சனியன்று(07/01/12) செ.பு .க துவங்கிய காலை 11 மணிக்கே டான் என ஆஜராகிவிட்டார் பிலாசபி. மூன்று மணிக்கு ஈசனை(பிரபாகரன்) அங்கு சந்தித்தேன். இருவரும் உள்ளே நுழைந்த மறுநிமிடமே ஒரு பெரியவர் ஈசனை மட்டும் தனியே அழைத்து பேசிக்கொண்டு இருந்தார். முன்னாள் பதிவர் என்று எண்ணினேன். "இல்லைங்க. அவர் வாசிக்கும் ஒரு சில ப்ளாக்குகளில் எனதும் ஒன்றாம். என்ன இது அதிசயம்" என்று 'குணா' கமல் போல 'பார்த்தவிழி..' நடைபோட்டார். அருகில் இருந்த ஸ்டாலில் ஒரு இளம்பெண் "நன்றி அக்கா. நன்றி ஐயா. நலமா?" என தூய தமிழில் பேசிக்கொண்டு இருந்தார். "யோவ்..நாங்க டெம்ப்ளேட் கமன்ட் போட்டா மட்டும் டென்ஷன் ஆவற. இதை மட்டும் கேக்க மாட்டியா?" என்றேன். தத்துவம் பதில் தரவில்லை. ராஸ்கோல்!
233-வது எண் ஸ்டாலை கண்டதும் ஆச்சர்யம். 'உணவு உலகம்' பெயர் போட்டிருந்தது. நம்மிடம் ஒரு வார்த்தை கூட சொல்லாமல் ஆபீசர் கடையை திறந்து இருக்கிறாரே என்று நரம்பு புடைத்து மனதை அடைத்தது. ஆனால் இதை முன்பே உணர்ந்திருப்பார் போல ஆபீசர். உள்ளே ஒரு பெண் போலீசை உலவ விட்டிருந்தார்.
ஆபீசர் சார். இது உங்க கடைதான?
யாம் நடந்து போகையில் திடீரென இருவர் முதுகிலும் சப்பென அறைந்தார் ஒருவர். யாரது என்று திரும்பினால்..அட 'வீடு திரும்பல்' மோகன்குமார் சார். நீங்க இப்படி சுத்துங்க. நான் அப்படி சுத்தறேன் என்று எஸ்கேப் ஆனார். அடுத்து கண்ணில் பட்டது பிரபல பஸ்ஸர் க.ராவும், கீதப்ரியனும். இருவருக்கும் சலாம் போட்டுவிட்டு தொடர்ந்தோம். பிளாஸ்டிக் பைக்கு தடா போட்டதால், சீனியர் பதிவர்கள் பலர் படையாப்பா ரேஞ்சுக்கு கல்லூரி பேக்குடன் சுற்றிவந்தனர். பார்க்க பார்க்க பரவசம்.
சிங்கிள் Pack க.ரா. & ஸ்கூல் Bag கேபிள்
அன்னா ஹசாரே புத்தகத்தை ஒரு கடையில் கண்டு கண்கள் சிவந்தார் கேபிட்டலிஸ்ட் கே.ஆர்.பி. 'அன்னா ஹசாரேவா? இதை நீங்களே வச்சிக்கங்க' என்று ஸ்டால் வைத்து இருந்தவர்களை ஓட்டினார். முறைத்து லுக் விட்டார்கள் அவர்கள். டிஸ்கவரி புக் பேலஸ் ஸ்டால் அருகே பதிவர்கள் முற்றுகை இட்டிருந்தனர். அங்கே வந்த யூத் ஒருவர் கேபிளை கண்ட ஆர்வப்பெருக்கில் 'சார் நீங்கதானே கேபிள். உங்க சினிமா விமர்சனங்கள எல்லாம் விடாம படிப்பேன். அருமைன்னா அருமை அப்படி ஒரு அருமை சார்' என்று பரவச மழை பொழிந்தார். இறைவா...!!!!
கொத்து பரோட்டாவிற்கு போட்டி புத்தகம்
இம்முறை சில கடைகளில் பன்றி தலைப்புள்ள புத்தங்களை காண நேர்ந்தது. அதில் ஒன்று அருந்தவப்பன்றி.
அடுத்த புத்தகத்தின் பெயர் பன்றிக்குட்டி. நிஜமாக வாசிக்க வேண்டாம். வாசிப்பது போல் போஸ் குடுத்தால் போதும் என்று சொல்லியும் பன்றிக்குட்டி பற்றி சில வரிகளை வெறியுடன் பார்க்கும் பயபுள்ள.
பன்றிதாசனின் படிப்பாற்றல்
என்னடா இது ஒரே மாதிரி திரைப்பட பாடல்களை கேட்டு சலித்து விட்டதே என்று எண்ணிய நேரத்தில் கண்ணில் பட்டது கீழே உள்ள ஸ்டால். அங்கிருந்த டி.வி.யில் 'தவளையாரே' பாடலைக்கேட்டு மெய்மறந்தேன். உணர்ச்சிவேகத்தில் உள்ளே நுழைந்தேன் 'செல்லமே செல்லம்' குழந்தைப்பாடல்கள் எனும் பெயரில் இருந்த 6 பாகம் கொண்ட டி.வி.டி.க்களை அள்ளினேன். விலை 600+. ஆனால் 5 டி.வி.டி.க்களை 10% தள்ளுபடியுடன் சேர்த்து மற்றொன்றை இலவசமாக தந்தனர். ஒவ்வொன்றிலும் 20 பாடல்கள். மொத்தம் 120 பாடல்கள். எல்லாம் எனக்கே!! இனி இதுதான் நமக்கு டைம் பாஸ்.
எம் போன்ற சுட்டிகளுக்கு பிடித்த ஸ்டால்
என் மனம் துள்ளிவிளையாட காரணமான அந்தப்பாடல் உங்களுக்காக:
நீங்களே சொல்லுங்க? எப்படி அருமையா இருக்கு பாட்டு? ஆனா இந்த பிலாசபி "ஹலோ..உங்க சொந்தக்கார குழந்தைங்களுக்கு வாங்கறீங்களா?" என்று வெறுப்பேற்றினார். இல்லை. எனக்காகத்தான் என்று பலமுறை சொல்லியும் கேட்கவில்லை. பழம்பெரும் பதிவர்கள் எல்லாம் திடுதிப்புன்னு காமிக்ஸ் கடைல பூந்து புத்தங்களை அள்ளி 'நாங்களும் கொளந்தைங்க'தான்னு சொன்னா நம்புற உலகம் நான் சொன்னா மட்டும் நம்ப மாட்டேங்குதே..!!
புதிய தலைமுறை ஸ்டாலில் பழைய புத்தகங்களை விற்றனர். அழகான யுவதி அங்கு தரிசனம் தந்தார். அரைக்கை டி ஷர்ட்டை மடித்து விட்டு அவர் போஸ் தந்ததைக்கண்ட கோபத்தில்/கூச்சத்தில் அந்த ஸ்டாலை ஸ்கிப் செய்தோம். வி டோன்ட் லைக் இட். அதனருகே சத்தியம் தமிழ் செய்தி சேனல் கடையை பரப்பி இருந்தது. சத்தியம் - Yes as Yes. No as No (என்ன ஒரு புத்திசாலித்தனம்). என்று விளம்பரம். பலே!! புதிய சேனல் வெற்றி பெற வாழ்த்துகள். சில நிமிடங்கள் மட்டும் தலைகாட்டினார் ஆரூர். முனா. செந்தில். லேட் ஆனால் அவர் வீட்டில் பூரிக்கட்டை பறக்கும் என்று உளவுத்துறை தகவல் கிடைத்தது.
பிறகு அங்கன இங்கன சுத்தி வந்ததில் இரவு 9 மணி ஆகிவிட்டது. எல்லாரையும் பேக் அப் செய்தனர். ஓடியாந்துட்டோம் வீட்டுக்கு.
.....................................................................................
..............................
Posted by:
!சிவகுமார்!
...............................
34 comments:
// அட 'வீடு திரும்பல்' மோகன்குமார் சார். நீங்க இப்படி சுத்துங்க. நான் அப்படி சுத்தறேன் என்று எஸ்கேப் ஆனார் //
அவர் காராசேவு (கரா அல்ல) கொடுத்ததை எழுதாதற்கு என் கடும் கண்டனங்கள்...
// மொத்தம் 120 பாடல்கள். எல்லாம் எனக்கே!! இனி இதுதான் நமக்கு டைம் பாஸ். //
அந்த குழந்தையே நீங்கதான் சார்...
// அரைக்கை டி ஷர்ட்டை மடித்து விட்டு அவர் போஸ் தந்ததைக்கண்ட கோபத்தில்/கூச்சத்தில் அந்த ஸ்டாலை ஸ்கிப் செய்தோம். //
அவங்க டீ-ஷர்ட்டை ஒரு இஞ்ச் மடித்துவிடுவதால் கவர்ச்சி பொங்கிவழிந்து அதைப் பார்த்து நாம் மயங்கி புத்தகங்களை வாங்கி குவித்துவிடுவோமாம்... என்ன ஒரு புத்திசாலித்தனம்...
சிவா, எல்லாம் ரெடி. அடுத்த புத்தக கண்காட்சியில 100 பேரை இறக்குறோம். 90 பேர் உங்ககிட்ட வந்து உங்களைப் போல பதிவர் யாருமில்லை. உங்க எழுத்து தான் எங்களுக்கு சுவாசம், நீங்க தான் அடுத்த பாரதியார், அடுத்த சுஜாதா அப்படின்னு சொல்லி ஒரு பெரிய போட்டோகிராபரை வைத்து போட்டோ எடுக்க வைக்கிறோம். அடுத்ததா 5 பேரை கேபிள் அண்ணன் பக்கம் அனுப்பி அவரை நீங்க தான மெட்ராஸ் பவன் சிவக்குமார் அப்படின்னு கேட்க வைத்து மெட்ராஸ்பவன் தான் இந்தியாவின் தேசிய வலைப்பூ என்று சொல்ல வைத்து அவரை மிரள வைக்கிறோம். அடுத்த 5 பேரு கேஆர்பி அண்ணன் பக்கம் அனுப்புறோம். அடுத்த வருட புத்தக கண்காட்சியில் நீங்க தான் ஹீரோ.
அது சரி பூரி கட்டை வீச போற தகவல் மட்டும் தான் உங்களுக்கு தெரியுமா அல்லது வீசி மண்டை வீங்கினதும் தெரிஞ்சு போச்சா?
என்னது,,,,குழந்தையா.....மீசை வச்ச குழந்தைதானே...ஹி ஹி ஹி.
நான் பார்த்த கடையை நீங்க பார்க்க வில்லை.
நீங்க பார்த்த கடையை நான் பார்க்க வில்லை !!
@ பிரபாகரன்
காராசேவு தந்தார். தந்தார். இப்ப ஓக்கேவா? டி ஷர்ட்..நம்ம நோ மயக்கம்..
@ஆரூர் முனா செந்திலு
தலைவா..அடுத்த வருஷம் கொறஞ்சது 100 பேரை சேக்கணும். பூரிக்கட்டை மறுபக்கம் நீங்க சொல்லிதான் தெரியுது.
@ மோகன் குமார்
அடுத்த முறை பாத்துருவோம்!!
குழந்தை சிவக்குமார் வாழ்க! வாழ்க!!
@ கே.ஆர்.பி
வாங்கண்ணே.. நீங்க காமிக்ஸ் புத்தகத்த படிச்சாச்சா?
///////Philosophy Prabhakaran said...
// அரைக்கை டி ஷர்ட்டை மடித்து விட்டு அவர் போஸ் தந்ததைக்கண்ட கோபத்தில்/கூச்சத்தில் அந்த ஸ்டாலை ஸ்கிப் செய்தோம். //
அவங்க டீ-ஷர்ட்டை ஒரு இஞ்ச் மடித்துவிடுவதால் கவர்ச்சி பொங்கிவழிந்து அதைப் பார்த்து நாம் மயங்கி புத்தகங்களை வாங்கி குவித்துவிடுவோமாம்... என்ன ஒரு புத்திசாலித்தனம்...////////
இதுக்கெல்லாம் மயங்குவாங்களா? அப்படியே அந்த ஃபிகர் கூட கடலை போட்டு ரெண்டு புக்க லவட்டிக்கிட்டு வருவீங்களா... அத விட்டுப்புட்டு இப்படி பச்சப்ப்புள்ளையா இருக்கீங்கள்ளே?
///// அருகில் இருந்த ஸ்டாலில் ஒரு இளம்பெண் "நன்றி அக்கா. நன்றி ஐயா. நலமா?" என தூய தமிழில் பேசிக்கொண்டு இருந்தார். "யோவ்..நாங்க டெம்ப்ளேட் கமன்ட் போட்டா மட்டும் டென்ஷன் ஆவற. இதை மட்டும் கேக்க மாட்டியா?" என்றேன். தத்துவம் பதில் தரவில்லை. ///////
தூய தமிழ்ல, அதுவும் ஒரு இளம்பெண்..... அவரு இதுக்கு ஏதாவது தனிப்பதிவு வெச்சிருப்பாரு....
////ஆனால் இதை முன்பே உணர்ந்திருப்பார் போல ஆபீசர். உள்ளே ஒரு பெண் போலீசை உலவ விட்டிருந்தார். /////
வெரி டெலிகேட் பொசிசன்......
////இம்முறை சில கடைகளில் பன்றி தலைப்புள்ள புத்தங்களை காண நேர்ந்தது. /////
அண்ணன் பேமசாகிட்டு வர்ரேன்ல, அதான்....... இதுக்குத்தான் ஊருக்கு ஒரு ஆல் இன் ஆல் அழகுராஜா வேணும்கறது......!
/////அடுத்த புத்தகத்தின் பெயர் பன்றிக்குட்டி. நிஜமாக வாசிக்க வேண்டாம். வாசிப்பது போல் போஸ் குடுத்தால் போதும் என்று சொல்லியும் பன்றிக்குட்டி பற்றி சில வரிகளை வெறியுடன் பார்க்கும் பயபுள்ள. /////
நல்லா செக் பண்ணீங்களா உள்ள ஏதாவது கில்மா படம் இருந்திருக்க போவுது.........?
////மொத்தம் 120 பாடல்கள். எல்லாம் எனக்கே!! இனி இதுதான் நமக்கு டைம் பாஸ். ////
நர்சரி டீச்சரம்மாவ கரெக்ட் பண்றீங்களாக்கும்.......
/////Philosophy Prabhakaran said...
// அட 'வீடு திரும்பல்' மோகன்குமார் சார். நீங்க இப்படி சுத்துங்க. நான் அப்படி சுத்தறேன் என்று எஸ்கேப் ஆனார் //
அவர் காராசேவு (கரா அல்ல) கொடுத்ததை எழுதாதற்கு என் கடும் கண்டனங்கள்...///////
காராசேவு மட்டும்தானா, வேற மெயின் டிஷ் எதுவும் இல்லியா?
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
இதுக்கெல்லாம் மயங்குவாங்களா? அப்படியே அந்த ஃபிகர் கூட கடலை போட்டு ரெண்டு புக்க லவட்டிக்கிட்டு வருவீங்களா... அத விட்டுப்புட்டு இப்படி பச்சப்ப்புள்ளையா இருக்கீங்கள்ளே?//
போங்கண்ணே..எங்களுக்கு வெக்க வெக்கமா வருது..
//
பன்னிக்குட்டி ராம்சாமி said...
தூய தமிழ்ல, அதுவும் ஒரு இளம்பெண்..... அவரு இதுக்கு ஏதாவது தனிப்பதிவு வெச்சிருப்பாரு....//
ஆமாம். பயபுள்ள அங்க ஒண்ணும் தெரியாத நல்லபுள்ள மாதிரி சீன் போட்டத பாத்தா சந்தேகமா இருக்கு.
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
////இம்முறை சில கடைகளில் பன்றி தலைப்புள்ள புத்தங்களை காண நேர்ந்தது. /////
அண்ணன் பேமசாகிட்டு வர்ரேன்ல, அதான்....... இதுக்குத்தான் ஊருக்கு ஒரு ஆல் இன் ஆல் அழகுராஜா வேணும்கறது......!//
பன்றியுடன் பள்ளிக்கூடம் செல்ல பத்து வழிகள் அப்டின்னு ஒரு புக்கு வேற இருந்துச்சி!!
//கோவை நேரம் said...
என்னது,,,,குழந்தையா.....மீசை வச்ச குழந்தைதானே...ஹி ஹி ஹி.//
அது ஒட்டி வச்ச செட்டு மீசைங்க!!
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////அடுத்த புத்தகத்தின் பெயர் பன்றிக்குட்டி. நிஜமாக வாசிக்க வேண்டாம். வாசிப்பது போல் போஸ் குடுத்தால் போதும் என்று சொல்லியும் பன்றிக்குட்டி பற்றி சில வரிகளை வெறியுடன் பார்க்கும் பயபுள்ள. /////
நல்லா செக் பண்ணீங்களா உள்ள ஏதாவது கில்மா படம் இருந்திருக்க போவுது.........?///
அடுத்த முறை பாத்துடறேன். ஹி..ஹி..
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
////மொத்தம் 120 பாடல்கள். எல்லாம் எனக்கே!! இனி இதுதான் நமக்கு டைம் பாஸ். ////
நர்சரி டீச்சரம்மாவ கரெக்ட் பண்றீங்களாக்கும்..//
இறைவா இவரை மன்னியும். எனக்கும் மேற்சொன்ன வரிகளுக்கும் சம்மந்தமில்லை சர்வேசா!!
// பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////Philosophy Prabhakaran said...
// அட 'வீடு திரும்பல்' மோகன்குமார் சார். நீங்க இப்படி சுத்துங்க. நான் அப்படி சுத்தறேன் என்று எஸ்கேப் ஆனார் //
அவர் காராசேவு (கரா அல்ல) கொடுத்ததை எழுதாதற்கு என் கடும் கண்டனங்கள்...///////
காராசேவு மட்டும்தானா, வேற மெயின் டிஷ் எதுவும் இல்லியா?//
அருகில் இருந்த உணவுக்கடையில் மெயின் டிஷ் எனும் பெயரில் அதிக விலை வைத்து கொள்ளை அடித்து கொண்டிருந்தனர். ராஸ்கோல்ஸ்!!
//காராசேவு மட்டும்தானா, வேற மெயின் டிஷ் எதுவும் இல்லியா?//
//அருகில் இருந்த உணவுக்கடையில் மெயின் டிஷ் எனும் பெயரில் அதிக விலை வைத்து கொள்ளை அடித்து கொண்டிருந்தனர். ராஸ்கோல்ஸ்!! //
பன்னிக்குட்டி அண்ணே நீங்க எதை கேக்குறீங்க.. சிவா எதை சொல்றார் பாருங்க. இவர் கார்டூன் படம் பாக்குறது கரக்டு தான்
சிவா "அதுக்கு சரிப்பட மாட்டார்" :))
இன்னும் எத்தனை பதிவு...
எத்தனை பேர்.....
இந்த புக் பர் பத்தி ....????
முடியலை சாமீ...
எல்லாம்...ஜாலியா தினமும் ஒரு ரவுண்டு போயிடறீங்க...தம்பி புத்தக கண்காட்சியில குழந்தைகள் பாடல் சிடியா சம்திங் ராங் யாராச்சும் அத போட்டு பாருங்க...மைல்டா ஒரு டவுட்டு!
@ மோகன் குமார்
//சிவா "அதுக்கு சரிப்பட மாட்டார்" :))//
ஆமா. வாடையே ஆகாது..
@ நாய் நக்கோ நக்ஸ்
குறைந்தது 30 பதிவு
@ வீடு
பொடி வச்சி பேசறாரே..
@ உணவு நெல்லை
என்னது பச்ச புள்ளையா. அவ்வ்வ்!!
நல்ல பதிவு.வழ்த்துக்கள்./
வணக்கம்.... தங்களுக்கும் நண்பர்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
Post a Comment