Tuesday, January 24, 2012

தல கவுண்டமணி அளித்த அரிய பேட்டி - 2


பேட்டியின் தொடர்ச்சியை நாளை வரை தள்ளி வைத்து பதிவிடுவதை விட ரசிகர்களுக்காக உடனே தருவதுதான் சரி என நினைத்ததால் இதோ பாகம் இரண்டு:

தொடர்கிறது பேட்டி.....


விகடன்: உங்களோட வளர்ச்சியில யாருக்கு பங்கு உண்டு? உங்க காட்பாதர்னு யாரை சொல்லுவீங்க? 

கவுண்டர்: (கலகலவென சிரிக்கிறார்..) இது என்ன மாபியா கேங்கா? காட்பாதர் இருக்கறதுக்கு! 'ஒருத்தன் வளர்றது இன்னொருத்தனுக்கு பிடிக்காது'ன்னு நான்தான் சொல்றேனே. ரஜினி இவ்வளவு உயரத்துல இருக்காருன்னா அவரை சுத்தி இருக்குறவங்களுக்கு சந்தோஷம்னா நினைக்கறீங்க?.. சூப்பர் ஸ்டார்னு புகழராங்களே தவிர, சொந்தக்காரங்க கூட உள்ளுக்குள்ளே எரிச்சலோடதான் இருப்பாங்க. இதுதான் உலகம். இதுதான் எனக்கும்.

                                                                        
விகடன்: ஒரு நடிகன் எப்படி இருக்க வேண்டும்?

கவுண்டர்: தன்னைப்பத்தின நிஜ ரூபத்தை பொத்தி பொத்தி மூடணும். பெட்டிக்கடையில பீடியைக்கூட கட்டுக்கட்டா உள்ளேதான் வெச்சிருப்பான். அப்போதான் அதுக்கு மரியாதை. அள்ளி வெளியே கொட்டிப்பரத்தி வியாபாரம் பண்ணிப்பாருங்க..பீடி விக்காது. நான் விழாக்கள், பேட்டிகள்னு எதுக்கும் ஒப்புக்கறதில்லை. 'கலை நிகழ்ச்சி' என்ற பேரில் துபாய், சிங்கப்பூர் போறதில்லே. ரசிகர் மன்றம் இருந்தது. இப்ப மன்றத்தை எல்லாம் கலச்சிட்டேன். என் பிறந்த நாள் என்னன்னே மறந்து போச்சி. முக்கியமா டி.வி.க்கு பேட்டி குடுக்கறதில்ல. கவுண்டமணியை சினிமாவுல மட்டும் பாரு..அப்பதான் கிக்!

....சில நிமிட மௌனத்திற்கு பின் கேள்வி கேட்காமலே சொன்னார்... 

இது ஒரு ட்ரெண்டுங்க. நம்ம காமடியை ஒப்புக்கறாங்க. அதை அழகான மேக்கப் போட்டுட்டு வந்து பண்ணக்கூடாதா? முகத்தை அசிங்கம் பண்ணிட்டு, மண்ணாங்கட்டி அது இதுன்னு பேர் வச்சிக்கிட்டு வந்தாதான் காமடியா?! காமடிக்காகவே கோண மூஞ்சிக்காரங்களை தேடிப்பிடிக்கறது அக்கிரமம். அட ஜனங்க ரெண்டு மணிநேரம் நம்ம முகத்தை பாக்க வேண்டாமாங்க? என்னைக்கேட்டா நகைச்சுவை நடிகன்தான் அழகா, நீட்டா ப்ரெஷ்ஷா இருக்கணும்.

..பேட்டியின் போது போட்டோ  எடுக்க அனுமதிக்கவில்லை....

அதற்கு அவர் சொன்ன பதில் "மேக்கப் இல்லாம போட்டோ எடுக்க போஸ் குடுக்குறது இல்லைங்க" என்கிறார் தலையை தடவியபடி. குடும்பத்தை படம் எடுப்பதற்கும் மிகப்பெரிய தடை போடுகிறார். 

"முடியாதுங்க. இதுவரைக்கும் என் பேமிலி படம் எதுலயாச்சும் பாத்து இருக்கீங்களா? தர்றதே இல்லை. எனக்கு ரெண்டு பொண்ணுங்க. நல்ல சந்தோஷமான குடும்பம். அவங்களை பொறுத்தவரை நான் காமடி கவுண்டமணி கிடையாது. ஏதோ ஒரு வேலைக்கு போறேன். கூலி வாங்கிட்டு வர்றேன். அதை வச்சி குடும்பம் நடத்துறது அவங்க வேலை. என் குடும்பத்து ஆளுங்க இன்னிவரைக்கும் ஷூட்டிங் பாத்தது கிடையாது. என்னை ஒரு நடிகனா வீட்ல யாரும் பாக்கக்கூடாது. அது வேற..இது வேற.

உம்முன்னு உட்காந்துட்டு இருக்குறவங்க எல்லாம் தனியா எதுனா அள்ளிட்டா போகப்போறாங்க? அப்புறம் எதுக்கு பொறக்கணும்? என்னைப்பொறுத்தவரை நாலு பேரைப்பாக்கணும், நாலு விதமா பேசணும், சந்தோஷமா சிரிக்கணும். அவ்வளவுதான் வாழ்க்கை. இருக்கிற வரைக்கும் சிரிப்போம்...ரைட்டா?" 

முற்றும். 
................................................................

புத்தக கண்காட்சியில் வாங்கிய விகடனின் பொக்கிஷம் புத்தகத்தில் இப்பேட்டி படித்தேன். அதை கவுண்டர் ரசிகர்களுக்கு பகிர்ந்ததில் மகிழ்ச்சி. 
..............................................................
...........................
Posted by:
!சிவகுமார்! 
...........................


                                                                  

5 comments:

ஹாலிவுட்ரசிகன் said...

நல்ல ஒரு பேட்டியை தேடி எடுத்து பகிர்ந்ததற்காக நன்றி.

Unknown said...

சொந்தக்காரங்க கூட உள்ளுக்குள்ளே எரிச்சலோடதான் இருப்பாங்க. இதுதான் உலகம். இதுதான் எனக்கும்.

CS. Mohan Kumar said...

அருமை. குறிப்பாய் அவர் ஏன் பத்திரிக்கை, டிவியில் பேட்டி தருவதில்லை என்கிற தகவல் இதன் மூலம் தான் தெரிந்தது. புத்தகத்தில் வாசித்ததை சிரமம் எடுத்து இங்கு பகிர்ந்தமைக்கு நன்றி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

கே.ஆர்.பி.செந்தில் said...

சொந்தக்காரங்க கூட உள்ளுக்குள்ளே எரிச்சலோடதான் இருப்பாங்க. இதுதான் உலகம். இதுதான் எனக்கும்.//

ஏன்ன்னே சிட் டிஷ் தர மாட்டீங்குராங்களா?

Anonymous said...

என்ன சொல்லரது? அருமையான பேட்டி,
ஒவ்வொரு வார்த்தையும் பதிலும் நச்..