் வகுப்பில் 277/500 மார்க் மட்டுமே வாங்கியதால் அவருக்கு கடைசி வரிசை ஒதுக்கப்பட்டது.

yoov, யோவ், இதெல்லாம் ஓவர் லொள்ளூய்யா..

சி.பி.செந்தில்குமார் said...

ஓப்பனிங்க் பில்டப் ஓக்கே!!!!!!!!!!!

சுரேகா.. said...

ஆமா... இது செய்தியா? சதியா? :)

நல்ல Flow!!

வாழ்த்துக்கள்!

Philosophy Prabhakaran said...

@ சி.பி.செந்தில்குமார்
// சும்மா சீன் போட்டிருப்பாரு.. நம்பீட்டீங்களா? //

சிபி உங்களுக்குத்தான் அந்த பெண் பதிவர் யாருன்னு தெரியுமே அப்புறமென்ன...

Philosophy Prabhakaran said...

@ சி.பி.செந்தில்குமார்
// yoov, யோவ், இதெல்லாம் ஓவர் லொள்ளூய்யா.. //

எல்லோரும் பார்த்துக்கோங்கப்பா சிபி ஜாக்கியை கலாய்க்கிறாரு... இந்த பாவத்துக்கெல்லாம் நான் ஆளாகவே மாட்டேன்...

Philosophy Prabhakaran said...

@ சுரேகா..
// ஆமா... இது செய்தியா? சதியா? :) //

உங்களை அதிகம் கிண்டல் பண்ணலைன்னு கோவமா...?

shortfilmindia.com said...

raightu....

மனசாலி said...

அட நானும் வந்திருக்கலாம் போல.

சதீஷ் மாஸ் said...

ஒரு பப்ளிசிட்டிக்கு மாஸ் போட சொன்னத அப்படியேவா அடைப்பு குறில போடறது.. என்ன உலகம் டா... அந்த வரியை படிக்கும் போதே யூகித்தேன், இது பிரபாவோட வேலையா தான் இருக்கும்னு... நன்றி வணக்கும்....

Unknown said...

எம்மாம்பெரிய அலப்பறை...சாமி நான் தப்பிச்சேன் ஹிஹி!

நிரூபன் said...

வணக்கம் நண்பா,
சுவாரஸ்யமாக எழுதியிருக்கிறீங்க.

நிரூபன் said...

அடுத்த பாகத்தினைப் படிக்கும் ஆவலுடன் காத்திருகிறேன்.

சக்தி கல்வி மையம் said...

மாப்ள எப்படி இப்படியெல்லாம்..

இந்திரா said...

அடுத்த பாகத்தில் போட்டோ போடுவீங்களா மாட்டீங்களா??

குடந்தை அன்புமணி said...

பதிவர் சந்திப்பு பற்றிய தொகுப்பு சூப்பர்... ஆனாலும் உங்க வேகம் என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது. அடுத்த பாகத்தை சீக்கிரமா போட்டீங்கன்னா வருகிற (செப்டம்பர்) பதிவர் தென்றலிலும் போட்டிடலாம்... எப்படி வசதி?

குடந்தை அன்புமணி said...

என் மனசுக்கு நிறைவாக இருந்தது இந்த பதிவர் சந்திப்புதான். இதை நான் பகிரங்கமாக தெரிவித்துக்கொள்கிறேன். (மனசாட்சி: ஆமா... இவரு எல்லா பதிவர் சந்திப்பிலேயும் கலந்துகிட்ட மாதிரி...)

குடந்தை அன்புமணி said...

என்னோட போட்டோவை தாராளமாக போடலாம்... (ஆமா... நானும் போட்டோவுல இருக்கேனா?)

அஞ்சா சிங்கம் said...

யோவ் பதிவர் சந்திப்பை மட்டும்தானே போட்டிருக்கணும் அதுக்கு முன்னாடி நடந்தது எல்லாம் போட்டா எப்படி ?
அப்புறம் நானும் பதிவர் சந்திப்புக்கு பின்னால் நடந்தது ...சில்லி சிக்கன் வரலாறு .மார்பியசின் கணக்கு .......
எல்லாம் போடவேண்டியது வரும் .........
என்னமோ போங்க நல்லாதான் இருந்தது ....நான் சந்திப்பை சொன்னேன் .....

Philosophy Prabhakaran said...

@ MANASAALI
// அட நானும் வந்திருக்கலாம் போல. //

இதெல்லாம் முன்னாடியே சொல்ல வேணாமா...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////வேறு வழியில்லாமல் சீக்கிரமாக வந்திருந்த அஞ்சாசிங்கம், இன்னும் யாரும் வரவில்லை என்று சொன்னதும் உடன் வந்திருந்த நண்பருடன் ஒயின்ஷாப்புக்கு ஜூட்.
////////

அண்ணன் ஒருத்தருதான் உருப்படியான வேல பாத்திருக்காரு......

Philosophy Prabhakaran said...

@ சதீஷ் மாஸ்
// ஒரு பப்ளிசிட்டிக்கு மாஸ் போட சொன்னத அப்படியேவா அடைப்பு குறில போடறது.. என்ன உலகம் டா... //

சிஷ்யகேடி... இன்னொரு மேட்டரைக் கூட போட்டிருக்கணும்... போனா போகட்டும்ன்னு விட்டுட்டேன்...

அஞ்சா சிங்கம் said...

அண்ணன் ஒருத்தருதான் உருப்படியான வேல பாத்திருக்காரு......///////
//////
ஹி ஹி ஹி ...என்னை ரொம்ப புகழாதீங்க ..........

Philosophy Prabhakaran said...

@ விக்கியுலகம்
// எம்மாம்பெரிய அலப்பறை...சாமி நான் தப்பிச்சேன் ஹிஹி! //

எங்கே போயிடப்போறீங்கப்பு... என்னைக்கு இருந்தாலும் இந்த மண்ணுல கால் வச்சிதான் ஆகணும்... அன்னைக்கு பாத்துக்குறோம்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////தம்பி கூர்மதியன் உள்ளே நுழையும்போதே பெண் பதிவர் ஒருவருடன் போன் பேசியபடியே வந்தார்./////

வெளங்கிருச்சு..... இவர் பண்ற அலப்பறைய பாருய்யா.... செல்போன ஆஃப் பண்ணி வெச்சிட்டு எப்படி பில்டட் கொடுத்திருக்காருன்னு.....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////போனை வைங்க பாஸ்ன்னு எவ்ளோ சொல்லியும் கேட்கலை. (பொறாமை... லைட்டா...?)//////

கால் வந்திருந்தாத்தானே கட் பண்ண முடியும்?

Philosophy Prabhakaran said...

@ நிரூபன்
// வணக்கம் நண்பா,
சுவாரஸ்யமாக எழுதியிருக்கிறீங்க. //

நன்றி நிரூபன்...

Philosophy Prabhakaran said...

@ இந்திரா
// அடுத்த பாகத்தில் போட்டோ போடுவீங்களா மாட்டீங்களா?? //

நீங்க வேற... போட்டோவை போட்டுட்டு அப்புறம் என் போட்டோவை ஏன் போட்டன்னு சண்டைக்கு வருவாங்க...

Philosophy Prabhakaran said...

@ குடந்தை அன்புமணி
// ஆனாலும் உங்க வேகம் என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது. //

மன்னிச்சூ... ஆணி அதிகம்...

// அடுத்த பாகத்தை சீக்கிரமா போட்டீங்கன்னா வருகிற (செப்டம்பர்) பதிவர் தென்றலிலும் போட்டிடலாம்... எப்படி வசதி? //

அடுத்த வாரம் திங்கள் அல்லது செவ்வாய் ரிலீஸ்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// வந்ததிலிருந்தே “நானும் ரவுடிதான்” வடிவேலு மாதிரி “நானும் யூத்துதான்... நானும் யூத்துதான்...” என்று கேபிள் நடுஅரங்கில் நடனமாடிக்கொண்டிருந்தார்.///////

ஒஹோ யூத்துன்னா இப்படித்தான் இருக்கனுமா?

Philosophy Prabhakaran said...

@ குடந்தை அன்புமணி
// மனசாட்சி: ஆமா... இவரு எல்லா பதிவர் சந்திப்பிலேயும் கலந்துகிட்ட மாதிரி... //

அதானே... உங்களை நான் முதல்முறையா அன்னைக்குத்தான் பார்த்தேன்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////“வலைமனை” சுகுமார், ரோமியோ, பலே பிரபு, ஜில்தண்ணி யோகேஷ், அதிஷா, டான் அஷோக், சிரிப்பு போலீஸ் ரமேஷ் உட்பட பலர் நிகழ்ச்சிக்கு கட்டாயம் வருவதாக சொல்லிவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டனர்.//////

நீங்க சாப்பாடுலாம் போடமாட்டீங்கன்னு அவங்களுக்கு எப்படியோ தெரிஞ்சிடுச்சு போல...!

Philosophy Prabhakaran said...

@ குடந்தை அன்புமணி
// என்னோட போட்டோவை தாராளமாக போடலாம்... (ஆமா... நானும் போட்டோவுல இருக்கேனா?) //

SO SAD... நீங்க இல்லைன்னு நினைக்கிறேன்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////அதே போல மங்குனி அமைச்சர், ஒளிப்பதிவாளர் விஜய் ஆர்ம்ஸ்ட்ராங் உட்பட சிலர் எதிர்பாராத விதம் வருகை தந்து நமக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்கள்.//////

எந்த மங்குனி அமைச்சர்?

Philosophy Prabhakaran said...

@ அஞ்சா சிங்கம்
// அப்புறம் நானும் பதிவர் சந்திப்புக்கு பின்னால் நடந்தது ...சில்லி சிக்கன் வரலாறு .மார்பியசின் கணக்கு .......
எல்லாம் போடவேண்டியது வரும் ......... //

அதுவும் ரெடி ஆயிட்டு இருக்கு... அது நம்ம வலைப்பூவுல வரும்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////யார் இந்த மங்குனி அமைச்சர்...?///////

யார்... யார்... யார்..............?

Philosophy Prabhakaran said...

@ பன்னிக்குட்டி ராம்சாமி
// அண்ணன் ஒருத்தருதான் உருப்படியான வேல பாத்திருக்காரு...... //

அண்ணன் பதிவர் சந்திப்பு முடிஞ்சதும் ரெண்டு தம்பியை வேற கடைக்கு கூட்டிட்டு போனாரு...

Philosophy Prabhakaran said...

@ பன்னிக்குட்டி ராம்சாமி
// எந்த மங்குனி அமைச்சர்? //

லிங்கோட போட்டிருக்கேனே,... அதே மங்குனி அமைச்சர் தான்... அவரோட போட்டோவை அடுத்த பாகத்தில் வெளியிடலாமா...

குடந்தை அன்புமணி said...

//அடுத்த வாரம் திங்கள் அல்லது செவ்வாய் ரிலீஸ்...//

மன்னிச்சூ... அதற்குள் புத்தகம் வந்துவிடும்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// Philosophy Prabhakaran said...
@ பன்னிக்குட்டி ராம்சாமி
// அண்ணன் ஒருத்தருதான் உருப்படியான வேல பாத்திருக்காரு...... //

அண்ணன் பதிவர் சந்திப்பு முடிஞ்சதும் ரெண்டு தம்பியை வேற கடைக்கு கூட்டிட்டு போனாரு...
////////

அதுல ஒரு தம்பி நீங்கதானே? ஓகே ஓகே....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////Philosophy Prabhakaran said...
@ பன்னிக்குட்டி ராம்சாமி
// எந்த மங்குனி அமைச்சர்? //

லிங்கோட போட்டிருக்கேனே,... அதே மங்குனி அமைச்சர் தான்... அவரோட போட்டோவை அடுத்த பாகத்தில் வெளியிடலாமா...
///////

ஹஹா..... சும்மாதான் கேட்டேன், போட்டோ மேட்டர் அவர்கிட்டதான் கேட்கனும்......

அஞ்சா சிங்கம் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////யார் இந்த மங்குனி அமைச்சர்...?///////

யார்... யார்... யார்..............?

/////////

அவரேதான் யுத்ன்னு நிரூபிக்க டி-ஷர்ட் போட்டு வந்திருந்தாரு .நாங்க யாரும் நம்பலை ..........

Philosophy Prabhakaran said...

@ குடந்தை அன்புமணி
// மன்னிச்சூ... அதற்குள் புத்தகம் வந்துவிடும்... //

என்னங்க இப்படி சொல்லிட்டீங்க... யார் யார் என்ன பேசினாங்கன்னு ஞாபகத்துக்கு கொண்டு வரணுமே... அதுக்கு ஒரு சனிக்கிழமை இரவு கட்டாயம் தேவைப்படுமே...

Philosophy Prabhakaran said...

@ பன்னிக்குட்டி ராம்சாமி
// அதுல ஒரு தம்பி நீங்கதானே? ஓகே ஓகே.... //

இன்னொரு தம்பி யாரு தெரியுமோ... நம்ம அஞ்சாநெஞ்சன் மணி...

Philosophy Prabhakaran said...

@ பன்னிக்குட்டி ராம்சாமி
// ஹஹா..... சும்மாதான் கேட்டேன், போட்டோ மேட்டர் அவர்கிட்டதான் கேட்கனும்...... //

போட்டோவை போட்டுட்டு நீங்கதான் போட சொன்னீங்கன்னு சொல்லிடலாம்ன்னு பார்த்தேன்...

அவரு வேற கேமராவை பார்த்ததுமே கொஞ்சம் மிரண்டாரு...

அஞ்சா சிங்கம் said...

இன்னொரு தம்பி யாரு தெரியுமோ... நம்ம அஞ்சாநெஞ்சன் மணி...///////

பாவம் பிஞ்சி ஒடம்பு தம்பிக்கு ........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////அஞ்சா சிங்கம் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////யார் இந்த மங்குனி அமைச்சர்...?///////

யார்... யார்... யார்..............?

/////////

அவரேதான் யுத்ன்னு நிரூபிக்க டி-ஷர்ட் போட்டு வந்திருந்தாரு .நாங்க யாரும் நம்பலை ..........
////////

டீ ஷர்ட்டையா? ஏன் அது முண்டா பனியன் மாதிரி இருந்துச்சா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////Philosophy Prabhakaran said...
@ பன்னிக்குட்டி ராம்சாமி
// ஹஹா..... சும்மாதான் கேட்டேன், போட்டோ மேட்டர் அவர்கிட்டதான் கேட்கனும்...... //

போட்டோவை போட்டுட்டு நீங்கதான் போட சொன்னீங்கன்னு சொல்லிடலாம்ன்னு பார்த்தேன்...

அவரு வேற கேமராவை பார்த்ததுமே கொஞ்சம் மிரண்டாரு...
////////

ஆஹா எப்படியெல்லாம் கோர்க்கிறாங்கப்பா......... நல்ல வேள உசாரா இருந்தேன்........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////அஞ்சா சிங்கம் said...
இன்னொரு தம்பி யாரு தெரியுமோ... நம்ம அஞ்சாநெஞ்சன் மணி...///////

பாவம் பிஞ்சி ஒடம்பு தம்பிக்கு ........
///////

ஏண்ணே எல்லாத்தையும் அவரே முடிச்சிட்டாரா?

Prabu Krishna said...

என்னது வந்தவங்க எல்லாத்துக்கும் லிங்க் வராத ஆளுக்கு லிங்க் கொடுக்கல. இதை நான் வன்மையா கண்டிக்கிறேன்.

Prabu Krishna said...

//தம்பி கூர்மதியன் உள்ளே நுழையும்போதே பெண் பதிவர் ஒருவருடன் போன் பேசியபடியே வந்தார். போனை வைங்க பாஸ்ன்னு எவ்ளோ சொல்லியும் கேட்கலை. (பொறாமை... லைட்டா...?)//

ஹா ஹா ஹா....

Prabu Krishn said...

//போட்டோஸ்...??? எடுத்ததே பத்து, பதினைந்து போட்டோஸ் தான். இதுல வேற ஆளாளுக்கு என் போட்டோவை போட்டுடாதீங்க, அய்யய்யோ என்னுது மட்டும் வேணாம்ன்னு அளப்பறையை கொடுத்தா என்ன பண்றது...?//

ஹா ஹாஅப்போ போட்டுடாதீங்க பாஸ்

யுவகிருஷ்ணா said...

எங்க பத்தாங்கிளாஸ் தமிழ் வாத்தியார் அரங்கண்ணல் அட்டெண்டன்ஸ் அவ்ளோ பக்காவா எடுப்பார். ஒரு பய ஏமாத்த முடியாது :-)

அந்த அட்டெண்டன்ஸ் மாதிரி பக்காவாக இருக்கிறது இந்தப் பதிவு.

வாழ்த்துகள் பிரபாகர்!

Anonymous said...

பதிவர் பதிவு மிக நல்லது. வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.

Anonymous said...
This comment has been removed by the author.
Anonymous said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////அஞ்சா சிங்கம் said...
இன்னொரு தம்பி யாரு தெரியுமோ... நம்ம அஞ்சாநெஞ்சன் மணி...///////

பாவம் பிஞ்சி ஒடம்பு தம்பிக்கு ........
///////

ஏண்ணே எல்லாத்தையும் அவரே முடிச்சிட்டாரா?//

டெய்லி மதுர கோயில சுத்தி சுத்தி வர்ற புள்ளைய இப்படி சீரழிச்சிடீங்கலேயா....செல்வின்..பிரபாகரா!!

Anonymous said...

//Prabu Krishna said...
என்னது வந்தவங்க எல்லாத்துக்கும் லிங்க் வராத ஆளுக்கு லிங்க் கொடுக்கல. இதை நான் வன்மையா கண்டிக்கிறேன்//

போஸ்ட்டை போட்டு விட்டு பிலாசபி கடப்பாவிற்கு தப்பி ஓட்டம்!!

Anonymous said...

@ யுவகிருஷ்ணா

பிரபாகர் லீவிட்டார். நன்றி யுவா!

Anonymous said...

//kovaikkavi said...
பதிவர் பதிவு மிக நல்லது. வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்//

வருகைக்கு நன்றி கோவைக்கவி!

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
எல்லோருடையும் பெயரையும் இணைப்பையும் கொடுத்தால் அவர்களை தொடர்ந்து படிக்க வசதியாக இருக்கும்.
நன்றி.
http://rathnavel-natarajan.blogspot.com/2011/08/blog-post_29.html

சென்னை பித்தன் said...

//மனதளவில் நானும் யூத்துதான் என்று தலைமுடிக்கு டை அடிக்காமல் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கோடு “மங்காத்தா” அஜீத் மாதிரி அதிரடியாக வருகை தந்தார் சென்னை பித்தன்.//

அது!

N.H. Narasimma Prasad said...

பதிவர் சந்திப்பு பற்றிய இடுகை சூப்பர். அடுத்த பாகத்தை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.

MANO நாஞ்சில் மனோ said...

ஹா ஹா ஹா ஹா கலக்கல் பதிவர் சந்திப்பு....?? சாப்பாடு பற்றி சொல்லவே இல்லையே ஹி ஹி...

MANO நாஞ்சில் மனோ said...

எலேய் அஞ்சாசிங்கம்'தாம்லேய் உருப்படியான வேலையை பார்த்துருக்கார் ஹே ஹே ஹே...

MANO நாஞ்சில் மனோ said...

சென்னை பித்தன் said...
//மனதளவில் நானும் யூத்துதான் என்று தலைமுடிக்கு டை அடிக்காமல் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கோடு “மங்காத்தா” அஜீத் மாதிரி அதிரடியாக வருகை தந்தார் சென்னை பித்தன்.//

அது!//

தல'ன்னா சும்மாவா....

MANO நாஞ்சில் மனோ said...

Philosophy Prabhakaran said...
@ சி.பி.செந்தில்குமார்
// yoov, யோவ், இதெல்லாம் ஓவர் லொள்ளூய்யா.. //

எல்லோரும் பார்த்துக்கோங்கப்பா சிபி ஜாக்கியை கலாய்க்கிறாரு... இந்த பாவத்துக்கெல்லாம் நான் ஆளாகவே மாட்டேன்...//

சிபி'யை போட்டு கொல்லுங்கய்யா, அநியாயம் பண்ணுறான்....

N.Manivannan said...

////பதிவர் சந்திப்பிற்காக மதுரையிலிருந்து வந்திருந்த அஞ்சாநெஞ்சன் மணி கையில் “பதிவர் தென்றல்” புத்தகத்தை கொடுத்ததும் அட்டைப்படத்தில் இருக்கும் காஜலை பார்த்து லிட்டர் கணக்கில் ஜொள்ளு விட்டபடி வேறொரு உலகத்திற்கு சென்றுக்கொண்டிருந்தார்.////


யோவ் அந்த புக்க உன்கிட்டதான் குடுத்தேன் நீ அதை எனக்கு திருப்பி குடுக்கவேஇல்ல

N.Manivannan said...

////வேறு வழியில்லாமல் சீக்கிரமாக வந்திருந்த அஞ்சாசிங்கம், இன்னும் யாரும் வரவில்லை என்று சொன்னதும் உடன் வந்திருந்த நண்பருடன் ஒயின்ஷாப்புக்கு ஜூட்///

ஆகா அண்ணே ஆல்ரெடி டைட்டாதான் வந்தாரா

N.Manivannan said...

\ பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// Philosophy Prabhakaran said...
@ பன்னிக்குட்டி ராம்சாமி
// அண்ணன் ஒருத்தருதான் உருப்படியான வேல பாத்திருக்காரு...... //

அண்ணன் பதிவர் சந்திப்பு முடிஞ்சதும் ரெண்டு தம்பியை வேற கடைக்கு கூட்டிட்டு போனாரு...
////////

அதுல ஒரு தம்பி நீங்கதானே? ஓகே ஓகே....////

அண்ணே பன்னிகுட்டி அண்ணே அந்த இன்னொரு தம்பி நாந்தாண்ணே , இதுநாள் வரைக்கும் பதினெட்டாம்படி கருப்பசாமி சத்தியமா குடிச்சதே இல்லைன்னு சத்தியம் பண்ணினேன் ,ஆனாலும் கேக்கமா என்னைய பிரபா கைய புடுச்சு தற தறன்னு இழுத்துட்டு போயி தண்ணி அடிக்கவச்சு பழக்கிவிட்டாங்கன்னே ,இப்ப நானு டெய்லி ஒரு குவாட்டர் அடிச்சிகிட்டு இருக்கேன்னே ம்ம்மம்மம்ம்ம்ம் ,தெனமும் வீட்டுல மண்டகப்படி நடக்குதுன்னே

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////// N.Manivannan said...
\ பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// Philosophy Prabhakaran said...
@ பன்னிக்குட்டி ராம்சாமி
// அண்ணன் ஒருத்தருதான் உருப்படியான வேல பாத்திருக்காரு...... //

அண்ணன் பதிவர் சந்திப்பு முடிஞ்சதும் ரெண்டு தம்பியை வேற கடைக்கு கூட்டிட்டு போனாரு...
////////

அதுல ஒரு தம்பி நீங்கதானே? ஓகே ஓகே....////

அண்ணே பன்னிகுட்டி அண்ணே அந்த இன்னொரு தம்பி நாந்தாண்ணே , இதுநாள் வரைக்கும் பதினெட்டாம்படி கருப்பசாமி சத்தியமா குடிச்சதே இல்லைன்னு சத்தியம் பண்ணினேன் ,ஆனாலும் கேக்கமா என்னைய பிரபா கைய புடுச்சு தற தறன்னு இழுத்துட்டு போயி தண்ணி அடிக்கவச்சு பழக்கிவிட்டாங்கன்னே ,இப்ப நானு டெய்லி ஒரு குவாட்டர் அடிச்சிகிட்டு இருக்கேன்னே ம்ம்மம்மம்ம்ம்ம் ,தெனமும் வீட்டுல மண்டகப்படி நடக்குதுன்னே
////////

மிக்சிங்க பாத்தா புதுசா அடிக்கிறவரு மாதிரியே தெரியலேன்னு சொன்னாங்களே?

N.Manivannan said...

! சிவகுமார் ! said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////அஞ்சா சிங்கம் said...
இன்னொரு தம்பி யாரு தெரியுமோ... நம்ம அஞ்சாநெஞ்சன் மணி...///////

பாவம் பிஞ்சி ஒடம்பு தம்பிக்கு ........
///////

ஏண்ணே எல்லாத்தையும் அவரே முடிச்சிட்டாரா?//

டெய்லி மதுர கோயில சுத்தி சுத்தி வர்ற புள்ளைய இப்படி சீரழிச்சிடீங்கலேயா....செல்வின்..பிரபாகரா!!///

சும்மா கெடந்த சங்க ஊதிக்கெடுத்தான் ஆண்டிங்க்ரமாதிரி ,அன்னைக்கு ரூமுக்கே தட்டுதடுமாரிதான் போனேன் தெரியுமா .

N.Manivannan said...

///
மிக்சிங்க பாத்தா புதுசா அடிக்கிறவரு மாதிரியே தெரியலேன்னு சொன்னாங்களே?///


அண்ணே நான் மிக்சிங் பண்ணவே இல்லனே ,பிரபா தான்னே மிக்சிங் பண்ணது ,ஆனா அண்ணே பிரபா ம்ம்ம் ,ஏதோ போனா போகுதுன்னு தண்ணிய ஊத்தி அடிச்சார்னே ,நானும் செலவினும் இல்லைனா ? ராவ அடிச்சிருப்பாருன்னு நெனைக்கிறேன்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// N.Manivannan said...
///
மிக்சிங்க பாத்தா புதுசா அடிக்கிறவரு மாதிரியே தெரியலேன்னு சொன்னாங்களே?///


அண்ணே நான் மிக்சிங் பண்ணவே இல்லனே ,பிரபா தான்னே மிக்சிங் பண்ணது ,ஆனா அண்ணே பிரபா ம்ம்ம் ,ஏதோ போனா போகுதுன்னு தண்ணிய ஊத்தி அடிச்சார்னே ,நானும் செலவினும் இல்லைனா ? ராவ அடிச்சிருப்பாருன்னு நெனைக்கிறேன்
////////

அடங்கொன்னியா..........

N.Manivannan said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// N.Manivannan said...
///
மிக்சிங்க பாத்தா புதுசா அடிக்கிறவரு மாதிரியே தெரியலேன்னு சொன்னாங்களே?///


அண்ணே நான் மிக்சிங் பண்ணவே இல்லனே ,பிரபா தான்னே மிக்சிங் பண்ணது ,ஆனா அண்ணே பிரபா ம்ம்ம் ,ஏதோ போனா போகுதுன்னு தண்ணிய ஊத்தி அடிச்சார்னே ,நானும் செலவினும் இல்லைனா ? ராவ அடிச்சிருப்பாருன்னு நெனைக்கிறேன்
////////

அடங்கொன்னியா..........///
அண்ணே அதான்னே இனிமேலாவுது கொஞ்சம் இளநியாவுது ஊத்தி அடிக்க சொல்லுங்கண்ணே ,உங்களமாதிரி

குறையொன்றுமில்லை. said...

பதிவர் சந்திப்பு, கலக்கலான பின்னூட்டங்கள் எல்லாமே தூள் தூள்.

ஷர்புதீன் said...

என்னுடைய போட்டோவை போடும்பொழுது 1024x748 சைசில் போடவில்லை எனில் "டி குடிப்பேன்" என்று எச்சரிக்கிறேன்

:-)

Anonymous said...

உள்ளேன் அய்யா...சாரி...ஆப்சென்ட் சார்...படம் போடும் போது சி பி க்கு புடிச்ச நடிகைகள் படங்களும்.. நடுநடுவே போடுங்க...:)

ரதியழகன் said...

அடுத்த பதிவை எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கிறேன்...

கவிதை பூக்கள் பாலா said...

''“வலைமனை” சுகுமார் தந்த ஏமாற்றம் பெரியது. வழக்கமாக பதிவர் சந்திப்பு என்றால் சுகுமார் கேமராவுடன் வந்து “கோ” பட ஹீரோ ஜீவா மாதிரி போட்டோவா எடுத்துத்தள்ளுவார். அதனால்தான் சிவா ஒவ்வொரு முறை போட்டோ எடுப்பது பற்றி கேட்டபோதும் சுகுமார் வருவார் கவலைப்படாதீங்க என்று நெஞ்சை நிமிர்த்திச் சொன்னேன். ப்ச் போங்க சுகுமார்...!

ஆனால், இதோ நான் கொண்டுவந்திருக்கிறேன் என்று தனது டிஜிட்டல் கேமராவால் போட்டோக்களை சுட்டுக்கொண்டிருந்தார் “ரெட்ஹில்ஸ்” பாலா. சுகுமார் அளவுக்கு டெடிகேஷன் இல்லையென்றாலும் அவர் கேமரா கொண்டுவராமல் இருந்திருந்தால் இந்த பதிவர் சந்திப்பு வரலாற்றில் பதியப்படாமல் போயிருக்கலாம்.''
இதுக்கு பேருதான் வஞ்சை புகழ்சியா பிரபா ! உண்மையாவே என்ன நடக்குதுன்னு தெரிஞ்சிக்கவே வந்தேன் பிரபா , அதனால ஓல்ட் மாடல் கேமரா ( 4 மெஹா பிக்ஸில் தான்) லைட்ங் குறைவா இருந்ததால எடுக்க தோனல டாட்ஸ் நிறைய வந்தது . இப்படி நீங்க எதிர் பார்பீங்கன்னு தெரியாது நீங்களாவது சொல்லி இருத்த உண்மையிலே நல்லாவே எடுத்திருப்பேன் காரணம் அதுமட்டுமில்லாம ஒரு சிலர் போட்டோ எடுக்க விருப்ப படல அதும் ஒரு காரணம் . விளையாட்ட நானும் பதிவர் சந்திப்புல கலத்துகிட்டோமுன்னு ஒரு வரலாற்று பதிவுகாகவே சுயநலத்தோடு எடுத்த போடோஸ் பிரபா போதுமா அடுத்த பதிவர் கலக்கிடலாம் விடுங்க .........

அணில் said...

வந்திருந்த பல பதிவர்களின் பெயர்களை மட்டும் அறிந்திருந்தேன். அதில் யார் யார் எவரென அடையாளம் கொள்ள முடியவில்லை. (சரியான முகத்தை பொருத்துக: 2 மார்க்ஸ்)
போட்டாவும் போட மாட்டீங்கறாங்க, ஒரிஜினல் பேரும் போட மாட்டீங்கறாங்க (பன்னிகுட்டி ராம்சாமி, கருந்தேளு, உருப்புடாதவன், அஞ்சா சிங்கம்...)

அடுத்த பதிவர் சந்திப்பின் போது ஒழுங்கா படிச்சிட்டு வரேன்.

Philosophy Prabhakaran said...

@ யுவகிருஷ்ணா
// எங்க பத்தாங்கிளாஸ் தமிழ் வாத்தியார் அரங்கண்ணல் அட்டெண்டன்ஸ் அவ்ளோ பக்காவா எடுப்பார். ஒரு பய ஏமாத்த முடியாது :-)

அந்த அட்டெண்டன்ஸ் மாதிரி பக்காவாக இருக்கிறது இந்தப் பதிவு.

வாழ்த்துகள் பிரபாகர்! //

இது பாராட்டா நக்கல்ஸான்னு புரியல...!

Philosophy Prabhakaran said...

@ ! சிவகுமார் !
// டெய்லி மதுர கோயில சுத்தி சுத்தி வர்ற புள்ளைய இப்படி சீரழிச்சிடீங்கலேயா....செல்வின்..பிரபாகரா!! //

நீங்க வேற... அவர் ஒரு குட்டி ஆட்டோகிராப் சேரன்...

Philosophy Prabhakaran said...

@ N.Manivannan
// யோவ் அந்த புக்க உன்கிட்டதான் குடுத்தேன் நீ அதை எனக்கு திருப்பி குடுக்கவேஇல்ல //

கடைசி வரைக்கும் அந்த புக் என் கைக்கு வரலை... சிவா வீட்டுக்கு எடுத்துட்டு போயிட்டார்...

Philosophy Prabhakaran said...

@ N.Manivannan
// ஆகா அண்ணே ஆல்ரெடி டைட்டாதான் வந்தாரா //

உங்களுக்கு ஞாபக மராத்தி ஜாஸ்தி... நைட் நம்ம முன்னாடி தானே சொன்னாரு...

Philosophy Prabhakaran said...

@ N.Manivannan
// அண்ணே பன்னிகுட்டி அண்ணே அந்த இன்னொரு தம்பி நாந்தாண்ணே , இதுநாள் வரைக்கும் பதினெட்டாம்படி கருப்பசாமி சத்தியமா குடிச்சதே இல்லைன்னு சத்தியம் பண்ணினேன் ,ஆனாலும் கேக்கமா என்னைய பிரபா கைய புடுச்சு தற தறன்னு இழுத்துட்டு போயி தண்ணி அடிக்கவச்சு பழக்கிவிட்டாங்கன்னே ,இப்ப நானு டெய்லி ஒரு குவாட்டர் அடிச்சிகிட்டு இருக்கேன்னே ம்ம்மம்மம்ம்ம்ம் ,தெனமும் வீட்டுல மண்டகப்படி நடக்குதுன்னே //

டேய் டேய் டேய் நீ யாருன்னு எனக்கு தெரியும்... நான் யாருன்னு உனக்கு தெரியும்... நம்ம ரெண்டு பேர் யாருன்னு இந்த ஊருக்கே தெரியும்... எதுக்கு இந்த பில்டப்...

Philosophy Prabhakaran said...

@ பன்னிக்குட்டி ராம்சாமி
// மிக்சிங்க பாத்தா புதுசா அடிக்கிறவரு மாதிரியே தெரியலேன்னு சொன்னாங்களே? //

அங்கதான் காமெடியே... பதிவுல போடுறேன்... எல்லாத்தையும் இங்கேயே சொல்லிட்டா எப்படி...

Philosophy Prabhakaran said...

@ N.Manivannan
// சும்மா கெடந்த சங்க ஊதிக்கெடுத்தான் ஆண்டிங்க்ரமாதிரி ,அன்னைக்கு ரூமுக்கே தட்டுதடுமாரிதான் போனேன் தெரியுமா . //

யோவ் அதான் செல்வின் பத்திரமா வந்து இறக்கி விட்டுட்டு போனாருல்ல...

Philosophy Prabhakaran said...

@ N.Manivannan
// அண்ணே நான் மிக்சிங் பண்ணவே இல்லனே //

// அண்ணே நான் மிக்சிங் பண்ணவே இல்லனே //

// அண்ணே நான் மிக்சிங் பண்ணவே இல்லனே //

நல்லா கேட்டுக்கோங்க... பயபுள்ள ராவா அடிச்சிருக்கு...

Philosophy Prabhakaran said...

@ N.Manivannan
// ஆனா அண்ணே பிரபா ம்ம்ம் ,ஏதோ போனா போகுதுன்னு தண்ணிய ஊத்தி அடிச்சார்னே ,நானும் செலவினும் இல்லைனா ? ராவ அடிச்சிருப்பாருன்னு நெனைக்கிறேன் //

அதுக்கு பின்னாடி ஒரு கணிதம், ஒரு தத்துவமெல்லாம் இருக்கு ஓய்...

Philosophy Prabhakaran said...

@ ஷர்புதீன்
// என்னுடைய போட்டோவை போடும்பொழுது 1024x748 சைசில் போடவில்லை எனில் "டி குடிப்பேன்" என்று எச்சரிக்கிறேன் //

நீங்க டி குடிச்சாலும் சரி பிராண்டி குடிச்சாலும் சரி... உங்க போட்டோ தக்கனூண்டு சைஸ்ல தான் இருக்கு...

Philosophy Prabhakaran said...

@ ரெவெரி
// உள்ளேன் அய்யா...சாரி...ஆப்சென்ட் சார்...படம் போடும் போது சி பி க்கு புடிச்ச நடிகைகள் படங்களும்.. நடுநடுவே போடுங்க...:) //

இங்கேயுமா...? ஏன் ராசா இப்ப கும்முறது போதலையா...

Philosophy Prabhakaran said...

@ ரதியழகன்
// அடுத்த பதிவை எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கிறேன்... //

ம்ம்ம் உங்களுக்கு ஒரு special mention இருக்கு...

Philosophy Prabhakaran said...

@ bala

விடுங்க... நாங்களும் கொஞ்சம் கவனக்குறைவா இருந்துட்டோம்... அடுத்தமுறை அசத்திடலாம்...

Philosophy Prabhakaran said...

@ ந.ர.செ. ராஜ்குமார்
// போட்டாவும் போட மாட்டீங்கறாங்க, ஒரிஜினல் பேரும் போட மாட்டீங்கறாங்க (பன்னிகுட்டி ராம்சாமி, கருந்தேளு, உருப்புடாதவன், அஞ்சா சிங்கம்...) //

யோவ் பிரபல பதிவர்களை அந்த மாதிரியெல்லாம் சொல்லக்கூடாதுய்யா...

Anonymous said...

//Philosophy Prabhakaran said...

N.Manivannan
// யோவ் அந்த புக்க உன்கிட்டதான் குடுத்தேன் நீ அதை எனக்கு திருப்பி குடுக்கவேஇல்ல //

கடைசி வரைக்கும் அந்த புக் என் கைக்கு வரலை... சிவா வீட்டுக்கு எடுத்துட்டு போயிட்டார்...//

நான் கொண்டு போகல. செல்வின்தான் காஜல் படத்தை கிழிச்சி டீல கலக்கி குடிச்சிட்டார்.

Anonymous said...

@ ஷர்புதீன்
// என்னுடைய போட்டோவை போடும்பொழுது 1024x748 சைசில் போடவில்லை எனில் "டி குடிப்பேன்" என்று எச்சரிக்கிறேன் //

எல்லாரும் டீயை மறந்து இருந்தப்ப நீங்க மட்டும் அலெர்ட்டா கேட்டீங்களே..மறக்கவே மாட்டேன்!!

Unknown said...

நன்றி நண்பரே..வந்ததற்கு காரணம். இது 'யூத்' பதிவர் சந்திப்பு என்பதனால் தான். அப்புறம் நம்மள யூத் இல்லை என்று நினைச்சிட்டாங்கனா?...கேபிள் சொல்லிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. நமக்கு இல்லையே..ஏனா..நாம யூத் தானே..

சந்திப்பு நன்றாக இருந்தது. அடுத்த சந்திப்புக்கும் தகவல் தெரிவியுங்கள். கண்டிப்பாக வருவேன். நன்றி

Unknown said...

ஏ நான் வந்துட்டேம்பா.உங்க தளத்துள இனைந்துட்டேன்பா

Sivakumar said...

@ விஜய் ஆர்ம்ஸ்ட்ராங்

தங்கள் வருகைக்கு நன்றி விஜய். ஒளிப்பதிவில் வெற்றிக்கொடி கட்ட வாழ்த்துகள். கேபிள்..எவர்யூத். சந்தேகமில்லை. ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு விட்டதால், அனைவரும் பெஞ்ச் உடையும் வரை கைதட்டும்படி கேட்டுக்கொள்கிறோம்!!

கோகுல் said...

//அப்போது நீங்க எல்லாம் பிளாக்கர்ஸா என்றபடி என்ட்ரி கொடுத்தார் பாண்டிச்சேரியில் இருந்து வெறும் கையுடன் வந்து ஏமாற்றமளித்த கோகுல்.//

அடடா!இவ்ளோ பீல் பண்ணுவீங்கன்னு தெரிஞ்சிருந்தா கை நிறைய வாங்கி வந்திருப்பேன்!