சங்க தலைவர்!?
சீரியசாவே சென்னை பதிவர் சந்திப்புக்கு ஏற்பாடு செஞ்சத நம்பாம கொஞ்சம் பேரு "ஏங்க நீங்க சும்மா காமடிதான பண்றீங்க?"ன்னு சொல்லி கபாலத்த காய வச்சாங்க. அதுக்கு விளக்கம் சொல்றதுக்கே பத்து பாட்டில் பன்னீர் சோடாவ உள்ள தள்ள வேண்டி இருந்தது. ஸ்பேனர் வாங்குனா கூட பேனர் வக்கிற காலத்துல, இந்த மீட்டிங்குக்கும் ஒரு பேனர் ரெடி பண்ண நெனச்சி கடைக்கி போனா அங்க ஒரு கூத்து. மேல இருக்குற ஸ்டில்லை குடுத்து டிசைன் பண்ண சொன்னதும் அங்க வேல செஞ்ச ஆளு கேட்டது: "சென்னை ப்ளாக்கர்சா? அது இன்னா மேட்டரு? இவர்தான் உங்க தலைவரா?". இல்லைன்னு தலைய 360 டிகிரில சுத்துனதுக்கு அப்புறம்தான் நம்புனாரு.
இன்னொரு பேனருக்கு கவுண்டமணி கைல ரோசாப்பூவோட இருக்குற ஸ்டில்லை டிசைன் செய்ய சொல்லும்போது அஞ்சாறு பசங்க உள்ள வந்தாங்க. எல்லாம் அஜீத் பேன்ஸ். கவுண்டமணி படத்தை பார்த்ததும் ஒரே ஆரவாரம் "ஏ.. தோ பார்ரா தல(அவங்க தல இல்ல) கைல பூவோட கலக்குறாரு" அப்டின்னு ஒரே சத்தம். அடுத்து நம்மள பாத்து "சென்னைல மீட்டீங்கா? கவுண்டர் வர்றாரா? சொல்லுங்க"ன்னு கொக்கி போட்டாங்க. "இல்ல. அவரோட ரசிகர்கள் சார்பா இதை டிசைன் பண்றோம்". இப்படி சொன்னதும் அவங்க ரியாக்சன் "ஆமாம்பா. எத்தினி வர்ஷம் ஆனாலும் இவர அட்சிக்க ஆள் இல்ல. மனசுல பட்டத தைரியமா பேசற மன்ஷன்". கவுண்டமணி...யூ ஆர் தி ரியல் மாஸ்!!
5 மணிக்கு வர சொன்னா கரெக்டா அதே டைமுக்கு கொஞ்சம் பேரு வந்து ஆஜர் ஆனாலும் நிறைய பேரு பொறுமையா ஆறு மணி WALK-குல தான் வந்தாங்க. டிஸ்கவரி பேலஸ் வேடியப்பன் ப்ரோக்ராம் நடக்குற ரூம் தரையை குறுகுறுன்னு பாத்துட்டு என்கிட்டே வந்தாரு "தாரு ஒட்டிக்கிட்டு இருக்கு. யாரோ காலணி போட்டுட்டு வந்துருக்காங்க"ன்னு கன்னத்துல கிண்ணம் சைசுக்கு அறையாம அன்பா சொல்லிட்டு போயிட்டாரு. முதல் கோல் வாங்கியாச்சி. எல்லார் காலையும் பாத்தேன். ஒத்தக்கால்லயும் காலணி இல்ல. எதுக்கும் தலகிட்ட சொல்லிருவோம்னு கே.ஆர்.பி.கிட்ட ரகசியமா "அண்ணே..கூட்டத்துல யாரோ தாரை மிதிச்சிட்டு வந்து தாறுமாறா ரங்கோலி போட்டுருக்காங்க"ன்னு பொருமுனா...ரெண்டாவது கோலும் விழுந்துச்சி. கே.ஆர். பி. சொன்ன பதில் "தம்பி. கீழ பாருங்க. நாந்தான் ஷூ போட்டுருக்கேன்"
தண்ணிபாட்டில மட்டும் தந்து மீட்டிங்கை ஓட்டலாம்னு பாத்தா..நம்ம ஷர்புதீன் கூப்புட்டு "டீ தருவோம்னு ப்ளாக்ல போட்டீங்களே?"ன்னு ஆப்பு வச்சாரு. வேற வழி..தாராளமயமாக்கல் கொள்கைய கடைபிடிச்சே ஆக வேண்டிய கட்டாயம். டீயும் சொல்லியாச்சி. ஜாக்கி சேகர் வந்ததுக்கு அப்புறம்தான் நிகழ்ச்சி களை கட்ட ஆரம்பிச்சது. "ஆட்டோக்காரன் அநியாயம் பண்ணா ஒரு தபா சொல்லிப்பாரு. கேக்கலன்னா விஸ்வரூபம் எடு"ன்னு சுரேகா சொழட்டி அடிச்சார். அதுக்கு ஜாக்கி குடுத்த ரியாக்சன் யதார்த்தமும், காமடியும் கலந்த மிக்ஸ். அவர் சொன்னது "படிச்சவன் தப்பு பண்ணா சவுண்டு விடலாம். ஆட்டோக்காரன் கிட்ட அத செஞ்சா அடிக்க வந்துருவானே"
ப்ரோக்ராம் ஆரம்பிச்சதுல இருந்து "டேய்..நல்லா பாத்துக்க நாங்களும் யூத்துதான்" டயலாக்கை சொல்லி அடிக்கடி ஆர்ம்ஸை முறுக்கிட்டு இருந்தாரு கேபிள் சங்கர். கல்லூரி மாணவர் மற்றும் புதிய பதிவரான சதீஷ் சரவெடியாக வெடித்தார் "ஜாக்கி சார், கேபிள் சார் ரெண்டு பேர் ப்ளாக்கையும் படிச்சேன். கேபிள் சார் எழுதன ஒரு பதிவ திரும்ப திரும்ப படிச்சேன். என்ன சொல்ல வர்றார்னு ஒண்ணும் புரியல. நீங்க எல்லாம் மத்தவங்கள பத்திதான் எழுதறீங்க. ஆனா ஜாக்கி சார் தான் சந்திச்ச விசயங்கள நிறைய எழுதுறார். நீங்களும் ஸ்பெல்லிங் மிஸ்டேக்கோடதான் எழுதறீங்க. என்ன ஒரு வித்யாசம்னா நீங்க கரக்ட் பண்ணிட்டு போஸ்ட் போடறீங்க. அவர் போடல" அப்டின்னு சொல்லி சபைய கலக்குனார் சதீஷ்.
வாசல்ல கொஞ்ச நேரம் நிப்போம்னு வந்தா அந்த நேரம் பாத்து அடுத்த கோலும் விழுந்துச்சி. அந்த நேரத்துல படியேறி வந்த ஒருத்தரை பாத்து ''வாங்க சார்"ன்னு சொன்னதுக்கு நோ ரியாக்சன். ப்ரோக்ராம் நடந்த ரூமை எட்டிப்பாத்தாரு. "என்ன விஷயமா வந்துருக்கீங்க சார்?" அப்டின்னு லேசா பம்மிக்கிட்டே கேட்டேன். அதுக்கு அவரு "இந்த இடம் நடிப்புப்பட்டறைக்கு உரியது. நாங்கதான் அதை நடத்தறோம்" அப்டின்னார். ஆகா. அவர்கிட்டேயே நீங்க யாருன்னு கேட்டுட்டமே. இன்னைக்கு நமக்கு போக்கிரி பொங்கல்தானான்னு வவுத்துக்குள்ள இருந்து கிய்யா மிய்யானு ஒரு ஓலம். நல்லவேளை அப்படி ஒண்ணும் நடக்கல.
கூட்டத்ல சைலண்ட்டா ஒருத்தர் உக்காந்துட்டு இருந்தாரு. அறிமுகப்படலம் நடந்துகிட்டு இருக்குறப்ப அவரோட டர்ன் வந்துச்சி. முன்னால போயி நின்னு பேச ஆரம்பிச்சாரு."நான் மங்குனி அமைச்சர்னு ப்ளாக் எழுதறேன்". இதைக்கேட்டதும் ஆச்சர்யத்தில் வால்யூமை ரைஸ் செய்தனர் நம் மக்கள். "யார் இந்த மங்குனி அமைச்சர்?" இந்த கேள்விய பதிவுலகத்துல கேட்டவங்க பல பேரு. எங்கிட்டகூட ஒரு தபா உண்மைத்தமிழன் அண்ணாச்சி கேட்டாரு: "யாருய்யா இந்த மங்குனி அமைச்சர்? சென்னைன்னு தெரியுது. ஆனா இதுவரை பாத்ததே இல்லையே?". அதுக்கு விடை நேத்துதான் கெடச்சது. அந்தப்புதிரை விடுவித்த மங்குனி அமைச்சருக்கு ஒரு ஸ்பெஷல் தேங்க்ஸ்!!
.........................................................................................
மீட்டிங் சம்மந்தமான நகைச்சுவை சம்பவங்களை மட்டுமே இங்கு பகிர்ந்து உள்ளோம். கலந்து கொண்டவர்களின் முழுவிவரம், விவாதங்கள், படங்களுடன் விரிவான அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படும்!!
........................................
Posted by:
! சிவகுமார் !
.....................................
19 comments:
என்னது மீட்டிங் முடிஞ்சிடுச்சா....?
கடேசி வரைக்கும் டீ கொடுத்தீங்களா இல்லையான்னு சொல்லவே இல்லியே?
/////// எங்கிட்டகூட ஒரு தபா உண்மைத்தமிழன் அண்ணாச்சி கேட்டாரு: "யாருய்யா இந்த மங்குனி அமைச்சர்? சென்னைன்னு தெரியுது. ஆனா இதுவரை பாத்ததே இல்லையே?". அதுக்கு விடை நேத்துதான் கெடச்சது. அந்தப்புதிரை விடுவித்த மங்குனி அமைச்சருக்கு ஒரு ஸ்பெஷல் தேங்க்ஸ்!!///////
நல்லா கன்பர்ம் பண்ணிக்கிட்டீங்களா அதுதான் மங்குனி அமைச்சர்னு....? ஏன்னா அடிக்கடி அவர் பினாமிய அனுப்பி வெச்சிடுவாரு.........
மங்குனி அமைச்சர் பதிவரா?
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
என்னது மீட்டிங் முடிஞ்சிடுச்சா....?//
இல்லை. இரண்டாம் பாகத்துக்கு நாள் குறிச்சாச்சி!!
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
கடேசி வரைக்கும் டீ கொடுத்தீங்களா இல்லையான்னு சொல்லவே இல்லியே?//
டீயை அனைவரும் குடித்த மிக முக்கியமான புகைப்படம் விரைவில் வெளியிடப்படும்.
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////// எங்கிட்டகூட ஒரு தபா உண்மைத்தமிழன் அண்ணாச்சி கேட்டாரு: "யாருய்யா இந்த மங்குனி அமைச்சர்? சென்னைன்னு தெரியுது. ஆனா இதுவரை பாத்ததே இல்லையே?". அதுக்கு விடை நேத்துதான் கெடச்சது. அந்தப்புதிரை விடுவித்த மங்குனி அமைச்சருக்கு ஒரு ஸ்பெஷல் தேங்க்ஸ்!!///////
நல்லா கன்பர்ம் பண்ணிக்கிட்டீங்களா அதுதான் மங்குனி அமைச்சர்னு....? ஏன்னா அடிக்கடி அவர் பினாமிய அனுப்பி வெச்சிடுவாரு...//
என்னங்க இப்படி ஒரு ஷாக்கை குடுக்கறீங்க. அப்ப வந்தது பினாமியா? என்னடா இது சென்னைக்கு வந்த சோதனை..
// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
மங்குனி அமைச்சர் பதிவரா?//
very tough question. கூட்டுங்கப்பா செயற்குழுவை..
என்ன சிவா வரவர பதிவுக்கு நீயும் நானும் மட்டும்தான் ஓட்டு போடுறோம்... ஒரு நையாண்டி பவன் பதிவு போடலாமா...?
// எதுக்கும் தலகிட்ட சொல்லிருவோம்னு கே.ஆர்.பி.கிட்ட ரகசியமா "அண்ணே..கூட்டத்துல யாரோ தாரை மிதிச்சிட்டு வந்து தாறுமாறா ரங்கோலி போட்டுருக்காங்க"ன்னு பொருமுனா...ரெண்டாவது கோலும் விழுந்துச்சி. கே.ஆர். பி. சொன்ன பதில் "தம்பி. கீழ பாருங்க. நாந்தான் ஷூ போட்டுருக்கேன்" //
இந்த சம்பவத்தை அங்கே நேரில் பார்க்கும் போது வந்த சிரிப்பை விட இங்கே எழுத்தாக பார்க்கும் போது அதிகம் சிரிப்பு வருகிறது...
சிவா அந்த டீக்கடை பையனுக்கு கொஞ்சம் வெயிட்டா டிப்ஸ் கொடுக்கனும்ன்னு ஆசைப்பட்டேன்... அதுக்குள்ள கடமை அழைத்தால் கிளம்ப வேண்டியதா போச்சு... நமக்காக தீயா வேலை செஞ்சான் தெரியுமோ...?
// கேபிள் சார் எழுதன ஒரு பதிவ திரும்ப திரும்ப படிச்சேன். என்ன சொல்ல வர்றார்னு ஒண்ணும் புரியல. //
யலக்கியவாதின்னா அப்படித்தான் இருக்கும் தம்பி...
எங்களையெல்லாம் கூப்பிடலையே...
ஓ..இது யூத்...
நாம தான் இன்னும் வயசுக்கு வரலையே...
சீக்கிரம் தொடருங்க...
அட்டகாசமா பகிர்ந்திருக்கீங்க மாப்ள....பாவிங்க லீவு கொடுக்கல...அதனால வர முடியல....ஹிஹி!
@ரெவெரி
நோ ப்ராப்ளம் நண்பா. விரைவில் சந்திப்போம்!!
//விக்கியுலகம் said...
அட்டகாசமா பகிர்ந்திருக்கீங்க மாப்ள....பாவிங்க லீவு கொடுக்கல...அதனால வர முடியல....ஹிஹி//
உங்கள எதிர்பாத்து ஏமாந்துட்டோம் மாம்ஸ். நேரம் கிடைச்சா வாங்க!!
அட என்ன பத்தியும் எழுதி இருக்காங்க... நான் தான் அந்த சதீஷ் (பப்ளிசிட்டி, பப்ளிசிட்டி).... என்னை பற்றி நாலு வார்த்தை எழுதனவங்களுக்கு நன்றி'ங்க... இந்த பதிவை போட்ட சிவகுமார் அண்ணணின் நாமன் வாழவும்... ஹி ஹி...
யாருக்கும் தெரியாத உண்மை இது... அந்த சந்திப்புக்கு வந்தவங்க யாரோ காலணி போட்டு வந்து தரையில ரங்கோலி போட்டு இருக்காங்க... அது வெற யாரும் இல்ல, நான் தான்.. ஆனால், கே.ஆர்.பி சார் பலியாகிட்டார்... அது தார் இல்லை சுவிங்கம், என் சூவில் இருந்தது தான்... அதற்கு ஒரு பெரிய சாரி....
நல்லா இருக்கு பதிவு.
Post a Comment