Monday, January 23, 2012

தமிழ்நாட்டின் ஒரே ஸ்டார் 7 ஸ்டார் ஜி.கே.தான் மாப்ள!!


டார்க் ரோஸ் தமிழன் ராமராஜன், அமுல் பேபி பவர் ஸ்டார் ஆகியோருக்கு கடும் சவாலைத்தர வந்தே விட்டார் 7 ஸ்டார் ஜி.கே. வரும் குடியரசு தினத்தில் ரிலீஸ் ஆகிறது தலைவரின் படமான தேனி மாவட்டம். தமிழகம் மட்டுமல்ல..உலகமே அல்லோகலப்படப்போகும் அதிசய சித்திரம் இந்த வாரம் வெளியாவதைக்கண்டு ரவுண்ட் நெக் டி ஷர்ட் போடுவோர் கூட டெய்லரிடம் சொல்லி காலர் வைத்து அதை தூக்கி விட அலைமோதுவதால் பொங்கல் தாண்டியும் தையல் மிஷின்கள் எல்லாம் தடதடக்கிறதாம்!!

                           காதல் ரசத்தை கண்டெய்னரில் இருந்து கடகடவென ஊற்றும் GK 

ரியல் எஸ்டேட் தொழிலில் நடக்கும் அபத்தங்களை களைந்து மக்களை காக்கும் கண்ணியவானாக ஜி.கே. பட்டையை கிளப்புவதே படத்தின் ஒன் லைன். நாயகி வர்ஷா இனி வருஷா வருஷம் பேசப்படுவார் என்று அறுதியிட்டு உறுதி கூறுகிறார்கள். 
                                                     
                      விவசாயிகளுக்கு தன்னம்பிக்கை உரமேற்றும் அதிநவீன எம்.ஜி.ஆர். 

'அசல் தல' கோபால் கந்தன் (GK) இக்காவியத்தின் மூலம் பராசக்தி, பருத்திவீரன் நாயகர்கள் செய்த புரட்சிகளை புறந்தள்ளி மாபெரும் வெற்றி பெறுவார் என ஆஸ்கர் கமிட்டி மெம்பர்கள் வரை நாக்கில் விரல் வைத்து பேசி வருகின்றனர். 

எதிரிக்கு வலி என்றாலும் கதறி அழும் ஹெவன் ஹ்யூமன் 7 ஸ்டார் 

         "மேதை, ஆனந்த தொல்லை வசூலை மிஞ்சணும். மொத டிக்கட் எனக்குத்தான்"

        லெக் பைட்டுல இனிமே கேப்டனுக்கு அடுத்து நம்ம வைஸ் கேப்டன்தான்!

                "மேதையை விட ஒரு ஷோ அதிகமா என்னை தியேட்டர்ல வச்சி அழகு பாப்பீங்களா?" 

       "குடியரசு தினத்தில் சந்திப்போம். தியேட்டருக்கு வந்துருங்க சாமியோ!!" 

                                                                   
அரை பாடி லாரியில் கம்பியை பிடிக்காமல் நிற்கும் தெகிரியசாலிகளை கூட மிரள வைக்கும் செவென் ஸ்டாரின் செமத்தியான ட்ரெயிலர்:
வை திஸ் கொலைவெறி பாடலை டம்மி பீஸ் ஆக்க வந்திருக்கும் செவன் ஸ்டாரின் செம குத்து: 

"யக்கா யக்கா" பாடல் தமிழ்நாட்டை கலக்கி அடிக்கும். வித்தவுட் டவுட்டு.  ******************************************************

................................
Posted by:
! சிவகுமார் !
...............................
                                                            

18 comments:

NAAI-NAKKS said...

INGA PARUNGA..UNGA BLOG VARAVENDAAM-NA SOOLIDUNGA...
IPPADI ELLAM PODAVENDIYATHILLAI..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

எங்க இருந்துதான் கிளம்பி வராங்களோ. குடியரசு தினத்துல சுதந்திரமே கிடையாதா

கே.ஆர்.பி.செந்தில் said...

இந்தப் படத்தின் பிரிவ்யூ ஷோ வரும் 26 ந்தேதி மதியம் காட்டப்பட இருக்கிறது.

மன தைரியம் உள்ளவர்கள் மட்டும்
கேபிள் : 984033266 க்கு போன் செய்து புக் உங்கள் இருக்கையை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.

goundamanifans said...

@ நாய் நக்ஸ்

ஹல்லோ.. வருங்கால அற்புத கலைஞனை இப்படி மனம் நோக செய்வது சரியல்ல. சொல்லிட்டோம்.

goundamanifans said...

@ ரமேஷ்

சுதந்திரம் இல்லை. செவன் ஸ்டார் மனச்சிறையில் அடைபட்டே ஆக வேண்டுமென்பது விதி.

goundamanifans said...

@ கே.ஆர்.பி. செந்தில்

படம் பார்க்கும் முன் இருக்கையை உறுதிப்படுத்தி என்ன பயன்? . GK வின் சண்டை ஸ்டில்களை பார்த்தால் இருக்கைகள் இன்டர்வலுக்கு முன்பே உறுதி இழக்கும் என்றல்லவா தெரிகிறது.

veedu said...

அடங்கொன்னியா...யோவ்...அந்தாள சிரிக்க..வேண்டாம்ன்னு சொல்லுய்யா...குழந்தை பயப்படுது பாரு.....

goundamanifans said...

//veedu said...
அடங்கொன்னியா//

நாங்க கொல்லளைங்க...

goundamanifans said...

//veedu said...
அந்தாள சிரிக்க..வேண்டாம்ன்னு சொல்லுய்யா...குழந்தை பயப்படுது பாரு.....//

ஏழையின் சிரிப்பில் இறைவனை பாக்கணும்.

veedu said...

@goundamanifans
ந்ண்ணா...அடங்கொன்னியா...ங்கறது கவுண்டர் ஜெர்க் ஆனா சொல்ரதுங்ண்ணா...எதுக்கும் பிம்பிளிக்கி பிளாப்பி புத்தகத்தை நீங்க ஒருக்கா படிங்கண்ணா....மக்களே பாருங்க மேதை...பார்த்திலிருந்து கவுண்டமணி பேன்ஸ்க்கே....இந்த நிலம தேனி மாவட்டத்தையும் பார்த்தாங்கன்னா..விளங்கிரும்...ஆங்

மனசாட்சி said...

அகில உலக 7 ஸ்டார் ஜி கே மன்றத்தில் என்னை இணைத்து கொள்வதில் பெரும் மகிழ்ச்சி.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

பனமரத்துல வவ்வாலா....
பவர்ஸ்டாருக்கே சவலா.....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

எத்தனை எத்தனை ஸ்டார்கள் வந்தாலும் அத்தனை பேரும் பவர்ஸ்டார் என்ற ஒரு ஸ்டாருக்கு கீழேதான் என்ற உண்மையை தமிழகத்தின் சரித்திரம் மற்றும் பூகோளங்கள் குறித்துக் கொள்ளும் நாள் வெகுதொலைவில் இல்லை என்ற இந்த அரிய தகவலை பவர்ஸ்டாரின் ரசிகப்பெருமக்கள் அனைவருக்கும் மிக்க மகிழ்ச்சியுடனும் பெருமையுடனும் தெரிவித்துக் கொள்ள ஆசைப்படுவதை இங்கே சொல்லிக் கொள்கிறேன்...... !

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// விவசாயிகளுக்கு தன்னம்பிக்கை உரமேற்றும் அதிநவீன எம்.ஜி.ஆர். //////

டெய்லி யூரியா சாப்புடுறாரா?

"என் ராஜபாட்டை"- ராஜா said...

இப்பவே கண்ணை கட்டுதே

"என் ராஜபாட்டை"- ராஜா said...

இன்றைய ஸ்பெஷல்

நண்பன் படமும் அஜித் ரசிகர்களும்

ஆரூர் மூனா செந்தில் said...

சிவா எனக்கு ஒரு டிக்கெட்.

ஹாலிவுட்ரசிகன் said...

புதுசு புதுசா கௌம்புறானுங்களே ... ஐயோ ... இப்பவே கண்ணக் கட்டுதே.

ஆனாலும் பவர்ஸ்டாரை தாண்டி ஒரு ஸ்டார் வரணும்னா அவன் இனித்தான் பூமியில் பிறக்கோணும்.